என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காரமடை"
- மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், வடகோவை உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது.
- ரெயில் நிலையத்தில் கழிவறை வசதி பூட்டிய நிலையிலேயே உள்ளது.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு தினசரி 8 முறை பயணிகள் மெமோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயிலில் மேட்டுப்பாளையம், காரமடை, தோலம்பாளையம், சிறுமுகை, வெள்ளியங்காடு, சிக்காரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்காக தினசரி சுமார் 2,000க்கும் அதிகமான பயணிகள் கோவைக்கு சென்று வருகின்றனர்.
இதன்படி இந்த ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், வடகோவை உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது. அவ்வாறு காரமடை ெரயில் நிலையத்தில் ெரயிலுக்காக தினசரி 500க்கும் மேற்பட்டோர் வந்து காத்திருந்து ெரயிலில் பயணம் செய்கின்றனர்.
அப்போது ரெயில் நிலையங்களில் ரெயிலுக்காக காத்திருக்கும் போது பயணிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவில் குடிநீர் வசதி இல்லை.
இது மட்டுமல்லாமல் ரெயில் நிலையத்தில் கழிவறை வசதி பூட்டிய நிலையிலேயே உள்ளது. இதனால் ரயிலுக்காக வந்து காத்திருக்கும் சிறுவர்கள், முதல் ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் பல இடங்களில் நிழற்கூடைகள் இல்லாததால் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ெரயில் பயணிகள் ெரயில்வே நிர்வா கத்திலும் பலமுறை புகார் தெரி வித்தும் இது வரை எந்த நடவடிக் கையும் எடுக்கப் படவில்லை என கூறப் படுகிறது.
எனவே இது தொடர் பாக சம்பந் தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து காரமடை ரெயில் நிலை யத்தில் உடன டியாக கழி வறை மற்றும் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டு மென ரெயில் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து ரெயில் பயணிகள் கூறுகையில், காரமடை ரெயில் நிலையத்தில் தினசரி ஏராளமான பயணிகள் ெரயிலுக்காக வந்து காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர். அவர்கள் இங்கு வரும்போது ெரயில் பயணிகள் வசதிக்காக ெரயில் நிலையத்தில் ஏற்படுத்தி வைத்துள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவது கிடையாது. அவசர தேவைக்கு செல்வதற்கு கழிவறைகள் வசதியில்லை. இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.
- ரூ. 10 லட்சத்தை வாங்கியதாக தெரிகிறது.
- போலீசார் ஆள் கடத்த வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
காரமடை:
கோவை மாவட்டம் காரமடை புச்சங்கனூர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
மேலும் இவர் தனது நண்பர் முத்தையா என்பவருடன் சேர்ந்து பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அஜித், முத்தையாவிடம் ரூ. 10 லட்சத்தை வாங்கியதாக தெரிகிறது. ஆனால் அவர் இதுவரை அந்த பணத்தை முத்தையாவிடம் திருப்பி கொடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் அவர்களுக்க இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று முத்தையா தனது 3 நண்பர்களுடன் அஜித்தின் வீட்டுக்கு சென்றார். அங்கு மீண்டும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
அப்போது முத்தையா அவர்கள் வந்த காரில் அஜித்தை அழைத்து சென்றார். அழைத்து சென்று 4 நாட்களாகியும் அஜித் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அஜித், முத்தையாவின் செல்போனில் இருந்து தனது தந்தை ராஜேந்திரனுக்கு அழைத்தார். அப்போது தான் வலுகட்டாயமாக அழைத்து வரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ேமலும் தனது வக்கீலுக்கு தான் பாதுகாப்பு இல்லாமல் இருக்கீறேன் என மெசேஜ் அனுப்பி உள்ளார். இந்த தகவலை கேட்டு அஜித்தின் மனைவி அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து அவர் காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் ஆள் கடத்த வழக்குப்பதிவு செய்து அஜித்தை தேடி வருகின்றனர். வாலிபர் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பெற்றோர் மத்தியில் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- 5 தனிப் படை அமைத்து, மாணவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
காரமடை:
காரமடை அருகே கன்னார்பாளையத்தில் வித்யா விகாஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
சம்பவத்தன்று 9-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர், 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர் என 3 பேரும், பள்ளி விடுதியின் சுவர் ஏறிக்குதித்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை தேடிப் பார்த்தனர். ஆனால் கிடைக்க வில்லை. இது குறித்து காரமடை போலீசில், பள்ளி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 5 தனிப் படை அமைத்து, மாணவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
போலீசார் பள்ளியின்கண்காணிப்பு கேமரா பதிவுகளை கேட்டனர். அப்போது கேமரா செயல்படாமல் இருந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து, கன்னார்ப்பாளையம் ரோட்டிலும், காரமடை மெயின் ரோட்டிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது மூன்று மாணவர்கள், கோவை சென்ற தனியார் பஸ்ஸில் ஏறிச்சென்றது பதிவாகி இருந்தது. இந்நிலையில் மாணவர்கள் 3 பேரும் அவரவர் வீடுகளுக்குபத்திரமாக வந்ததாக பெற்றோர் பள்ளிக்கு தகவல் அளித்தனர். விடுதியில் தங்க பிடிக்காமல் மாணவர்கள் வெளியேறி யதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் காரமடையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பள்ளி,விடுதிகளில் கேமராக்கள் முழுமையான கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ள சூழலில், பல பள்ளிகள் பெயரளவில் கேமராக்களை வைத்துள்ளனர். இது பெற்றோர் மத்தியில் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- லேப்-டாப், 55 இன்ச் டி.வி ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
- காரமடையில் இருந்து ஊட்டி செல்ல முடிவு செய்தார்.
