search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128233"

    • நாளை இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.
    • குமரவிடங்கபெருமான், தெய்வானை தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வருகிறார்.

    திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகத்தை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமும், காலை 8.30 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள், வள்ளி, தெய்வானை ஆகிய விமான கலசங்களுக்கு வருசாபிஷேகம் நடக்கிறது.

    தொடா்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல் புஷ்பாஞ்சலி நடக்கிறது.

    கோவிலில் இரவு நடைபெறும் புஷ்பாஞ்சலிக்கு பக்தா்கள் தங்களால் இயன்ற அளவு அழகும், மணமும் மிக்க நன்மலா்களை (கேந்திப் பூக்கள் தவிர) நாளை பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக உள்துறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • திருச்செந்தூர் வட்டாரத்தில் சுமார் 1700 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
    • விவசாயிகள் பயிர்காப்பீடு பிரிமியமாக ஒரு ஏக்கர் நெல்பயிருக்கு ரூ.467 செலுத்த வேண்டும்.

    உடன்குடி:

    விவசாயிகளுக்கு திருச்செந்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கட சுப்பிர மணியன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    திருச்செந்தூர் வட்டா ரத்தில் தற்போது நவரை கோடை பருவத்தில் சுமார் 1700ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. புயல், வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களிலிருந்து பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பொழுதும், பூச்சி நோய் தாக்குதலினால் பயிருக்கு சேதம் ஏற்படும் போதும், பூச்சி நோய் நிவாரணம் அளிக்கும பொருட்டு பயிர் காப்பீடுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2022-23 ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீடு த்திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் இப்போ டோக்கியோ நிறுவனத்தால் நடத்தப் படுகிறது.

    இத்திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத அனைத்து விவசாயிகளுக்கும் ஓரே பிரிமியத்தொகை மற்றும் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டுத்திட்டத்தில் விவசாயிகள் தாங்கள் பிரிமியம் கட்டும் காலத்திற்கு ஏற்றவாறு விதைக்க இயலாத சூழ்நிலை, விதைப்பு பொய்த்தல், மகசூல் இழப்பு ஆகிய நிலைகளில் பயிர் இழப்பீடு பெற்றிட வாய்ப்புகள் உள்ளன.

    நவரை/கோடை பருவ நெல் பயிருக்கு பிரிமியம் செலுத்தினால் பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படையில் விதிமுறை களுக்கு ஏற்ப இழப்பீடு பெற வழி உள்ளது. விவசாயிகள் பயிர்காப்பீடு பிரிமியமாக ஒரு ஏக்கர் நெல்பயிருக்கு ரூ.467மட்டும் செலுத்த வேண்டும்.

    இதுகடன் பெறும் மற்றும் கடன்பெறாத சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகள் அனைவருக்கும் பொருந்தும். விவசாயிகள் பிரிமியக் கட்டணத்தை தொடர்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசியமயமா க்கப்பட்ட வங்கி கள் மற்றும் பொது இ சேவை மையங்களிலும் செலுத்தலாம்.

    இதுகுறித்து விவசாயி களிடையே கிரா மங்களில் வேளாண்துறை விரிவாக்க அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகள் மற்றும் திருச்செந்தூர் வட்டார வேளாண்அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று சுவாமி அஸ்திரதேவர் தீர்த்தவாரி நடைபெற்றது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா நடைபெற்றது.

    இதை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோவிலுக்கு குவிந்த வண்ணம் இருந்தனர்.

    விழாவில் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வாகனங்களிலும் வந்து அலகு குத்தியும்,காவடி எடுத்து வந்தும் அங்கபிரதட்சனை செய்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடைபெற்றது. அதன்பிறகு உச்சி கால அபிஷேகம், மதியம் 12 மணிக்கு உச்சி கால தீபாராதனை நடைபெற்றது.

    இன்று மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், 6.45 மணிக்கு ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடைபெற்று நடை திருக்காப்பிடப்படும்.

    இதுதவிர மதியம் உச்சிகால தீபாராதனைக்கு பிறகு மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    தைப்பூச திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் வருடம் முழுவதும் சிறப்பான வாழ்வு அமையும் என்ற நம்பிக்கை உள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலையிலே கடல் மற்றும் நாழி கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில், டி.எஸ்.பி. ஆவுடையப்பன் முன்னிலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • நாளை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
    • சுவாமி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை தைப்பூசம் நடக்கிறது.

    விழாவில் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் அலகு குத்தியும்,காவடி எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்ய வந்துகொண்டிருக்கின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடைபெறுகிறது. 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை பூஜையும் நடைபெற்று கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

    மதியம் உச்சிகால தீபாராதனைக்கு பிறகு மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    நேற்று சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுத்த நாள். இதை முன்னிட்டு நேற்றும் இன்றும் திருக்கோவில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா நடைபெற்றது.

    • தைப்பூசத் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
    • மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்து வரக்கூடாது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் தைப்பூசத் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். அவ்வாறு சாலையில் நடந்து வரும் போது, சாலையின் இடதுபுறமாக வாகனங்கள் வருவதால் பக்தர்கள் மீது மோத வாய்ப்பு உள்ளது. ஆகையால் பக்தர்கள் சாலையின் வலதுபுறமாக நடந்து செல்ல வேண்டும். இதனால் எதிரே இடது புறமாக வரும் வாகனங்களை கண்டுகொண்டு விபத்து நேரா வண்ணம் பக்தர்கள் தங்களை காத்துக் கொள்வதோடு மற்ற வாகனங்களுக்கும் இடையூறு இல்லாமல் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளலாம்.

    அதே போன்று பாதயாத்திரை பக்தர்கள் முதுகு பகுதி மற்றும் பைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி பாதுகாப்பாக பாதயாத்திரை செல்ல வேண்டும். இந்த தைப்பூச திருவிழாவை விபத்து இல்லாமல் பாதுகாப்பான முறையில் வழிபட்டு செல்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாதி ரீதியான அடையாளங்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள், சட்டைகள் போன்றவற்றை அணிந்தோ அதனை வெளிப்படுத்தும் வகையிலான கொடிகளோ கொண்டு வரக்கூடாது. சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வரக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 13 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 368- வது ஆண்டு விழா நடைபெற்றது.
    • தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 368- வது ஆண்டு விழா நடைபெற்றது.

    இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், பகல் 12 மணிக்கு உச்சிக்கால தீபா ராதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடை பெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு சுவாமி அலைவாயு உகந்த பெரு மான் சப்பர த்தில் வீதி உலா நடக்கிறது.

    தைப்பூசம்

    நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வருபம், 2மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் பகல் 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெற்று கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

    தங்க மயில் வாகனத்தில் வீதி உலா

    மதியம் உச்சிகால தீபாராதனைக்குப் பிறகு சுவாமி அலைவாயு உகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு அபிஷேகம் , அலங்காரம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    • திருச்செந்தூர் கோவிலில் நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கோவிலில் கடந்த மாதம் தரிசனத்திற்காக வந்த 3 பக்தர்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது.

    இதில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    தனிப்படையினர் சி.சி.டி.வி. காமிரா கட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் நகைபறிப்பு சம்பவம் ஈடுபட்டது நெல்லை பால பாக்கியாநகரை சேர்ந்த பரமசிவன் மனைவி ராமலெட்சுமி என்ற பேச்சியம்மாள் (வயது 60), நெல்லை குமரேசன் காலனியை சேர்ந்த கல்யாணி என்ற கலா (49). என்பது தெரியவந்தது.

    இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 5 பவுன் நகைகளை மீட்டனர்.

