search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 125628"

    • சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெற்றது.
    • கோவில் யானை காந்திமதி ஆசீர்வதிக்க மகா தீபாராதனை நடைபெற்றது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண விழா 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15 நாட்கள் நடைபெறுகிறது.

    வருகிற 22- ந்தேதி காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவமும், 23-ந்தேதி கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் பூர்வாங்க பணிகளை மேற்கொள்ளும் விதமாக கால்கோள் நடும்விழா நேற்று நடைபெற்றது. அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெற்றது. அதை தொடர்ந்து அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் திருக்காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    பின்னர் திருக்கால் கோவிலை சுற்றி வலம் வந்து, காந்திமதி அம்பாள் சன்னதி முன்பு கொண்டு வரப்பட்டது. அங்குள்ள மண்டபத்தில் கால்நாட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் கோவில் யானை காந்திமதி ஆசீர்வதிக்க மகா தீபாராதனை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 29-ந்தேதி சுவாமி, அம்பாள் வீதிஉலா நடைபெறுகிறது.
    • வருகிற 5-ந்தேதி கருவூர் சித்தருக்கு காட்சி அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது.

    நெல்லை டவுன் காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூல திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். அதாவது கீரனூரில் கருவூர் சித்தர் சிவாலயங்களுக்கு சென்று நல்வரங்களை கேட்டு பெற்றார். இவ்வாறு நெல்லைக்கு வந்து சேர்ந்த கருவூர் சித்தர், நெல்லையப்பரை தரிசிக்க வந்தபோது நெல்லையப்பரிடம் இருந்து மறுமொழி கிடைக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த கருவூர் சித்தர் சாபமிட்டு விட்டு மானூருக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து நெல்லையப்பர் ஆவணி மூல நாளில் மானூருக்கு சென்று சித்தருக்கு காட்சி கொடுத்தார்.

    இந்த வரலாற்றுக்கு ஏற்ப ஆண்டுதோறும் ஆவணி மூல திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஆவணி மூல திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்தது.

    நேற்று காலை சுவாமி சன்னதியில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் 4-வது நாளான 29-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதிஉலா நடைபெறுகிறது.

    3-ந்தேதி இரவு 9 மணிக்கு கருவூர் சித்தர் மானூருக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4-ந்தேதி இரவு 1 மணி அளவில் சந்திரசேகரர் சுவாமி, பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேசுவரர், தாமிரபரணி, அகத்தியர், குங்குலிய கலய நாயனார் ஆகிய மூர்த்திகள் பல்லக்கு, சப்பரங்களில் 4 ரதவீதிகளிலும் உலா வந்து மானூருக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.

    அங்குள்ள அம்பலவாண சுவாமி கோவிலில் 5-ந்தேதி காலை 7 மணிக்கு கருவூர் சித்தருக்கு காட்சி கொடுத்து சாபவிமோசனம் நிவர்த்தி செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • முளைக்கட்டிய பயறுகளை அம்பாளுக்கு மடிநிறைத்து முளைக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான வளைகாப்பு உற்சவம் கடந்த 25-ந்தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 9-ம் திருநாள் அன்று செப்பு தேரோட்டம் நடைபெற்றது.

    நேற்று காலை தீர்த்தவரி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு பச்சை புடவை கட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் முளைக்கட்டிய பயறுகளை அம்பாளுக்கு மடிநிறைத்து முளைக்கட்டும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

    தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • வளைகாப்பு வைபவத்துக்காக சீர்வரிசை பொருட்களை பெண்கள் எடுத்து வந்தனர்.
    • 31-ந்தேதி காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலையில் சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது.

    மதியம் 12 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து காந்திமதி அம்மன் சப்பரத்தில் சுவாமி சன்னதிக்கு சென்று தனக்கு வளைகாப்பு நடத்துவதற்கு அனுமதி பெற்று வருகிற வைபவம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் பெண்கள் ஆர்வமுடன் வளையல்களை வாங்கினர். வளைகாப்பு வைபவத்துக்காக சீர்வரிசை பொருட்களை பெண்கள் எடுத்து வந்தனர்.

    மதியம் 12.30 மணிக்கு காந்திமதி அம்மன், கர்ப்பிணி பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார். அப்போது மேளதாளம் முழங்க காந்திமதி அம்மனுக்கு, வளையல்கள் அணிவிக்கப்பட்டன. அங்கு கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர். வளையல் அணிவிக்கப்பட்ட பிறகு காந்திமதி அம்மன் சப்பரத்தில் சுவாமி சன்னதிக்கு எழுந்தருளினார். சுவாமியிடம் தனக்கு வளையல் அணிவிக்கப்பட்ட விவரத்தை அம்மன் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

    பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து பெண்கள் அம்மனுக்கு வளையல் அணிவித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 8.30 மணிக்கு காந்திமதி அம்மன் வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடந்தது.

