search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வால்பாறை"

    வால்பாறை அருகே டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறை கஞ்சமலையை சேர்ந்தவர் பத்மநாதன் (வயது 37). டிரைவர். இவரது மனைவி யோகேஸ்வரி. கடந்த வருடம் நடந்த விபத்தில் பத்மநாதன் படுகாயம் அடைந்தார். படுகாயம் காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்தார். இதனால் குடும்பம் நடத்த பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த பத்மநாதன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட பத்மநாதனின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசேதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    வால்பாறை மற்றும் மேட்டுப்பாளையத்தில் கொட்டி தீர்த்த கனமழை பெய்யத் தொடங்கியது.

    மேட்டுப்பாளையம்:

    வால்பாறை பகுதியில் கடந்த ஒரு மாதமாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும் வால்பாறை பகுதியில் பகல் நேரத்தில் அதிக வெப்பமும் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் வால்பாறை வட்டார பகுதி முழுவதும் கடந்த ஒரு மாதமாகவே ஒவ்வொரு நாளும் மதியம் மற்றும் மாலை கனமழை பெய்துவருகிறது. நேற்றும் வால்பாறை நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் மதியம் 12 மணி முதல் 5 மணிவரை கனமழை பெய்தது.

    இதனால் வால்பாறை பகுதி பொது மக்கள் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். வால்பாறை பகுதியில் பெய்து வரும் மழைகாரணமாக கடந்த மாதத்தில் குறையைத் தொடங்கிய சோலையார் அணையின் நீர் மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது. இதனால் சோலையார் மின்நிலையம்-2 இயக்கப்பட்டு மின்உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது.அவ்வப் போது நிறுத்தப்பட்டாலும் சோலையார் மின் நிலையம்-1 ம் இயக்கப்பட்டு வருகிறது.

    ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் பெய்யும் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி பெய்துவருகிறது.வால்பாறை பகுதியை பொறுத்தவரை இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை உரிய நேரத்தில் தொடங்கி மிக கனமழையாக பெய்தது.

    இதே போல வடகிழக்கு பருவமழையும் உரிய நேரத்தில் தொடங்கி பல சமயங்களில் லேசான மழை பெய்த போதும் அவ்வப்போது மிக கனமழையாக பெய்துவருகிறது.வடகிழக்கு பருவமழை உரிய நேரத்தில் தொடங்கியுள்ளதால் அதிகளவில் மழை கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    தற்போது ஆழியார் அணையிலிருந்து சமவெளிப்பகுதி மக்களின் விவசாயத் தேவைகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் வால்பாறை பகுதியில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு சமவெளிப் பகுதி விவசாயிகளுக்கு கூடுதலாக தண்ணீர் கிடைப்பதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மாலை 5 மணிக்கு திடீரென எதிர்பாராதவிதமாக மழை பெய்யத்தொடங்கியது.சிறிது சிறிது நேரமாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யத்தொடங்கியது.சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் வாகன போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.பஸ்நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் மழை வெள்ளம் புகுந்து தேங்கி நின்றது.

    மாலை 5 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியதால் பள்ளி சென்ற மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    பள்ளி மாலை நேரம் முடிந்ததும் மாணவ- மாணவிகள் நனைந்து கொண்டே பஸ் நிலையம் வந்தனர். மழை காரணமாக பஸ்கள் சற்று தாமதமாக வந்ததால் பஸ்பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

    இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக கேத்தி லவ்டேல் ரெயில்நிலையங்கள் இடையே மரங்கள் சாய்ந்து ரெயில் பாதையில் விழுந்ததாலும். மழை காரணமாகவும் சுற்றுலாப்பயணிகளின் நலனைக்கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் ஊட்டி மலைரெயில் போக்குவரத்தை இன்று ஒருநாள் மட்டும் ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

    வால்பாறை எஸ்டேட் பகுதியில் மண் சரிவு, பூமியில் விரிசல் ஏற்பட்டிருப்பதை நிலநடுக்கம் என நினைத்து பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் கடந்த ஓரு வாரத்திற்கு முன்புவரை கனமழை பெய்தது. தற்போது மழை நின்று வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது.

