search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 125869"

    • சேலம் 5 ரோட்டில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்த போலீஸ்காரரிடம் செல்போன் மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
    • மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி நாச்சினாம்பட்டியை சேர்ந்தவர் வீராசாமி (வயது 35). இவர் சென்னை ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

    சொந்த ஊருக்கு வந்த வீராசாமி நேற்று முன்தினம் வேலைக்கு புறப்பட்டார். இரவு 11 மணி அளவில் சேலம் 5 ரோட்டில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர், அவரிடம் இருந்த ரூ.24 மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வீராசாமி பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போனை பறித்து சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

    • வீட்டு வேலை செய்து வந்தவர் வீட்டில் திருட முயற்சி
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி ஆற்றன்கரை காலனியை சேர்ந்தவர் பிந்து (வயது 41). இவர் திருவனந்தபுரத்தில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார்.

    தற்போது இவர் மார்த்தாண்டத்தை அடுத்த நல்லூர் பல்லன்விளையில் தனது மகனுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அதிகாலை 4 மணிக்கு பிந்து, திருவனந்தபுரம் செல்வதற்காக வீட்டில் சமையல் வேலையில் ஈடு பட்டார்.

    அப்போது வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் புகுந்து உள்ளார். அவர் வீட்டில் இருந்த செல்போனை திருடி உள்ளார். இதை கவனித்து விட்ட பிந்துவும் அவரது மகனும் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் இருவரும் அந்த வாலிபரை பிடித்து மார்த்தாண்டம் போலீசில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த ஷேக் மைதீன் (25) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • கல்லூரி செல்வதற்காக மாணவி ஒருவர் கோவை செல்லும் பேருந்தில் ஏறினார் .
    • மாணவி கூச்சலிட்டதை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அந்த முதியவரை பிடித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் புஷ்பா தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் கல்லூரி செல்வதற்காக மாணவி ஒருவர் கோவை செல்லும் பேருந்தில் ஏறினார். அப்போது அந்த பஸ்சில் படிக்கட்டில் நின்றிருந்த முதியவர் ஒருவர் அந்த மாணவியிடம் பேக்கில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார் .

    அந்த மாணவி கூச்சலிட்டதை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அந்த முதியவரை பிடித்து தர்மஅடி கொடுத்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் முதியவரை எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • செல்போன்கள் திருடிய ஓட்டல் ஊழியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் செல்போன் திருட்டு தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் ஒரு கும்பல் யானைக்கல் தரைப்பாலம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    அதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், மீனாட்சி கோவில் உதவி கமிஷனர் காமாட்சி ஆலோசனை பேரில், விளக்குத்தூண் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் தீபா அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அங்கு பதுங்கியிருந்த 4 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம்10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 4 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் காக்கா தோப்பு, தலைவிரிச்சான் சந்து கண்ணன் (40), சின்னகண்மாய் பாலகுரு (31), ராமநாதபுரம் மறவகுடி சுதாகர் (36), மதுரை பைபாஸ் ரோடு ஓட்டல் ஊழியர் சிராஜ் அலி (25) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது கண்ணன் பாலகுரு ஆகியோர் கூறுகையில், குடிபோதையில் தூங்குவோர், மூதாட்டிகள் மற்றும் இளம் பெண்களிடம் செல்போனை பறிப்போம். அதனை ராமநாதபுரம் மறவகுடி சுதாகர், ஓட்டல் ஊழியர் சிராஜ் அலி ஆகியோரிடம் கொடுப்போம். அவர்கள் இதனை விற்று பணமாக்கி கொடுப்பார்கள். இதற்காக நாங்கள் 2 பேருக்கும் பெருமளவில் கமிஷன் தொகை கொடுத்து வந்தோம்" என்று தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    கோவை

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பொன்னே கவுண்ட ன்புதூரை சேர்ந்தவர் மாமணி (வயது 32).

    இவர் அந்த பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மாமணி தனது வீட்டை பூட்டி விட்டு சீரியம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு தூக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுைழந்தனர்.

