search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 125869"

    • தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
    • கோட்டார் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்தனர்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடந்து செல்லும் நபர்களிடம் செல்போன் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்ட னர். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோட்டார் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசா ரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.

    பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த சையத் அலி (வயது 23) என்பது தெரியவந்தது. இவர் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செல்போன் திருடியதை ஒப்பு கொண்டார். போலீசார் அவரிடம் இருந்து 10 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர் கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    • பல்லடம் கல்லம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விசைத்தறி குடோனில் வேலை பார்த்து வருகிறார்.
    • 3 நபர்கள் 2 செல்போன்கள், ரூ.3500, பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்து விட்டு மின்னலென மறைந்து விட்டனர்.

    பல்லடம் :

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெயதீப் மகன் ராகுல்தீப்(வயது 24). இவர் பல்லடம் கல்லம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விசைத்தறி குடோனில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் சுபாஷ் சந்த்(23). இவர் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை, லட்சுமி நகரில் தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டதால் சுபாஷ் சந்தை சந்திப்பதற்காக சின்னக்கரை லட்சுமி நகருக்கு ராகுல் தீப் சென்றார். இரவு நேரம் ஆகிவிட்டதால், சுபாஷ் சந்த் தனது மோட்டார் சைக்கிளில் ராகுல் தீப்பை ஏற்றிக்கொண்டு பல்லடம் கல்லம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கரைப்புதூரை அடுத்துள்ள ஆறுமுத்தாம்பாளையம் தொட்டி அப்புச்சி கோவில் ரோட்டில் செல்லும்போது. இவர்களது மோட்டார் சைக்கிளை வழிமறித்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் இவர்களை மிரட்டி இவர்கள் வைத்திருந்த 2 செல்போன்கள், ரூ.3500, பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்து விட்டு மின்னலென மறைந்து விட்டனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து இருவரும் பல்லடம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வழிப்பறி செய்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • திருப்பத்தூர் மாவட்டம் கவுண்டப்பனூர் பகுதியை சேர்ந்தவரிடம் செல்போனை பறித்தனர்.
    • தாதகாப்பட்டி உழவர் சந்தை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    சேலம்:

    திருப்பத்தூர் மாவட்டம் கவுண்டப்பனூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் ஹரிஹரன் (வயது 23). இவர் சேலம் தாதகாப்பட்டி சௌந்தர் நகர் பகுதியில் தங்கி தாதகாப்பட்டி கேட் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.ஹரிஹரன் நேற்று இரவு ஓட்டலில் வேலை முடிந்து தனது அறைக்கு செல்ல தாதகாப்பட்டி உழவர் சந்தை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ஹரிஹரன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். 

    • செல்போனை பெற்றோர் பறித்து கொண்டதால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மாட்டுத்தாவணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    மதுரை

    மதுரை சீமான் நகர், நூல் பட்டறை தெருவை சேர்ந்த மாரிமுத்து மகள் கலாவதி (வயது 18). இவர் பூவந்தியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்தார். இவர் படிப்பில் ஆர்வமின்றி செல்போனை பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. பெற்றோர் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டனர். கலாதேவி தோழியின் செல்போனை வாங்கி பயன்படுத்தினாராம். இதனை பெற்றோர் தட்டி கேட்டனர்.

    வாழ்க்கையில் விரக்தி அடைந்த கலாதேவி நேற்று மதியம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாட்டுத்தாவணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    • போதை பழக்கங்களில் இருந்து மாணவர்கள் மீண்டு வர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    • பள்ளி பருவத்தில் இருந்தே மாணவர்கள் செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி நாகை மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் நடைபெற்றது.

    கலெக்டர் அருண்தம்பு ராஜ் தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் வட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் விபத்துக ளால் ஏற்படும் உயிரிழப்புகளை எவ்வாறு தவிர்ப்பது, விபத்து அவசர காலங்களில் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்ன போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து உலக விபத்து காய தினம் குறித்து விழிப்புணர்வு உறுதி மொழியை கலெக்டர் முன்னிலையில் ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய கலெக்டர் அருண் தம்பு ராஜ், போதை பழக்கங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் மீண்டு வர ஆசிரியர்கள் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும், பள்ளி பருவத்தில் இருந்தே மாணவர்கள் செல்போன் பயன் பாட்டை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று கூறினார்.

