search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128233"

    • 4-ந்தேதி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வீதியுலா நடக்கிறது.
    • தேரோட்டம் 6-ந்தேதி நடக்கிறது.

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனை நடந்தது. இரவில் ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவில் பிரதான வாயில் அடைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளினர். தொடர்ந்து பிரதான வாயில் திறக்கப்பட்டவுடன் சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது.

    அப்போது கீழ ரதவீதி பந்தல் மண்டப முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை தீபாராதனையும் நடந்தது.

    தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தங்க மயில் வாகனங்களில் எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    6-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளித்தேரிலும், அம்மன் இந்திர விமானத்திலும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளினார்.
    • சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    3-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    காலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் பூங்கோவில் சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து மீண்டும் மேலக்கோவிலை சேர்ந்தனர்.

    மாலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    4-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
    • இன்று சுவாமி தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்னவாகனத்திலும் காட்சி அளிக்கின்றனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 2-ம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் பகலில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் சிறிய பல்லாக்கிலும் எழுந்தருளி தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள ஆழ்வார்திருநகரி தாசில் ஆண்டியப்ப பிள்ளை மண்டபத்திற்கு வந்தனர். பின்னர் அம்பாள் மட்டும் உள் மாடவீதி, வெளி ரதவீதிகளில் உலா வந்து மீண்டும் மண்டபம் வந்து சேர்ந்தார்.

    பின்னர் அங்கு மாலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்ககேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து சிவன் கோவில் சேர்ந்தார்கள்.

    இன்று (திங்கள்கிழமை) இரவு சுவாமி தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்னவாகனத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இந்த விழா இன்று தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது.
    • தேரோட்டம் மார்ச் 6-ம்தேதி நடக்கிறது

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 5.20 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு மேல் அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி உழவாரப்பணி செய்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    இரவு 7மணிக்கு மேல் ஸ்ரீ பெலிநாயகர் அஸ்திர தேவனுடன் தந்தப் பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு ஒன்பது சந்திகளில் உலாவந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    2-ம் திருவிழா நாளை காலை 10.30 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமாள் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்மன் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.

    3-ம் திருவிழாவான 27-ந்தேதி மாலை 6.30மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    4-ம் திருவிழா 28-ந் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது.

    5-ம் திருவிழா வருகிற 1-ந்தேதி இரவு 7.30 மணிக்கு குட வருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும் அம்பாளும் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    6-ம் திருவிழா 2-ந்தேதி இரவு 8மணிக்கு சுவாமி வெள்ளி தேரிலும், அம்மன் இந்திர விமானத்திலும் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 3-ந்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் சண்முகபெருமான் உருகு சட்ட சேவையும், காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்தல் அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்திக் கோலத்தில் எழுந்தருளி 8 ரத வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    8-ம் திருவிழாவான 4-ந்தேதி (சனிக்கிழமை) காலை 5மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வீதியுலாவும், 11.30மணிக்கு பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது. 9-ம் திருவிழா 5-ந்தேதி இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா 6-ந்தேதி திங்கள்கிழமை தேரோட்டம் நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

    11-ம் திருவிழாவான 7-ந்தேதி இரவு 10:30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடக்கிறது. 12-ம் திருவிழா 8-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளில் உலா வருதல், இரவு 9மணிக்கு சுவாமி அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    விழாவில் கோவில் இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், சார்பு நீதிபதி வஷித்குமார், ஏரல் சேர்மன் சாமி கோவில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டி நாடார், பழக்கடை திருப்பதி திருவாடுதுறை ஆதினம் திருச்சிற்றம்பழம் தம்பிரான் சுவாமிகள், இந்து முன்னணி மாநில மாநில துணைதலைவர் வி.பி.ஜெயக்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • விழா நாளை தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது.
    • மார்ச் 6-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித்திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது.

    முதல் நாள் திருவிழாவான நாளை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு மேல் அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்த ருளி உழவாரப்பணி செய்து கோவில் சேர்தல் நடக்கிறது. இரவு 7மணிக்கு மேல் ஸ்ரீ பெலிநாயகர் அஸ்திரதேவனுடன் தந்தப் பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு ஒன்பது சந்திகளில் உலாவந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    5-ம் திருவிழாவான மார்ச் 1-ந் தேதி(புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்றைய தினம் மேல கோவிலில் இரவு 7.30 மணிக்கு மேல் குட வருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்பாளும் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    2-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. இரவு 8மணிக்கு சுவாமி வெள்ளி தேரிலும் அம்மன் இந்திர விமானத்திலும் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    அன்று அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் சண்முகபெருமான் உருகு சட்ட சேவையும், காலை 9 மணி அளவில் சுவாமி சண்முகர் வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்தல், அங்கு சுவாமிக்கு அபிசேகம் அலங்கார தீபாராதனை நடக்கிறது. அன்று மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்திக் கோலத்தில் எழுந்தருளி 8 ரத வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    8-ம் திருவிழாவான 4-ந் தேதி (சனிக்கிழமை) பகல் 11.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பச்சை சாத்தி சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    9-ந் திருவிழாவான 5-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) சண்முகர் சேர்க்கையை பொறுத்து பூஜை காலங்கள் நடைபெறும். இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான 6-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    அன்று காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

