search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 125869"

    • கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
    • ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பள்ளிப்பாடி பகுதியை சேர்ந்தவர் தாரணி (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று கூடலூருக்கு வந்த தாரணி அக்ரஹாரம் தெருவில் உள்ள ஒரு கடையில் காய்கறி வாங்கி கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த செல்போனை ஒரு ஆசாமி பறித்து விட்டு தப்பி ஓடினார்.

    இதுகுறித்து மாணவி கூடலூர் போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் செல்போன் திருடிய கீழ்நாடுகாணியை சேர்ந்த உகேந்திரன் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது

    • தேனி அருகே செல்போன் மற்றும் பைக் திருடுபோனதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே கோம்பையை சேர்ந்தவர் முருகன் (48). இவரது தோட்டத்தில் இருந்த பிளாஸ்டிக் பைப்புகளை ரெங்கநாதபுரத்தை சேர்ந்த கனகராஜ் (29) என்பவர் திருடிச் ெசன்றார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து கோம்பை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கம்பத்தை சேர்ந்தவர் ரமேஷ் (31). சம்பவத்தன்று தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் உள்ளே புகுந்து செல்போனை திருடினார். விரட்டியபோதும் கண் இமைக்கும் நேரத்தில் அவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி சீனிவாசநகரை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது36). தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் அருகே நிறுத்தி இருந்தார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஆண்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • குரூப்-4 தேர்வு அறையில் கண்காணிப்பாளர்களும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என கலெக்டர் வலியுறுத்துகிறார்.
    • விருதுநகர் மாவட்டத்தில் 81 ஆயிரத்து 44 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு தொடர்பான, முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெ ட்டி தலைமையில் நடந்தது.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 24-ந் தேதி குரூப்-4 தேர்வு, அதாவது பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் நேர்முக எழுத்தர் போன்ற பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் 237 தேர்வு மையங்களில் 81 ஆயிரத்து 44 விண்ணப்பதாரர்கள்தேர்வு எழுத உள்ளனர். தேர்வு நடைபெறும் மையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள 309 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துணை வட்டாட்சியர் நிலையில் 52 மொபைல் பார்ட்டியும் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 13 பறக்கும் படை அலுவலர்களும், 237 தேர்வு மையங்களுக்கும் 317 வீடியோகிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் 81 ஆயிரத்து 44 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

    தேர்வு மையங்களின் முன் தேர்வு எழுதுபவர்களின் பதிவு எண்கள், தேர்வு அறைகளின் எண்கள் ஆகிய விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் பெரிதாகவும், தெளிவாகவும் வைக்கப்பட வேண்டும். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு அறைக்கு சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட வேண்டும்.

    தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு முன்னதாகவே தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும். தேர்வர்கள் அறைக்கு வந்த பின்னர் விடைத்தாள்கள் கொடுக்கப்பட வேண்டும். ஒரு தேர்வருக்கு ஒரு விடைத்தாள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். அந்த விடைத்தாள் சேதமடைந்தாலோ அல்லது எழுத்து பிழை இருந்தாலோ மட்டுமே வேறு விடைத்தாள் கொடுக்கப்பட வேண்டும்.

    நுழைவுச் சீட்டு இல்லாமல் வரும் தேர்வர்களை அனுமதிக்கப்பட கூடாது. தேர்வர்கள் தேர்வு மையங்களில் எந்தவொரு மின்னனு சாதனங்கள் (கால்குலேட்டர், மொபைல் போன்) ஆகியவற்றை தேர்வு மையங்களுக்கு கொண்டு வர அனுமதிக்கக்கூடாது.

    தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களும் அலைபேசியை தேர்வறைக்குள் பயன்படுத்தக்கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், சிவகாசி சார் ஆட்சியர் பிருதிவிராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் காளிமுத்து, வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஜெயஸ்ரீ கடந்த மாதம் 21ஆம் தேதி சொந்த வேலை காரணமாக துறையூர் வந்துவிட்டு, மீண்டும் தனது கிராமத்திற்கு செல்வதற்காக துறையூர் பேருந்து நிலையம் வந்துள்ளார்.
    • அவரது பையில் இருந்த சுமார் ரூ. 13,000 மதிப்புள்ள செல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அபினிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (45). இவரது மகள் ஜெயஸ்ரீ (22). இவர் பிசிஏ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு வீட்டில் உள்ளார்.

    இந்நிலையில் இவர் கடந்த மாதம் 21ஆம் தேதி சொந்த வேலை காரணமாக துறையூர் வந்துவிட்டு, மீண்டும் தனது கிராமத்திற்கு செல்வதற்காக துறையூர் பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்பொழுது அவரது பையில் இருந்த சுமார் ரூ. 13,000 மதிப்புள்ள செல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயஸ்ரீ, இது தொடர்பாக துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இப்புகாரியின் பேரில் துறையூர் போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை மேற்கொண்டதில் சேனப்பநல்லூர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்பவர் ஜெயஸ்ரீயின் செல்போனை எடுத்து, அதே கிராமத்தை சேர்ந்த தவச்செல்வன் என்பவரிடம் 5000 ரூபாய்க்கு விற்றது தெரிய வந்தது.

