search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 125869"

    • சாப்பிடும் போதுகூட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் மூழ்கியவாறே உள்ளனர்.
    • இரவு உணவை தயார் செய்ததும் டைனிங் டேபிளில் வைக்கும் தாயார், குடும்பத்தினர் அனைவரையும் அழைக்கிறார்.

    மனிதனின் ஆறாம் விரலாய் செல்போன் மாறிவிட்டது. சாப்பிடும் போதுகூட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் மூழ்கியவாறே உள்ளனர். இதனால் குடும்பத்தில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போதும், சமையலறையில் செல்போன், லேப்டாப்பிற்கும் இடம் ஒதுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது எனலாம்.

    இந்நிலையில் ஒரு தாய் தனது குடும்பத்தினரை செல்போன், லேப்டாப் இல்லாமல் நிம்மதியாக சாப்பிட வைப்பதற்காக மேற்கொண்ட புது 'டெக்னிக்' இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் இரவு உணவை தயார் செய்ததும் டைனிங் டேபிளில் வைக்கும் தாயார், குடும்பத்தினர் அனைவரையும் அழைக்கிறார். ஒவ்வொருவராக வந்ததும் அவர்கள் தங்களிடம் உள்ள செல்போன், லேப்டாப்பை அவரிடம் ஒப்படைத்த பிறகே அவர்களுக்கு தட்டில் சாப்பாடு போடுகிறார். அதன் பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து நிம்மதியாக சாப்பிடுவது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தாயின் டெக்னிக்கை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    • புழல் சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் தனித்தனியாக அடைக்கப்பட்டு உள்ளனர்.
    • கைதிகளுக்கு செல்போன் கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    செங்குன்றம்:

    புழல் சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் தனித்தனியாக அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளிடம் செல்போன் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் புழல் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கைதிகள் கார்த்திக், சையது இப்ராகிம் ஆகியோர் மறைத்து வைத்திருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் தண்டனை பிரிவு கைதிகளின் கழிவறையில் கேட்டபாரற்று கிடந்த செல்போனையும் கைப்பற்றினர். போலீசார் ரோந்து வருவதை கண்டதும் செல்போனை பயன்படுத்திய கைதிகள் வீசி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

    கைதிகளுக்கு செல்போன் கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • தி.மு.க. நிர்வாகி எதிர்புறம் பேசியவரிடம், மாதந்தோறும் 2-ந்தேதிக்குள் ரூ.50 ஆயிரம் கமிஷனாக தந்துவிட வேண்டும்.
    • எதிர்புறம் பேசிய நபர், நான் பேசிவிட்டு முடிவை சொல்கிறேன் என்று கூறுகிறார்.

    நெல்லை:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகி ஒருவர் டாஸ்மாக் பார் உரிமையாளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு மாமூல் கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த ஆடியோவில் தி.மு.க. நிர்வாகி எதிர்புறம் பேசியவரிடம், மாதந்தோறும் 2-ந்தேதிக்குள் ரூ.50 ஆயிரம் கமிஷனாக தந்துவிட வேண்டும். இல்லையெனில் பார் நடத்த முடியாது. நடத்த விடமாட்டேன். யாரிடம் போய் சொன்னாலும் எதுவும் நடக்காது என்று கூறுகிறார். இதற்கு எதிர்புறம் பேசிய நபர், நான் பேசிவிட்டு முடிவை சொல்கிறேன் என்று கூறுகிறார். தற்போது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஏற்கனவே நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பார் உரிமையாளர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாகவும், மாமூல் கேட்டு நச்சரிப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது தி.மு.க. நிர்வாகி ஒருவர் பார் உரிமையாளரை மிரட்டி பணம் கேட்கும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கணேசன் தனது நண்பர் ஒருவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
    • செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை பயணிகள் ஓடி வந்து பிடித்தனர்.