    • செல்போன் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் நரிமேடு, செல்லூரில் பதுங்கி இருந்த 2 பேரை பிடித்து, காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை ராஜாக்கூரை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 24). இவர் அனுப்பானடியில் மாநகராட்சி துப்புரவு பணியாளராக உள்ளார்.

    நேற்று மதியம் இவர் உறவுக்கார பெண்ணுடன் கே.கே.நகர் பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அங்கு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.

    அவர்கள் சாமிநாதனிடம், 'சட்டை பையில் இருக்கும் பணத்தை கொடு, இல்லை என்றால் குத்தி கொன்று விடுவேன்' என்று மிரட்டினர். சாமிநாதன் பணம் தர மறுத்தார். ஆத்திரம் அடைந்த 3 பேரும் அவரை தாக்கி செல்போனை பறித்து தப்பினர்.

    இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனையின் பேரில், மாட்டுத்தாவணி இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அதன் அடிப்படையில் போலீசார் நரிமேடு, செல்லூரில் பதுங்கி இருந்த 2 பேரை பிடித்து, காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். அவர்கள் நரிமேடு செந்தில்வேல் மகன் வீராசாமி (23), செல்லூர், சுயராஜ்யபுரம் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.

    இருவரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய சூர்யாவை தேடி வருகின்றனர்.

    • ஆத்தூரில் சரக்கு வாகனத்தில் செல்போன் திருடிய தம்பதியை போலீசார் தேடிவருகின்றனர்.
    • குழந்தையுடன் சென்று கைவரிசை காட்டிய தம்பதிக்கு வலைவீச்சு

    ஆத்தூர்:

    ஆத்தூரில் சரக்கு வாகனத்தில் செல்போன் திருடிய தம்பதியை போலீசார் தேடிவருகின்றனர்.

    செல்போன் திருட்டு

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான பாத்திரக் கடை உள்ளது. இந்த கடைக்கு தேவையான பாத்திரங்கள் நேற்று காலை வெளியூரில் இருந்து சரக்கு வாகனத்தில் வந்தது.

    இந்த வாகனத்தை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் ஓட்டி வந்தார். இவர், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள தனது செல்போனை வண்டியின் முன் பகுதியில் வைத்தவிட்டு வாகனத்தின் மேலே ஏறி மழை பாதுகாப்புக்காக தார்பாய் போட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே குழந்தையுடன் சென்ற தம்பதி, வாகனத்தில் செல்போன் இருப்பதை பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை முன்பு அனுப்பிவிட்டு குழந்தையுடன் சென்று அப்பெண்ணின் கணவர், செல்போனை திருடிச் சென்றுள்ளார். இதன் சி.சி.டி.வி காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தம்பதிக்கு வலைவீச்சு

    இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பட்டப் பகலில் சரக்கு வாகனத்தில் செல்போன் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக செல்போன்கள் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
    • செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கைபேசி பெறுவதற்கு விண்ணப்பித்து பயனடையலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் 2022-23-ம் நிதியாண்டிற்கு கல்லூரி பயிலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர் மற்றும் சுயதொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்று திறனாளிகளுக்கு பிரத்யே கமாக வடிவமைக்கப்பட்ட செல்போன்கள் வழங்கு வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    18 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 60 வயதிற்குட்பட்ட கல்லூரி பயிலும், வேலை வாய்ப்பற்ற இளைஞர் மற்றும் சுய தொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் செல்போன்கள் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

    கல்லூரி பயிலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர் மற்றும் சுய தொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மட்டும் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பணிச் சான்று (கல்லூரி பயில்பவராயின் படிப்புச் சான்று, வேலையில்லா பட்டதாரி இளைஞர் எனில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, சுய தொழில் புரிபவராயின் சுய தொழில் புரிவதற்கான சான்று), மார்பளவு புகைப்படம்-2 ஆகியவைகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