    மழை காரணமாக ஆங்காங்கே தேங்கியிருந்த தண்ணீர் முழுவதும் பூமிக்குள் இறங்கி வடியத் தொடங்கி வருவதால் பல இடங்களில் தேயிலைத் தோட்ட பகுதிகளில் மண்சரிவும், பூமியில் விரிசல்கள் ஏற்பட்டும் வருகிறது.

    இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி, நடுமலை, சோலையார், கருமலை, உருளிக்கல் உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் மண்சரிவும் பூமி விரிசலும் ஏற்பட்டுள்ளது.

    இதனால் எஸ்டேட் நிர்வாகங்கள் பாதுகாப்பு நலன் கருதி தொழிலாளர்களை தேயிலை இலை பறிக்கும் பணிக்கு அனுப்பவில்லை. அய்யர்பாடி, சோலையார் எஸ்டேட் பகுதிகளில் குடியிருப்புகளுக்கு அருகில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால் எஸ்டேட் நிர்வாகங்கள் அப்பகுதி தொழிலாளர்களுக்கு வேறு பகுதிகளில் குடியிருப்பு வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.

    வால்பாறை எஸ்டேட் பகுதியில் மண் சரிவு, விரிசலை சிலர் நிலநடுக்கம் என நினைத்து பீதியில் உள்ளனர்.
    கோவை மாவட்டம் வால்பாறையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிவாரண பொருட்களை வழங்கினார்.
    கோவை:

    கோவை மாவட்டம், வால்பாறையில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள வாழைத்தோட்டம் பகுதியிலுள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    பொள்ளச்சி -வால்பாறை சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. தற்போது அதனை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    வால்பாறையில் பாரதியார் பல்கலைகழக கலை அறிவியல் கல்லூரி தற்காலிக முகாமில் தங்க வைகப்பட்டுள்ள 95 பேர்களை பார்வையிட்டு நிவாரணப்பொருட்களை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது-

    தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே, கனமழை பெய்து வருகிறது. கடந்த 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை பெய்த கனமழையில் வால்பாறை நகரம் வாழைத்தோட்டம் ஒட்டியுள்ள ஆற்றுப்பகுதியில் வெள்ளம் புகுந்ததன் காரணமாக சுமார் 50 வீடுகளும்,டோபி காலனி ஒட்டியுள்ள ஆற்றுப்பகுதயில் 30வீடுகளும், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா மற்றும் காமராஜர் நகர் அருகிலுள்ள ஆற்றுப்பகுதியில் 70 வீடுகளும், எம்.ஜி.ஆர் நகர் முதல் ஸ்டேன்மோர் ஒட்டியுள்ள ஆற்றுப் பகுதியில் 25வீடுகளும் பாதிப்படைந்தது.

    அதில் குடியிருந்தவர்களில் சிலர் அவர்களின் உறவினர்களின் வீடுகளுக்கு சென்றனர். 30ஆண்கள், 45 பெண்கள், 20 சிறுவர்கள் என 95 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டு, வால்பாறை நகர பகுதியில் தற்காலிக முகாம்களாக அமைக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலைகழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு தொடக்கப்பள்ளி ஆகிய நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அனைவருக்கும், உணவு, உடை, போர்வைகள், குடிநீர், மற்றும் மருத்துவவசதி போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளது.

    கனமழையின் போது, வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் 38-வது கொண்டை ஊசி வளைவில் ராட்சத மரங்கள் விழுந்தும், 27-வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவும் ஏற்பட்டது. அவை உடனடியாக சரிசெய்யப்பட்டது.