    கைது செய்யப்பட்ட பெண்கள் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    • நாளை சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட நாள் ஆகும்.
    • இதை முன்னிட்டு சனிக்கிழமை கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    1.30-க்கு விஸ்வருபம், 2மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடைபெறுகிறது.பகல் 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை நடைபெற்று கோவில் திருக்காப் பிடப்படும்.

    மதியம் உச்சிகால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறு கிறது. தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    நாளை (வெள்ளிக் கிழமை) சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட நாள் ஆகும். இதை முன்னிட்டு நாளை மறுநாள் (சனிக்கிழமை) கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

    • கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
    • சாதனை படைத்த தொழில் அதிபர்களோடு மாணவர்கள் கலந்துரையாடினர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தொழில் முனைவோர் வளர்ச்சி- புத்தாக்க மையம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவு வளர்ச்சி- புத்தாக்க மையமும் இணைந்து இ்றுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தொழில் முனைவோர் வளர்ச்சி கருத்தரங்கம் நடத்தியது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். கருத்தரங்கில் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை தலைவர் எஸ்.காயத்ரி தொழில் திட்டமிடல் மற்றும் புதிய தொழிைல தொடங்குவதில் உள்ள சவால்கள், அதை எவ்வாறு எதிர் கொண்டு வெற்றியடைவது என்பது பற்றி விளக்கி பேசினார். தூத்துக்குடி மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி மைய உதவி இயக்குனர் ஜீ.அகிலா தொழில் முனைவோர்களுக்கு அரசு ஏற்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

    தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்பின் நெல்லை மாவட்ட துணை இயக்குனர் ஜெரினாபூபி அரசு தொழில் தொடங்க வழங்கும் நிதியுதவி மற்றும் சலுகைகள் குறித்து பேசினார். கருத்தரங்கின் ஒரு பகுதியாக திருச்செந்தூர் பகுதியில் சாதனை படைத்த தொழில் அதிபர்களோடு மாணவர்கள் கலந்துரையாடினர்.

    இதில் திருச்செந்தூர் கே.சின்னத்துரை அன்கோ உரிமையாளர் ஜெ.முருகன், விவேகா கட்டுமான உரிமையாளர் பொறியாளர் கே.நாராயணன், வீ.ஆர்.கே. லிங்சின் உரிமையாளர் கே.பி.ரவிச்சந்திரன் மற்றும் மிஸ்டர் கிட்டுக் கிச்சன் உரிமையாளர் எஸ்.சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். முன்னதாக தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் புத்தாக்க மைய ஒருங்கிணைப்பாளர் வேலாயுதம் வரவேற்றார். தொழில் முனைவோர் மையத்தின் இயக்குனர் மாலைசூடும் பெருமாள் நன்றி கூறினார்.

    கருத்தரங்க ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனையின்படி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் புத்தாக்க நிலையத்தின் இயக்குனர் மகேஷ் குற்றாலம் மற்றும் அதன் கள இயக்குனர் சுவேதரன் வழிகாட்டுதலின்படி பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், ஸ்ரீதேவி, முருகேஸ்வரி, மருதையா பாண்டியன், ராஜ்பினோ, செல்வகுமார், கருப்பசாமி, திலிப்குமார், சிரில் அருண், ஜெயராமன் ஆகியோர் செய்திருந்தனர். கருத்தரங்கில் பேராசிரியர்கள் பாலு, முத்துக்குமார், ஜிம்ரீவ்ஸ் சைலண்ட் நைட், அந்தோணி சகாய சித்ரா, கவிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • 11 கிராமத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் சிறப்பு பாரதமாதா வழிபாடு நடைபெற்றது.
    • குளங்கள் முழுமையாக நிரம்புவதற்காக பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி -திருச்செந்தூர் ஆகிய ஒன்றிய பகுதிகளில் இந்து முன்னணி உடன்குடி ஒன்றிய பொதுச்செயலாளரும், இந்து அன்னையர் முன்னணியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான கேசவன் தலைமையில் 11 கிராமத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் சிறப்பு பாரதமாதா வழிபாடு நடைபெற்றது.

