search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128233"

    • கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார்.
    • கருத்தரங்கில் 32 ஆய்வு மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி கணிதத் துறை சார்பில் ' இன்றைய நடைமுறை வாழ்வில் இயற் கணிதம் மற்றும் பகுப்பாய்வு கணிதம்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்த ரங்கம் நடைபெற்றது.

    கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, அன்றாட வாழ்வில் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் குறித்து பேசினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

    சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி பல்கலைக்கழக கணிதவியல் பேராசிரியர் ஜோசப் கென்னடி கலந்து கொண்டு, எண் அமைப்பு மற்றும் புலங்கள் என்ற தலைப்பில் பேசினார். இதில் ஆய்வு மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார்.

    கருத்தரங்கில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பரணிதர் கலந்து கொண்டு, குவிந்த தொடர்கள் குறித்தும், கணிதத்துறை பகுப்பாய்வு செய்து கற்பது குறித்தும் விளக்கம் அளித்து பேசினார். சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் 32 ஆய்வு மாணவர்கள், தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

    இந்த கட்டுரைகள் ஐ.எஸ். பி.என். எண் கொண்ட புத்தகமாக வெளியிடப்பட்டது. கருத்த ரங்கின் பொறுப்பாளராக கணிதத் துறை பேராசிரியை செண்பகா தேவி செயல் பட்டார். இதில் 19 கல்லூரி களை சேர்ந்த பேராசிரி யர்கள், ஆய்வு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கை கணிதத்துறை தலைவர் வழிகாட்டுதல்படி, துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    • கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடினர்.

    தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். ஏராளமான பக்தர்கள் பச்சை மற்றும் காவி நிற உடை அணிந்தும், பல அடி நீள அலகு குத்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்தனர்.

    பல்வேறு ஊர்களில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட மினி லாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் முருக பெருமானின் திருவுருவ படத்தை வைத்தும், அவரது திருப்புகழை பாடியும் பாத யாத்திரையாக வந்தனர்.

    கோவிலில் குவிந்த பக்தர்கள் அதிகாலை முதலே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடினர். தொடர்ந்து இலவச பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனத்தில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலான பக்தர்கள் கோவில் கிரிபிரகாரத்தைச் சுற்றிலும் அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டனர். பெண்கள் அடிபிரதட்சணம் செய்து வழிபட்டனர்.

    திருச்செந்தூருக்கு வரும் தூத்துக்குடி ரோடு, பாளையங்கோட்டை ரோடு, பரமன்குறிச்சி ரோடு, குலசேகரன்பட்டினம் ரோடு உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் சாரை சாரையாக பாத யாத்திரை பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூரில் காணும் இடமெல்லாம் முருக பக்தர்களாகவே காட்சி அளிப்பதால் விழாக்கோலம் பூண்டது.

    • சில பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்தும் செல்கின்றனர்.
    • மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். அவர்கள் விதவிதமான காவடிகள் ஏந்தியும், வேல் ஏந்தியும், அலகு குத்தியபடியும் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் சில பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்தும் செல்கின்றனர். இந்த சர்ப்ப காவடி எடுத்து வர தற்போது அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் சட்டத்துக்கு புறம்பாக சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வருகின்றனர். இவ்வாறு பாம்புகளை எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது. இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறி உள்ளார்.

    • கலாச்சார கண்காட்சியை செய்யது அப்துல் ரகுமான் தொடங்கி வைத்தார்.
    • வரலாற்று ஆய்வு மையத்தை திருச்செந்தூர் சப்-கலெக்டர் புகாரி தொடங்கி வைத்தார்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் வரலாற்று மையம் தொடக்க விழா மற்றும் காயல் கலாச்சார சங்கம் விழா கற்புடையார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு மர்சூக் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது, ஊர் பிரமுகர்கள் தாஜூதீன், முகைதீன் தம்பி, முகைதீன் தம்பிதுரை, அபுல் ஹசன் கலாமி, சம்சுதீன், செய்யது அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். காயல் அமானுல்லா வரவேற்று பேசினார்.