    9-வது கொண்டை ஊசி வளைவில் சாலையில் அடிப்பகுதியில் மண்அரிப்பு ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பஸ்கள் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சாலைசீர் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தற்போது இருசக்கர வாகனங்களும், கார்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வால்பாறை - சாலக்குடி சாலையில் மண்சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சாலை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    தமிழக அரசு இயற்கை இடர்பாடுகளை திறம்பட கையாண்டு பொதுமக்களை விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் போர்கால அடிப்படையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஹரிஹரன், சி.மகேந்திரன் எம்.பி., கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ,, மாவட்ட வருவாய் அலுவலர்துரை.ரவிச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு.பாண்டியராஜன், பொள்ளாச்சி சப்-கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன், உதவி கலெக்டர் (பயிற்சி) சினேகா , நெடுஞ்சாலை துறை கோட்டப்பொறியாளர் ஆண்டனி சேவியர் ஆகியோர் கலந்து கொண்டனர். #tamilnews
    வால்பாறையில் வீட்டிற்குள் புகுந்த மழைநீர் வடிவ தொடங்கியதால் முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள் வீடு திரும்பினார்கள்.
    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள வாழைத் தோட்டம், கக்கன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    வால்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் வெள்ளம் புகுந்ததால் அங்கு இருந்த டீசல் டேங்கில் தண்ணீர் புகுந்தது. இதனால் டீசல் கிடைக்காமல் அரசு பஸ்களை இயக்க முடியவில்லை.

    பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் 9-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு கனரக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மண் சரிவை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வால்பாறையில் இருந்து சோலையாறு அணை வழியாக கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் சாலையும் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    வால்பாறையில் போக்குவரத்து இயங்காததால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    வால்பாறையில் நேற்று முதல் மழை ஓய்ந்தது. இதனால் வெள்ளம் வடிந்து வருகிறது. வால்பாறையில் வாழைத் தோட்டம், கக்கன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் தேங்கிய மழை நீர் வடிந்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வால்பாறை அரசு பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். இதனால் வால்பாறை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
    வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 36-வது கொண்டை ஊசி வளைவுக்கும் 37 வது கொண்டை ஊசி வளைவுக்கும் இடையே மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வால்பாறை:

    கோவை, நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.

    கடந்த 2 வாரமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரண மாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அணைகள், குளங்கள், ஏரிகள், தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது.

    குறிப்பாக ஊட்டியில் பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. கோவையில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் ரெயின்கோர்ட்டு அணிந்தும், குடைபிடித்த படியும் வந்தனர்.

    நீலகிரி மாவட்டம் அப்பர்பவானி, அவலாஞ்சி பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பில்லூர் அணை நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அந்த தண்ணீர் முழுவதும் அணையின் மதகுகள் வழியாக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக பவானி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி பில்லூர் அணைக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போதும் ஊட்டியில் மழை கொட்டி வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.

    வால்பாறை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறையிலிருந்து குரங்குமுடி எஸ்டேட் செல்லும் சாலையில் மாணிக்கா எஸ்டேட் பிரிவு அருகே 60 ஆண்டு பழமை வாய்ந்த தைல மரம் சாய்ந்து சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவல் தெரிய வந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்துவந்து 4 மணிநேரம் போராடி மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

    இந்த நிலையில் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 36-வது கொண்டை ஊசி வளைவுக்கும் 37 வது கொண்டை ஊசி வளைவுக்கும் இடையே மண்சரிவு ஏற்பட்டு மண்முழுவதும் சாலையில் மரங்களுடன் சேர்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரை பொள்ளாச்சி கொண்டு செல்வதற்கு கொண்டுவந்தனர். மண்சரிவு காரணமாக ஆம்புலன்ஸ் வாகனம் செல்லமுடியாமல் நடுவழியில் நின்றது.

    2 மணிநேரத்திற்கு பிறகு நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து 5 மணிநேரத்துக்கு பின்பு போக்குவரத்து சீரானது.

    வால்பாறை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் இன்று தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.