    பின்னர் அவர்கள் வீட்டில் உள்ள பீரோவை திறந்து அதில் இருந்த ஆரம், செயின், கம்மல், மோதிரம், வளையல் உள்பட 19 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மறுநாள் மாமணியின், வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தின் இது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் தனது வீட்டிற்கு விரைந்து சென்றார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து மாமணி அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து அன்னூர் போலீசார் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 19 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    • வாலிபரை தாக்கி ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மர்ம நபர் திருடி சென்று விட்டார்.
    • இது குறித்து தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அழகாபுரி தெருவை சேர்ந்த முருகேஷ் மகன் ராஜேஷ் (வயது27). இவர் திருப்பத்தூர் சாலையில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பணியாற்றி வருகிறார். வீட்டில் இருந்து வேலைக்கு சைக்கிள் சென்று செல்வது வழக்கம். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது செவரக்கோட்டையார் வீதியில் 30 வயது வாலிபர் இருசக்கர வாகனத்தில் வந்து ராஜேஷ் மீது மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜேஷ் எழுந்தபோது மீண்டும் இவர் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த ராஜேஷ் கீழே விழுந்தார்.

    அப்போது அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மர்ம நபர் திருடி சென்று விட்டார். அந்த வழியாக வந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேசை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சமீப காலமாக வெள்ளையன் ஊரணி பகுதியில் மர்ம நபர்கள் முதியவர்களிடம் நகை பறிப்பு ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது நடந்த வழிப்பறி சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    • அல்லாளபுரத்தில் நூற்றாண்டு பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
    • சிசிடிவி. காட்சிகள் அந்தப்பகுதியில் வைரலாகி வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி, அல்லாளபுரத்தில் நூற்றாண்டு பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு அடுத்த மாதம் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்காக, யாக சாலை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்காக மன்னார்குடி பகுதியில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்டோர் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் செல்போன்களை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்த சிசிடிவி. காட்சிகள் அந்தப்பகுதியில் வைரலாகி வருகிறது. செல்போன்கள் திருடு போனது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • திருடப்பட்ட, காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்துத்தரக்கோரி காவல் நிலையங்களில் புகாா்கள் அளிக்கப்பட்டன.
    • சைபா் கிரைம் காவலா்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகரில் திருடப்பட்ட, காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்துத்தரக்கோரி காவல் நிலையங்களில் புகாா்கள் அளிக்கப்பட்டன. இந்தப் புகாா்களின்பேரில் சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் சொா்ணவள்ளி, உதவி ஆய்வாளா் சையத் ரபீக் சிக்கந்தா் மற்றும் காவலா்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினா் நவீனதொழில் நுட்பங்களுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில், செல்போன்களை வாங்கி தற்போது பயன்படுத்தி வருபவா்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவா்களிடமிருந்து 108 செல்போன்கள் மீட்கப்பட்டன. திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.பிரபாகன் உத்தரவின்பேரில் இந்த செல்போன்கள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த 108 செல்போன்களின் மதிப்பு ரூ.16.5 லட்சமாகும். காணாமல் போன செல்போன்களை மீட்ட சைபா் கிரைம் காவல் துறையினரை மாநகர காவல் ஆணையா் பாராட்டினாா். அப்போது மாநகர காவல் துணை ஆணையா் அபினவ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • வாலிபரிடம் செல்போன் பறிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பொன்மேனி பகத்சிங் தெருவை சேர்ந்த வெள்ளையன் மகன் முத்துகண்ணன் (வயது 21). இவர் நேற்று இரவு பழங்காநத்தம் பைபாஸ் ரோடு வ.உ.சி பாலத்தில் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டி முத்துகண்ணன் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றார். இதுதொடர்பாக முத்துகண்ணன் சுப்பிரமணியபுரம் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
    • மேலும் பேரூராட்சி பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க கூடாது என தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் அன்பரசன் முன்னிலை வைத்தார். செயல் அலுவலர் கணேசன் அனைவரையும் வரவேற்றார் .கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பொத்தனூர் பேரூராட்சியில் 2015 -2016 -ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் அபிவிருத்தி பணிகள் ரூ. 6.41 கோடியில் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. திட்டத்திற்கு செலுத்தப்பட்ட பேரூராட்சி பங்கு தொகை ரூ. 1 கோடியில் பயன்படுத்தாத தொகை ரூ.35 லட்சத்தை தற்போது பொத்தனூர் பேரூராட்சி 9-வது வார்டில் உள்ள புதுத் தெருவில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆய்வுக்கூட்ட அறிவுரைகளைத் தொடர்ந்து சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உத்தரவுபடி பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் ,சிக்கன் குனியா, மலேரியா போன்ற நோய்கள் வராமல் தடுக்க 10 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான செலவினத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தங்களது பொதுநிதியில் மேற்கொள்ள மன்றத்தின் அனுமதி பெறுதல், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    வழிகாட்டு நிதிமுறைகளின்படி பேரூராட்சி பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்காக கள ஆய்வு செய்து செயல் அலுவலரின் குறிப்பாணை பரிந்துரையுடன் அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு மன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை நிராகரித்தனர். மேலும் பேரூராட்சி பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க கூடாது என தெரிவித்தனர்.

