search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோல்வி"

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். #JapanOpen #PVSindhu
    டோக்கியோ:

    முன்னணி வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ள ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதன் 3-வது நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தர வரிசையில் 14-வது இடத்தில் உள்ள சீனாவின் பான்ஜிவ் காவை சந்தித்தார்.

    55 நிமிடம் விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 18-21, 19-21 என்ற நேர்செட்டில் பான்ஜிவ் காவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.



    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-15, 21-14 என்ற நேர்செட்டில் 27-ம் நிலை வீரர் வோங் விங் கி வின்சென்டை (ஹாங்காங்) வீழ்த்தி கால்இறுதிக்குள் கால் பதித்தார். இந்த வெற்றியை பெற ஸ்ரீகாந்துக்கு 36 நிமிடமே தேவைப்பட்டது. கால் இறுதியில் ஸ்ரீகாந்த், 33-ம் நிலை வீரர் லீ டோங் குன்னை (தென்கொரியா) எதிர்கொள்கிறார்.

    மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 13-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரனாய் 14-21, 17-21 என்ற நேர்செட்டில் 10-வது இடத்தில் உள்ள அந்தோணி சினிசுகா ஜின்டிங்கிடம் (இந்தோனேஷியா) தோல்வி கண்டு நடையை கட்டினார். இந்த ஆட்டம் 48 மணி நேரம் நீடித்தது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மனு அட்ரி-சுமீத் ரெட்டி ஜோடி 18-21, 21-16, 12-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹீ ஜிட்டிங்-டான் கியாங் இணையிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தது. இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி இணை மலேசியாவின் சன் பெங் சூன்-கோஹ் லி யிங் ஜோடியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்-வீராங்கனைகளில் ஸ்ரீகாந்த் தவிர மற்ற அனைவரும் மூட்டை முடிச்சுகளை கட்டி விட்டனர்.  #JapanOpen #PVSindhu
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் பிரிவில் ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), எஸ்தோனியா வீராங்கனை கைய் கனேபியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். #USOpen2018 #SimonaHalep #KaiaKanepi
    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. செப்டம்பர் 9-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முன்னணி வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), எஸ்தோனியா வீராங்கனை கைய் கனேபியை சந்தித்தார். மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிமோனா ஹாலெப் 2-6, 4-6 என்ற நேர்செட்டில் கனேபியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான சிமோனா ஹாலெப் கடந்த ஆண்டும் அமெரிக்க ஓபன் போட்டியில் முதல் சுற்றுடன் நடையை கட்டி இருந்தார்.



    மற்ற ஆட்டங்களில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), வெரா லாப்கோ (பெலாரஸ்), கமேலி பெகு (ருமேனியா) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் ஜாக் சோக் (அமெரிக்கா), கரென் காச்சனோவ் (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.  #USOpen2018 #SimonaHalep #KaiaKanepi
    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். #Cincinnati #GarbineMuguruza #LesiaTsurenko
    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்றில் நேரடியாக விளையாட வாய்ப்பு பெற்ற நடப்பு சாம்பியனும், 2 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), 44-ம் நிலை வீராங்கனையான லிசி சுரென்கோவை (உக்ரைன்) எதிர்கொண்டார்.



    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கார்பின் முகுருஜா 6-2, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் லிசி சுரென்கோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), அனெட் கோன்டாவிட் (எஸ்தோனியா), விம்பிள்டன் சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), ஆஷ்லே பார்ட்டி (ஆஸ்திரேலியா), மகரோவா (ரஷியா), எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), அரினா சபலென்கா (பெலாரஸ்) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 55-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து வீரர் ராபின் ஹாஸ் 5-7, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் 4-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா) 4-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் அட்ரியன் மன்னாரினோவை தோற்கடித்து 3-வது சுற்றை எட்டினார்.  incinnati #GarbineMuguruza #LesiaTsurenko
    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் செக்குடியரசின் பெட்ரா கிவிடோவாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். #Cincinnati #SerenaWilliams
    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரரும், 7 முறை சாம்பியனுமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பீட்டர் கோஜோவ்சிக்கை (ஜெர்மனி) தோற்கடித்து 3-வது சுற்றை எட்டினார்.



