என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருச்சிற்றம்பலம்"
திருவாரூர் மாவட்டம், வடுவூரைச் சேர்ந்தவர் சத்தியராஜ், (வயது 35). ஆட்டோ டிரைவர். இவர் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் கைகாட்டியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
நேற்று மாலை சத்தியராஜ் ஆட்டோவில் புதுக்கோட்டை மாவட்டம், காசிம்புதுப்பேட்டையைச் சேர்ந்த அப்துல்மஜீது மனைவி பாத்திமா பீவி (70), அவரது மருமகள் மெகரூன்னிஷாபேகம் (37). ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்காக பட்டுக்கோட்டைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் திருச்சிற்றம்பலம்-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள குறிச்சி பூங்கா புனல்வாசல் பிரிவு சாலை அருகே வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு வேன், ஆட்டோ மீது மோதியது. இதில் சத்தியராஜ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த மெகருன்னிஷா பேகம் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பாத்திமா பீவி உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவரும் இறந்தார்.
இந்த விபத்து குறித்து திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேதவல்லி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் செந்தில்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையம் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் நிலையத்துக்கு சொந்தமாக புதிய கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்தது.
அதன்படி கட்டுமான பணிகளுக்கு ரூ.53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய போலீஸ் நிலையம் கட்டுவதற்கு செருவாவிடுதி தெற்கு வெள்ளிச்சந்தை பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு இருந்த ஆக்கிரமிப்புகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.
இந்த நிலையில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நேற்று போலீஸ் நிலையம் கட்டுவதற்கான பணிகள், பூமி பூஜையுடன் தொடங்கின. இதற்கான நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமரன் (திருச்சிற்றம்பலம்), ராஜேந்திரன் (சேதுபாவாசத்திரம்), தியாகராஜன் (அதிராம்பட்டினம்), அன்பழகன் (பட்டுக்கோட்டை), ஜெயா (பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சிற்றம்பலம்:
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதிக்கு நரியங்காடு துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு வினியோகிக்கப்படும் மின்சாரம் இரவு பகல் எந்த நேரத்திலும் முன் அறிவிப்பு இன்றி அடிக்கடி தடை செய்யப்படுகிறது. இதனால், விவசாயம் , வியாபாரம், சிறுதொழில்கள் உள்ளிட்டவை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக, திருச்சிற்றம்பலம் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
திடீர் மின் வெட்டு இல்லாமல், மும்முனை மின்சாரத்தை நாளொன்றுக்கு 16 மணி நேரம் வழங்க கோரியும், மின்வாரியத்தில் உள்ள காலிப்பணி இடங்களை உடனடியாக நிரப்பகோரியும், நரியங்காடு 33 கிலோவாட் துணைமின் நிலையத்தை 110 கிலோவாட் திறன் கொண்டதாக மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17-ந்தேதி காலை 10மணிக்கு திருச்சிற்றம்பலம் மின்வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக திருச்சிற்றம்பலம் நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் திருச்சிற்றம்பலம் கிளை செயலாளர் சதீஸ்குமார் தலைமை வகிக்கிறார். முன்ளாள் வட்டாரச் செயலாளர் கவிஞர் செல்வகுமார், ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்