search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளக்கு"

    உலகம் முழுவதும் பஞ்ச பூதங்கள் இயங்கி வருவதால் நமது முன்னோர்கள் அதை முறைப்படி வணங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விளக்கு வடிவமாக அமைத்துள்ளனர்.
    உலகம் பஞ்சபூத சக்தியான நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பால் இயங்கி வருகிறது. இதேபோல் நமது உடலும் பஞ்ச சக்தியான எலும்பு, தோல், முடி, நரம்பு, தசையால் இயங்கி வருகிறது. இதேபோல் இந்த உலகம் பஞ்ச உலோகம், பஞ்சபூத சக்தி, பஞ்ச சக்தி, பஞ்சகிரியா சக்தி, பஞ்சமுகம் ஆகிய பஞ்ச சக்தியாலும், ஆதிசக்தி, பராசக்தி, இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி ஆகிய ஐந்து சக்திகளாகவும் இயங்கி வருகிறது. உலகம் முழுவதும் பஞ்ச பூதங்கள் இயங்கி வருவதால் நமது முன்னோர்கள் அதை முறைப்படி வணங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விளக்கு வடிவமாக அமைத்துள்ளனர்.

    இதையொட்டி கோயில்கள், வீடுகள், சுபகாரியங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிக்கும் முதலாவது குத்து விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டு துவங்குவது காலம் காலமாக நடந்து வரும் வழக்கம். குத்துவிளக்கில் கிழக்கு முகமாக விளக்கேற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும். மேற்கு முகமாக விளக்கேற்றினால் கிரக தோஷம், பங்காளி பகை உண்டாகும். வடக்கு முகமாக விளக்கேற்றினால் கல்வி மற்றும் சுப காரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும், திரண்ட செல்வம் உண்டு.

    தெற்கு முகமாக விளக்கேற்றினால் அபசகுனம், பெரும் பாவம் உண்டாகும். குத்து விளக்கில் ஒரு முகம் ஏற்றினால் மத்திம பலனாக இருக்கும், இருமுகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமையுடன் இருக்கும், மும்முகம் ஏற்றினால் புத்திர சுகம், கல்வி கேள்விகளில் விருத்தியாகும், நான்கு முகம் ஏற்றினால் சர்வ பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும் என்பது ஐதீகமாகும். இதேபோல் தாமரை தண்டில் திரியால் தீபமேற்றினால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும். வாழைத்தண்டு நூல் திரியால் தீபமேற்றினால் குலதெய்வக் குற்றம், சாபம் நீங்கும். புது மஞ்சள் சேலை துண்டு திரியால் தீபமேற்றினால் தாம்பத்ய தகராறு நீங்கும்.

    புதுவெள்ளை வஸ்திரத்தில் பன்னீரை விட்டு உலர விட்டு திரியால் தீபமேற்றினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறையும். நெய்விளக்கு ஏற்றினால் லட்சுமி வாசம் செய்வாள். இலுப்பை எண்ணெயால் விளக்கேற்றினால் பூஜிப்பவருக்கும், பூஜிக்கப்படும் இடத்துக்கும் விருத்தியுண்டாகும். விளக்கெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் துன்பங்கள் விலகும்.
    வீட்டின் பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது பழந்தமிழர் வழக்கம். விளக்கேற்றிய பிறகு என்ன செய்யக் கூடாது என்பதைப் பற்றி நம்முன்னோர்கள் எடுத்துரைக்கின்றனர்.
    பூஜை அறை என்பது ஒரு புனிதமான அறை. தெய்வப் படங்களை அதில் வைத்து வழிபடுவது வழக்கம். வீட்டின் பூஜை அறையில் மாலை நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவது பழந்தமிழர் வழக்கம். அங்ஙனம் விளக்கேற்றிய பிறகு என்ன செய்யக் கூடாது என்பதைப் பற்றி நம்முன்னோர்கள் எடுத்துரைக்கின்றனர்.

    குறிப்பாக விளக்கேற்றிய பிறகு அடுத்தவர்களுக்கு பால், மோர், உப்பு, அரிசி, சுண்ணாம்பு போன்ற வெள்ளைப் பொருட்கள் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. விளக்கேற்றியதும் வீட்டைக் கூட்டக் கூடாது. துணி துவைக்கக் கூடாது.
    அருமனை அருகே வீட்டில் மண்எண்ணை விளக்கை பற்ற வைத்த போது சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட தீயில் கருகிய இளம்பெண் பலியானார்.
    நாகர்கோவில்:

    அருமனையை அடுத்த சிதறால் பகுதியை சேர்ந்தவர் கிரீஸ்குமார். இவரது மனைவி ரம்யா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 15-ந் தேதி மின்சார தடை காரணமாக வீட்டில் விளக்குகள் எரியவில்லை. எனவே ரம்யா, வீட்டில் மண்எண்ணை விளக்கை பற்ற வைத்தார். அப்போது விளக்கு சரிந்து விழுந்து ரம்யா உடலில் தீப்பிடித்தது.
    வலி தாங்க முடியாமல் ரம்யா அலறினார். 

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ரம்யாவை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த ரம்யா, நேற்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபாமாக இறந்து போனார்.

    இது பற்றி ரம்யாவின் தாயார் அருமனை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் வல்சலம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம். அந்த அகல்விளக்கில் நவக்கிரகங்களும் வீற்றிருக்கின்றன. அது எப்படி? அறிந்து கொள்வோம்.
    கோவில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம். அந்த அகல்விளக்கில் நவக்கிரகங்களும் வீற்றிருக்கின்றன. அது எப்படி? அறிந்து கொள்வோம்.

    அகல் விளக்கு - சூரியன்

    நெய்/எண்ணெய் - சந்திரன்

    திரி - புதன்

    எரியும் ஜூவாலை - செவ்வாய்

    கீழே விழும் ஜூவாலையின் நிழல் - ராகு

    ஜூவாலையில் உள்ள மஞ்சள் நிறம் - குரு

    ஜூவாலையால் பரவும் வெளிச்சம் - கேது

    திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது - சுக்ரன்

    தீபம் அணைந்ததும் அடியில் இருக்கும் கரி - சனி

    இதில் சுக்ரன், ஆசையை குறிப்பதாகும். ஆசையை குறைத்துக் கொண்டால், இன்பம் வந்து சேரும். ஆசை தான் நம்மை அழிக்கிறது. அந்த ஆசை தான் முக்தி கிடைக்கவிடாமல் நம்மை மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கச் செய்கிறது. இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம். 
    கடலூர் பாடலீசுவரர் கோவிலில் பக்தர்கள் விளக்கு ஏற்ற தடை விதித்து அறநிலையத்துறை உத்தரவிட்டு உள்ளது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
    கடலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடலீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி சன்னதிகளிலும், பிரகாரங்களிலும் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் பாடலீசுவரர் கோவில் பிரகாரங் களிலும், சன்னதிகளிலும் விளக்கு ஏற்ற தடை விதித்து அறநிலையத்துறை உத்தரவிட்டு உள்ளது. இதுபற்றிய அறிவிப்பு பலகை கோவிலில் வைக்கப்பட்டு உள்ளது.

    அதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக விளக்கு ஏற்ற தடை விதிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் எண்ணெய், நெய் ஆகியவற்றை அதற்கென வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களில் ஊற்றிச்செல்லலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

    இது பற்றி கோவில் குருக்கள் ஒருவர் கூறியதாவது:-

    தீ விபத்து ஏற்படாமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் பிரகாரங்களிலும், சன்னதிகளிலும் விளக்கு ஏற்ற தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே விளக்கு ஏற்றி வழிபட விரும்பும் பக்தர்கள், பாடலீசுவரர் சன்னதியின் சங்கு மண்டபத்தில் உள்ள சூரிய விளக்கிலோ அல்லது அம்மன் சன்னதியின் கொலு மண்டபத்தில் உள்ள சந்திர விளக்கிலோ, தாங்கள் கொண்டு வரும் எண்ணெய், நெய்யை ஊற்றிச்செல்லலாம். விளக்கில் எண்ணெய் அதிகமாக இருந்தால், அதன் அருகில் பாத்திரங்களை வைத்துள்ளோம். அதில் எண்ணெய், நெய்யை ஊற்றிச்செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த உத்தரவை தொடர்ந்து பாடலீசுவரர் கோவில் முன்பு உள்ள கடைகளில் அகல் விளக்கு விற்பனையும் நேற்று நிறுத்தப்பட்டது.

    மாவட்டத்தில் 1,252 கோவில்களில்...

    இந்த தடை உத்தரவு பற்றி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகா தேவி கூறுகையில், மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தை தொடாந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அறநிலையத்துறை நிர்வாகத்துக்கு உள்பட்ட கோவில்களுக்குள் நெய்விளக்கு, அகல் விளக்கு, எலுமிச்சை விளக்கு, தேங்காய் விளக்கு ஏற்ற தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக கோவிலுக்குள் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள விளக்கில் எண்ணெய், நெய் ஊற்றி வழிபடலாம் என்றார்.