    விழாவில் வருகிற 31-ந் தேதி 10-வது நாள் திருவிழாவையொட்டி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயறை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும்.

    இதைத்தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார். அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயறை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்துள்ளனர்.

    • 25-ந்தேதி காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது.
    • 31-ந்தேதி காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த கொடிமரத்துக்கு காலை 7 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடைபெற உள்ளது.

    விழாவின் 4-ம் திருநாளான வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 12 மணியளவில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. அன்று இரவு அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடக்கிறது.

    வருகிற 31-ந் தேதி 10-வது நாள் திருவிழாவையொட்டி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயரை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும்.

    இதைத்தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார். அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயிறை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    • 25-ந்தேதி காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடக்கிறது.
    • வருகிற 31-ந்தேதி ஆடிப்பூரம் முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.

    தென்மாவட்டங்களில் சிறப்புபெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதில் ஆடிப்பூர திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி காலை 6 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் சன்னதி முன்பு ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் இந்த ஆண்டு விழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்பார்கள்.

    4-ம் திருவிழாவான 25-ந் தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 12 மணிக்கு காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம், இரவு 8 மணிக்கு காந்திமதி அம்மன் திருவீதியுலா நடக்கிறது.

    வருகிற 31-ந் தேதி( ஞாயிற்றுக்கிழமை) இரவு 6.30 மணிக்கு கோவில் ஊஞ்சள் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • தினமும் சுவாமி, அம்பாள் வீதிஉலா, பக்தி இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
    • சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனிப்பெருந்திருவிழா 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெற்றது. கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் வீதிஉலா, பக்தி இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

    நெல்லையப்பர் கோவிலில் தீர்த்தவாரிதிருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. 10-வது திருநாளான நேற்று சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து கோவில் உள்ளே அமைந்திருக்கும் பொற்றாமரைக்குளத்தில் சுவாமி, அம்பாள் தீர்த்தவாரியும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.
    • சுவாமி நெல்லையப்பர் தேர் தமிழகத்தின் 3-வது பெரிய தேராகும்.

    நெல்லை :

    தென் மாவட்டங்களில் புராதன சிறப்புமிக்க நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த கோவிலாகும்.

    இங்கு சுவாமி, அம்பாளுக்கு என தனித்தனி சன்னதிகள் உள்ளன. சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த கோவிலில் நெல்லையப்பர், அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என 5 தேர்கள் உள்ளன. சுவாமி நெல்லையப்பர் தேர் தமிழகத்தின் 3-வது பெரிய தேராகும். இதன் எடை 450 டன், அகலம் 28 அடி, நீளம் 28 அடி, அலங்கார தட்டுகளை சேர்த்து உயரம் சுமார் 70 அடியாக கொண்டுள்ளது.

    பல்வேறு சிறப்புகள் கொண்ட சுவாமி நெல்லையப்பா் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆனிப்பெருந் திருவிழா பிரசித்தி பெற்றது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக தேரோட்டம் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையொட்டி தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனித்தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதிகாலையில் சுவாமி, அம்பாள் ஆகியோர் திருத்தேரில் எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டன.

    காலை 9 மணிக்கு சபாநாயகர் அப்பாவு, மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் முக்கிய பிரமுகா்கள் சுவாமி தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    இதில் நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அவர்களும் தேரோட்டத்தில் பங்கேற்றனர். அவர்களின் அரகர மகாதேவா, ஓம் நமச்சிவாய என விண்ணை முட்டும் கோஷத்துடன் தோ் 4 ரதவீதிகளிலும் வலம் வந்தது.

    அதனை தொடாந்து அம்பாள் தேரும், கடைசியாக சண்டிகேஸ்வரா் தேரும் பக்தா்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தன்னார்வலர்கள், பல்வேறு கட்சியினர் சார்பில் ரதவீதிகளில் அன்னதானம், தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    மேலும் மாநகராட்சி சார்பிலும் தண்ணீர் டேங்குகள் வைக்கப்பட்டு இருந்தது. ரதவீதிகள் முழுமையும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு முழுமையாக போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    அந்த பகுதிகளில் ஏற்கனவே 32 சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில், கூடுதலாக 13 காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. தேரோட்டத்தையொட்டி மாநகர பகுதி முழுவதும் சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    முன்னதாக போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பழைய பேட்டை கண்டியபேரியில் தென்காசியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. ரதவீதிகளில் மாலை வரை மாநகர பஸ்கள் அனுமதிக்கப்படவில்லை.

