search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதிதிராவிடர்"

    ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒப்பந்த பணிகளை வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுச்சேரி:

    விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை செயலாளர் அஸ்வனிகுமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (எஸ்.சி.எஸ்.பி., டி.எஸ்.பி.) துணைத்திட்ட நிதியின் மூலம் ஆதிதிராவிடர் மேம்பாட்டு  வரைநிலைக்கழகம் (பாட்கோ) தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஒப்பந்தங்கள் விடுகிறது. இவ்வாறு விடப்படும் ஒப்பந்தங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் பங்குபெற முடியாத நிலை உள்ளது. ஆனால் அண்டை மாநிலமான தமிழகத்தில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி குடியிருப்பு மேம்பாட்டு கழகம் மூலம் விடப்படுகின்ற அனைத்து ஒப்பந்தங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களே பங்குபெறும் வகையில் அரசாணை உள்ளது. 

    இதனை பின்பற்றி புதுவையிலும் பாட்கோ மூலம் விடப்படும் ஒப்பந்தங்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்  பங்குபெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு தேவ.பொழிலன் கூறியுள்ளார்.
    ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




    திருவாரூர்:

    ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திருவாரூர் பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து கலந்து கொண்டு பேசினார்.

    இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட நிர்வாகிகள் பழனிவேல், கலைமணி, குமாரராஜா, கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதேபோல் வேலை வாய்ப்பு வழங்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திருவாரூர் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். இதில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
    ×