search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொண்டாமுத்தூர்"

    தொண்டாமுத்தூர் அருகே பட்டபகலில் காவலாளி வீட்டில் நகை-பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குபேரபுரியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 50). இவர் அந்த பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று காலை இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் இரவு வீட்டுக்கு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த ஆறுச்சாமி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த செயின், மோதிரம் உள்பட 8 பவுன் தங்க நகைகள், ரூ. 30 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து ஆறுச்சாமி தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.இதனை வைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.பட்டபகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    தொண்டாமுத்தூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்துபாளையம் கீதாஞ்சலி நகரை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 34). கூலித் தொழிலாளி. வேலைக்கு செல்லும் சதீஸ்குமார் தினசரி குடிபோதையில் வீட்டுக்கு வருவார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று சதீஸ்குமார் மது போதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது தாய் கண்டித்தார். இதில் மனவேதனை அடைந்த சதீஸ்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சதீஸ்குமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தொண்டாமுத்தூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 65). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கண்ணாடி கடைக்கு சென்றார். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த மின்சார விளம்பர பலகையை தொட்டார். அதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது. இதில் உடல் கருகி உயிருக்கு போராடிய சின்னராஜை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சின்னராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி வாலிபர் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் உள்ளது. இங்குள்ள காட்டுப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. அவைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை நாசம் செய்து வருகின்றன.

    இதனை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், தீப்பந்தங்கள் ஏந்தியும் விரட்டி வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக போளூவாம்பட்டி வனசரக பகுதியில் 5 வயது குட்டி யானையுடன் பெண் யானை ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது.

    இந்த நிலையில் இந்த யானைகள் நேற்று நள்ளிரவு தொண்டாமுத்தூர் அருகே உள்ள சின்ன ஆறு பகுதியில் நஞ்சம்மாள் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை தின்றது. பின்னர் தோட்டத்து வீட்டிற்கு வந்தது. வீட்டில் நஞ்சம்மாளும், அவரது பேரனும் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர். வீட்டின் கதவை யானைகள் உடைத்தது.

    யானைகள் சத்தம் கேட்டதும் நஞ்சம்மாளும் அவரது பேரனும் பீரோவின் பின்னால் ஒளிந்து கொண்டனர். பின்னர் யானைகள் நஞ்சம்மாள் வீட்டின் வெளியே வைத்திருந்த புண்ணாக்கு மூட்டையை உடைத்து புண்ணாக்கை தின்று விட்டு அங்கிருந்து சென்றது.

    இன்று காலை சின்ன ஆறு பகுதியில் பெண் யானை தனது குட்டியுடன் சுற்றி வந்தது. அப்போது 25 வயது மதிக்க தக்க வாலிபர் அந்த வழியாக நடந்து சென்றார்.

    அவரை பெண் யானை தாக்கி தூக்கி வீசியது. இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போளூவாம் பட்டி வன சரக அலுவலர் பழனிராஜா மற்றும் வன ஊழியர்கள் சின்ன ஆறு பகுதிக்கு சென்றனர். யானை தாக்கி இறந்த வாலிபர் உடலை பார்வையிட்டனர்.

    இது குறித்து ஆலாந்துறை போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.யானை தாக்கி இறந்த வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×