search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128738"

    • மாடுகளின் உரிமையாளர்களுக்கு ஒரு ஆண்டில் ரூ5.45 லட்சம் மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது.
    • சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் பொது மக்களுக்கும் போக்கு வரத்துக்கும் இடையூறாக உள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் பொது மக்களுக்கும் போக்கு வரத்துக்கும் இடையூறாக உள்ளது. இதனால் அதிகளவில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

    மாநகராட்சியின் மூலமாக அவ்வப்போது மாடுகளின் உரிமையாளர்களுக்கு மாடுகளை சாலைகளில் விடுவதை தவிர்க்க முறையாக எச்சரிக்கை செய்யப்பட்டும் வருகிறது. மேலும் மதுரை மாநகராட்சி மற்றும் புளுகிராஸ் அமைப்பின் மூலமாக தகுதி வாய்ந்த மாடிபிடி வீரர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு சாலைகளில் மாடுகளை விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை சுமார் 364 மாடுகள் பிடிக்கப்பட்டு மொத்தம் ரூ.5 லட்சத்து 45 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் வளர்ப்பவர்கள் தங்களு டைய சொந்த இடத்தில் வைத்து மாடுகளை பராமரிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும் பொது மக்களுக்கும் மற்றும் போக்குவரத்திற்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சியின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • ரூ.15 அதிகமாக பெற்றது நேர்மையற்ற வணிக நடைமுறை

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த வட்டகரையை சேர்ந்தவர் மேரி புஷ்பராணி.

    இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்திடம் கியாஸ் சிலிண்டர் முன் பதிவு செய்திருந்தார். இதற்காக கொடுத்த கட்டண ரசீதில் சிலிண்டரின் விலை ரூ.969 மற்றும் ரூ.15 ஆக மொத்தம் ரூ.984 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால் சிலிண்டரின் விலை, வரிகள் உள்பட சேர்த்து ரூ.969 மட்டுமே. எனவே ரூ.15 அதிகமாக பெற்றது நேர்மையற்ற வணிக நடைமுறை என அவர் நிறுவனத்திடம் கூறினார். மேலும் தன்னிடம் கூடுதலாக வாங்கிய ரூ.15-ஐ திருப்பி தர வேண்டுமென்று கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்திடம் மேரி புஷ்பராணி கேட்டார்.

    அதோடு பல நுகர்வோர் குறைதீர்க்கும் அரசு அமைப்புகளிடமும் இது குறித்து புகார் செய்தார். மேலும் வக்கீல் மூலம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின்னரும் அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மேரி புஷ்பராணி குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர்.

    இதைத் தொடர்ந்து கியாஸ் நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட மேரி புஷ்பராணிக்கு நஷ்ட ஈடு (அபராதம்) ரூ.7500 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் மேரி புஷ்பராணியிடம் கூடுத லாக வசூலிக்கப்பட்ட ரூ.15 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 என மொத்தம் ரூ.10,015-ஐ ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தர விடப்பட்டது.

    • சேவை குறைபாடு புகாரில் நடவடிக்கை
    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள கல்பாலத்தடியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜ். இவர் தனியார் நிதி நிறுவனத்திடம் கார் கடன் பெற்றிருந்தார். இதனை மாதம் தோறும் கட்டி முடித்த நிலையில், கடன் இல்லை என்ற சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட வில்லை.

    இது பற்றி நிதி நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, மேலும் கூடுதல் தொகை கட்ட வேண்டும் என கூறியதால் அதனையும் சவுந்தர்ராஜ் கட்டி உள்ளார்.

