search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128233"

    • சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம்.
    • விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம்.

    இதனை நினைவுகூரும் வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாலையில் தெய்வானை யானையின் உடல் முழுவதும் அரிசி மாவு மற்றும் திருநீறு பூசப்பட்டது.

    பின்னர் கோவிலில் இருந்து வெள்ளை நிறத்தில் தெய்வானை யானையும், தங்க சப்பரத்தில் எழுந்தருளிய சுந்தரமூர்த்தி நாயனாரும் சன்னதி தெரு வழியாக எட்டு வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து, பின்னர் மீண்டும் கோவிலுக்கு சென்றனர்.

    தொடர்ந்து கோவிலில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமானும் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி, வெள்ளை நிற யானையின் பின்னால் உள்பிரகாரத்தில் உலா வந்து, மீண்டும் 108 மகாதேவர் சன்னதி முன்பு வந்தடைந்தனர். தொடர்ந்து அங்கு வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஆடி சுவாதி நட்சத்திர தினத்தில் திருநீறு பூசிய தெய்வானை யானையும், சுந்தரமூர்த்தி நாயனாரும் கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்தனர். தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளை நிறத்தில் தெய்வானை யானையும், சுந்தரமூர்த்தி நாயனாரும் வீதி உலா சென்றதை திரளான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

    • 7-ம் திருவிழாவான நேற்று அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் எழுந்தருளி பதியைச் சுற்றி பவனி வருதல் நடைபெற்றது.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான 11-ம் திருவிழா தேரோட்டம் வருகிற 1-ந் தேதி அன்று நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப் பதியில் ஆடி திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    7-ம் திருவிழாவான நேற்று மாலையில் அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் எழுந்தருளி பதியைச் சுற்றி பவனி வருதல் நடைபெற்றது.

    கலிவேட்டை

    8-ம் திருவிழாவான இன்று காலையில் உகப்படிப்பு, பணிவிடை, பால் அன்னதர்மம் மதியம் உச்சிப்படிப்பு, பணிவிடை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதர்மம் வழங்கப்பட்டது. மாலையில் உகப்படிப்பு, பணிவிடையும் தொடர்ந்து அய்யா வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கடலில் கலி வேட்டையாடுதல் நடக்கிறது. ஒன்பதாம் திருவிழாவான நாளை (சனிக்கிழமை) மாலையில் அய்யா வைகுண்டர் ஆஞ்சநேயர் வாகன பவனியும், நாளை மறுநாள் 31 -ந் தேதி பத்தாம் திருவிழா மாலையில் இந்திர வாகன பவனியும் நடக்கிறது.

    தேரோட்டம்

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 11-ம் திருவிழா தேரோட்டம் வருகிற 1-ந் தேதி அன்று நடக்கிறது. தேரோட்டத்தை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார். அன்று நள்ளிரவு ஒரு மணிக்கு அய்யா வைகுண்டர் காளை வாகனபவனி நடக்கிறது.