    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், செக்குடியரசின் பெட்ரா கிவிடோவாவை சந்தித்தார். 2 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் கிவிடோவா 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் செரீனாவை வெளியேற்றி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த சீசனில் கிவிடோவா பெற்ற 40-வது வெற்றி இதுவாகும்.  Cincinnati #SerenaWilliams 
    13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ராகுல் எகிப்து வீரர் மோன்டாசரிடம் தோல்வியை தழுவினர்.
    சென்னை:

    13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ராகுல் பாய்தா 4-11, 9-11, 9-11 என்ற நேர் செட் கணக்கில் மோன்டாசரிடம் (எகிப்து) வீழ்ந்தார். யாசிர் பாத்டே, வீர் சோட்ரானி ஆகிய இந்திய வீரர்களும் தோல்வியை தழுவினர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து வீராங்கனை அலிஸ் கிரீன் 11-13, 11-4, 11-8, 11-8, 11-9 என்ற செட் கணக்கில் செங் நகா சிங்கை (ஹாங்காங்) தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரநிலையில் முதலிடம் வகிக்கும் ரோவன் எலராபி (எகிப்து) 11-4, 11-8, 11-2 என்ற நேர் செட்டில் இந்திய வீராங்கனை ஆஷிதாவை பந்தாடினார். இதே போல் ஐஸ்வர்யா, சன்யா வட்ஸ் ஆகியோரும் 2-வது சுற்றை தாண்டவில்லை. இத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. 
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் 3-வது சுற்றில் தோல்வியை தழுவினார்.
    லண்டன்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல்நிலை வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) எளிதில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ (அர்ஜென்டினா), மிலோஸ் ராவ்னிக் (கனடா) ஆகியோரும் தங்களது 3-வது சுற்றில் வெற்றி கண்டனர்.



    பெண்கள் ஒற்றையர் பிரிவில் சமீபத்தில் பிரெஞ்ச் ஓபனை வென்றவரும், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான சிமோனா ஹாலெப்(ருமேனியா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். அவரை தரவரிசையில் 48-வது இடத்தில் உள்ள சு-வெய் ஹிசை (சீனதைபே) 3-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் 2 மணி 20 நிமிடங்கள் போராடி வீழ்த்தினார். 32 வயதான சு-வெய், விம்பிள்டனில் முதல் முறையாக 4-வது சுற்றை எட்டினார். போட்டித் தரநிலையில் முதல் 10 இடங்களை பெற்ற வீராங்கனைகளில் தற்போது 9 பேர் தோற்று வெளியேறி விட்டது குறிப்பிடத்தக்கது. 
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. #England #Australia
    கார்டிப்:

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஜாசன் ராயின் (120 ரன்) சதத்தின் உதவியுடன் 8 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அடுத்து களம் இறங்கிய உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 47.1 ஓவர்களில் 304 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. ஷான் மார்ஷ் சதம் (131 ரன்) விளாசியும் பலன் இல்லை.



    இதன் மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் கடைசியாக சந்தித்த 8 ஆட்டங்களில் 7-ல் இங்கிலாந்து வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 3-வது ஒரு நாள் போட்டி நாட்டிங்காமில் நாளை நடக்கிறது. 
    கடந்த 4 ஆண்டுகளாக பிரதமர் மோடி மேற்கொண்ட சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி அடைந்து இருப்பதாக சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. #Modi #ShivSena
    மும்பை:

    ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் காஷ்மீர் நிலவரம் குறித்து கடந்த 14-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்று இருந்தன.

    ஆனால் ஐ.நா.வின் அறிக்கை உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டிய மத்திய அரசு இதனை புறக்கணித்தது. இந்த நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் இது குறித்து கூறியிருப்பதாவது:-



    இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு நகைப்புக்குள்ளாகி இருக்கிறது. ரம்ஜான் காலத்தில் காஷ்மீரில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களுக்கு மத்திய அரசை தான் குற்றம்சாட்ட வேண்டும். கடந்த 4 மாதங்களில் மட்டும் காஷ்மீரில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். அதில் பெரும்பாலானோர் நமது ராணுவ வீரர்கள்.