    தகுதியுடைய பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கைபேசி பெறுவதற்கு விண்ணப்பித்து பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேற்கூரையை பிரித்து மர்ம நபர்கள் கைவரிசை
    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கிருஷ்ணன் புதூரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 39). இவர் கன்னியாகுமரியை அடுத்த விவேகானந்தபுரம் அருகே உள்ள மாதவபுரம் பகுதியில் சூப்பர் மார்க்கெட் கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று நள்ளிரவு 11 மணிக்கு அவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் அவர் காலை அவர் கடையை திறந்து பார்த்தபோது கடையின் உள்ளே உள்ள அறைக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக் கண்டு திடுக்கிட்ட ராமலிங்கம் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் செல்போன் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்தக் கடையின் மேல் கூரையை பிரித்து யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கைவரிசை காட்டியது தெரிய வந்தது.

    இது குறித்து கன்னியாகுமரி போலீசில் ராமலிங்கம் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தடைய வியல் நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே கடந்த 3 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள பேன்சி கடையை உடைத்து ரூ. 1¾ லட்சம் கொள்ளை போனது. இந்த தொடர் சம்பவத்தினால் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • செல்போன் பார்த்துக்கொண்டே பஸ்சை ஓட்டி செல்லும் டிரைவர்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • சாலைகளை கடந்து செல்ல பொது மக்களுக்கு உதவி புரிவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மதுரை

    மதுரையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். சில அரசு பஸ் டிரைவர்கள் செல்போனை பார்த்துக் கொண்டே பஸ்சை ஓட்டி செல்கின்றனர்.

    நேற்று மதியம் மதுரை ரெயில் நிலையம்-பெரியார் பஸ் நிலையம் இடையே அரசு பஸ்சை ஓட்டிச் சென்ற டிரைவர் விபத்து அபாயத்தை உணராமல் செல்போனில் காட்சிகளை பார்த்தபடி ஓட்டிச் சென்றார். பஸ் டிரைவரின் அலட்சியத்தை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் சில பஸ்டிரைவர்கள் மற்றும் ஆட்டோ, கார் வாகன டிரைவர்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் செல்போனை பார்த்தபடி வாகனங்களை ஓட்டுவதை பார்க்க முடிகிறது. இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களால் விலை மதிப்பில்லாத மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகனம் ஓட்டும்போது செல்போன்களை பார்த்து கொண்டு இயக்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மதுரையில் சில போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தினர்.

    இருசக்கர வாகனங்களை அடிக்கடி நிறுத்தி சோதனை செய்து அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீசார், விபத்து ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளை மீறும் பெரிய வாகனங்கள் மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதில்லை.

    சாலைகளை கடந்து செல்ல பொது மக்களுக்கு உதவி புரிவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    • வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் சைக்கிள் பயன்பாடு குறையவில்லை.
    • நகர்ப்பகுதியில் 95.3 சதவீதம் பேரும், கிராமப்பகுதியில் 95.9 சதவீதம் பேரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர்.

    சென்னை :

    மாற்றம் ஒன்றே மாறாதது. ஆதியில் தொடங்கிய மனிதனின் நடைபயணம் இன்று பல்வேறு மாற்றங்களுக்கு பிறகு செவ்வாய் கிரகத்துக்கும், அதற்கு அப்பாலும் நீண்டு போய்க்கொண்டு இருக்கிறது.காற்று, மழை, காலநிலை, தட்பவெப்பம் என இயற்கையிலும் கூட அவ்வப்போது மாற்றம் என்பது நிகழ்ந்து வருகிறது.

    உலகத்தையே உள்ளங்கையில் கொண்டு வரும் கம்ப்யூட்டர், செல்போனின் பயன்பாடு போன்ற எவ்வளவோ மாற்றங்கள் மனித வாழ்வில் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

    இத்தகைய மாற்றங்கள் காரணமாக அம்மிக்கல், ஆட்டுக்கல், ரேடியோ, டிரான்சிஸ்டர், டெலிபோன் போன்று தேடி கண்டுபிடிக்க வேண்டிய பொருட்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