    ஆனாலும் நிதி நிறுவனம், அவரது கடனை முடிக்காமல் மேலும் பணம் கேட்டதோடு, சென்னைக்கு நேரடியாக வரவேண்டும் என்றும் கூறி உள்ளது. இதனை தொடர்ந்து குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சவுந்தர்ராஜ் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலை வர் சுரேஷ், உறுப்பி னர் சங்கர் ஆகியோர் விசா ரித்து, நிதி நிறுவன சேவை குறைபாட்டினை சுட்டி க்காட்டி, சவுந்தர்ராஜிக்கு நஷ்ட ஈடு(அபராதம்) ரூ. 1 லட்சம் வழங்க உத்தர விட்டனர். மேலும் அவரி டம் ஏற்கனவே கூடுதலாக வசூ லிக்கப்பட்ட ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்து 724 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ. 5 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ. 3 லட்சத்து 95 ஆயிரத்து 724 -ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். கடன் இல்லை என்ற சான்றிதழையும் உடனே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    • வணிக கட்டிடங்கள் மற்றும் காலிமனை இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • குடிசைப் பகுதிகள், பூங்காக்களில் எந்திரங்கள் மூலம் கொசுக்கள் அழிக்கப்படுகின்றன.

    சென்னை மாநகராட்சியின் துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கையினால் இயங்கும் 229 புகைப்பரப்பும் இயந்திரங்கள், 8 சிறிய புகைப்பரப்பும்

    இயந்திரங்கள் மற்றும் 67 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிசைப் பகுதிகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் ஆகிய பகுதிகளில் புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்கள் மற்றும் கொசுப் புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

    மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த நிலையில் உள்ள கிணறுகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள், வணிகக் கட்டடங்கள் மற்றும் காலிமனைகள் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொசுப்புழு வளரிடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

    சென்னையில் வணிகக் கட்டடங்கள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் 21.12.2022 முதல் 27.12.2022 வரை 6,062 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 48 இடங்களில் கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.1,27,900/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் உபயோகமற்ற டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் முதலியவற்றில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாகும் வாய்ப்புள்ளதால், அவற்றை உடனடியாக அகற்றி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுவதைத் தடுத்திட வேண்டும். மேலும், கிணறு, மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றை கொசுக்கள் மற்றும் கொசுப்புழு புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும்.

    தண்ணீர் நிரப்பிய பூ ஜாடி மற்றும் கீழ்த்தட்டு, குளிர்பதனப் பெட்டியின் கீழ்த்தட்டு, மணிபிளான்ட் போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரமொருமுறை அகற்றி தங்களின் வீடு, மொட்டை மாடிகளில் உள்ள மழைநீர் தேங்கும் பொருட்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். மேலும், நீர் வழித்தடங்கள் மற்றும் மழை நீர் செல்லும் கால்வாய்களின் அருகே குப்பை மற்றும் தேவையற்ற பொருட்களை கொட்டுவதை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விதிகளை மீறி செயல்பட்ட 21 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
    • வெளிநாடுகளில் இருந்த இறக்குமதி செய்யப்படும் பொட்டலப்பொருட்களில் உரிய விபரங்கள் இல்லாமல் விற்பனை செய்பவர்கள் மீதும் சட்ட விதகளின்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகள், எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோகம் செய்யும் கிடங்குகள், பேக்கரி, பால் மற்றும் பால் பொருட்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட், லைட்டர் ஆகியவற்றை விற்பனை செய்யும் நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் மூர்த்தி தலைமையில் எடையளவு ஆய்வாளர்கள் திவாகரன், சாந்தி, தேவேந்திரன், சம்பத் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டர். இந்த ஆய்வானது 59 நிறுவனங்களில் நடைபெற்றது. இதில் 21 நிறுவனங்கள் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் சட்டமுறை எடையளவுகள் விதிகளுக்கு முரண்பாடாக பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த 21 நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மேற்படி நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூர்த்தி கூறியதாவது:- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் மூலம் உரிய உரிமம் பெறாமல் பொருட்களை பொட்டலமிட்டு விற்பனை செய்பவர்கள் மீதும், மின்னணு தராசுகள் உட்பட அனைத்து விதமான எடை அளவைகள் உரிய காலத்தில் மறு முத்திரையிடாமல் பயன்படுத்துபவர்கள் மீதும், அதிகபட்ச சில்லறை விற்பனைக்கு கூடுதலாக விற்பனை செய்பவர்கள் மீதும், எடைக்குறைவாக விற்பனை செய்பவர்கள் மீதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்த இறக்குமதி செய்யப்படும் பொட்டலப்பொருட்களில் உரிய விபரங்கள் இல்லாமல் விற்பனை செய்பவர்கள் மீதும் சட்ட விதகளின்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று விற்பனை நிறுவன உரிமையாளர்களிடம் எச்சரிக்கை விடுத்தார்.