    11-ம் திருவிழாவான 7-ந்தேதி (செவ்வாய் கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜை நடக்கிறது. அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி அம்பாள் யாதவர் மண்டகப்படி வந்து அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைக்கு பின் இரவு 7மணிக்கு மேல் நெல்லை நகரத்தார் மண்டகப்படி சேர்த்தல், அங்கு 10.30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    12-ந் திருவிழாவான 8-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளில் உலா வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சேர்தல், அங்கு இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவுபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இந்த விழா 12 நாட்கள் நடைபெறுகிறது.
    • மார்ச் 6-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் மாசி திருவிழா இம்மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது.

    மாசித் திருவிழா முதல் நாள் விழாவான இம்மாதம் 25-ந் தேதி (சனிக்கிழமை)அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    26-ந் தேதி 2-ம் திருவிழாவான அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது 4.30 மணிக்கு விஸ்வரூபம் 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமாள் புறப்பாடு நடக்கிறது.

    3-ம் திருவிழா 27-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். 4-ம் திருவிழா 28-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    5-ம் திருவிழா 1-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு மேல் குட வருவாயில் தீபாரதனை நடக்கிறது.

    6-ம் திருவிழா 2-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது

    7-ம் திருவிழாவான 3-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், அன்று அதிகாலை 5 மணிக்கு உருகு சட்ட சேவையும், காலை 9 மணி சுவாமி சண்முகர் வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி ஷண்முகர் சிவப்பு சாத்திக்கோலத்தில் எழுந்தருளி 8 ரத வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் வந்தடைகிறது.

    8-ம் திருவிழாவின் 4-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று பகல் 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    9-ம் திருவிழா 5-ந் தேதி சண்முகர் சேர்க்கையை பொறுத்து பூஜை காலங்கள் நடைபெறும்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா 6-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    11-ம் திருவிழாவான 7-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜை நடக்கிறது. அன்று இரவு 10:30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடக்கிறது. 12-ம் திருவிழா 8-ந் தேதி சிறப்பு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 14 வகையான கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது.
    • வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு,கல்லூரியின் முதல்வர் வைஸ்லின் ஜிஜி பரிசு கோப்பைகளை வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அகதர உள் மதிப்பீட்டு குழு சார்பில் கலாசார போட்டிகள் கடந்த 13-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இளங்கலை மாணவ பிரிவு மற்றும் முதுநிலை மாணவ பிரிவுகளில் தனித்தனியே பாட்டுப்போட்டி, இசைக்கருவி வாசித்தல் போட்டி, குழு நடன போட்டி, புகைப்பட போட்டி, குறும்பட போட்டிகள் என மொத்தம் 14 வகையான கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது.

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் முதல்வர் வைஸ்லின் ஜிஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். முன்னதாக ஆதித்தனார் கல்லூரியின் 2022-2023-ம் ஆண்டுக்கான கலைத்திறன் போட்டிகளின் பொறுப்பாளர் ஸ்ரீதேவி வரவேற்றார். ஆதித்தனார் கல்லூரியின் செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். உள்தர மதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் நன்றி கூறினார். விழாவில் பேராசிரியர்கள் வேலாயுதம், ரமேஷ் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • புதிய நிர்வாகிகள் தேர்வு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் கருப்பு சட்டை அணிந்து மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மரகதலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் முருகன் வரவேற்று பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மாநில தலைவர் சரவணனுடைய பணிநீக்கத்தை ரத்து செய்து பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர் ஒன்றிணைப்பு மாநில அமைப்பு செயலாளர் சுவாமிநாதன் பேசினார்.தொடர்ந்து வடக்கு ரதவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவராக அந்தோனியும், மாவட்ட செயல் தலைவராக முருகனும் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில், மாவட்ட அமைப்பு செயலாளர் பெரியசாமி, துணை தலைவர்கள் நமசிவாயம், பூரணம், சுந்தர்ராஜ், நாகராஜன், மாவட்ட துணை செயலாளர் மணிமுத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.