    இருந்தபோதிலும் இத்தகைய பொருட்களில் சைக்கிள் மட்டும் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்தியாவில் பெரும்பாலானோரின் வீடுகளில் சைக்கிள் பயன்பாடு இருந்து வருவதையும், பலர் குறுகிய தூர பயணத்துக்கும், சிலர் வெகுதூர பயணத்துக்கும் பயன்படுத்தி வருவதையும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

    இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

    தேசிய குடும்ப சுகாதார ஆய்வு நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி மோட்டார் சைக்கிள், மொபட் போன்றவற்றின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நகர்ப்புறங்களில் 43 சதவீதம் பேரும், கிராமப்புறங்களில் 54 சதவீதம் பேரும் சைக்கிளை தங்களது பயணத்துக்காக பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

    மோட்டார் சைக்கிள், மொபட்டை நகர்ப்புறங்களில் 54.2 சதவீதம் பேரும், கிராமப்புறங்களில் 44.3 சதவீதம் பேரும் பயன்படுத்துகின்றனர். அதேவேளையில் கார் பயன்பாடு நகர்ப்பகுதியில் 13.8 சதவீதமும், கிராமப்பகுதியில் 4.4 சதவீதமும் உள்ளது.

    மிக துல்லியமாக தெரியும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கலர் டி.வி.கள் பலரது வீடுகளை அலங்கரித்து வருகின்றன. அதாவது, நகர்ப்பகுதியில் 86.8 சதவீத வீடுகளிலும், கிராமப்பகுதியில் 58.4 சதவீத வீடுகளிலும் கலர் டி.வி.கள் உள்ளன.

    அதேவேளையில் 2.3 சதவீதம் பேர் தற்போது வரை கறுப்பு-வெள்ளை டி.வி.களையே பயன்படுத்தி வருகின்றனர். ரேடியோ, டிரான்சிஸ்டர் என்றால் என்ன? என வருங்கால சந்ததியினர் கேள்வி எழுப்பும் வகையில் அதன் பயன்பாடும் வெகுவாக குறைந்துவிட்டது.

    நகர்ப்பகுதியில் 6.7 சதவீதத்தினரும், கிராமப்பகுதியில் 4.1 சதவீதத்தினரும் ரேடியோ, டிரான்சிஸ்டர் பயன்படுத்தி வருகின்றனர்.

    செல்போன் பயன்பாடு மட்டும் நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற பாகுபாடு இல்லாமல் நகர் மற்றும் கிராமப்பகுதிகளை வெகுவாக ஆக்கிரமித்துள்ளது.

    அதாவது நகர்ப்பகுதியில் 96.7 சதவீதம் பேரும், கிராமப்பகுதியில் 91.5 சதவீதம் பேரும் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக 94.1 சதவீதத்தினர் செல்போன் பயன்படுத்துகின்றனர்.

    இணையதள வசதி இல்லாத செல்போன், எதற்கும் உதவாது என்ற மனப்பாங்கு மக்கள் மனதில் வேரூன்றி இருப்பதால் இணையதள பயன்பாடும் அதிகரித்து உள்ளது.

    அதாவது நகர்ப்புறத்தில் 64.6 சதவீதத்தினரும், கிராமப்புறத்தில் 41 சதவீதத்தினரும் இணையதள வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.

    லேன்ட்லைன் எனப்படும் டெலிபோன் பயன்பாடும் வெகுவாக குறைந்துவிட்டது. டெலிபோன் பயன்பாடு நகர்ப்பகுதியில் 4.6 சதவீதமாகவும், கிராமப்பகுதியில் 1.1 சதவீதமாகவும் உள்ளது.

    அரசு மற்றும் தனியார் நிறுவன பணியில் இருப்பவர்கள், தொழில் செய்பவர்கள் என குறிப்பிட்ட பிரிவினரிடம் மட்டுமே வங்கி கணக்கு இருந்து வந்த நிலையில் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடன், தெருவோர சிறு வியாபாரிகளுக்கு கடன் என்பது போன்ற அரசின் திட்டங்களும், சிறுசேமிப்பு குறித்த விழிப்புணர்வும் பெரும்பாலானவர்களை வங்கி கணக்கு தொடங்க செய்தது.

