search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 124846"

    • திராவிட மாடல் ஆட்சி அறிக்கை வடிவில் மட்டுமே உள்ளது.
    • அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்து பட்டியல் உட்பட விவகாரங்களில் நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது.

    குழித்துறை:

    மார்த்தாண்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகருக்கு மார்த்தாண்டம், தக்கலை, ஞாறாம்விளை, திக்குறிச்சி உட்பட பல பகுதிகளில் தே.மு.தி.க.வினர் வரவேற்பு அளித்தனர். அப்போது விஜய் பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திராவிட மாடல் ஆட்சி அறிக்கை வடிவில் மட்டுமே உள்ளது. அது செயல் பாட்டில் வந்தால் வர வேற்கலாம். அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்து பட்டியல் உட்பட விவகாரங்களில் நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது. குற்றம் செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயகாந்த் உடல் நிலை நன்றாக இருக்கிறது. குமரி மாவட்டம் உட்பட அண்டை மாவட்டங்களில் இருந்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கனிமவள கடத்தல் நடைபெற்ற போது வழக்கு தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியவர்கள் தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கனிமவள கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று 5 தங்கப் பதக்கங்களை வென்றார்.
    • இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'அலைபாயுதே' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் மாதவன். இதைத்தொடர்ந்து 'மின்னலே', 'டும் டும் டும்', போன்ற பல படங்கள் நடித்ததன் மூலம் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.


    வேதாந்த்

    சமீபத்தில் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் மாதவனின் தன் மகன் வேதாந்த் செய்யும் சாதனைகளை தனது சமூக வலைதளத்தில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார்

    சமீபத்தில் வேதாந்த் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற Malaysia Invitational Age Group Swimming Championship போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளதாக மாதவன் தனது இணையப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்திருந்தார். இவருக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    விஜயகாந்த் பதிவு

    இந்நிலையில், வேதாந்திற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜயகாந்த் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவனின் , 17 வயது மகன் வேதாந்த் 50, 100, 200, 400 & 1500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்று, 5 தங்கங்களை வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் ஒலிம்பிக் உள்ளிட்ட உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கும் இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று எனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • ஆண்டு தோறும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்களுக்கு உதவிட, தண்ணீர் பந்தல்கள் அமைத்து தங்களால் இயன்ற அளவிற்கு உதவுவது வழக்கம்.
    • தண்ணீர் பந்தல்கள் அமைத்து அதில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கி அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கோடைகாலம் தொடங்கி இருக்கும் நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே வெயிலின் அளவு அதிகரித்துள்ளது. எனவே தமிழக மக்கள் இந்த கோடைகாலத்தை சமாளிப்பதற்கு தே.மு.தி.க. சார்பில் நம்மால் இயன்ற உதவிகளை செய்திட வேண்டும்.

    ஆண்டு தோறும் நம்முடைய கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்களுக்கு உதவிட, தண்ணீர் பந்தல்கள் அமைத்து தங்களால் இயன்ற அளவிற்கு உதவுவது வழக்கம். அதே போல் வருகிற 5-ந்தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, வட்டம், ஊராட்சி ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைத்து அதில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கி அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் ராஜாவின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.
    • உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும், 25 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சேலம் மாவட்டம் கொளத்தூர் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற மீனவரை கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளனர்.

    மேலும் இது போன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் ராஜாவின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும், 25 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது ‘நான் கடவுள் இல்லை’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    பிரபல இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் 1981-ஆம் ஆண்டு வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். இவரின் பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.


    விஜயகாந்தை நேரில் சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர்

    தற்போது இவர் இயக்கத்தில் 'நான் கடவுள் இல்லை' என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி, இனியா, சாக்ஷி அகர்வால், சரவணன்,ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது.


    விஜயகாந்தை நேரில் சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர்

    இந்நிலையில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து 'என் உயிரை நான் சந்தித்த போது' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.