    விழாவில் கலாச்சார கண்காட்சியை செய்யது அப்துல் ரகுமான் தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த வரலாற்று ஆய்வு மையத்தை திருச்செந்தூர் சப்-கலெக்டர் புகாரி தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. முகமது அபூபக்கர் வரவேற்று பேசினார். ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ் கனி சிறப்புரையாற்றினார்.

    தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் உலக தமிழர் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு, பேராசிரியர் முகமது நாசர், வரலாற்று ஆய்வாளர் சேயன் இப்ராஹிம், புகாரி ஷரீப் ஆகியோர் பேசினர். வரலாற்று ஆசிரியர் திவான் சிறப்புரையாற்றினார்.

    தொடர்ந்து கலாச்சார கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. சாலை பசீர், சுல்தான் ஜமாலுதீன், மர்சூக் மவுலானா, காயல் விஷன் ரபீக், சேகு அப்துல் காதர், சேகு அப்துல் காதர் சூபி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

    முன்னதாக செய்யது முகமது ஜியாது இறைவணக்கம் பாடினார். முடிவில் ஹாமிது பிரார்த்தனை நடத்தினார். அகமது முகைதீன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை அப்துல் அஜீஸ், மஹ்மூது, சாலிஹ், சம்சுதீன் காமில், மிஸ்பாஹி அன்சாரி, அனீஸ் இப்னு செய்யது உள்பட பலர் செய்திருந்தனர்.

    • ரெயில்வே வளர்ச்சி குழு நிர்வாகிகள் கூட்டம் அமைப்பின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆறுமுகநேரியில் நடைபெற்றது.
    • திருச்செந்தூர் - சென்னைக்கு நேரடி விரைவு ரெயில் இயக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் ரெயில்வே வளர்ச்சி குழு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் தங்கமணி முன்னிலை வகித்தார். அமிர்தராஜ் வரவேற்று பேசினார்.

    நெல்லை - திருச்செந்தூர் இடையில் மின்சார ரெயில் திட்டத்தை வேகப்படுத்தி செயல்முறைக்கு கொண்டு வந்துள்ள தென்னக ரெயில்வே மண்டல மேலாளரை பாராட்டியும், இந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நூற்றாண்டு விழா கொண்டாடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் நெல்லை - திருச்செந்தூர் இடையிலான ரெயில்வே திட்டத்தை கொண்டுவர அயராது பாடுபட்ட அப்போதைய நெல்லை ஜில்லா போர்டு மெம்பரான ஆறுமுகநேரியை சேர்ந்த டோகோ. பொன்னையா நாடாருக்கு நினைவுத்தூண் அமைப்பது என்றும், ஆறுமுகநேரி ரெயில் நிலைய அணுகு சாலையை தார் சாலையாக மாற்றக் கோரியும், திருச்செந்தூர் - சென்னைக்கு நேரடி விரைவு ரெயில் இயக்க வலி யுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் நிர்வாகிகள் முருகேச பாண்டியன், சுகுமார், நடராஜன், வெங்க டேசன், மனோகரன்,கற்பக விநாயகம், கணேஷ் மூர்த்தி, சண்முக சுந்தரம், கந்தபழம், குருசாமி, சீனிவாசன், தங்கேஸ்வரன், சுந்தர், லிங்க பாண்டி, கணேசன் ஆகி யோர் கலந்து கொண்டனர். முருகன் நன்றி கூறினார்.

    • ஆங்கில புத்தாண்டையொட்டி நடை திறப்பு நேரம் மாற்றப்பட்டிருந்தது. அதன்படி இன்று 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.
    • மார்கழி மாதத்தையொட்டி திரளான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரை சென்று வருகிறார்கள்.

    திருச்செந்தூர்:

    புத்தாண்டையொட்டி கோவில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழக்கமாக காலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இன்று ஆங்கில புத்தாண்டையொட்டி நடை திறப்பு நேரம் மாற்றப்பட்டிருந்தது. அதன்படி இன்று 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.

    தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றது.

    இன்று புத்தாண்டையொட்டி லட்சகணக்கானோர் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதனால் கடற்கரை முழுவதும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. ஏற்கனவே மார்கழி மாதத்தையொட்டி திரளான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரை சென்று வருகிறார்கள்.

    கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபட்டு சென்றனர். இதேபோல் கோவில்பட்டி, சாத்தான்குளம், எட்டயபுரம், தென்திருப்பேரை, ஆறுமுகநேரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    டவுன் நெல்லையப்பர் கோவிலில் புத்தாண்டையொட்டி இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பக்தர்கள், பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

    இதேபோல் சந்திப்பு சாலைக் குமாரசுவாமி கோவில், பாளை சிவன்கோவில், தெற்கு பஜார் மேலவாசல், சுப்பிரமணிய சுவாமி கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் இன்று பொதுமக்கள் வழிபாட்டில் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.

    தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர்-உலகம்மன் கோவில் புளியரை தட்சணாமூர்த்தி கோவில், குற்றாலம் குற்றால நாதர் கோவில், ஆய்க்குடி பாலமுருகன் கோவில், அறம்வளர்த்த நாயகி அம்மன் கோவில், அழகிய மனவாளர் பெருமாள் கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோவில், பாவூர்சத்திரம் நரசிம்மர் கோவில் மற்றும் ஆலங்குளம், வாசுதேவநல்லூர், செங்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

    • ஆருத்ரா தரிசனம் அன்று (6-ந்தேதி) கோவில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்படுகிறது.
    • தை பொங்கல் அன்று (15-ந்தேதி) கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடை திறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை வழக்கமாக காலை 5 மணிக்கு திறக்கப்படும். தமிழ் மாதமான மார்கழி கடந்த 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் ஜனவரி 14-ந் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நாட்களில் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.

    5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடைபெற்று வருகிறது. பின்னர் மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனையும், இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

    இந்நிலையில் நாளை (1-ந் தேதி) ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம் காலை 9மணிக்கு உச்சிகால அபிசேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

    இதே போல் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வருகிற 6-ந் தேதி(வெள்ளிக்கிழமை) கோவில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அதேபோல் தை பொங்கல் தினத்தன்று (15-ந் தேதி) கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது.

    மேலும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில் கடற்கரை முழுவதும் நாளை போலீசார் கட்டுப்பாட்டில் இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • இந்து அன்னையர் முன்னணி சார்பாக அயோத்தியில்ராமர் கோவில் கட்டும் பணி நல்லபடியாக நடக்க வேண்டும் என்றும்சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
    • நிகழ்ச்சியில் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்டம் உடன்குடி ஒன்றியம், திருச்செந்தூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள சுற்று புறபகுதியில் உள்ள 9 கிராமங்களில் இந்து அன்னையர் முன்னணி சார்பாக அயோத்தியில்ராமர் கோவில் கட்டும் பணியாளர்களுக்கு எந்த இடைஞ்சலும் வராமலும், ராமர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நல்லபடியாக நடக்க வேண்டும் என்றும், நல்ல கன மழை பொழிந்து ஆறு, குளங்கள் நிரம்ப வேண்டும் என்றும் 9 கிராமங்களில் கோவில்களில் வேண்டுதல் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    இதில் பொறுப்பாளர்கள் சூரியகலா, தமிழ்ச்செல்வி, யோகேஸ்வரி, அமுதசுரபி, வனசுந்தரி, செல்வகுமாரி, அமுதா, சுஜாதா, கோகிலா, பட்டு ரோஜா, சரஸ்வதி, சுதா, செல்வி, தமிழரசி, தங்கச் செல்வி, முத்துலட்சுமி, முருகம்மாள், சித்திரை கனி, பாரதிகோபிகா, இசக்கியம்மாள், இந்து முன்னணி உடன்குடி ஒன்றிய பொதுச்செயலாளரும் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர்கள் கேசவன் மற்றும் சதீஷ் ரகு, இந்து முன்னணி பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஜெய் கல்வி குழுமத்தின் நிறுவனர் சுப்பையா தலைமை தாங்கினார்.
    • விழாவில் பள்ளி குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கை மொழியில் ஜெய் இன்டர்நேஷனல் பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெய் கல்வி குழுமத்தின் நிறுவனர் சுப்பையா தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியை ரோஸ் நிர்மலா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக சாத்தான்குளம் சரக கல்வி கழகத் தலைவர் ஜோசப், இலங்கநாத புரம் பங்குத்தந்தை ஜோசப் ரத்தினராஜ், புதுக்குளம் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஆண்டனி சேவியர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி இயக்குனர் ஜெய் முருகன் சிறப்பு அழைப்பாளர்களை கவுரவப்படுத்தினார். பள்ளி குழந்தைகளின் பரதநாட்டியம், ஆடல், பாடல் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி இயக்குனர் ஜெய்முருகன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் பள்ளி முதல்வர் அனுபமா, பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் 3-ம் வகுப்பு மாணவி அவனி பூஹணம் நன்றி கூறினார்.

    • அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் திரு ஏடு வாசிப்பு திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது.
    • அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனி மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் திரு ஏடு வாசிப்பு திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது. 17 நாட்கள் நடைபெற்ற இவ் விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை 3 மணிக்கு திரு ஏடு வாசிப்பு திருவிழா நடைபெற்றது.

    திருக்கல்யாணம்

    திரு ஏடு வாசிப்பு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் கடந்த 23-ந் தேதி (வெள்ளிக் கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பட்டாபிசேக திரு ஏடு வாசிப்பு திருவிழா நேற்று மாலை 5 மணிக்கு நடந்தது.பட்டாபிசேக ஏட்டை அய்யா வழி அகிலத்திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் எடுத்து கொடுத்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனி நடைபெற்றது.

    கலந்துகொண்டவர்கள்

    விழாவில் திருச்செந்துர் சார்பு நீதிபதி வஷித்குமார், அய்யாவழி அகில திரு குடும்ப மக்கள் சபை இணை தலைவர்கள் பால்சாமி, ராஜதுரை,கோபால், இணைச் செயலாளர்கள், ராதாகிருஷ்ணன், செல்வின் வக்கீல் சந்திர சேகர், முன்னாள் இணை தலைவர். சிங்கபாண்டி, முன்னாள் துணை செயலாளர் ராமகிருஷ்ணன்,நிர்வாக குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், வினோத், சிவாஜி, ராமமூர்த்தி, ஆசிரியர் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவுக்கான ஏற்பாடு களை வள்ளியூர் அய்யா வழி அகிலத்திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் ராமையா நாடார், துணைத் தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்தி ருந்தனர். திரு ஏடு வாசிப்புப்பை வைகுண்ட மகராஜன் மற்றும் ஆனந்து குழுவினர் செய்திருந்தனர்.

    • கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.
    • விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.தமிழக மீன் வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசினார்.

    மின்சார சிக்கன வார விழா

    மின்சார சிக்கன வாரவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் உப மின் நிலையத்தில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூரில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாதாள சாக்கடை திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகம் கட்டுமான பணி கள் நடைபெற்று வருகிறது.

    கலெக்டர் ஆய்வு

    அந்த பணி மற்றும் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-

    திருச்செந்தூர் சுப்பிர மணியசாமி கோவிலில் ரூ.300 கோடி மதிப்பிலான பெரும் திட்ட வளாக பணியை கடந்த அக்டோபர் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    போக்குவரத்து நெரிசல்

    சூரசம்ஹாரம் நிகழ்ச் சிக்கு பிறகு தொடர்ந்து வேலை நடைபெற்று வருகி றது. அதையும் திருச்செந்தூர் நகராட்சி மற்றும் பொதுப் பணித்துறை மூலம் நடை பெறும் பாதாள சாக்கடை திட்டப் பணியையும் ஆய்வு செய்தோம்.

    திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தேர் திரு விழா நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்.

    சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படு கிறார்கள். எனவே சாலைகளில் மாடுகளை சுற்றி திரிய விடாமல் வீட்டிலேயே வைத்து வளர்க்க வேண்டும். மீறி கால்நடைகள் சாலைக்கு வரும்போது அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் கோவில் வளா கத்தில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து அப்புறப்படுத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கண்ண பிரான், அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புஹாரி, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் கார்த்திக், நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் திருச்செந்தூர் தெப்பக்குளம் மற்றும் அதன் அருகில் உள்ள ஆவுடையார் குளத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ×