என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரபேல்"
ஆலந்தூர்:
தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை ஈரோட்டுக்கு வருகிறார். மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் வேலூருக்கு வருகிறார். மத்திய மந்திரி ஸ்மிருதிராணி திருவண்ணாமலை வருகிறார். நிதின் கட்காரி நாளை மறுநாள் தமிழகம் வர உள்ளார்.
மத்திய மந்திரிகள் தமிழகத்திற்கு தொண்டர்களை சந்திக்க வருகிறார்கள். அவர்கள் வருகை பாராளுமன்ற தேர்தலை நாங்கள் வெற்றிகரமாக சந்திக்க உதவியாக இருக்கும்.
ரபேல் விவகாரத்தை வைத்துக்கொண்டு ராகுல் காந்தி மற்றும் காங்கிரசார் அரசியல் செய்து வருகிறார்கள். பா.ஜ.க. ஆட்சி நம்நாட்டிற்கு நல்ல திட்டங்களை கொடுத்து இருக்கிறது. ஊழலற்ற நிர்வாகத்தை அமைத்திருக்கிறது. அதனால்தான் ரபேல் தவிர எதிர்க்கட்சிகள் வேறு எந்த திட்டத்தை பற்றியும் பேச முடியவில்லை.
ரபேல் விவகாரம் குறித்து ஏற்கனவே விளக்கம் கொடுத்து விட்டனர். ஆனாலும் 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் அதிகமாக ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தது. அப்படிப்பட்ட காங்கிரசார் இன்று பொய்யான ரபேல் விவகாரத்தை தூக்கி வைத்து பேசுகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறியிருந்தார். அவர் கூறியது சரியாகத்தான் இருக்கும். பா.ஜ.க. கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகள் சேரலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP #RafaleDeal
ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பே அனில் அம்பானி தெரிந்து வைத்திருந்தார் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு கூறி உள்ள நிலையில், அதை ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்து உள்ளது.
இதுபற்றி அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சியால் குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல், ஏர்பஸ் மற்றும் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனங்கள் இடையேயானது. இது மேக் இன் இந்தியா (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டத்தின் கீழான சிவில் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் திட்டங்கள் தொடர்பானது.
உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய விவாதம், ஏர்பஸ் ஹெலிகாப்டர், ரிலையன்ஸ் இடையேயான ஒத்துழைப்பு தொடர்பானது ஆகும். பிரான்ஸ் அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயான 36 ரபேல் போர் விமான கொள்முதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கும், இதற்கும் தொடர்பு இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #RafaleDeal #Reliance #RahulGandhi
ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு (எச்.ஏ.எல்.) வழங்காமல் அனில் அம்பானி நிறுவனத்துக்கு வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாகவும், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை மூடும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். மேலும் அந்த ஊழியர்களையும் அவர் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் டெல்லியில் ராகுல் காந்தியை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் நேற்று சந்தித்தனர். அப்போது இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் குறித்தும் தங்கள் கவலையை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரபேல் போர் விமானங்களை தயாரிக்க நாங்கள் இப்போதும் தயாராக உள்ளோம். அதற்கான திறமை எங்களிடம் உள்ளது.
போர் விமானங்களை தயாரிப்பதில் எந்த சிரமமும் எங்களுக்கு கிடையாது. உலகளாவிய தொழில்நுட்பத்தில் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் தும்கூரில் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் சார்பில் ஹெலிகாப்டர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த பணியும் அங்கு நடக்கவில்லை” என்று தெரிவித்தனர். #RafaleDeal #HAL #RahulGandhi
சென்னை:
ரபேல் விவகாரத்தில் நடந்துள்ள குளறுபடிகள் பற்றி, நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று மாநில தலைநகரங்களில் முக்கிய தலைவர்கள் விளக்கம் அளித்தனர்.
சென்னையில் பாராளுமன்ற நிதிக்குழு தலைவர் வீரப்பமொய்லி இன்று சத்தியமூர்த்திபவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் முன்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டது. நான் பிரதமரானால் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்.
ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும். வேலையில்லா திண்டாட்டம் இருக்காது என்றெல்லாம் வாக்குறுதி அளித்தார். ஆனால் எதையும் நிறைவேற்றவிலை. மக்கள் ஏமாந்ததுதான் மிச்சம்.
அதன் காரணமாகத்தான் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் மீண்டும் காங்கிரசை மக்கள் பதவியில் அமர்த்தி இருக்கிறார்கள். அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலிலும் ராகுல் தலைமையில் காங்கிரசை ஆட்சியில் அமர்த்துவதற்கான சிக்னல்தான் இது.
