search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்ஜெட்"

    திருப்பூர் தெற்கு தொகுதியில் அ.தி.மு.க. அரசின் 2-ம்ஆண்டு சாதனையை விளக்கும் விதமாகவும், பட்ஜெட் விளக்க தொடர் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
    திருப்பூர்:

    திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட 39-வது வார்டுக்குட்பட்ட ராக்கியாபாளையம் பிரிவு, 38-வது வார்டுக்குட்பட்ட நல்லூர், 35-வது வார்டுக்குட்பட்ட விஜயாபுரம் ஆகிய 3 இடங்களில், அ.தி.மு.க. அரசின் 2-ம்ஆண்டு சாதனையை விளக்கும் விதமாகவும், பட்ஜெட் விளக்க தொடர் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அப்போது தமிழக அரசின் சாதனைகள், பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்களை விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், வேங்கை விஜயகுமார் ஆகியோரும் விளக்கவுரை ஆற்றினார்கள். இதில் அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், தொகுதி பொறுப்பாளர் தம்பி மனோகரன், பகுதி செயலாளர்கள் டெக்ஸ் வெல் முத்துசாமி, கருவம்பாளையம் மணி, கிளை செயலாளர்கள் அரசு ஆறுமுகம், சக்திவேல், பால சுந்தரம், பொன்னுசாமி, வி.ஜி. வி பாலு, கண்ணபிரான் உள்பட பலர் பங்கேற்றனர்.

    விவசாயிகளுக்கு 2019-2020-ம் ஆண்டில் 10,000 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.#TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS

    சென்னை:

    தமிழக அரசின் 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல் - அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    கஜா புயல் ஏற்படுத்திச் சென்ற பாதிப்பைத் தணிப்பதற்கான தற்காலிக மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தேசியப் பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து மத்திய அரசு 900.31 கோடி ரூபாயை விடுவித்தது.

    இந்த நிதி ஆதாரங்களுடன் மாநிலத்தின் சொந்த நிதியையும் ஒருங்கிணைத்து, பயிர் தேசங்களுக்காக 774.13 கோடி ரூபாயும், உதவி நிவாரணத்திற்காக 577.46 கோடி ரூபாயும், வீடுகள் மற்றும் குடிசைகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு நிவாரணமாக 401.50 கோடி ரூபாயும், மீனவர்களின் சேதமடைந்த படகுகளுக்காக 41.63 கோடி ரூபாய் உட்பட ஆக மொத்தம் உடனடி நிவாரணப் பணிகளுக்காக 2,361.41 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    குடிசைகள், தென்னை மரங்கள் மற்றும் மீனவர்களின் எப்.ஆர்.பி. படகுகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையை, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்தின் வரையறையைவிடக் கூடுதலாக இந்த அரசு கணிசமாக உயர்த்தி வழங்கியுள்ளது.

    மேலும் தற்போது நிலவிவரும் வறட்சியைக் கருத்தில் கொண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடையின்றி குடிநீர் வழங்க இதுவரை 157 கோடி ரூபாய் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    2019-2020-ம் ஆண்டிற்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்திற்காக 825 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சேதமடைந்த குடிசைகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடுகள் கட்டுதல், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தென்னை மற்றும் இதர மரத்தோட்டப் பயிர்களை மீண்டும் பயிர் செய்தல் போன்ற நிரந்தர நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தனியே ஒரு திட்ட அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. தென்னை மற்றும் இதர மரத்தோட்டப் பயிர்களை மீண்டும் பயிரிடுவதற்காக, இதுவரை 230.09 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.

     


    முதல்-அமைச்சர் ஏற்கனவே அறிவித்தபடி, கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் சேதமடைந்த குடிசைகளுக்கு மாற்றாக ஒரு வீட்டுக்கு 1.70 லட்சம் ரூபாய் அலகுத் தொகை வீதம், 1,700 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான பணிகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது. இத்திட்டச் செலவின் 720 கோடி ரூபாயை மத்திய அரசு தனது பங்காக ஏற்றுக் கொள்ளும்.