காரமடை :
கோவை காரமடை பெள்ளபாதி அடுத்த ஒட்டர்பாளையம் சேரன் நகரை சேர்ந்தவர் வியாஷ் (வயது 31). இவர் துபாயில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.
வியாஷ் துபாயில் இருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தார். பின்னர் காரமடையில் இருந்து ஊட்டி செல்ல முடிவு செய்தார். இதையடுத்து அவர் வீட்டை பூட்டி விட்டு ஊட்டிக்கு சென்றார்.
அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த லேப்-டாப், 55 இன்ச் டி.வி ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
வீடு திரும்பிய வியாஷ் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த டி.வி, லேப்-டாப் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து வியாஷ் காரமடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனையடுத்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற திருடர்களை தேடி வருகிறார்கள்.
- போலீசார் தலைமறைவாக இருந்த சுதனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- குடிபோதையில் இருந்த சுதன் மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.
காரமடை:
கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த 9 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் நாகப்பட்டிணத்தை சேர்ந்த சுதன் (வயது 30) என்பவர் வசித்து வந்தார்.
அவர் மாணவியின் தந்தையுடன் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். அப்போது சுதன் அடிக்கடி மாணவியின் வீட்டிற்கு வந்து செல்வார்.
சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் வங்கிக்கு சென்று இருந்தனர். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். குடிபோ தையில் இருந்த சுதன் மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.
பின்னர் நடந்த சம்பவங்களை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
பெற்றோர் வந்ததும் மாணவி நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதார். இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் தலைமறைவாக இருந்த சுதனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- மகேஷ் குமார் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பத்ரசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் காரமடை தோலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார் (வயது 50). அ.தி.மு.க உறுப்பினர்.
இவர் தனது நண்பர்களுடன் விளங்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு அருகில் இருந்த பாரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்அ ப்போது வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த பா.ஜ.க உறுப்பினர் பத்ரசாமி (35) என்பவர் அங்கு வந்தார்.
அவரிடம் மகேஷ் குமார் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார். இதில் ஆத்திரம் அடைந்த பத்ரசாமி பீர் பாட்டிலை எடுத்து மகேஷ் குமாரின் தலையில் ஓங்கி அடித்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் 2 பேரையும் தடுத்து நிறுத்தி அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் இருவரும் சாலையில் வந்து தகராறு ஈடுபட்டனர். அப்போது பத்ரசாமி மீண்டும் கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து மகேஷ் குமாரை தகாத வார்த்தைகள் திட்டி குத்தினார்.
பலத்த காயம் அடைந்த மகேஷ் குமாருக்கு ரத்தம் கொட்டியது. இதனை கண்ட அவரது நண்பர்கள் மகேஷ் குமாரை மீட்டு தாயனூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மகேஷ் குமார் காரமடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பத்ரசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- நண்பர்களுடன் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு அருகில் இருந்த பாரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
- இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரமடை:
கோவை மாவட்டம் காரமடை தோலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவர் தனது நண்பர்களுடன் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு அருகில் இருந்த பாரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த பத்ரசாமி என்பவர் அங்கு வந்தார். அவர் திடீரென பீர் பாட்டிலை எடுத்து மகேஷ் குமார் தலையில் ஓங்கி அடித்தார். இதை கண்டு அதிர்ச்சி அங்கிருந்தவர்கள் 2 பேரையும் அங்கிருந்து வெளியேற்றினர்.
பின்னர் இருவரும் சாலையில் வந்து தகராறு ஈடுபட்டனர். அப்போது பத்ரசாமி மீண்டும் கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து மகேஷ் குமாரை தகாத வார்த்தைகள் திட்டி தாக்க முயற்சி செய்தார்.
இதில் மகேஷ்குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவரது நண்பர்கள் அவரை மீட்டு தாயனூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 3 பேர் சரவணனின் கார் மீது மோதினர்.
- கவுன்சிலரை தாக்கிய மர்ம நபர்கள் 3 ேபரை போலீஸ் வலைவீசி தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காரமடை:
கோவை அருகே உள்ள காரமடை மருதூர் ஊராட்சியில் அ.தி.மு.க கவுன்சிலராக உள்ளவர் சரவணன் (வயது 37).