    வால்பாறை பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் சோலையார்அணையில் 114 மி.மீ. மழையும், வால்பாறையில் 108 மி.மீ. மழையும், சின்னக்கல்லாரில் 188 மி.மீ. மழையும்,நீராரில் 104 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

    சோலையார் அணைக்கு விநாடிக்கு 8689.70 கனஅடி தண்ணீர் வந்து வந்துகொண்டிருக்கிறது. சோலையார் அணையிலிருந்து சேடல் பாதை வழியாக 4758.45 கனஅடித்தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு சென்று கொண்டிருக்கிறது.

    சோலையார் அணையிலிருந்து மாற்றுப்பாதை வழியாக 2041.32 கன அடித்தண்ணீரும் பரம்பிக்குளம் அணைக்கு சென்று கொண்டிருக்கிறது.

    சோலையார் மின்நிலையம்-2 இயக்கப்பட்டு 602.08 கனஅடித்தண்ணீர் கேரளாவிற்கு திறந்துவிடப்பட்டு வருகிறது. சோலையார் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை தாண்டிய நிலையில் 164.70 அடியை எட்டியதை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு நலன்கருதி நள்ளிரவு 1 மணியளவில் சோலையார் அணை 2-வது முறையாக திறக்கப்பட்டு மதகு வழியாக 253.13 கனஅடித்தண்ணீர் கேரளாவிற்கு திறந்துவிடப்பட்டுவருகிறது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வர் கோவில் உள்ளது.

    கோவிலின் அடிவாரத்தில் இருந்து அடர்ந்த வனப்பகுதி யில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கொட்டை ஆறு, பாரப்பட்டி ஆறு, குருமலை ஆறு, கிழவிப்பட்டி ஆறு உள்ளிட்ட ஆறுகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் வனப்பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

    இதனால் ஆறுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பஞ்சலிங்க அருவியில் தடுப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    மேலும் நேற்று மாலை முதல் காட்டாற்று வெள்ளம் கோவில் வளாகத்தை சூழ்ந்ததால் கோவிலில் சாமி தரிசனத்திற்கும், பஞ்சலிங்க அருவிக்கு செல்லவும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அறநிலையத்துறை, மற்றும் வனத்துறையினர் தீவிரகண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    தொடர்மழை எதிரொலியாக வால்பாறையில் இன்று 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
    வால்பாறை:

    கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவும் மழை பெய்தது. இன்று காலையும் இந்த மழை நீடித்தது.

    இதனை தொடர்ந்து வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று 2-வது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வால்பாறை சின்கோனா பகுதியில் 78 மில்லி மீட்டரும், சின்ன கல்லாரில் 82 மி.மீட்டரும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட பகுதியில் 42 மி.மீட்டரும், வால்பாறை தாலுகா அலுவலகம் பகுதியில் 44 மி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    கோவை பீளமேடு ஏர்போர்ட் பகுதியில் 3 மில்லி மீட்டரும், பொள்ளாச்சியில் 12 மி. மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மழை காரணமாக சோலையார் அணைக்கு வினாடிக்கு 4136.57 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து சேடல் பாதை வழியாக 2994.21 கன அடி தண்ணீ சேடல் பாதை வழியாக பரம்பிக்குளம் அணைக்கு சென்று கொண்டிருக்கிறது.

    சோலையார் மின் நிலையம் -2 இயக்கப்பட்டு 596.61 கன அடி தண்ணீர் கேரளாவிற்கு திறந்து விடப்படுகிறது.

    அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை தாண்டி 162.72 அடியாக உள்ளது.

    நீலகிரி மாவட்டம் அப்பர் பவானியில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் 100 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர் மட்டம் 92 அடியை எட்டியது.

    மேலும் மின் உற்பத்திக்காக 2 எந்திரங்களை இயக்கியதால் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள பவானி அம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    ஆற்றில் வெள்ள பெருக்கு குறித்து வருவாய் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் நேற்று மழை பெய்தது. இரவில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் குளிர் வாட்டி வதைத்தது. இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் பிறப்பித்துள்ளார்.
    வால்பாறை:

    கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழைபெய்து வருகிறது. கோவையில் லேசான மழை பெய்தது.

    கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த மாதம் தொடர் மழை பெய்தது. இந்த மழையால் தேயிலை தோட்டங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.

    கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள சோலையார் அணை நிரம்பியது. கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அணை முழு கொள்ளளவான 160 அடியை எட்டியது.

    இந்த அணையில் இருந்து மின் உற்பத்திக்காக மின் நிலையம் 2-க்கு வெளியேற்றப்படும் தண்ணீர் கேரள மாநிலத்திற்கு செல்கிறது.

    இதே போல் பிரத்யேக வழியில் பரம்பிக்குளம் அணைக்கும் நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த சில நாட்களாக வால்பாறை பகுதியில் மழை ஓய்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி முதல் கனமழை பெய்ய தொடங்கியது. இரவிலும் மழை பெய்தது. இந்த மழை இன்று காலை வரை நீடித்தது.

    கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் பிறப்பித்துள்ளார். கோவையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    ஊட்டியில் நேற்று மாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    அவர்கள் சாரல் மழையில் குடை பிடித்தவாறு சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். ஊட்டியில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசான சாரல் மழையும் பெய்தது.
    வால்பாறையில் சிங்கோனா எஸ்டேட் பகுதியில் பெண்களை தாக்கி வந்த சிறுத்தைப்புலி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. பின்னர் அது சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது.
    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிங்கோனா எஸ்டேட் மற்றும் பெரியகல்லார் எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தைப்புலி ஒன்று சுற்றித்திரிந்து வந்தது. இந்த சிறுத்தைப்புலி மாலை மற்றும் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தொழிலாளர்களையும் தாக்கி படுகாயப்படுத்தியது.

    கடந்த மே மாதம் 25-ந் தேதி சத்யா(வயது10) என்ற சிறுமியையும், சிங்கோனா எஸ்டேட் பகுதியில் ஜூன் மாதம் 1-ந் தேதி சந்திரமதி (45) என்ற பெண் தொழிலாளியையும் தாக்கியது. ஜூன் 14-ந் தேதி சிங்கோனா எஸ்டேட் பகுதியில் மாதவி (35) என்ற இன்னொரு பெண் தொழிலாளியை கடித்துக் குதறியது. இவர்கள் அனைவரும் பலத்த காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனால் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் மற்றும் உயர் வனத்துறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில் வனத்துறையினர் சிங்கோனா எஸ்டேட் பகுதியில் கூண்டுகள் வைத்தனர். மேலும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். ஆனால் கேமராவில் சிறுத்தைப்புலியின் உருவம் எதுவும் பதிவாகவில்லை. இந்தநிலையில் காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் கைலாசவதி என்ற பெண் தொழிலாளியை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்றது.

    இதனால் அப்பகுதி தொழிலாளர்கள் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களுடன் இணைந்து வால்பாறைநகர் பகுதியில் சாலைமறியல் போராட்டமும் நடத்தினர்.

    இந்தநிலையில் சிங்கோனா எஸ்டேட் முதல்பிரிவு பகுதியில் மாதவி என்ற பெண் தொழிலாளியை சிறுத்தைப்புலி தாக்கிய இடத்திற்கு அருகில் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர். அந்த கூண்டில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சிறுத்தைப் புலி சிக்கியது. இதனால் சிங்கோனா எஸ்டேட் தொழிலாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர். வால்பாறை பகுதியை பொறுத்தவரை கடந்த 10 மாதங்களில் 10 குழந்தைகளை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்றுள்ளது.

    சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கிய தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து தலைமையில் வனத்துறை கால்நடை டாக்டர் மனோகரன் மற்றும் வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கூண்டில் சிக்கிய சிறுத்தைப்புலியை பார்வையிட்டனர். இதை அறிந்த சிங்கோனா, வால்பாறை, காஞ்சமலை எஸ்டேட் பகுதி பொதுமக்கள் சிங்கோனாவில் குவிந்தனர்.

    இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கூண்டில் சிக்கியது 7 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தைப்புலி ஆகும். இப்போது அதிநவீன கூண்டுகள் இருப்பதால் சிறுத்தைப்புலிக்கு மயக்க ஊசி செலுத்தவேண்டிய அவசியமில்லை. எனவே சிறுத்தைப்புலி சிக்கிய கூண்டையே அப்படியே லாரியில் ஏற்றி சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்திருக்கிறோம்” என்றனர். பிடிபட்ட சிறுத்தைப்புலி நேற்று இரவு வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. #tamilnews
    வால்பாறையில் கன மழைக்கு வீடு இடிந்து பெண் காயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். #Rain

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த 7 -ந் தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இன்று 6-வது நாளாக மழை நீடிக்கிறது.

    கனமழை காரணமாக பல இடங்களில் வீடுகள் சேதமடைந்தும், மண்சரிவு ஏற்பட்டும் மரங்கள் விழுந்தும் மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    வால்பாறை காமராஜ்நகர் பகுதியில் உள்ள மல்லிகா என்பவரின் வீடு கனமழையால் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த மல்லிகாவின் சகோதரி உமா மீது ஓடுகள் விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மழை மற்றும் சூறை காற்று காரணமாக தேயிலைத் தோட்ட பகுதிகளிலும் வனப்பகுதிகளிலும் மரங்கள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்ததால் ஒரு சில எஸ்டேட் பகுதி மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகள், பணியாளர்கள் தொடர்ந்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். #Rain

    வால்பாறையில் மகளை கடித்த சிறுத்தையை தாய் அடித்து விரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் அய்யப்பராஜ் (வயது 48). பனியன் கம்பெனி ஊழியர். இவரது மனைவி முத்துமாரி (42). இவர்களுக்கு மணிகண்டன் (14) என்ற மகனும், சத்யா (10) என்ற மகளும் உள்ளனர்.

    முத்துமாரி, தனது மகள் சத்யாவுடன் கோவை மாவட்டம் வால்பாறை பெரிய கல்லார் எஸ்டேட்டில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சத்யா அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று முத்துமாரியும், சத்யாவும் வீட்டின் பின்புறம் இருந்த விறகுகளை எடுத்து வீட்டுக்குள் அடுக்கி வைத்து கொண்டு இருந்தனர். அப்போது புதருக்குள் இருந்து ஓடி வந்த சிறுத்தை கண்இமைக்கும் நேரத்தில் சத்யாவின் கழுத்தை கடித்து இழுத்து சென்றது. இதனை பார்த்த முத்துமாரி விறகு கட்டையால் தாக்கி விரட்டினார்.

    இதில் படுகாயம் அடைந்த சத்யா பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    எனது மகள் சத்யா வால்பாறையில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். அவளுக்கு தற்போது பள்ளி விடுமுறை என்பதால் நான் என்னுடன் வேலைக்கு அழைத்து சென்று வந்தேன்.

    நேற்று முன்தினம் நான் விறகுகளை அடுக்கி வைத்து கொண்டு இருந்தேன். சத்யா எனக்கு உதவி செய்து கொண்டு இருந்தாள். அப்போது திடீரென புதருக்குள் இருந்து பாய்ந்து வந்த சிறுத்தை எனது மகளின் கழுத்தை பாய்ந்து கடித்து புதருக்குள் இழுத்து சென்றது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் எனது மகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனும், ஆக்ரோ‌ஷத்துடனும் கையில் இருந்த விறகு கட்டையால் சிறுத்தையின் தலையில் ஓங்கி அடித்தேன். அப்போது சிறுத்தை வலி தாங்காமல் எனது மகளை போட்டு விட்டு புதருக்குள் சென்று மறைந்து விட்டது.

    நல்லவேலையாக சிறுத்தை என்னை தாக்காமல் சென்று விட்டது. எங்கள் குலதெய்வம் மாரியம்மாள் எனது மகளையும் என்னையும் காப்பாற்றி விட்டாள்.

    தற்போது எனது மகள் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுத்தையின் நகம் மற்றும் பல் ஆழமாக பதிந்துள்ளதால் 9 தையல் போடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×