    நேற்று நடைபெற்ற கருட வாகன பவனியில் அய்யாவழி அகிலத் திருக் குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் ராமையா நாடார், துணைத் தலைவர் அய்யாபழம், இணைத்தலைவர் விஜயகுமார், இணைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வின் நிர்வாக குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன்,, உறுப்பினர்கள் ஜோதிலிங்கம், ஆனந்த், ஆதவன், கணேசன், செல்வராஜ், அழகேசன், பாலகிருஷ்ணன், கணேஷ், கண்ணன், வினோத், கொட்டங்காடு குணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமரும், பாலாஜியும் வழக்கம்போல் ஆடு, மாடு, கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.
    • நேற்று ராமர் தோட்டத்திற்கு சென்ற போது தோட்டத்தில் இருந்த 55 ஆடுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கீழ புது தெருவை சேர்ந்த பாலாஜி(வயது 27). இவருக்கு சொந்தமாக திருச்செந்தூர் அருகே உள்ள ராமசாமிபுரத்தில் ஒரு ஏக்கரில் தோட்டம் ஒன்று உள்ளது. அதில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த கால்நடைகளை ராமர் என்பவர் பராமரித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ராமரும், பாலாஜியும் வழக்கம்போல் ஆடு, மாடு, கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று ராமர் தோட்டத்திற்கு சென்ற போது தோட்டத்தில் இருந்த 55 ஆடுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து ராமர், பாலாஜிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருச் செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை சைடெக் கணினி மென்பொருள் நிறுவனம் இந்த வளாகத்தேர்வை நடத்தியது.
    • தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பணி நியமன ஆணையை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் துறை சார்பில் வளாகத்தேர்வு நடைபெற்றது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சென்னை சைடெக் கணினி மென்பொருள் நிறுவனம் இந்த தேர்வை நடத்தியது. இதில் கணிப்பொறி அறிவியல் துறை மாணவர்கள் சுரேஷ்குமார், குத்தாலிங்கம் ஆகிய 2 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த மாணவர்களுக்கான பணி நியமன ஆணையை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சைடெக் கணினி மென்பொருள் நிறுவன அதிகாரி கிருஷ்ணன், பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், பிரீத்தி, பிருந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கணிப்பொறி துறை தலைவர் சி.வேலாயுதம் செய்திருந்தார். தேர்வான மாணவர்களை கல்லூரி முதல்வர், செயலர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • நெல்லையில் இருந்து செல்லும் ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே குரும்பூரை அடுத்து ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூர் வரை செல்கிறது.
    • இப்பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லையில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு தினமும் பல்வேறு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்செந்தூருக்கும் அரசு பஸ்கள் சென்று வருகிறது.

    திருச்செந்தூர்

    நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் அரசு பஸ்கள் கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, குரும்பூர், சோனகன்விளை வழியாக திருச்செந்தூருக்கு செல்கிறது.

    இதில் நெல்லையில் இருந்து செல்லும் ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே குரும்பூரை அடுத்து ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூர் வரை செல்கிறது.

    காயல்பட்டினம் வழியாக

    இந்த அரசு பஸ்கள் ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வழியாக தினமும் காலையில் 9.15, 11.45, மதியம் 1.45, 2.45, 4.15, மாலை 5 மணி மற்றும் இரவு நேரங்களில் இயக்கபட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக காலை 11.45, 1.45, 2.45, 4.15 ஆகிய நேரங்களில் இயங்கும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    பயணிகள் வேதனை

    இதனால் காலை 9.30 மணி அரசு பஸ்சை விட்டால் மாலை 5 மணிக்குதான் அடுத்த அரசுபஸ் உள்ளது.

    இதனால் இப்பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். சிலர் அவசரம் கருதி நகர பேருந்துகளில் திருச்செந்தூருக்கு சென்று அங்கிருந்து வேறுபஸ் பிடித்து செல்ல வேண்டி உள்ளது.

    இதனால் தங்களுக்கு கூடுதல் பண செலவு மட்டுமின்றி அதிகநேர பயணம் செய்ய வேண்டி உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே முன்புபோல பிற்பகல், மதியம் நேரங்களில் இயக்கப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • அய்யாவழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர் கொடியேற்றினார்.
    • 11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு உகப்படிப்பு, மாலை 6 மணிக்கும் அன்னதர்மம் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கடற்கரை யில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப் பதியில் 11 நாட்கள் நடைபெறும் ஆடித்திருவிழா இன்று காலையில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது

    கொடியேற்றம்

    திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, காலை 7.05மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அய்யாவழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர் கொடியேற்றினார்.

    நிகழ்ச்சியில் திருச்செந்தூர் சார்பு நீதிபதி வஷித்குமார்,அன்பாலயம் நிறுவனர் குரு சிவசந்திரன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சந்திரசேகர், டாக்டர் முத்துகிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர் மோகன் குமார ராஜா, காசிலிங்கம், ஆதி நாராயணன், பால கிருஷ்ணன், ராமமூர்த்தி, கணேசன்,செல்வகுமார், சங்கரன், சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்கார் பிரதிநிதி டாக்டர் பால சுப்பிரமணிய ஆதித்தன், சிவலிங்கம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 8 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனிவருதல், காலை 9 மணிக்கு அன்ன தர்மம், பகல் 12 மணிக்கு உச்சி படிப்பு, பணிவிடை , பகல் 1 மணிக்கு அன்ன தர்மம் நடைபெற்றது.