    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த் போட்டியிடுகிறார்.
    • கூட்டத்திற்கு தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் எஸ்.ஆனந்தை அறிமுகம் செய்வது மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் ஈரோடு ஸ்ரீஜனனி திருமண மண்டபத்தில் வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்திற்கு தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஓ.பி.எஸ். முக்கிய முடிவுகளை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • ஈரோட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற நிர்வாகிகளையும் கமல் சென்னைக்கு அழைத்து உள்ளார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் களம் இறங்கும் காங்கிரசை எதிர்த்து அ.தி.மு.க. போட்டியிடும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளுமே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளன.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக தானே நீடிப்பதாக கூறிக்கொண்டு நிர்வாகிகளையும் அவர் நியமித்துள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெளிவான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொங்குமண்டலத்துக்குட்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு மிக்க தொகுதியாகவே கருதப்படுகிறது.

    2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிடம் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே அ.தி.மு.க. தோற்றுப்போய் இருந்தது. இதனால் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் எடப்பாடி அணி களம் இறங்கி உள்ளது.

    அதற்கு பதிலடி கொடுக்க ஓ.பி.எஸ். அணியினர் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் என்கிற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வருகிற 23-ந்தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் ஓ.பி.எஸ். பங்கேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

    வருகிற 23-ந்தேதி மாலை 6 மணி அளவில் எழும்பூர் அசோகா ஓட்டலில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் எந்த மாதிரியான முடிவை எடுப்பது? என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. இதில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

    இதன் பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஓ.பி.எஸ். முக்கிய முடிவுகளை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    எந்த கூட்டணியிலும் இல்லாமல் தனியாக உள்ள தே.மு.தி.க.வும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக வருகிற 23-ந்தேதி முக்கிய ஆலோசனையை நடத்துகிறது. அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

    கடந்த சட்டமன்ற தேர்தலின்போது சீட் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலால் கடைசி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேறிய தே.மு.தி.க. வேறு வழியின்றி டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்து படுதோல்வியை சந்தித்தது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணியில் இடம்பெறுவது என்று அந்த கட்சி முடிவு எதையும் எடுக்காமல் இருக்கும் நிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    இதனால் தனித்து போட்டியிடுவதா? பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தாங்கள் விரும்பும் கூட்டணிக்கு இப்போதே ஆதரவை தெரிவிப்பதா? என்கிற குழப்பமான மனநிலையில் தே.மு.தி.க. உள்ளது. இதுபற்றி விரிவாக ஆலோசித்து பிரேமலதா முடிவை அறிவிக்க உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசை எதிர்த்து களம் இறங்க வேண்டுமா? என்கிற கேள்வியும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்பது பற்றி முடிவு எடுப்பதற்காக கமல்ஹாசன் ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார்.

    இது தொடர்பாக ஆலோசிக்க ஈரோட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற நிர்வாகிகளையும் கமல் சென்னைக்கு அழைத்து உள்ளார். 23-ந்தேதி அன்று காலை 11.30 மணி அளவில் நடைபெறும் கூட்டம் தொடர்பாக அக்கட்சியின் துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேலு ஆகியோர் அறிவிப்பு வெளியிட உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் அந்தியூர், பவானி, பவானி சாகர், கோபிச்செட்டிபாளையம், மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை ஆகிய 8 சட்டமன்ற தொகுதியை சேர்ந்த மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்துக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவு என்ன? என்பது பற்றி அறிவிக்கப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 10 ஆயிரம் ஓட்டுகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • விஜயகாந்த் விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடினார்.

    அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு,பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் கொம்பு செடியை கட்டி, மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பொங்கி வரும் போது "பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்" என கூறி மகிழ்ச்சி அடைந்தனர்.

    கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக உற்சாகம் இழந்த இந்த பொங்கல் விழா தற்போது எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலையில் களை கட்டியுள்ளது.

    இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடினார்.

    • கவர்னரின் கருத்துக்கு தே.மு.தி.க. தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது.
    • மக்கள் ஐ.டி. எடுப்பதை மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் எடுக்க வேண்டும்.