    • மேலக்காவேரி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் மோதியது.
    • அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் அருண்மொழி (வயது 23).

    கும்பகோணம் செக்கடி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்.

    கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி அருண்மொழி தனது நண்பரை பார்ப்ப தற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார்.

    அப்போது மேலக்காவேரி அருகே வந்து கொண்டி ருந்தபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டன், அருண்மொழியின் மோட்டார் சைக்கிளில் மோதி அவரை கீழே தள்ளினார்.

    மேலும் அவரை மணிகண்டன் தாக்கினார்.

    இதுகுறித்து அருண்மொழி கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் நீதித்துறை நடுவர் எண் .1-ல் நடைபெற்று வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், மோட்டார் சைக்கிளால் மோதி அருண்மொழியை கீழே தள்ளி தாக்கிய மணிகண்டனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறினார்.

    • மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்ததுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
    • எரித்த மர்மநபர் யாரென்று கண்டறிய அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகிய காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்த வாலிபருக்கு போலீசார் ரூ.10ஆயிரம் அபராதம் விதித்ததுடன் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் அபராதத்திற்கு ரசீதை கொடுத்து கோர்ட்டில் செலுத்தி வாகனத்தை எடுத்து கொள்ளுமாறு தெரிவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் காங்கயம் பஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு புறக்காவல் நிலையத்தில் போலீசார் இல்லாத நிலையில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரின் பல்சர் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்ததுடன் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இதனிடையே அங்கு வந்த போலீசார் மோட்டார் சைக்கிள் எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன் தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது.

    இதையடுத்து அதனை எரித்த மர்மநபர் யாரென்று கண்டறிய அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகிய காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது காங்கயம் சாம்பவலசு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 32) என்பதும், ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து, மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரத்தில் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்து விட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காங்கயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கால்நடைகளை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்
    • கடலூர் மாநகராட்சியில் இதுவரை 30 மாடுகளும், 180 பன்றிகளும் பிடிக்கப்பட்டுள்ளது

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடு், பன்றி் உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பவர்கள் அவைகளை சாலைகளில் சுற்றித்திரிய விடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதனை மீறி கால்நடைகள் வெளியில் சுற்றினால் மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு பிடித்து, கால்நடைகளை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையில் நகர் நல அலுவலர் (பொறுப்பு) அப்துல் ஜாபர் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் கடந்த சில தினங்களாக ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அப்போது சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் மற்றும் பன்றிகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து வந்தனர்.

    மேலும் அதன் உரிமையாளர்கள் வந்தபோது அவர்களிடம் உரிய அபராதம் பெறப்பட்டு வருங்காலங்களில் சாலைகளில் பன்றிகள் மற்றும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சுற்றி திரிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். கடலூர் மாநகராட்சியில் இதுவரை 30 மாடுகளும், 180 பன்றிகளும் பிடிக்கப்பட்டுள்ளது. இது போனற நடவடிக்கைகளினால் வருங்காலங்களில் மாநகராட்சி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும். பொதுமக்களும் இடையூறு இன்றி சாலையில் செல்லலாம். மாநகராட்சி ஊழியர்கள் தொடர் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தெரிவித்தார்.

    • தேவகோட்டை நகரில் போக்குவரத்து விதிகளை மீறிய தனியார் பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்ட்டது.
    • ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் ஆவணங்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என ஆய்வாளர் கேட்டுக்கொண்டார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக தேவகோட்டை நகருக்கு வந்து செல்கின்றனர். பெரும்பாலான மக்கள் பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் தனியார் பஸ்கள் விதிமுறைகளை மீறுவதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து இன்று காலை நகர் காவல் ஆய்வாளர் சரவணன், போக்குவரத்து சார்பு ஆய்வாளர் அகிலன், சிறப்பு சார்பு ஆய்வாளர் கரிகாலன், மைக்கேல் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது 2 தனியார் விதிகளை மீறிய பஸ்களை நகர் காவல் நிலையம் கொண்டு வந்து அந்த பஸ்களுக்கு ஏர்ஆரன், போக்குவரத்து விதிமீறல், நோ பார்க்கிங் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.