    நெல்லை:

    தென்காசி அருகே உள்ள அச்சன்புதூரை சேர்ந்தவர் கணேசன்(வயது 48). இவர் நேற்று தென்காசி பழைய பஸ் நிலையத்தில் தனது நண்பர் ஒருவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் கணேசனின் செல்போனை பறித்துக்கொ ண்டு தப்பியோட முயன்றார்.

    உடனே கணேசன் கத்தி கூச்சலிடவே, அந்த நபரை அக்கம்பக்கத்தில் நின்ற பயணிகள் ஓடி வந்து பிடித்தனர். அதற்குள் அந்த நபர், திருடிய செல்போனை அங்கு நின்று கொண்டிருந்த அவரது கூட்டாளிகள் 2 பேரிடம் கொடுத்துவிட்டார். இதுதொடர்பாக கணேசன் தென்காசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் தென்காசி எஸ்.கே.பி. தெருவை சேர்ந்த முகமது அலி(வயது 34) என்பதும், திருடிய செல்போனை தென்காசி டி.என்.எச்.பி. காலனியை சேர்ந்த சுடலைகுமார்(30), புதுமனை 1-வது தெருவை சேர்ந்த ரசாக் முகமது ஆகியோரிடம் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • மதுரையில் ரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மதுரை

    மதுரை மேலப்பொன்ன கரம் 2-வது தெருவைச் சேர்ந்த சிவ பெருமாள் மகன் விக்னேஷ் (வயது24). இவர் நேற்று இரவு சென்னை செல்வதற்காக நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நண்பர் ரஞ்சித்துடன் சென்னை சென்று கொண்டிருந்தார்.

    முன் பதிவில்லாத பெட்டியில் ஏறிய இருவரும் கூட்டம் அதிகமாக இருந்ததால் கழிவறை அருகில் உள்ள கதவு அருகே நின்று கொண்டிருந்தனர். நள்ளிரவில் மதுரா கோர்ட்ஸ் பாலத்தை கடந்து ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது விக்னேஷ் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

    ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்த போது தண்டவாளம் அருகில் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் திடீரென்று ரெயில் பெட்டியில் ஏறி விக்னேஷ் மற்றும் மற்றொரு பயணி யான மணிகண்டனிடம் இருந்து செல்போன்களை பறித்து கொண்டு ரெயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மதுரை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். உதவி ஆய்வாளர் சையது குலாம், காவலர்கள் பழனிக்குமார், பாலகிருஷ்ணன், சஞ்சய், செந்தில், செந்தில்குமார், திருமுருகன் ஆகியோர் சம்பவஇடத்திற்கு சென்று விசாரித்துக் கொண்டிருந்த போது தத்தனேரி ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழ் தண்டவாள கிழக்கு பக்கமுள்ள ஆவின் பாலகம் அருகில் நின்று கொண்டிருந்த விக்னேஷ் என்ற குட்டி புலி (25) அஜய் குகன் (21), பரமேஸ்வரன் (29), சீனிவாசன் (19) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். செல்போன் களும் பறிமுதல் செய்யப் பட்டது. கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த பட்ட 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவரை கீழே தள்ளி விட்டனர்.
    • அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.3500 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்

    வடமதுரை:

    வடமதுரை அருகே கோவககவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ரீட்டா (வயது35). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவரை கீழே தள்ளி விட்டனர்.

    இதையடுத்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.3500 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து ரீட்டா வடமதுரை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு, இதுவரை எந்த நிறுவனமும் செல்போன் சேவை வழங்கவில்லை.
    • பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவ னத்திற்கும் கடந்த 10 ஆண்டு களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் அரு நுாற்றுமலை ஆலடிப்பட்டி ஊராட்சியிலுள்ள பெலாப்பாடி, பெரியகுட்டி மடுவு , சின்னகுட்டிமடுவு, சந்துமலை மற்றும் பெத்தநா யக்கன்பாளையம் ஒன்றியம் மண்ணுார், கெங்கவல்லி வட்டம் கொல்லிமலை பகுதி யிலுள்ள சேரடிமூலை, பச்சமலையிலுள்ள மண்மலை, வேங்கமுடி, ஆத்துார் ஒன்றியம் பைத்துார் பகுதியிலுள்ள 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு, இதுவரை எந்த நிறுவனமும் செல்போன் சேவை வழங்கவில்லை.