    மீதமுள்ள 980 கோடி ரூபாயை மாநில அரசின் பங்குத் தொகையாக தமிழ் நாடு ஊரக வீட்டு வசதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் மூலம் கடன் பெற்று இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்பதை இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாநிலத்தில் பல்வேறு வேளாண் பருவநிலை மண்டலங்கள் உள்ளதால், ஏற்றுமதிக்கு பல்வகை வேளாண் பயிர் சாகுபடி ஏற்றுமதியை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. வேளாண் பொருட்களின் ஏற்றுமதியின் முக்கியத்துவத்தை இந்த அரசு உணர்ந்துள்ளதால், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்கத்தில் ஒரு சிறப்பு வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு அலகினை இந்த அரசு ஏற்படுத்தும்.

    இயற்கை வேளாண்மை மற்றும் பிறதரச்சான்றிதழ் அளித்தல், விவசாயிகளுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்குதல் போன்ற அனைத்து ஏற்றுமதி சம்பந்தமான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை இந்த மையம் ஒருங்கிணைத்து செயல்படுத்தும்.

    இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவதற்கு, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை வேளாண்மை சான்று அளிக்கும் மையங்கள் அமைக்கப்படும்.

    2019-2020-ம் ஆண்டில் அரசு வேளாண்மைக் கல்லூரிகள் மற்றும் தோட்டக்கலை கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்துவதற்காக 79.73 கோடி ரூபாய் செலவிடப்படும்.

    2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்திற்காக 300 கோடி ரூபாயும், நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்திற்காக 87.22 கோடி ரூபாய் உட்பட வேளாண்மைத் துறைக்கு 10,550.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பயிர்க் கடன்களை வழங்குவதற்கும், வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் மாநிலத்தில் வலுவான கூட்டுறவு அமைப்புகள் செயல்படுகின்றன. 2018- 2019-ம் ஆண்டில், பயிர்க் கடன் வழங்க 8 ஆயிரம் கோடி ருபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 9.37 லட்சம் விவசாயிகளுக்கு 6,118 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    உரிய காலத்தில் பயிர்க் கடனைத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு வட்டி முழுவதுமாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் விவசாயிகளுக்கு வேளாண் விளைபொருட்கள் மீதான அடமானக் கடனையும் வழங்குகின்றன.

    2019-2020-ம் ஆண்டில் 10,000 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க் கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பயிர்க் கடன்கள் மீதான வட்டித் தள்ளுபடிக்காக 200 கோடி ரூபாய் வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS

    தமிழக சட்டசபையில் இன்று துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், 2019- 2020ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து 3-ந் தேதி கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடைபெற்றது. 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பதில் உரையுடன் சட்டசபை கூட்டம் முடிவடைந்தது.



    இந்த நிலையில், 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அவரது பட்ஜெட் உரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுமார் 2 மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பட்ஜெட் உரையை வாசித்து முடித்ததும் இன்றைய சட்டசபை நிகழ்வுகள் நிறைவு பெறுகிறது.

    அதைத் தொடர்ந்து சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் துறைரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் நாட்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவல்கள் பற்றி முடிவு செய்யப்படும். அனேகமாக, 11-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 5 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6 ஆயிரம் உதவித்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும், யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி பியூஸ் கோயல் கடந்த 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், சிறிய மற்றும் விளிம்பு நிலையில் உள்ள விவசாயிகளுக்கு வருமான உத்தரவாதம் வழங்குகிற வகையில் பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி என்ற திட்டத்தை செயல்படுத்தி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

    இந்த தொகை 3 தவணைகளில், விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு விடும். 2 ஹெக்டேர் (சுமார் 5 ஏக்கர்) வரையில் சாகுபடி நிலம் வைத்திருக்கிற விவசாயிகள் அனைவரும் இந்த நிதி உதவியைப் பெற முடியும் எனவும் குறிப்பிட்டார்.