    தேசிய குடும்ப சுகாதார ஆய்வு நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி நகர்ப்பகுதியில் 95.3 சதவீதம் பேரும், கிராமப்பகுதியில் 95.9 சதவீதம் பேரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர்.

    வறுமை என்பது குறிப்பிட்ட சதவீதம் இந்தியாவில் இருந்து வருகின்ற போதிலும் இது செல்போன் வாங்குவதிலும், பயன்படுத்துவதிலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

    இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • கைப்பேசியை பலரும், தூங்கப் போகும் நேரத்தில் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
    • இதைத் தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றலாம்.

    உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க சரியான நேரத்தில் தூங்குவது முக்கியமானது. தூங்கச் செல்வதற்கு முன்பு கைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்துதல் நேரத்தை வீணாக்குவதோடு கண் எரிச்சல், தலைவலி, தூக்கமின்மை, பசியின்மை போன்ற உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும். கைப்பேசியை பலரும், தூங்கப் போகும் நேரத்தில் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதைத் தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றலாம்.

    தூங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாகவே கைப்பேசியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்ற உறுதியான தீர்மானமே இதை நடைமுறைபடுத்துவதற்கான சிறந்த வழி. நீங்கள் எவ்வளவு நேரம் கைப்பேசியை பயன்படுத்துகிறீர்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். எந்த செயலியை அதிகம் பயன்படுத்துகிறீர்கள், எத்தனை முறை உங்கள் கைப்பேசியை திறக்கிறீர்கள் என்பதை அறிய, கைப்பேசியின் செட்டிங்ஸ்-சில் டிஜிட்டல் வெல்பீயிங்-ஐ கிளிக் செய்து துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும்.

    இதன்மூலம் தேவைக்கு அதிகமாக நீங்கள் பயன்படுத்தும் செயலியை கண்டறிந்து பயன்பாட்டைக் குறைக்கலாம். இந்த டிஜிட்டல் வெல்பீயிங் அமைப்பில் உள்ள 'ஆப்ஸ் டைமர்' மூலம் ஒரு செயலியை இவ்வளவு நேரம்தான் பயன்படுத்த வேண்டும் என நேரக்கட்டுப்பாடு அமைக்க முடியும். இது குறிப்பிட்ட செயலியை அதிகம் பயன்படுத்துவதை தடுக்க உதவும்.

    இரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கைப்பேசி பயன்பாட்டைத் தவிர்க்க கடிகாரத்தில் அலாரம் 'செட்' செய்யலாம். கடிகார அலாரம் அடித்த பின்பு கைப்பேசி பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும் உங்கள் கைப்பேசியில் செட்டிங்ஸ்-சில் 'நைட் மோட்' என்ற அம்சத்தை 'கிளிக்' செய்து தூங்கப் போகும் நேரத்தை செட் செய்துவிட்டால், நீங்கள் தூங்க வேண்டிய நேரத்தில் கைப்பேசி பயன்படுத்திக் கொண்டிருந்தால், கைப்பேசி திரையின் வண்ணம் மாறி, 'இது தூங்க வேண்டிய நேரம்' என்பதை நினைவூட்டும்.

    நீங்கள் தூங்க சென்றுவிட்டாலும், கைப்பேசியில் அவ்வப்போது வரும் நோட்டிபிகேஷன்கள் உங்களை மீண்டும் கைப்பேசியை பயன்படுத்த தூண்டலாம். இதைத் தவிர்க்க டிஜிட்டல் வெல்பீயிங்கில் உள்ள 'பெட் டைம் மோட்' என்ற அம்சம் பயன்படும். கைப்பேசியிலிருந்து வெளியாகும் நீல ஒளி அலைகள், இரவு நேரங்களில் கண் பார்வையையும் தூக்கத்தையும் அதிகம் பாதிக்கும்.

    இதனைத் தவிர்க்க பயன்படுத்தும் கைப்பேசியை படுக்கும் இடத்தில் இருந்து கைகளுக்கு எட்டாத தூரத்தில் வையுங்கள் அல்லது படுக்கை அறைக்கு வெளியே வையுங்கள். இதன் மூலம் தூங்கும் போது கைப்பேசியை பயன்படுத்தும் ஆர்வத்தைக் குறைக்க முடியும்.

    ×