ரபேல் போர் விமானம் வாங்குவதில் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. தவறான தகவல்களை சுப்ரீம் கோர்ட்டுக்கு அளித்து தீர்ப்பு பெற்றிருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் மோடி செய்துள்ள மோசடிகள், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் அம்பலமாகும். கூட்டுக்குழு விசாரணை நடத்தாமல் விடமாட்டோம். இதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் கூறி வருகிறார்கள். ஆனால் விசாரணைக்குப் பிறகு மன்னிப்பு கேட்கப் போவது யார் என்பது வெளிச்சத்துக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக வீரப்பமொய்லியை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் சிரஞ்சீவி, தணிகாசலம், ராயபுரம் மனோகர், ஜி.கே.தாஸ் ஆகியோர் வரவேற்றனர். #RafaleCase
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதற்கிடையே, இந்த பேரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். பிறகு, வக்கீல் வினீத் தண்டா என்பவரும் அதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்தார். ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங்கும் வழக்கு தொடர்ந்தார்.
பின்னர், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில், கடந்த மாதம் 14-ந்தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வு, இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளிக்கிறது. ‘ரபேல்’ விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்படுமா? என்பது அப்போது தெரியவரும். #RafaleCase #SupremeCourt #Judgment
பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரான் இடையே கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சந்திப்பின் போது இருநாட்டு பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்திலான வருடாந்திர சந்திப்பு நடத்துவதற்கு இருவரும் பரஸ்பரம் ஒப்புதல் வழங்கினர். அதனடிப்படையில் இந்த ஆண்டுக்கான சந்திப்பில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் சென்றுள்ளார்.
பிரான்ஸ் பாதுகாப்புத்துறை மந்திரி ப்ளோரன்ஸ் பார்லியை, நிர்மலா சீதாராமன் நேற்று சந்தித்தார். இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இந்தியா-பிரான்ஸ் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக அலோசனை நடத்தப்பட்டது. மேலும், இரு நாடுகளும் இணைந்து ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை உற்பத்தி செய்வது குறித்தும் இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து ப்ளோரன்ஸ் பார்லி மற்றும் நிர்மலா சீதாராமன் தனியாக சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது ரபேல் விவகாரம் குறித்து ஆலோசனை நடைபெற்றதா எனும் உறுதியான தகவல்கள் ஏதும் அரசு தரப்பில் இருந்து வெளியாகவில்லை.
பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா செய்து கொண்ட ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
மேலும், இந்த ஒப்பந்தத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான விவரங்களை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில் இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்பு மந்திரிகள் இடையிலான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #NirmalaSitharaman
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான அமேதிக்கு நேற்று சென்றார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி, தன்னை காவலாளி என்று சொல்லிக்கொள்கிறார். ஆனால், ஒரு காவலாளியே ஏழை மக்களிடம் கொள்ளையடித்தது துரதிருஷ்டவசமானது. ஏழைகளிடம் இருந்து ரூ.20 ஆயிரம் கோடி பணத்தை பறித்து, அனில் அம்பானியின் பாக்கெட்டில் போட்டுள்ளார்.
பிரதமர் மோடி, பிரான்ஸ் நாட்டுக்கு போகிறார். அங்கு அனில் அம்பானி கம்பெனிக்கு கோடிக்கணக் கான ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை அளிக்கிறார். காவலாளி ஏன் அப்படி செய்தார் என்று அறிந்து கொள்ள மக்கள் விரும்புகிறார்கள்.
பிரதமர் பெரிது பெரிதாக சொற்பொழிவு ஆற்றுகிறார். ஆனால், ரபேல் விவகாரம் பற்றி ஒரு வார்த்தை கூட பேச மறுக்கிறார். பிரான்ஸ் முன்னாள் அதிபர், பிரதமர் மோடியை ‘திருடன்’ என்கிறார். ஆனாலும், மோடி எதுவும் பேசவில்லை.
பாராளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பியபோது கூட அவர் என் கண்களை பார்ப்பதை தவிர்த்து விட்டார். அவருக்கு பதில் அளிக்க தைரியம் இல்லை.
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ‘ரபேல்’ போர் விமான விவகாரத்தில், மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறுகிறார். அப்படியானால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட பயப்படுவது ஏன்?