இவர் காரமடையில் சொந்தமாக ெதாழிலும் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு கவுன்சிலர் சரவணன் தனது காரில் காரமடை குந்தா காலனி வழியாக வீட்டுக்கு சென்றார்.
அப்போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 3 பேர் சரவணனின் கார் மீது மோதினர். இதை பார்த்த அவர் காரை நிறுத்தி வெளியே வந்து அந்த வாலிபர்களிடம் மோதியது குறித்து தட்டி கேட்டார்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.
பின்னர் மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றனர். 3 வாலிபர்களும் தாக்கியதில் சரவணனுக்கு முகம், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனால் அவர் சிகிச்சைக்காக காரமடை யில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டார்.
பின்னர் இதுகுறித்து கவுன்சிலர் சரவணன் காரமடை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து போலீசார் கவுன்சிலர் சரவணனை தாக்கிய மர்ம நபர்கள் யார்? தொழில் போட்டியில் தாக்கினார்களா அல்லது அரசியல் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
- அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கர்ணன் எதிர்பாராத விதமாக மோனிஷ் மீது மோதினார்.
- வீட்டில் இருந்த கர்ணனின் மனைவி சுசிலாவிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவை :
கோவை காரமடை வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (வயது 55). டிரைவர். இவரது மனைவி சுசிலா (40). இவர்களுது மகன் கவுரி சங்கர் (12). இவர் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நாகராஜ் (55). சம்பவத்தன்று இவரது பேரன் மோனிஷ் வீட்டின் அருகே சாலையில் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கர்ணன் எதிர்பாராத விதமாக மோனிஷ் மீது மோதினார்.
இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மோனிஷ் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரிடம் கூறினார். இதனால் கோபம் அடைந்த மோனிஷ் தாத்தா நாகராஜ், அவரது மகன்கள் கார்த்திக் (34), பிரபாகரன் (30), நாகராஜூன் தம்பி கோவிந்தராஜ் (44), அவரது மகன் ஆகியோர் கர்ணன் வீட்டுக்கு சென்றனர்.
அங்கு வீட்டில் இருந்த கர்ணனின் மனைவி சுசிலாவிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த அவர்கள் சுசிலாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.மேலும் அவரது 12 வயது மகன் சங்கரை கல்லால் தாக்கினர்.
வீட்டில் இருந்த கர்ணனின் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்தனர். பின்னர் மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றனர். பலத்த காயம் அடைந்த சங்கர் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதுகுறித்து சுசிலா காரமடை போலீசில் புகார் அளித்தார். இதேபோன்று நாகராஜ், கர்ணன் மற்றும் சுசிலா தங்களது குடும்பத்தினரை தாக்கியதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இருதரப்பினரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாதர் தேரில் எழுந்தருளினார். இதையொட்டி பக்தர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்தனர். தேர்த்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மாலை 5.15 மணிக்கு நடந்தது. கோவில் மிராசுதாரர்கள், எம்.பி.க்கள் ஏ.கே.செல்வராஜ், சி.கோபாலகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரைவடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர், நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா... ரங்கா... என்று கோஷமிட்டபடி சென்றனர். மேலும் பெரும்பாலான பக்தர்கள் வாழை பழங்களை தேர் மீது வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். பின்னர் தேர் இரவு 9.10 மணியளவில் தேர்நிலைக்கு வந்தடைந்தது.
தேரோட்டத்தையொட்டி காரமடை ஒன்றிய செயலாளர் பி.டி.கந்தசாமி, பேரூர் செயலாளர் டி.டி.ஆறுமுகசாமி ஆகியோர் தலைமையில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்து அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
தேர் திருவிழாவில் அ.தி.மு.க. 4-வது வார்டு கிளை செயலாளர் எஸ்.ரங்கநாதன், மீன் குளத்தி பகவதி அம்மன் பஜனை வழிபாட்டு குழு ஆறுச்சாமி, தாசப்பளஞ்சிக மகாஜன சங்க தலைவர் கே.பி.வி.கோவிந்தன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் மனோகரன், இந்து அறநிலைய துறை உதவி ஆணையர் ராமு, இந்து அறநிலைய துறை கண்காணிப்பாளர் செல்வராஜ், செயல் அலுவலர்கள் ஜெயசந்திரன், செல்வராஜ், ராமஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையாளருமான க.விமலா, செயல் அலுவலர் (பொறுப்பு) லோகநாதன், கோவில் கணக்கர் மகேந்திரன் உள்பட பலர் செய்து இருந்தனர். தேரோட்டத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
தொடர்ந்து இன்று (புதன்கிழமை) இரவு 10.30 மணிக்கு பரிவேட்டை குதிரை வாகன உற்சவமும், நாளை (வியாழக்கிழமை) இரவு 10.30 மணிக்கு தெப்ப திருவிழா சேஷ வாகன உற்சவமும், 22-ந் தேதி மாலை 6.15 மணிக்கு சந்தன சேவையும் நடக்கிறது.
23-ந் தேதி காலை 8.30 மணிக்கு வசந்த நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா முடிவடைகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்