    தேரோட்டத்தை காண கார், மோட்டார் சைக்கிள்களில் திரளானோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். அவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு 8 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

    • நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.
    • சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக, கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக ஆனித்தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. தேரோட்டத்தில் விநாயகர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் 5 தேர்களில் ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இந்து சமய சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. 7-ம் நாள் திருநாளான நேற்று காலை 7.30 மணிக்கு சுவாமி நடராஜபெருமான் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளலும், 8 மணிக்கு சுவாமி நடராஜப்பெருமாள் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளலும் நடந்தது. மாலை 6 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதி உலா நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதி உலா, சுவாமி தங்க கைலாசபர்வத வாகனத்திலும், அம்மன் தங்க கிளி வாகனத்திலும் வீதி உலா நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், படையல் பூஜையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நெல்லையப்பர் கோவிலில் 2 ஆண்டுகளாக ஆனித்தேரோட்டம் நடைபெறவில்லை.
    • இன்று 9 மணிக்கு தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் ஆனித்தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஆனித்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து உள்ளது. தேரோட்டத்தில் விநாயகர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களும் 4 ரத வீதிகளிலும் வலம் வரும். தேரோட்டத்தை காணவும், தேரை வடம் பிடித்து இழுக்கவும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரத வீதிக்கு வருகை புரிவார்கள்.

    விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இந்து சமய சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுவாமி நடராஜபெருமான் வெள்ளை சாத்தி எழுந்தருளளும், சுவாமி நடராஜப்பெருமாள் பச்சை சாத்தி எழுந்தருளளும் நடந்தது. மாலையில் சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதி உலா நடந்தது.

    நேற்று இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதி உலா, சுவாமி தங்க கைலாசபர்வத வாகனத்திலும், அம்மன் தங்க கிளி வாகனத்திலும் வீதி உலாவும், நள்ளிரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், படையல் பூஜையும் நடந்தது.

    இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மேல் தேரோட்டமும் நடக்கிறது. 9 மணிக்கு தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அமைச்சர்கள், எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    தேரோட்டத்தையொட்டி இன்று (திங்கட்கிழமை) நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நெல்லை மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தேரோட்டத்தை காண வருவார்கள் என்பதால் 4 ரத வீதிகளிலும் கழிப்பிட வசதி, சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

    மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்காக வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா ஆகியோர் நேரடி மேற்பார்வையில் உதவி போலீஸ் கமிஷனர்கள் விஜயகுமார், அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • இன்று (வியாழக்கிழமை) சுவாமி, அம்பாள் வீதி உலா செல்கின்றனர்.
    • வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

    திருநெல்வேலி நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4-வது திருநாளான நேற்று காலை 8 மணிக்கு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் வீதிஉலா சென்றனர்.

    இரவு வெள்ளி ரிஷப வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா சென்றனர். மேலும் கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 5-வது திருநாளான இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கும், இரவு 7 மணிக்கும் சுவாமி, அம்பாள் வீதி உலா செல்கின்றனர்.

    மேலும் பக்தி இசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், கூட்டு வழிபாடு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது.

    • வருகிற 10-ந்தேதி சுவாமி கங்காள நாதர் தங்க சப்பரத்தில் வீதி உலா நடைபெறுகிறது.
    • 11-ந்தேதி (திங்கட்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது.

    நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 2-வது நாள் திருவிழாவையொட்டி காலை சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் அம்பாள் வீதிஉலா நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் 4 ரதவீதிகளிலும் உலா வந்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் வழிநெடுகிலும் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். மேலும் மாலை கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இசை மற்றும் பொம்மலாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கும், இரவு 7 மணிக்கும் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. மேலும் கலையரங்கத்தில் சிறப்பு வில்லிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

    வருகிற 10-ந்தேதி சுவாமி கங்காள நாதர் தங்க சப்பரத்தில் வீதி உலா நடைபெறுகிறது. 11-ந்தேதி (திங்கட்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி விநாயகர், சுப்பிரமணியர், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்களில் அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுவாமி தேரில் கம்புகள் வைத்து கட்டி, மரக்குதிரைகளும் பொருத்தப்பட்டு உள்ளன.

    நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி என்ற பெயரில் பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. நெல்லை உதவி வன பாதுகாவலர் ஹேமலதா நேற்று மாலை நெல்லையப்பர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து காந்திமதி யானையை நேரில் பார்வையிட்டார். பின்னர் யானைக்கு வழங்கப்படும் உணவு வகைகள், தற்போது பக்தர்களால் வழங்கப்பட்ட காலணி ஆகியவை குறித்து கேட்டறிந்தார். மேலும் கோவில் வளாகத்தில் யானை குளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நீச்சல்குளத்தையும் அவர் பார்வையிட்டார். அதை தொடர்ந்து யானையை நல்லமுறையில் பராமரிக்கும்படி பாகன்களுக்கு ஆலோசனை வழங்கிச்சென்றார்.

    ×