இந்த ஆட்சியில் விவசாயிகளும், ஏழைகளும் அழுது கொண்டிருக்கிறார்கள். ஆனால், எல்லா பலன்களையும் அனில் அம்பானி, விஜய் மல்லையா போன்ற 10 பெரும் பணக்காரர்களுக்கு மட்டும் அளிக்கிறார்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். #RahulGandhi #Modi #Rafale
இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன. காங்கிரஸ் காலத்தில் போடப்பட்ட ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை மாற்றி 2015-ம் ஆண்டு பாஜக புதிய ஒப்பந்தத்தை போட்டது. அதில் போர் விமானங்களை பராமரிக்கும் பொறுப்பு அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும், அம்பானிக்காக பிரதமர் மோடி மக்களையும், ராணுவத்தையும் ஏமாற்றி விட்டதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடியும், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வரும் 27-ம் தேதி காங்கிரஸ் தலைமையில் மகாராஷ்டிராவில் மாபெரும் பேரணி நடைபெறும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஷோக் சவான் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் மோடிக்கு நண்பரின் தொழில் மீது இருக்கும் ஆர்வம் நாட்டின் மீது இல்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் செய்து மக்களின் நம்பிக்கையை ஏமாற்றியும், அவர்களை தவறான வழியில் வழிநடத்தியும் வரும் பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார். #RafaleDeal #PMModi #Congress #Maharashtra #AshokChavan
ராணுவ அமைச்சகத்தின் 4 ஆண்டுகால சாதனைகள் பற்றி துறைக்கான மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்டை நாட்டுடன் (பாகிஸ்தானுடன்) 2003-ம் ஆண்டு ஏற்படுத்திய போர் நிறுத்த உடன்பாட்டை இந்தியா மதித்து நடக்கிறது. அதே நேரத்தில், அத்துமீறி தாக்குதல் நடத்தப்படுகிறபோது, அதற்கு பதிலடி கொடுக்கிற உரிமை நமது ராணுவத்துக்கு உண்டு.
பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடைபெற முடியாது.
ரம்ஜானையொட்டி பிரதமர் மோடி அறிவித்த போர் நிறுத்தம் வெற்றியா என்று கேட்கிறீர்கள். அது வெற்றியா, இல்லையா என்று பார்ப்பது ராணுவ அமைச்சகத்தின் வேலை அல்ல.
எங்கள் வேலை, நமது எல்லைகளை பாதுகாப்பதுதான். எங்களைத் தூண்டினால், நாங்கள் (பதிலடி தராமல்) நின்றுவிட மாட்டோம். அத்துமீறிய தாக்குதல் எதுவும், தகுந்த பதிலடி தராமல் விடுபட்டு விடக்கூடாது என்பதில் நாம் உஷாராக இருக்க வேண்டும். இந்தியாவை பாதுகாப்பாக வைத்திருப்பது எங்கள் கடமை.
தற்போது போர் நிறுத்தம் ரம்ஜான் வரைதான் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபோது, வெடிமருந்துகள் தட்டுப்பாடு நிலவியது. எங்களை குற்றம் சாட்டுகிற நபர்கள், இந்த தட்டுப்பாடு எங்கே இருந்து வந்தது என்பதை சொல்ல வேண்டும். இப்போது நான் சொல்கிறேன். தற்போது வெடிமருந்து தட்டுப்பாடு இல்லை.
பிரதமர் மோடி, வூகனுக்கு சென்று சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசி வந்து இருக்கிறாரே, டோக்லாம் முற்றுகைக்கு பிந்தைய இந்திய சீன உறவு நிலவரம் எப்படி உள்ளது? என்று கேட்கிறீர்கள். அதற்கு பதில், இரு நாடுகளின் உறவு, சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்பதுதான்.
காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியபடி ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடைபெறவில்லை. இது தொடர்பான முடிவு எப்படி எடுக்கப்பட்டது என்பதை விளக்குவதற்காக நாங்கள் நேரம் செலவிட்டோம்.
அது இரு அரசாங்கங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் ஆகும். இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
எஸ்-400 ஏவுகணை பேரம் தொடர்பாக ரஷியாவுடன் நடத்தி வருகிற பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளது.
அமெரிக்காவுடனான நமது அனைத்து பேச்சிலும், இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையேயான ராணுவ உறவு பல்லாண்டு காலமாக இருந்து வருவதை சுட்டிக்காட்டி வந்து உள்ளோம். இது காலத்தை கடந்து வந்து உள்ள உறவு. இதில் இந்தியா நிறைய சொத்துகள், உதிரிபாகங்கள், சேவைகளை பெற்று உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #NirmalaSitharaman
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்