    • கத்தி முனையில் செல்போன் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
    • தப்பி ஓடிய மேலும் ஒருவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கோரிப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜாபர் அலி (வயது 44). இவர் சம்பவத்தன்று மாலை தமுக்கம் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர், கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றனர்.

    இது தொடர்பாக ஜாபர் அலி தல்லாகுளம் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஹார்விப்பட்டி சுப்பிரமணியம் மகன் பிரகாஷ் (19) என்பவர், இன்னொரு நபருடன் சேர்ந்து செல்போன் பறித்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து தல்லாக்குளம் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார், ஜாபர் அலியிடம் செல்போன் பறித்ததாக பிரகாஷை கைது செய்தனர். இது தவிர தப்பி ஓடிய மேலும் ஒருவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் எழுமலை, தச்சம்பட்டியை சேர்ந்தவர் முருகன் (53). இவருக்கு அந்த பகுதியில் தோட்டம் உள்ளது. அங்கு உள்ள போர்வெல் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல வசதியாக, ரூ.20 ஆயிரம் செலவில், 200 மீட்டர் நீளத்துக்கு மின்வயர்களை பொருத்தி இருந்தார்.

    சம்பவத்தன்று இரவு முருகன் தோட்டத்தை பூட்டிவிட்டு, வீட்டுக்கு சென்றார். அப்போது மர்ம கும்பல் தோட்டத்துக்குள் புகுந்து, அங்கிருந்த 200 மீட்டர் மின்வயரை திருடி சென்று விட்டது.

    இதுகுறித்த புகாரின்பேரில் எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கீழமட்டியான் தெற்கு தெருவை சேர்ந்த 15 வயது சிறுவன், இரண்டு 17 வயது சிறுவர்கள், கீழமட்டியான் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.

    • பூக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
    • செல்போன் மற்றும் கை கடிகாரம் ஆகியவற்றை பறித்தார்.

    கோவை 

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பழைய சந்தை கடையை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 44). இவர் அங்குள்ள பூக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.


    சம்பவத்தன்று இவர் இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள பொது கழிப்பிடத்துக்கு சென்றார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் திடீரென செந்தில் குமாரை தடுத்து நிறுத்தி குடிக்க பணம் கேட்டார்.

    அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறினார். உடனே அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி மிரட்டினார். பின்னர் செந்தில் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினார்.

    அவரிடம் இருந்த செல்போன் மற்றும் கை கடிகாரம் ஆகியவற்றை பறித்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.


    அவர்கள் வருவதை பார்த்து அந்த வாலிபர் தப்பி சென்றார். இதுகுறித்து செந்தில் குமார் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த வாலிபர் மேட்டுப்பாளையம் சங்கர் நகரை சேர்ந்த லால் என்கிற சபீர் அகமது (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்த கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×