    நாட்டின் ராணுவ மந்திரி உட்கட்சி விவகாரங்களில் பரபரப்பாக இருக்கும் நிலையில் பிரதமர் மோடியோ வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பிரதமரின் கடந்த 4 ஆண்டுகால வெளிநாட்டு பயணங்களால் சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்து இருப்பதாக கூறப்படும் கருத்து காஷ்மீர் குறித்த தற்போதைய ஐ.நா. அறிக்கையை தொடர்ந்து தவிடுபொடியாகி விட்டது.

    பிரதமர் மோடி எண்ணற்ற வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட போதிலும், காஷ்மீர் விவகாரத்தில் யாரும் இந்தியாவின் பக்கம் நிற்க தயாராக இல்லை. இவை பிரதமர் மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி அடைந்து இருப்பதையே காட்டுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.   #Modi #ShivSena  #tamilnews
    ஸ்டட்கர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தோல்வி அடைந்தார். #StuttgartOpen
    ஸ்டட்கர்ட்:

    ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் மெர்சிடஸ் கோப்பைக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரரான சென்னையைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், 75-ம் நிலை வீரர் குடோ பெல்லாவை (அர்ஜென்டினா) எதிர்கொண்டார். 1 மணி 29 நிமிடங்கள் போராடிய தரவரிசையில் 169-வது இடம் வகிக்கும் குணேஸ்வரன் 6-7 (4-7), 3-6 என்ற நேர் செட்டில் தோற்று வெளியேறினார். இதில் குணேஸ்வரன் வெற்றி பெற்றிருந்தால் கால்இறுதியில் ரோஜர் பெடரருடன் (சுவிட்சர்லாந்து) மோதும் பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கும். #StuttgartOpen
    திருப்பதியில் நீட் தேர்வில் தோல்விடைந்த மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    திருமலை:

    திருப்பதி கொர்லகுண்டா பகுதியில் வசித்து வரும் சுப்ரமணியம், வனஜாகுமாரி தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். சுப்ரமணியம் இறந்த பின் அவரது மூத்த மகன் தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இளைய மகன் பாலாஜி (வயது 20) பிளஸ்2 வகுப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நீட் நுழைவுத் தேர்வை எழுதினார்.

    ஆனால், தொடர் தோல்வியையே சந்தித்தார். இதனால் மன வருத்தமடைந்த அவர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திருப்பதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    இது தொடர்பாக அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட திருச்சி மாணவி சுபஸ்ரீ உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.இதில் கிராம மக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். #NEET2018 #Subasree #TNStudentSuicide
    கொள்ளிடம் டோல்கேட்:

    திருச்சியை அடுத்து நம்பர் ஒன் டோல்கேட் திருவள்ளுவர் அவென்யூவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 47).இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அண்ணா தொழிற்சங்கத்தின் திருச்சி கண்டோன்மெண்ட் கிளையின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது மனைவி செல்வி (35). இந்த தம்பதியின் மகள் சுபஸ்ரீ (17), மகன் மிதுன் (13). இவர் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். சுபஸ்ரீ பிளஸ்-2 படித்து முடித்து 907 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.



    மருத்துவ படிப்பு படிக்க விரும்பிய இவர் நடந்து முடிந்த ‘நீட்’ தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதியிருந்தார். இதில் அவர் 24 மதிப்பெண்களே எடுத்து தேர்ச்சி பெறாததால் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த சுபஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சுபஸ்ரீயின் உடலை பார்ப்பதற்காக அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர். பிரேத பரிசோதனை காலை 9.45 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. 10.50 மணிக்கு பிரேத பரிசோதனை முடிவடைந்து சுபஸ்ரீயின் உடல் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தாய், தந்தை இருவரும் தனது மகளின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

    தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளர் மனோகரன், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், ஸ்ரீரங்கம் பகுதி தி.மு.க செயலாளர் ராம்குமார் தலைமையில் கட்சியினர், மண்ணச்சநல்லூர் ஒன்றிய தே.மு.தி.க செயலாளர் வி.பி.தங்கமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் வேளாங்கண்ணி, இந்திய ஜனநாயக திருச்சி மாவட்ட செயலாளர் லெனின், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அருணன் மற்றும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சுபஸ்ரீயின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    இதற்கிடையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மகளை இழந்து தவித்த தந்தை கண்ணனை செல்போனில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

    இதனையடுத்து சுபஸ்ரீ உடல் தகனம் செய்வதற்காக ஓயாமாரி மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடல் தகனம் செய்யப்பட்டது. மாணவி உடல் தகனம் நிகழ்ச்சியில் கிராம மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார மக்களும் திரளாக கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    முன்னதாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் இருந்து ஓயாமாரி மின்மயானம் வரை 2 அரசு பஸ்கள் இலவசமாக இயக்கப்பட்டன. இந்த பஸ்சில் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுநல அமைப்பை சேர்ந்த பலர் மயானத்திற்கு சென்று மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, நேற்று மாலை திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி சுபஸ்ரீ வீட்டிற்கு சென்றார். அங்கு மாணவியின் தந்தை கண்ணன், தாயார் செல்வி மற்றும் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார். பின்னர் வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாணவி சுபஸ்ரீ உருவப்படத்துக்கு கே.என்.நேரு எம்.எல்.ஏ. மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். உடன் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் சென்றனர்.  #NEET2018 #Subasree #TNStudentSuicide
    நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் ஐதராபாத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #NEET #NEET2018 #NEETkills
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர், ஐதராபாத் கச்சிக்குடா பகுதியை சேர்ந்தவர் மாணவி ஜஸ்லீன் கவுர் (வயது 18). இந்த மாணவி, ‘நீட்’ தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்த நிலையில் அவர் நேற்று காலை 10.30 மணிக்கு அங்கு அபிட்ஸ் பகுதியில் அமைந்து உள்ள 10 மாடிகளை கொண்ட மயூரி வணிக வளாகத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். வாகனத்தை நிறுத்திவிட்டு விறுவிறுவென மாடிப்படிகள் ஏறி, அந்த கட்டிடத்தின் உச்சிக்கு சென்றார்.

    அவர் அங்கு இருந்து குதிக்கப்போவதை உணர்ந்த பலரும் அவரை குதிக்க வேண்டாம் என்று அலறினர். ஆனால் அதையும் மீறி அவர் கீழே குதித்து விட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணம் ஆனார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று, ஜஸ்லீன் கவுரின் உடலை கைப்பற்றி, அரசு உஸ்மானியா ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த மாணவி, மாடிப்படியேறி கட்டிடத்தின் உச்சிக்கு சென்று கீழே குதித்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

    டெல்லி துவாரகா 12-வது செக்டாரை சேர்ந்தவர் மாணவர், பிரணவ் மெஹந்திரத்தா (வயது 19). இவர் 2016-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வில் வெற்றிபெற்று, மருத்துவ படிப்பில் சேருவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வு எழுதியும், அவற்றில் தோல்வி அடைந்ததால் இந்த ஆண்டும் ‘நீட்’ தேர்வு எழுதினார்.

    தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியான சிறிது நேரத்திலேயே பிரணவ் 8-வது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

    ரத்த வெள்ளத்தில் அவரது உடல் தரையில் கிடந்தது. போலீசார் விரைந்து வந்து விசாரித்ததில், அவர் ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததும், ஆனால் பெற்றோரிடம் வெற்றிபெற்றதாக பொய் சொல்லி இருந்ததும் தெரிந்தது.

    இதுபற்றி பிரணவ் தற்கொலைக்கு முன்னர் எழுதிய கடிதமும் சிக்கியது. அவர் ஏற்கனவே படுக்கை அறையில் ஒரு துப்பட்டாவை தூக்குகயிறாக கட்டியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவர் ‘நீட்’ தேர்வை 3 முறை மட்டுமே எழுத முடியும் என்று விதி வகுக்கப்பட்டு உள்ளது. மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவு தகர்ந்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது.

    ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.  #NEET #NEET2018 #NEETkills
    ×