    இந்த உத்தரவு மாவட்டத்தில் அறநிலையத்துறை நிர்வாகத்துக்கு உள்பட்ட 1,252 கோவில்களிலும் நடைமுறைக்கு வந்து உள்ளது.

    இதற்கிடையே அறநிலையத்துறையின் உத்தரவுக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது பற்றி பக்தர்கள் கூறியதாவது:-

    சாமி சன்னதியில் விளக்கு ஏற்றி வழிபடக்கூடாது என்று பக்தர்களுக்கு தடை விதிப்பது சரியல்ல. நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளாக கோவில்களில் விளக்கு ஏற்றித்தான் வழிபட்டு வந்திருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் தீ விபத்து ஏற்படவா செய்தது? அப்படியே தீவிபத்து ஏற்பட்டிருந்தாலும் விளக்கு ஏற்றி வழிபடக் கூடாது என்று யாரும் சொல்லவில்லையே. எனவே பாரம்பரிய வழக்கத்துக்கு மாறாக அரசு உத்தரவிடக்கூடாது. தீ விபத்து ஏற்படாமல் தடுக்க வேறு எத்தனையோ நடைமுறைகள் உள்ளன. அதனை செய்யாமல் பாரம்பரியத்தை மாற்றும் நடைமுறையை திணிக்க அரசு முயற்சிக்கக்கூடாது. எனவே அறநிலையத்துறையின் உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு பக்தர்கள் தெரிவித்தனர். 
    விளக்கு ஏற்றுவது இறைவழிபாட்டின் ஒரு பகுதி என்பதால்தான், வீட்டிலும், கோவில்களிலும் கூட இறைவனை பலரும் விளக்கேற்றியே வழிபடுகிறார்கள்.
    காலையும், மாலையும் வீட்டில் விளக்கு ஏற்றுவது ஐஸ்வரியத்தை வழங்கும் என்பது ஐதீகம். ‘விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது’ என்பது பழமொழி. விளக்கு ஏற்றுவது இறைவழிபாட்டின் ஒரு பகுதி என்பதால்தான், வீட்டிலும், கோவில்களிலும் கூட இறைவனை பலரும் விளக்கேற்றியே வழிபடுகிறார்கள்.

    தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை (நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும். நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும். இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே களை இழந்தது போல் தோன்றும்.

    நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை பெறுகிறது.

    நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது. சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது. சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது. நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது. நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது.

    நெய் தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது. திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. ஆனால் பொதுவாக மாலை 6.30 மணிக்கு ஏற்றுவதே நமது மரபு. இதை ‘கருக்கல் நேரம்’ என்பார்கள்.

    சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுச்சூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பு இருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டு போகும். ஆகையால்தான் அந்த நேரத்தில் விளக்கேற்றுவது நல்லது. 
    அந்தி மாலையில் பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் குத்துவிளக்கேற்றி ஜோதிக்கே ஜோதி வழிபாடு செய்தால் சோதனைகள் அகன்று சாதனைகள் நிகழ்த்த இயலும்.
    வீட்டில் ஒவ்வொருவரும் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோம். பூஜையறையில் ஐந்துமுக விளக்குவைத்து அதில் ஐந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாட்களில் வழிபாடு செய்தால் பலன் அதிகம் கிடைக்கும். மற்ற நாட்களில் இரண்டு திரி போட்டு இரண்டு முக தீபம் ஏற்றவேண்டும். ஜோடி தீபம் ஏற்றி வழிபட்டால் தம்பதியரின் கோரிக்கைகள் நிறைவேறும்.

    அந்த விளக்கைத் துலக்குவதற்கு ஏற்ற நாட்கள் எவை என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விளக்கைத் துலக்கக்கூடாது. விளக்கில் குபேரனும் லட்சுமியும் குடியிருப்பதாக ஐதீகம். திங்கள் அல்லது வியாழக்கிழமை விளக்கைத் துலக்கி வைத்துக் கொண்டு, விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்.

    அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில், அந்தி மாலையில் பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் குத்துவிளக்கேற்றி ஜோதிக்கே ஜோதி வழிபாடு செய்தால் சோதனைகள் அகன்று சாதனைகள் நிகழ்த்த இயலும்.
    ×