    இந்த நவீன காலத்திலும் செல்போன் வசதியை பயன்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. எனவே, அதிநவீன கோபுரங்களை அமைத்து செல்போன் சேவை வழங்க வேண்டும் என மலை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மத்திய மாநில அரசு களுக்கும், பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவ னத்திற்கும் கடந்த 10 ஆண்டு களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து, மத்திய அரசின், மலை கிராமங்க ளுக்கு நவீன வசதிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ஆத்துார் தொலை தொடர்பு கோட்டத்தில் பெலாப்பாடி, பெரியகுட்டிமடுவு, சின்ன குட்டிமடுவு, சந்துமலை, மண்ணுார், சேரடிமூலை, மண்மலை, வேங்கமுடி ஆகிய 8 இடங்களில், கண்ணாடியிழை கேபிள் இணைப்புடன் அதிநவீன 4 ஜி செல்லிடப்பேசி கோபு ரங்கள் அமைக்கும் திட்டத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொடங்கியுள்ளது.

    இத்திட்டப்பணிகள் நிறைவடைந்ததும், இதுவரை செல்லிடப்பேசி சேவை வசதியில்லாத அனைத்து மலை கிராம மக்களுக்கும் அதிநவீன செல்லிடப்பேசி வசதி கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வீடியோ கடையில் இரவு காவலாளி யாக பணியாற்றி வருகிறார்.
    • சம்பவத்தன்று அவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.

    சேலம்:

    ஓமலூர் அருகே தேக்கம்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 36). இவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வீடியோ கடையில் இரவு காவலாளி யாக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இதனால் அவர் கூச்சல் போட்டார். அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுதொடர்பாக ஜெகதீஷ் அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஜெகதீ சிடம் செல்போன் பறித்தது நாழிக்கல்பட்டியை சேர்ந்த 17 வயதுடைய 3 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து கண்காணிப்பு காமிரா பதிவுகளை வைத்து அவர்களை அடையாளம் கண்டனர். இதை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின், செல்போன், ரூ.1200 பணம் ஆகியவை திருடுபோனது.
    • திருடிய நகை, பணத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டினர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் 7வது வார்டு சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜபிரபு (வயது37). இவர் சம்பவத்தன்று சுருளிப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை முன்பு தனது காரில் அமர்ந்து நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென அவர் தூங்கி விட்டார். மீண்டும் எழுந்து பார்த்தபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின், செல்போன், ரூ.1200 பணம் ஆகியவை திருடுபோனது.

    அப்போது அங்கே நின்றுகொண்டிருந்த சுருளிப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்த சதீஷ் (32), விஜய் ஆகியோரிடம் இது குறித்து கேட்டார். அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறினர். இருந்தபோதும் அவர்கள்தான் நகை, பணத்தை திருடி இருக்ககூடும் என்று சந்தேகம் அடைந்த ராஜபிரபு, அவரது நண்பர்கள் சசி, ஜெகதீஷ்குமார், நிவேக், கல்யாணி, சந்தானம், ஹரீஷ், வெற்றி ஆகியோர் சதீஷ், விஜயை காரில் அழைத்துக் கொண்டு கடுமையாக தாக்கி நகை, பணத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டினர்.

    படுகாயம் அடைந்த அவர்கள் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர்- பெண்ணிடம் செல்போன்கள் பறிக்கப்பட்டது.
    • திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    திருப்பரங்குன்றம் சந்திராலயம் முதல் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது36). இவரது உறவினர் கணேசன். இவர் திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி ரோட்டில் சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது 2 வாலிபர்கள் அவரை வழிமறித்து தாக்கினர் .இதில் கணேசன் மயங்கி விழுந்தார். அவரிடம் இருந்த செல்போனையும் ரூ.600-யும் வாலிபர்கள் பறித்து தப்பினர்.