    தைக்காவூர், அம்மன் புரம், விஜயநாராயணபுரம், பிச்சிவிளை, வடக்குதெரு, பிச்சி விளைபுதூர்.கந்தசாமிபுரம், காயாமொழி தெற்குதெரு, சீருடையார்புரம் கரிசன் விளை, சத்யாநகர், ராமசுப்பிரமணியபுரம் உட்பட 11 கிராமங்களில் பூமாதேவி ஆகிய பாரத மாதாவுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    உடன்குடி, திருச்செந்தூர் பகுதியில் உள்ள வறண்டு கிடக்கும் அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்புவதற்கு வர்ண பகவான் அருள்செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் நோய் நொடிகள் இல்லாமலும் தடைபட்ட செயல்கள் நீங்கவும், பூமியில்நல்ல விளைச்சல் உண்டாகவும், பாரத தேசம் செழிக்க வேண்டும் என்றும் பாரத தாயிடம் வழிபாடு செய்யப்பட்டது.

    இதில் இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் சுயம்புகனி, சித்ரா, மணிமேகலை, சிவகுமாரி, சக்திகனி, தங்கேஸ்வரி, பட்டு ரோஜா, சரஸ்வதி, முத்துக்கனி, செல்வகுமாரி, அமுதா, பவித்திரசித்தா, வளர்மதி, தாமரைச்செல்வி.வன சுந்தரி, தங்கச்செல்வி, சூரியகலா, சிங்கார கனி, தமிழ்ச்செல்வி, யோகேஸ்வரி, பூஜா, அமுதசுரபி, மல்லிகா,செல்வி உட்பட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆதித்தனார் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்
    • போட்டி தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் கண்காட்சியில் கிடைக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் புத்தக கண்காட்சி நேற்று தொடங்கியது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் நெல்லையில் உள்ள சி.ஆர். புத்தக ஏஜென்சி தங்களது புத்தகங்களை காட்சிப்படுத்தி உள்ளனர். மேலும் அனைத்து துறைகளை சேர்ந்த புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான போட்டி தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் கண்காட்சியில் கிடைக்கிறது.

    இந்த கண்காட்சி தொடக்க விழாவில் மூத்த பேராசிரியர் முனைவர் பாலு, உடற்கல்வி இயக்குனர் ஜிம்ரீவ்ஸ், உதவி பேராசிரியர் மருதையா பாண்டியன் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நூலகர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் நூலக உதவியாளர் சரவணமுத்து, முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். கண்காட்சி நாைள மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.

    • கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
    • இந்துக்கள் தங்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் இந்துக்கள் தங்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி கரையோரம் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வார்கள்.

    இன்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமானோர் அதிகாலையே குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    இதேபோல் தூத்துக்குடி யில் உள்ள கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலிலும், தை அமாவாசையையொட்டி இன்று திரளான பக்தர்கள் குவிந்தனர். இக்கோவிலில் தை அமாவாசை திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை மறுநாள் வரை திருவிழா நடக்கிறது. 9-ந் திருவிழா வரை காலை, மாலை சுவாமி பல்வேறு திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று தை அமாவாசை திருவிழாவையொட்டி பிற்பகல் 1 மணிக்கு சுவாமி உருகுபலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சியும், சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு இலாமிட்ச வேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோல பவனியும், 10 மணிக்கு 1-ம் கால கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தரும் நடக்கிறது.

    11-ம் திருவிழாவான நாளை அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், 1 மணிக்கு 2-ம் கால பச்சை சாத்தி தரிசனம், மாலை ஏரல், சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாக சாந்தியும், இரவு 10 மணிக்கு சுவாமி திருக்கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்தகாட்சியும், கற்பூர தீப தரிசனமும் நடைபெறுகிறது.

    ×