    இதனை அடுத்து தவச்செல்வனிடம் இருந்த செல்போனை மீட்ட துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஜெயஸ்ரீ இடம் ஒப்படைத்தார். செல்போனை கண்டெடுத்த இளையராஜா மற்றும் செல்போனை வாங்கிய தவச்செல்வன் ஆகிய இருவரையும் துறையூர் போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    • வாலிபரிடம் செல்போன், நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • தனியாக நின்று கொண்டு செல்போன் பேசிக் கொண்டிருந்த வாலிபரை மர்ம நபர்கள் 5 பேர் சேர்ந்து தாக்கி நகையை பறித்து சென்றனர்.

        தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் பச்சகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 29).

    இவர் அழகு சமுத்திரம் சினிமா தியேட்டர் முன்பு தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 5 வாலிபர்கள் கார்த்தியை தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதுபற்றி கார்த்தி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டதாக இளம்பிள்ளை மற்றும் கோட்டைமேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த சதீஷ்குமார் (19) உள்பட 2 பேரை கைது செய்தனர் .மேலும் தலைமறைவாக உள்ள சுரேஷ், குமார், ரஞ்சித் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடலூர் அருகே செல்போனில் ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
    • கோட்டையம்மாள் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அருகே சன்னியாசி பேட்டை சேர்ந்தவர். கோட்டையம்மாள் (வயது 32). இந்த நிலையில் கணவர் ராமராஜனுக்கும், கோட்டை யம்மாளுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக கோட்டையம்மாள் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரண்டு செல்போன் நம்பரில் இருந்து கோட்டையம்மாளுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் அசிங்கமாக பேசி மானபங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோட்டையம்மாள் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இது குறித்து கோட்டையம்மாள் கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பதை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொது அறிவு சார்ந்த புத்தகங்களை படிக்க வேண்டும்
    • மாணவர்களுக்கு கலெக்டர் அரவிந்த் அறிவுறுத்தல்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வரும் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்வின் ஒரு பகுதியாக நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் கலெக்டர் அரவிந்த் பேசியதாவது:-

    75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்வு எதற்காக அரசு நடத்துகிறது என்பதை மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். சுதந்திர போராட்ட காலகட்டங்களில் நமது முன்னோர்கள் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கி தந்தார்கள் என்பதை நினைவு கூறும் வகையில் இது போன்ற நிகழ்வுகள் இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி நடைபெற்று வருகிறது.

    மேலும், நமது பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், களரி, கோ-கோ, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடும் போது உடல் ஆரோக்கியம் பெறுவதோடு, உங்களின் திறமையும் வெளிப்படுகிறது.

    ஆனால் இன்றைய சூழ்நிலையில் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் இவ்விளையாட்டுகளை மறந்து மொபைல் போனில் வரும் விளையாட்டுகளை தொடர்ந்து பார்ப்பதால் உங்களின் கண்பார்வை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    உங்களின் ஒரே ேநாக்கம் நன்றாக படித்து வாழ்வில் உன்னத நிலையினை அடைய வேண்டுமென்ற லட்சிய நோக்குடன் உங்கள் பயணத்தினை மேற்கொள்வதோடு, உங்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்களுடன் கலந்துரையாடுவது, பொது அறிவு சார்ந்த புத்தகங்களை படிப்பதிலும் உங்கள் நேரத்தை செலவிட வேண்டும்.

    மேலும் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட என் குப்பை எனது கடமை என்பதை நாம் உணர்ந்து உங்கள் வீட்டில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் பணுபுரியும் தூய்மை பணியாளர்களிடம் வழங்கிட உங்களது பெற்றோர்கள், நண்பர்கள், சுற்றத்தார் அனைவருக்கும் எடுத்துரைக்க வேண்டு வதோடு, இக்குப்பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கி கூற வேண்டும்.

    75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்ச்சியில் மாணவர்களாகிய உங்களின் முக்கிய பங்கு அனைவரும் மொபைல் போன் தவிர்ப்பது மற்றும் என் குப்பை எனது கடமை என்ற இரண்டினையினையும் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் புகழேந்தி, மாநகராட்சி மண்டல தலைவர்கள் முத்துராமன், அகஸ்டினா கோகிலா வாணி, அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சனில் ஜாண், பள்ளி முதல்வர் அருட்பணி லிஸ்பத், துணை முதல்வர் அருட்பணி டோஜி செபஸ்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சைபா் கிரைம் போலீசார் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக 47 செல்போன்கள் மீட்கப்பட்டன.
    • திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் செல்போன்களை உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் தவறவிடப்பட்ட மற்றும் திருடுபோன செல்போன் தொடா்பாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு தொடா்பாக சைபா் கிரைம் போலீசார் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 47 செல்போன்கள் மீட்கப்பட்டன.

    இந்த செல்போன்களை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில், பங்கேற்ற திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் செல்போன்களை உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.