    இது குறித்து கணேசனின் உறவினர் சுரேஷ் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருப்பரங்குன்றம் படப்பட்டி தெருவை சேர்ந்த இளையராஜா (43), தனக்கன்குளம் கிழக்குபகுதி ஈஸ்வரன் (45) ஆகியோரை கைது செய்தனர்.

    மதுரை உலகநேரி மிருதுஞ்ஜெயன் மனைவி சித்ராதேவி (30). இவர் நேற்று மாலை அண்ணா பூங்காவில் நடை பயிற்சி சென்றார். அவரை மோட்டார் சைக்கிளில் வந்தவர் பின் தொடர்ந்தார்.

    பின்னர் அவர் சித்ரா தேவியின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினார். இது குறித்த புகாரின்பேரில் திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மர்மநபர் ஒருவர் செல்போன், பர்ஸ் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளார்.
    • வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவிலில் தேவார பாடல் பெற்ற வைத்தியநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது.

    நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான இங்கு செவ்வாய்க்கிழமை தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சிறப்பு வழிபாடு செய்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களாக செவ்வாய்க்கிழமை அன்று கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மர்ம நபர் ஒருவர் செல்போன் பர்ஸ் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளார்.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கோவிலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.

    நேற்று செவ்வாய்க்கிழமை ஆனதால் எப்படியும் அந்த மர்ம நபரை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கோவிலில் உள்ள சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளில் ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்தார்.

    உடனே வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் திருச்சி உறையூரை சேர்ந்த ஆனந்தன் (வயது 35).

    என்பதும் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    அதை அடுத்து போலீசார் ஆனந்தனை கோர்ட்டில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.

    • செல்போனில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்தது தெரியவந்தது.
    • செல்போனில் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை காட்டி பெண்களை மிரட்டி வந்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

    கோவை:

    கோவை பாப்பநாயக்கன்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ராமு(வயது41).

    இவர் தனது வீட்டு அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இங்கு சவுரிபாளையம் அண்ணாமலை நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது நண்பர்களுடன் ஜெராக்ஸ் எடுக்க சென்றார்.

    அப்போது ராமு தனது கடைக்கு வந்த ஒரு இளம்பெண்ணை அவருக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்ததார்.

    இதனை பார்த்த கல்லூரி மாணவர் ராமுவை கண்டித்து, அவரது செல்போனை வாங்கி பார்த்தார். அப்போது, அவரது செல்போனில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்தது தெரியவந்தது.

    மேலும் ஏராளமான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களும் இருந்தது. இதனை பார்த்ததும் கல்லூரி மாணவரும், அவரது நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தார்.

    இதற்கிடையே ராமு அங்கு இருந்து தப்பி செல்ல முயன்றார். உடனடியாக கல்லூரி மாணவர் நண்பர்களுடன் சேர்ந்து அவரை மடக்கி பிடித்து தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அங்கு இருந்தவர்கள் ராமுவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கல்லூரி மாணவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ராமு மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் அவர் செல்போனில் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை காட்டி பெண்களை மிரட்டி வந்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர். அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது.

    இந்நிலையில், ராமுவும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், நான் கடையில் இருந்த போது 2 பேர் கடைக்கு வந்தனர்.

    அவர்கள் எனது செல்போனில் கல்லூரி மாணவிகளின் வீடியோக்கள் இருப்பதாகவும், அதனை சோதனை செய்ய வேண்டும் என கூறி செல்போனை கேட்டனர். கொடுக்க மறுத்ததால் அவர்கள் என்னை தகாத வார்த்தைகளால் பேசி செல்போனை பறித்தனர்.

    அவர்கள் தாக்கியதில் நான் கீழே விழுந்ததில் எனக்கு காயம் ஏற்பட்டது. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தார்.

    அதன்பேரிலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×