    இந்த நிதி உதவி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவாகும். மார்ச் 31-ந்தேதிக்குள் முதல் தவணையை வங்கிக்கணக்குகளில் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது தொடர்பான செயல்பாட்டு வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

    அதில், “சாகுபடி செய்யத்தக்க 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கிறவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். கணவன், மனைவி, குழந்தைகள் என ஒரு குடும்பத்துக்கு கூட்டாக இந்த வரையறைக்குள் சொத்து இருக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த உதவித்தொகை விவசாயிகளில் யாருக்கெல்லாம் கிடைக்காது என்பதுவும் வழிமுறையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அது வருமாறு:-

    * அரசியல் அமைப்பு பதவி வகித்தவர்கள், வகிக்கிறவர்களுக்கு கிடையாது.

    * மந்திரிகள், முன்னாள் மந்திரிகள், எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், முன்னாள் எம்.எல்.சி.க்கள், மாநகராட்சி மேயர்கள், முன்னாள் மேயர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், முன்னாள் தலைவர்கள் ஆகியோரை உறுப்பினராக கொண்ட விவசாய குடும்பங்களுக்கு இந்த நிதி உதவி கிடையாது.

    * மத்திய, மாநில அரசு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவற்றின் அதிகாரிகள், ஊழியர்கள், முன்னாள் அதிகாரிகள், ஊழியர்கள் குடும்பங்களுக்கும் விவசாய குடும்பங்களுக்கான நிதி உதவி கிடையாது.

    * மாதம் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாக ஓய்வூதியம் பெறுகிற ஓய்வூதியதாரர்களின் குடும்பத்துக்கும் கிடையாது.

    * கடந்த மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்களின் குடும்பங்களுக்கும் கிடையாது.

    * பதிவு செய்துள்ள டாக்டர்கள், என்ஜினீயர்கள், வக்கீல்கள், ஆடிட்டர்கள், கட்டுமான வல்லுனர்கள் குடும்பங்களுக்கும் விவசாயிகளுக்கான நிதி உதவி கிடையாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும், இரண்டாவது தவணையின்போது நிதி உதவி பெறுகிற விவசாயிகள் ஆதார் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
    மத்திய மந்திரிகள் ஷிவ் பிரதாப் சுக்லா, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அல்வா கிண்டி மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) அச்சடிக்கும் பணியை இன்று தொடங்கி வைத்தனர். #budget #HalwaCeremony
    புதுடெல்லி:     

    பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது பழங்கால சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து, இதுதொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.


    அந்த வகையில், டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி ஷிவ் பிரதாப் சுக்லா, சாலை போக்குவரத்துத்துறை இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், நிதித்துறை செயலாளர் சுபாஷ் கார்க் முன்னிலையில் இன்று அல்வா தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் பரிமாறப்பட்டது.  #budget #HalwaCeremony 
    வீட்டுக்கடன் பெற்ற மாதாந்திர சம்பளதாரர்கள் வீட்டு கடன் திட்டத்தில் திரும்ப செலுத்துக்கூடிய வட்டிக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி நிதி ஆலோசகர்கள் தரும் ஆலோசனைகளை இங்கே காணலாம்.
    சொந்தமாக வீடு கட்டிய அல்லது அடுக்குமாடி வீடு வாங்கிய நடுத்தர மக்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக, வீட்டுக்கடன் பெற்ற மாதாந்திர சம்பளதாரர்கள் வீட்டு கடன் திட்டத்தில் திரும்ப செலுத்துக்கூடிய வட்டிக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி நிதி ஆலோசகர்கள் தரும் ஆலோசனைகளை இங்கே காணலாம்.

    வீட்டு வாடகைப்படி

    வீட்டு வாடகை அலவன்ஸ் (எச்.ஆர்.ஏ) பெற விரும்புபவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கான வாடகை ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கவேண்டும். வங்கி கடன் பெற்று கட்டிய வீட்டிலேயே குடியிருப்பவர்களுக்கு எச்.ஆர்.ஏ மூலம் சலுகைகள் பெற இயலாது. ஆனால், அவர்கள் கடனுக்கான அசல் மற்றும் வட்டி ஆகியவற்றை திரும்ப செலுத்துவதன் மூலம் வரிச்சலுகைகள் பெறலாம்.