    மதுரை:

    சிவகாசி, ராஜபாளையம் பகுதிகளில் நடைபெறும் தே.மு.தி.க. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கட்சியின் பொருளாளர் பிரேமலதா இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான். தமிழைப் பற்றி கவர்னருக்கு என்ன தெரியும்? ஏதோ 5 ஆண்டுகள் தமிழகத்தில் கவர்னராக இருப்பதால் அவருக்கு தமிழைப் பற்றி என்ன தெரியும்? கவர்னரின் கருத்துக்கு தே.மு.தி.க. தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது.

    மக்கள் ஐ.டி. எடுப்பதை மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் எடுக்க வேண்டும். ஆதார் மூலம் அனைத்து சலுகைகளும் மக்களிடம் சென்றடைகிறது. இந்த நிலையில் மக்கள் ஐ.டி. தேவையில்லை.

    முதலில் வெளிமாநிலத்தில் இருந்து எத்தனை பேர் இங்கே வேலை செய்கிறார்கள்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி ஐ.டி. எடுத்தால் என்ன ஆவது? இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கிறது. அப்போது கூட்டணி பற்றி முடிவு செய்வோம். தற்போது தே.மு.தி.க. உட்கட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது நிறைவு பெற்றதும் கட்சியின் செயற்குழு-பொதுக்குழு கூட்டம் நடத்தி பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் ஐ.டி. திட்டம் எதற்கு என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தள்ளது.
    • தமிழகத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கும், மக்கள் ஐ.டி. என்ற தனித்துவ அடையாள எண்ணை வழங்க போவதாக செய்திகள் வெளி வந்துள்ளன. தமிழக அரசின் மின் ஆளுமை முகமையின் சமீபத்திய டெண்டர் அறிவிப்பின் படி, குடி மக்கள் ஒவ்வொரு வருக்கும் மக்கள் ஐ.டி. என்ற பெயரில் 12 இலக்க எண் வழங்கப்பட இருப்பதும், அனைத்து சேவைகளையும் இதன் மூலம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

    மேலும் மக்கள் ஐ.டி. மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கு இடையிலான தொடர்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் இந்த திட்டத்தில் வெளிப்படை தன்மை இல்லாத நிலை உருவாகி உள்ளது.

    இந்த திட்டம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும், ஏற்கனவே அனைத்து சலுகைகளுக்கும் ஆதார் எண் பயன்படுத்தி வரும் நிலையில், மக்கள் ஐ.டி. திட்டம் எதற்கு என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தள்ளது.

    இப்படி ஒவ்வொரு மாநிலமும் தனி அடையாள எண் வழங்க முன்வந்தால், நாட்டில் குழப்பம் ஏற்படாதா? எனவே இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு தமிழக மக்களிடம் அரசு கருத்து கேட்க வேண்டும்.

    அதேசமயம் தமிழகத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களின் வருகையை வரைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்களை கணக்கெடுப்பு நடத்திய பிறகு, மக்கள் ஐ.டி. போன்ற திட்டங்களை வெளிப்படைத் தன்மையோடு தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த்தின் ரசிகர்களுக்கு புத்தாண்டை வாழ்த்து தெரிவித்தார்.
    • விஜயகாந்ததை பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர்.

    உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு தினத்தை கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், ஒருவருக்கொருவர் வாழ்த்து பகிர்ந்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த்தின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் புத்தாண்டை முன்னிட்டு அவரின் கட்சி தலைமை அலுவலகத்தில் காத்திருந்தனர்.

    விஜயகாந்த்

    விஜயகாந்த்

     

    இந்நிலையில் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து கையசைத்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். சென்னை கோயம்பேடில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து கையசைத்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். விஜயகாந்ததை பார்த்ததும் தொண்டர்கள் ஆரவாரம் எழுப்பினர். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார். இதற்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விஜயகாந்ததை பார்த்ததும் தொண்டர்கள் ஆரவாரம் எழுப்பினர்.
    • கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார்.

    புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, கோயம்பேட்டில் கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து கையசைத்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

    விஜயகாந்ததை பார்த்ததும் தொண்டர்கள் ஆரவாரம் எழுப்பினர்.

    புத்தாண்டு முன்னிட்டு விஜயகாந்தை சந்திப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்துள்ளனர்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து வருகிறார். இதற்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×