    11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை 6.30 மணிக்கு பால் அன்ன தர்மம், 9 மணிக்கு அன்ன தர்மம், பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, மதியம் 1 மணிக்கும் மாலை 6 மணிக்கும் அன்னதர்மம் நடக்கிறது. மாலை 4மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடக்கிறது.

    1-ந் தேதி தேரோட்டம்

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடக்கிறது. 6.30 மணிக்கு பால் அன்ன தர்மம், காலை 9 மணிக்கு அன்ன தர்மம், பகல் 12.05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    தேரோட்டத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பகல் 2 மணிக்கும், இரவு 8 மணிக்கும் அன்ன தர்மம், இனிமம் வழங்கு தல் நடக்கிறது. நள்ளிரவு 1மணிக்கு அய்யா வை குண்டர் காளை வாகனத்தில் பவனி வருதல், இரவு 2 மணிக்கு தர்மம், இனிமம் வழங்குதல் நடக்கிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் மாலையில் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில், அன்னம், சர்ப்பம், கருடன், குதிரை, ஆஞ்சநேயர்,இந்திர ஆகிய வாகனத்தில் பவனிவருதல் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுதுரை, துணைத் தலைவர் அய்யாபழம், துணைச் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமையா நாடார், இணைத் தலைவர்கள், பேராசிரியர் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, கோபால், இணைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், செல்வின், வரதராஜ பெருமாள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். 

    • காந்தி தினசரி மார்க்கெட் கடைகளை அருகில் உள்ள சுடுகாடு பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
    • மார்க்கெட் கடைகளை சுடுகாட்டுப் பகுதிக்கு மாற்றம் செய்யப்படுவதால் சுப நிகழ்ச்சிக்கு காய்கறிகள் வாங்க வருபவர்கள் வர மாட்டார்கள். இதனால் வியாபாரம் பாதிக்கும் என்று வைகுண்டராஜன் கூறினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட் பஸ் நிலையம் அருகில் செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த இடத்தில் அரசு அலுவலகங்கள் அமைய உள்ளது.

    மார்க்கெட் இடமாற்றம்

    எனவே அங்குள்ள கடைகளை அருகில் உள்ள சுடுகாடு பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

    தகனமேடை உள்ளதால் அந்த இடத்தில் வியாபாரம் செய்வதற்கு இடையூறாக இருக்கும். போதுமான அளவுக்கு வியாபாரம் நடைபெறாது என கூறி அந்த இடத்திற்கு செல்ல மறுத்து வருகின்றனர்.

    மேலும் அதற்கு பதிலாக தகுந்த உரிய இடம் தேர்வு செய்து புதிய இடம் கட்டி தரும் வரை பழைய இடத்திலிருந்து வியாபாரம் செய்வோம் என்று கூறி வருகின்றனர்.

    தகுந்த இடம்

    இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் வைகுண்டராஜன் திருச்செந்தூர் காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு செய்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    மார்க்கெட் கடைகளை சுடுகாட்டுப் பகுதிக்கு மாற்றம் செய்யப்படுவதால் வியாபாரம் செய்வற்கு இடையூறாக இருக்கும்.சுப நிகழ்ச்சிக்கு காய்கறிகள் வாங்க வருபவர்கள் வர மாட்டார்கள். இதனால் வியாபாரம் பாதிக்கும்.

    தற்போது மார்க்கெட்டில் 216 கடைகளுக்கு ரசீது போட்டு வியாபாரம் செய்து வருகிறார்கள். ஆனால் நகராட்சி சார்பில் 140 கடைகள் மட்டும் கட்டுவதாக தெரிகிறது.

