search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "களக்காடு"

    களக்காடு அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி மீனாட்சி அம்மாள் (வயது 69). இவரது மகள் இசக்கியம்மாள். முன்னீர்பள்ளத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இசக்கியம்மாள் தனது தாய் மீனாட்சி அம்மாளின் செல்போனுக்கு போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனைதொடர்ந்து அவர் நேரில் வந்து பார்த்த போது மீனாட்சி அம்மாள் வீட்டு பாத்ரூமில் எர்த் வயரை தொட்டப்படி இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    களக்காடு அருகே மகளுடன் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள தெற்கு அப்பர்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மூக்காண்டி (வயது 35). இவர் சேலத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயா (29). இவர்களுக்கு மகள் ஸ்ரீபிரித்திகா(7). இந்நிலையில் கடந்த 19-ந் தேதி மூக்காண்டி விஜயாவுக்கு போன் செய்துள்ளார். அப்போது விஜயா, பீடி சுற்றும் நிறுவன பெண்களுடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்வதாக கூறியுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. இதையடுத்து ஊருக்கு வந்த மூக்காண்டி பல்வேறு இடங்களில் தேடியும் விஜயா மற்றும் மகள் ஸ்ரீபிரித்திகா கிடைக்கவில்லை.

    இதை தொடர்ந்து மூக்காண்டி களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயா அவரது மகள் ஸ்ரீபிரித்திகா எங்கு சென்றனர் என தேடி வருகின்றனர்.

    களக்காடு அருகே குற்றங்களை தடுக்க அப்பகுதி கிராம மக்கள் சொந்த செலவில் சிசிடிவி கேமரா பொருத்தி உள்ளனர்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ளது வடுகச்சிமதில் கிராமம். இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவார்கள். ஊரை சுற்றிலும் வயல்வெளிகள் உள்ளன. சமீபகாலமாக வடுகச்சிமதில் கிராமத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்தன. அங்குள்ள இசக்கியம்மன் கோயிலில் 3 முறை உண்டியல் பணம் திருடப்பட்டது. வீடுகளிலும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

    இந்த சம்பவங்களை தடுப்பதற்காக கிராம மக்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இதில் கிராமத்தை சுற்றிலும் தாங்களே கண்காணிப்பு கேமரா பொருத்துவது என்று முடிவு செய்தனர். அதன்படி பொதுமக்களிடம் நிதி வசூல் செய்து, ரூ 1 லட்சம் மதிப்பீட்டில் அங்குள்ள சுடலைமாடசாமி, இசக்கி அம்மன் கோயில்கள் உள்பட 5 இடங்களில் 8 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது.

    கேமராவில் பதிவாகும் காட்சிகளை அங்குள்ள ஒரு அறையில் அமர்ந்து கண்காணிக்கலாம். இதனைதொடர்ந்து கிராமத்தில் அன்னியர் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அறிந்து கொள்ளலாம். மேலும் குற்ற நிகழ்வுகள் நடந்தால் உடனடியாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்து அதில் ஈடுபடும் நபர்களை தெரிந்து கொள்ளலாம். இதனால் கிராமமே கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    போலீசாருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த சி.சி.டி.வி கேமரா செயல்பாடு தொடக்க‌ விழா நேற்று மாலை நடந்தது. டாக்டர் கார்த்திக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட அ.தி.மு.க இணை செயலாளர் பழனிவேல் பாண்டியன் முன்னிலை வகித்தார். நாங்குநேரி ஏ.எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் சி.சி.டி.வி கேமராக்களை இயக்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தங்களது செலவிலேயே சிசிடிவி கேமரா அமைத்த பொதுமக்களை போலீசார் பாராட்டினர். #tamilnews
    களக்காடு அருகே பைக் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

    களக்காடு:

    களக்காடு அருகில் உள்ள கீழப்பத்தை வடக்குத் தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி மகன் உச்சி மாகாளி (38). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சகுந்தலா (34) என்ற மனைவியும், முகேஷ் (9) என்ற மகனும், ஹரினி (7) என்ற மகளும் உள்ளனர். 

    இந்நிலையில் நேற்று உச்சிமாகாளியு,ம், படலையார்குளத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சிவன்பாண்டி (38) யும் கோவில் கொடை விழாவிற்கு ஆடு வாங்குவதற்காக பைக்கில் சேரன்மகாதேவி நோக்கி சென்றார். பத்மநேரி ரோட்டில் சென்ற போது எதிரில் களக்காடு நோக்கி வந்து கொண்டிருந்த அழகப்ப புரத்தை சேர்ந்த கண்னன் என்பவர் ஓட்டி வந்த பைக்கும், உச்சிமாகாளி சென்ற பைக்கும் மோதியது. 

    இதில் உச்சிமாகாளி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் சென்ற சுடலையாண்டி மற்றொரு பைக்கை ஓட்டி வந்த அழகப்பபுரத்தை சேர்ந்த கண்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது பற்றி களக்காடு இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு பகுதியில் பச்சையாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக 14 பேரை கைது செய்த போலீசார் 2 லாரியையும் பறிமுதல் செய்தனர்.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் உள்ள பச்சையாற்றில் இருந்து இரவு நேரங்களில் ஆற்று மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்தனர்.

    இந்த பணியில் நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், களக்காடு இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், ஜெகநாதன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். அப்போது கீழதேவநல்லூர் பகுதியில் உள்ள பச்சையாற்றில் 2 லாரிகளில் சிலர் ஆற்றுமணலை கடத்த முயன்றனர்.

    போலீசார் வருவதை பார்த்ததும் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். இருந்த போதிலும் போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட சிதம்பராபுரத்தை சேர்ந்த சரவணன் (வயது36), சிவசங்கர் (39), செல்வராஜ் (29), முருகன் (33), மதன் (30), கண்ணன் (42), சேதுராயபுரம் கிருஷ்ணகுமார் (35), மாவடி புதூர் சேர்மபாண்டி (34), ராமகிருஷ்ணாபுரம் ராஜேஷ் (34) ஆகிய 9 பேரை கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் பத்மநேரி பச்சையாற்றில் இருந்து சாக்கு மூட்டைகளில் மணல் கடத்திய சிதம்பராபுரத்தை சேர்ந்த முருகன் (37), சேகர் (32), குமார் (35), மணிகண்டன் (27), இப்ராஹிம் ஷா (33) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். களக்காடு பகுதியில் போலீசார் நேற்று இரவு மட்டும் நடத்திய அதிரடி சோதனையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #tamilnews
    ×