    இந்நிகழ்ச்சியில் சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கிருஷ்ணசாமி, காவல் ஆய்வாளா்சித்ராதேவி, உதவி ஆய்வாளா் ரோஸ்லின் அந்தோனியம்மாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    • ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • அதன்படி காலை பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் முழுமையாக இயங்கி வருகின்றது. இந்நிலையில் சமீப காலமாக கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதையடுத்து பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் மாணவ-மாணவிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காய்ச்சல் இருமல், சளி அறிகுறி இருப்ப வர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பள்ளிக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

    அதன்படி காலை பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

    இதில் காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்படாமல் அவர்கள் அருகில் இருக்கும் மருத்து வமனை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:

    மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா தாக்கம் ஏற்பட்டு வருவதையடுத்து தடுப்பு நடவடி க்கையாக காலையில் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இதில் காய்ச்சல், சளி அறிகுறி உள்ளவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனை ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதேபோல் காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ள மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என ஏற்கனவே பெற்றோருக்கு அறிவுறுத்தி உள்ளோம். எனவே இதைப்பற்றி அச்சப்பட தேவையில்லை.

    இதேபோல் நமது மாவட்டத்தில் பள்ளி வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் செல்போன்களை பயன்படுத்துவதாக இதுவரை எந்த ஒரு புகாரும் வரவில்லை. எனினும் சோதனை செய்யும் போது செல்போன் கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 பேரிடம் செல்போன்-பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • முத்துக்குமார் கரிமேடு குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம், மேல ஆயக்குடி, முக்குலத்தோர் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 51). இவர் நேற்று நள்ளிரவு ஆரப்பாளையம் ஏ.ஏ. ரோடு கண் ஆஸ்பத்திரி அருகே நடந்து சென்றார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கும்பல், கத்தி முனையில் செல்போனை பறித்து சென்றது. இது தொடர்பாக முத்துக்குமார் கரிமேடு குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்லூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 40). இவர் நேற்று வைகை வடகரை, தரைப்பாலம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல், கத்தி முனையில் 970 ரூபாயை பறித்து சென்றது.

    இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டது கீழத்தோப்பு சிவா ( 25), தத்தனேரி, பாரதி நகர் ராமலிங்கம் மகன் மீன் முள் முத்துப்பாண்டி (22), உசிலம்பட்டி கருமாத்தூர் விவேக் என்ற கூழ் பானை (25), சின்ன வாகைக்குளம் அன்பு என தெரியவந்தது. இதில் அன்புவை தவிர மற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர். 

    • கோவைக்கு வந்த இவர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார்.
    • 2 வாலிபர்கள் விஜயகுமாரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

    கோவை:

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 34). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று கோவைக்கு வந்த இவர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார்.

    அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 பேர் விஜயகுமாைர அசைய முடியாதபடி மடக்கி பிடித்தனர். பின்னர் மற்றொரு வாலிபர் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன், ரூ.980 ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

    இது குறித்து விஜயகுமார் காட்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செல்போன் மற்றும் பணத்தை பறித்து தப்பிச் சென்ற காந்திபுரத்தை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (23) என்பவரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அஜித், பாலாஜி ஆகியோரை தேடி வருகிறார்கள். 

    • கோபிசெட்டிபாளையம் பகுதியில் 2 வீடுகளில் புகுந்து மோட்டார் சைக்கிள், செல்போன் திருடிய வாலிபரை 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்த பொதுமக்கள்.
    • இதையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாரிபர் மீது 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் உப்பு கிடங்கு வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவர் மனைவி மற்றும் மகன் சரவணன் (35) மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த ஒரு வாலிபர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோடடார் சைக்கிளை திருடிக்கொண்டு சென்றார். இதையடுத்து அந்த வாலிபர் பஸ் நிலைய பகுதியில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு, மீண்டும் நடந்து சென்றார். தொடர்ந்து அவர் அங்கு இருந்த மொபட்டை திருடிக்கொண்டு வாய்க்கால் ரோட்டிற்கு சென்றார்.

    மேலும் அந்த வாலிபர் வாய்க்கால் ரோட்டை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் இப்ராகிம் (40) என்பவரது வீட்டிற்குள் புகுந்து அங்கு இருந்த 3 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றார்.

    சத்தம் கேட்டு இப்ராகிம் எழுந்து பார்த்தார். அப்போது அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பி ஓடினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை விரட்டினார்.

    தொடர்ந்து அந்த வாலிபரை பொதுமக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்றனர். அந்த வாலிபர் கரட்டூர் அருகே உள்ள எஸ்.பி.நகரில் கரும்பு காட்டிற்குள் புகுந்து கொண்டார்.

    அதைத்தொடர்ந்து பொதுமக்கள் விடிய, விடிய கரும்பு காட்டை சுற்றி வளைத்து தேடினர். இதையடுத்து இன்று காலை அந்த வாலிபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து அவரை கோபி செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருச்சி மாவட்டம் சத்திரம் சின்னகவுண்டன்பட்டியை சேர்ந்த ராஜாமுகமது (27) என தெரிய வந்தது. போலீசாரிடம் சிக்கிய ராஜா முகமது மீது செல்போன், நகை, மோட்டார் சைக்கிள் திருட்டு என 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×