    எனவே அனைத்து வியாபாரிகளுக்கும் தகுந்த பாதுகாப்பான இடத்தில் கடைகள் கட்டி தந்தால் மட்டுமே இங்கு இருக்கும் வியாபாரிகள் அந்த இடத்திற்கு செல்வார்கள்.அதுவரை இதே இடத்தில் தொடர்ந்து வியாபாரம் செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார், திருச்செந்தூர் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் திருப்பதி, தமிழ்நாடு வணிக சங்கங்கள் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர் கவாஸ்கர் நாடார், நிர்வாகி சோடா ரவி உள்பட பலர் உடனிருந்தனர்.

    • அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கையால் மூத்தகுடிமக்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தனிவரிசை தொடங்கப்பட்டு உள்ளது.
    • இன்று ஏராளமான பக்தர்கள் நாழிக்கிணற்றில் இலவசமாக புனிதநீராடினர்.

    திருச்செந்தூர்:

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திகழ்வது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.

    பக்தர்கள் தரிசனம்

    இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    விழா காலங்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம். தி.மு.க. அரசு பதவியேற்றது முதல் திருச்செந்தூர் கோவிலில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    திருப்பதியை போன்று

    பக்தர்கள் வசதிக்காக திருப்பதி கோவிலை போன்று திருச்செந்தூர் கோவிலை தரம் உயர்த்த பல்வேறு வசதிகள் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி ரூ. 200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    மூத்தகுடிமக்கள்

    ஏற்கனவே அமர்ந்து சென்று தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இலவச பொது தரிசனம் மற்றும் ரூ. 100 கட்டண தரிசனம் என இரண்டு வழியாக மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் திரள்வதால் சுவாமி தரிசனம் செய்பவர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் கோவிலில் சிரமமின்றி தரிசனம் செய்ய தனிப்பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    தனிவரிசை

    இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கையால் மூத்தகுடிமக்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தனிவரிசை தொடங்கப்பட்டு உள்ளது.

    அதன்படி கோவில் கடற்கரையோரம் உள்ள சண்முகவிலாச மண்டபத்தில் துலாபாரம் வாசல் அருகில் முதியவர்கள் சுவாமி தரிசனத்திற்கு தனியாக அனுமதிக்கப்படும் வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மூத்தகுடிமக்கள் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இன்று முதல் அமல்

    60 வயதை கடந்த மூத்தகுடிமக்கள் இந்தவழியாக சென்று தரிசனம் செய்யலாம். இந்தநடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.

    மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை பாதையை இன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    அதன்படி இவர்கள் வயதை அடையாளம் காட்டும் வகையில் அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை இதில் ஏதாவது ஒரு அசல் அடையாள அட்டையை கோவிலில் இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள கவுண்டரில் காண்பித்து சென்றனர். அவர்களுக்கு உதவிக்கு ஒருவர் மட்டும் அனுமதிக்கப்பட்டு விரைவு தரிசனம் செய்தனர்.

    மாற்றுத்திறனாளிகள்

    மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி சக்கர நாற்காலி வசதி தகவல் மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் வடக்கு வாசல் வழி–யாக மாற்றுத்திறனாளிகளுக்கென்று அமைக்கப்பட்டுள்ள மரப்பலகையிலான 'ரேம்ப்' வழியாக பக்தர்கள் வெளியேறும் வழியில் சண்முகர் சன்னதி வழியாக சென்று நேரடியாக கட்டணமின்றி மூலவரை தரிசனம் செய்யும் வசதி செயல் படுத்தப்பட்டு உள்ளது.

    இலவசம்

    கோவிலுக்கு தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் நாழிக்கிணற்றில் புனித நீராடுவதற்கும், வள்ளிக்குகையில் தரிசனம் செய்வதற்கும் ரூ.1 அனுமதி கட்டணம் வசூல் செய்யப்படுவது ரத்து செய்யப்பட்டு, பக்தர்கள் நலன் கருதி கட்டணமின்றி புனித நீராடும் வசதி செயல்படுத்தப்பட உள்ளது.

    அதன்படி இன்று முதல் பக்தர்கள் நாழிக்கிணற்றில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று ஏராளமான பக்தர்கள் நாழிக்கிணற்றில் இலவசமாக புனிதநீராடினர். திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.     

    • இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
    • இன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

    திருச்செந்தூர் சுப்பிர மணியசாமி கோவிலில் இன்று ஆனி வருசாபிஷேக விழா நடைபெற்றது.