    வேறு ஊரில் குடியிருப்பவர்கள்

    வங்கி கடன் பெற்று சொந்த ஊரில் வீடு வாங்கியவர்கள் அல்லது கட்டியவர்கள், வேறொரு ஊரில் வாடகை வீட்டில் குடியிருக்கும் பட்சத்தில் சலுகைகள் உண்டு. அவருக்கு வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டிக்கான வரிச்சலுகையுடன், வீட்டு வாடகைக்கான வரிச்சலுகையும் கிடைக்கும்.

    குடியிருக்கும் ஊரில் வாடகை வீடு

    குடியிருக்கும் ஊரில் வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு வங்கி கடன் பெற்று வாடகை வீட்டில் குடியிருக்கும் பட்சத்தில், எச்.ஆர்.ஏ மற்றும் வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டி ஆகியவற்றில் வரிச்சலுகை பெறலாம்.

    ஐந்து ஆண்டுகள் வரையறை

    வங்கி கடன் பெற்று கட்டப்படும் வீட்டின் கட்டுமான பணிகள் முடிவடையாத நிலையில் பணிகள் முடியும் வரையில் கடனுக்கான அசலுக்கு வரிச்சலுகை பெற இயலும்.

    வீட்டின் கட்டுமானம் முடிவடைந்து, பல்வேறு காரணங்களால் அதில் குடியேற முடியாத சூழ்நிலையில் குடியிருக்கும் வாடகை வீட்டுக்கு மேற்கண்ட இரண்டு வகை வரிச்சலுகைகளும் கிடைக்கும். குறிப்பாக, கடன் பெற்ற ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் வீட்டுக்கே வட்டிக்கான வரிச் சலுகை கிடைக்கும்.

    முதல் வீட்டுக்கு சலுகை

    2016-17 ஆண்டில் வீட்டு கடன் வழங்கப்பட்ட சமயத்தில் கடன் பெற்றவருக்கு சொந்தமாக வேறு வீடு இல்லாத நிலையில், கடன் தொகையாக ரூ.35 லட்சம் என்ற அளவுக்குள் பெற்று, கட்டிய வீட்டின் சந்தை மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு உட்பட்டு இருக்கும் நிலையில் அந்த கடனுக்கு பிரிவு 80 EE-J¡-ð® ரூ.50,000 வரிச்சலுகை அளிக்கப்படுகிறது.

    இரண்டாவது வீட்டுக்கான கடன் பெற்றவர்களுக்கு வரிச்சலுகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் மட்டும் சலுகை பெற முடியும்.
    பட்ஜெட்டிற்கு அனுமதி பெற நாராயணசாமி இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச்சில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    கடந்த சில ஆண்டாக பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படாமல் அரசின் 4 மாத செலவினங்களுக்கு மட்டும் முன் அனுமதி பெறப்படுகிறது. பின்னர் ஜூன், ஜூலை மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டும் மார்ச் 26-ந்தேதி 4 மாத செலவினங்களுக்கு அனுமதி பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து கவர்னர் தலைமையில் மாநில திட்டக்குழு கூடியது. இந்த கூட்டத்தில் ரூ.7 ஆயிரத்து 530 கோடி பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. பட்ஜெட்டிற்கு அனுமதி பெற மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

    இந்த அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் கடந்த திங்கள்கிழமை சட்டசபை கூடியது. 2 நாட்களாக கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உறுப்பினர்கள் விவாதம் நடத்தினர். ஆனால் பட்ஜெட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது பட்ஜெட்டிற்கு அனுமதி பெற நாராயணசாமி டெல்லி சென்றுள்ளார். இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். அங்கு மத்திய உள்துறை மந்திரி, நிதி மந்திரியை சந்திக்கிறார். உரிய விளக்கம் அளித்து பட்ஜெட்டிற்கான ஒப்புதல் பெற்றுவருவார் என தெரிகிறது. இதன்பிறகே மீண்டும் சட்டமன்றம் கூடும்.

    ×