    • சிறப்பு யாகங்கள், பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது.
    • கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை மேம்படுத்தும் வகையில், இந்து சமய அறநிலையத்துறையும், எச்.சி.எல். நிறுவனமும் இணைந்து ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடத்துவதற்காக திருப்பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.

    அதன்படி, முதல்கட்டமாக கோவில் கிழக்கு கோபுரம் மற்றும் சண்முகவிலாச மண்டப நுழைவுவாயிலான சாலகோபுரம் ஆகியவற்றில் திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கான பாலாலயம் மற்றும் பந்தல்கால் நடும் விழா நேற்று காலையில் நடைபெற்றது.

    இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெற்றது. காலை 8 மணிக்கு உள்பிரகாரத்தில் உள்ள யாகசாலையில் வைக்கப்பட்ட கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமானதளத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு பந்தல்கால் நடப்பட்டது.

    தொடர்ந்து மரகோபுர சிற்பங்களுக்கு ஆவாஹனம் செய்யப்பட்டு, மீண்டும் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கு சிறப்பு யாகங்கள், பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. அதன்பிறகு மரகோபுர சிற்பங்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட கும்பநீரால் பாலஸ்தாபன கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • பக்தர்களின் நலன் கருதி 50 கி.மீ. தொலைவு இடைவெளியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட வேண்டும்.
    • பழனி கோவிலில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் செயல்பட்டன.

    ஆறுமுகநேரி:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான ஆறுமுகநேரி தங்கமணி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு விழாக்காலங்களில் தினமும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் மேலூர், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகாசி, செங்கோட்டை, தென்காசி போன்ற தொலைதூர பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வருகின்றனர். இவர்களின் நலன் கருதி 50 கி.மீ. தொலைவு இடைவெளியில் சித்த ஆயுர்வேத மருத்துவ முகாம் அமைக்கப்பட வேண்டும். தற்போது நடந்து முடிந்த பழனி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு இதுபோன்று பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் செயல்பட்டன. இது பாராட்டிற்கு உரியது.

    எனவே மாசி திருவிழாவிற்கு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களின் வசதிக்காக பரமக்குடி, அருப்புக்கோட்டை, ஆறுமுக நேரி ஆகிய இடங்களிலும் ஆலங்குளம், நெல்லை, குரும்பூர் ஆகிய இடங்களிலும் வள்ளியூர், சாத்தான்குளம், பரமன்குறிச்சி ஆகிய இடங்களிலும் உவரி, குலசேக ரன்பட்டினம், ஆலந்தலை ஆகிய இடங்களிலும் மருத்துவ முகாம்களை அமைத்து செயல்படுத்த வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    • ஆதித்தனார் கல்லூரியில் வருடத்திற்கு 2 முறை ரத்த தான முகாம் நடத்தப்படுகின்றது.
    • ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 200 மாணவர்கள் ரத்ததானம் செய்கின்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் சார்பாக வருடத்திற்கு 2 முறை ரத்த தான முகாமானது ஆதித்தனார் கல்லூரியில் நடத்தப்படுகின்றது. ஒவ்வொரு முகாமிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தாமாகவே முன்வந்து ரத்த தானம் செய்கின்றனர். அது மட்டுமல்லாது எப்பொழுதெல்லாம் நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படுகின்றதோ, அப்பொழுது மாணவர்கள் மருத்துமனைக்கும் நேரடியாகச் சென்று ரத்ததானம் செய்கின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 200 மாணவர்கள் ரத்ததானம் செய்கின்றனர். மாணவர்களின் தன்னலமற்ற இந்த சேவையைப் பாராட்டும் வகையில் ஆதித்தனார் கல்லூரியில் ரத்த தான கழகத்திற்கு பாராட்டுச் சான்றிதழ் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் டி.பொன்ரவி, மருத்துவர் பாபநாசகுமார் மற்றும் மருத்துவர் சசிகலா முன்னிலையில் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் மற்றும் கல்லூரிச் செயலர் ஜெயக்குமார், ரத்ததான கழகத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி சகாய சித்ரா மற்றும் சி.மோதிலால் தினேஷ் ஆகியோரைப் பாராட்டினர்.

    • மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
    • இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.

    திருச்செந்தூா் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் மற்றும் வள்ளி-தெய்வானை ஆகிய விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்ற மேல் தளத்திற்கு புனித நீர் எடுத்துவரப்பட்டு 9.15 மணிக்கு ஊற்றப்பட்டது.

    தொடர்ந்து 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர் திரளாக கலந்து கொண்டனர்.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.

    நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், இணை ஆணையர் கார்த்திக், கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், நகராட்சி துணைத்தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    ×