    இதையொட்டி கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவில் மகா மண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் குமரவிடங்க பெருமான் சன்னதியில் சண்முகம் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட கும்ப கலசங்கள் கோவில் விமான தளத்திற்கு கொண்டு வரப்பட்டு காலை 9 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிசேகம் நடைபெற்றது.


    வருசாபிஷேக விழாவில், திருச்செந்தூர் கோவில் தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன், கோவில் இணை ஆணையர் கார்த்திக், கோவில் உள்துறை சூப்பிரண்டு ராஜேந்தின், தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமானும் வள்ளி அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

    இன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    • நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படும்.
    • மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆனி வருசாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படும். 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடக்கிறது.

    பின்னர் கோவில் மகாமண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டு காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு வருசாபிஷேகம் நடக்கிறது.

    தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள் விமான கலசத்திற்கு வருஷாபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளி அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஆடித்திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 1-ந்தேதி நடைபெறும் தேரோட்டம் வரை அனைத்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
    • மாசி அவதார தின விழா வரவு- செலவு கணக்குகள் சபையில் வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப் பதியில் வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை பொதுக்குழு கூட்டம் அய்யா வைகுண்டர் அவதாரப் பதி வளாகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர் தலைமை தாங்கினார். செயலாளர் பொன்னுதுரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆடித்திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 1-ந்தேதி நடைபெறும் தேரோட்டம் வரை அனைத்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது எனவும், மாசி அவதார தின விழா வரவு- செலவு கணக்குகள் சபையில் வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது.

    மேலும் திருப்பணிகள் குறித்து பல தீர்மானங்கள் சபையில் ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில் துணைத்தலைவர் அய்யா பழம், இணைத்தலைவர்கள் கோபால் நாடார், பால்சாமி, வரதராஜ பெருமாள், இணை செயலாளர்கள் தங்க கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், வரதராஜ பெருமாள், செல்வின்,சட்ட ஆலோசகர் சந்திரசேகர் நிர்வாக குழு உறுப்பினர்கள் முத்துக்குட்டி, ஆதிநாராயணன், கணேசன், கண்ணன், செல்வராஜ், சந்தானம், கிருஷ்ணவேணி, பாலகிருஷ்ணன், சிவலிங்கம், கனி, கோபால், சீனிவாசன், சஞ்சய், சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருச்செந்தூர் கோவிலை தரம் உயர்த்த பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
    • மூத்தகுடிமக்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தனிவரிசை தொடங்கப்பட்டு உள்ளது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.

    பக்தர்கள் வசதிக்காக திருப்பதி கோவிலை போன்று திருச்செந்தூர் கோவிலை தரம் உயர்த்த பல்வேறு வசதிகள் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி ஏற்கனவே அமர்ந்து சென்று தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் 9-ந் தேதி முதல் இலவச பொது தரிசனம் மற்றும் ரூ. 100 கட்டண தரிசனம் என இரண்டு வழியாக மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் திரள்வதால் சுவாமி தரிசனம் செய்பவர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் கோவிலில் சிரமமின்றி தரிசனம் செய்ய தனிப்பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மூத்தகுடிமக்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தனிவரிசை தொடங்கப்பட்டு உள்ளது.

    அதன்படி கோவில் கடற்கரையோரம் உள்ள சண்முகவிலாச மண்டபத்தில் துலாபாரம் வாசல் அருகில் முதியவர்கள் சுவாமி தரிசனத்திற்கு தனியாக அனுமதிக்கப்படும் வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அங்கு மூத்தகுடிமக்கள் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. 60 வயதை கடந்த மூத்தகுடிமக்கள் இந்தவழியாக சென்று தரிசனம் செய்யலாம்.

    இந்த பாதையில் செல்லும் முதியவர்கள் தங்கள் வயதை உறுதிப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்சு ஆகியவற்றின் ஏதாவது ஒரு அட்டையின் அசல் சான்றிதழை காட்டிவிட்டு இந்த வழியாக செல்லலாம்.

    இந்த நடைமுறை விரைவில் வர உள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×