    அப்போது ஆய்வாளர் சரவணன் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என அறிவுறுத்தினார். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் ஆவணங்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் நகருக்குள் அதிவேகத்தில் பஸ்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்

    • பஸ் நிலையங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி திணறி வருகிறது.
    • இருசக்கர வாகனங்களை நிறுத்திய நபர்களை மடக்கி அபராதம் விதித்தனர்.

    தருமபுரி, 

    தருமபுரியில் வெளியூர் பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகளுக்கு தனித்தனியே பஸ் நிலையங்கள் உள்ளது. நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த பஸ் நிலையங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி திணறி வருகிறது.

    மேலும் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க , குளிர்பானங்கள், சூப், டீ, காபி அருந்த வருவோர் தங்களது இருசக்கர வாகனங்களை அங்கேயே நிறுத்துவதால் பேருந்துகளை உரிய இடத்தில் நிறுத்த முடியாமல் பஸ் நிலையத்தின் நடுவிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கும் சூழல் உள்ளது.

    இந்நிலையில் நேற்று தருமபுரி புறநகர் பஸ் நிலையத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்திய நபர்களை மடக்கி அபராதம் விதித்தனர்.

    இதனால் பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் உள்ளே நுழையாமல் அப்படியே திரும்பி சென்றனர். மேலும் பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியிலும் போலீசார் நிறுத்தப்பட்டு இருசக்கர வாகனங்களில் நுழைய முயன்றவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

    இந்த நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள பயணி களும்,போக்குவரத்து ஊழியர்களும் இதை தொடர வேண்டுமென்றும் இதேபோல் பஸ் நிலையத்திற்குள் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை முன்பாக திருநங்கைகள் உள்ளிட ்டோரால் ஏற்படும் அசவுகரியத்தை தவிர்க்கவும் நடவடிக்கை வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • போக்குவரத்து போலீசார் சோதனை
    • பஸ் நிலையத்திற்குள் நிறுத்தபட்டிருந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் போக்குவரத்து விதிமுறை களை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். நேற்று நாகர்கோவில் நகரம் முழுவதும் போலீசார் அபராதம் விதித்தனர்.

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திற்குள்ளும் இருசக்கர வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொது மக்களுக்கு இடைஞ்சலாக வும் இருச்சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதாக தொடர்ந்து வந்த புகாரை தொடர்ந்து போக்கு வரத்து போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது பஸ் நிலை யத்திற்குள் நிறுத்தப்பட்டி ருந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக காலை முதலே போக்கு வரத்து போலீசார் சோதனை மேற் கொண்டனர். நாகர்கோவில் கேப் ரோட்டில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் வாகன ஓட்டிகள் சிலர் அண்ணா பஸ் நிலையத்திற்கு உள்ளாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.

    பஸ் நிலையத்திற்குள் நிறுத்தபட்டிருந்த மோட் டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. இன்றும் 25 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சாலை ஓரங்களிலும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் இருசக்கர வாகனங்களை அதற்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • கலப்படம் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
    • பொருட்களில் கலப்படமாக விற்றது தொடர்பாக கடந்த மாதத்தில் 79 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சத்து 31 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாவட்டத்தில் கலப்படம் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமை–யில் அதிகாரிகள் கடந்த மாதம் சேலம் மாநகர், ஆத்தூர், சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு கலப்படம், உடலுக்கு கேடு தரக்கூடியது என்பது போன்ற உணவுப் பொருட்கள் விற்ப–னைக்கு வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, தரமற்ற உணவுப் பொருள், ஜவ்வரிசி, கலப்பட ஆயில், இதர பொருட்க–ளில் கலப்படமாக விற்றது தொடர்பாக கடந்த மாதத்தில் 79 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சத்து 31 ஆயிரம் அபராதம் விதிக்கப்–பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எனவே, சேலம் மாவட்டத்தில் யாரேனும் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுபோன்ற ஆய்வுகள் கடைகள் மற்றும் நிறுவனங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×