search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128738"

    • சிவகங்கை மாவட்டத்தில் 9 வயது சிறுவனை வீட்டு வேலையில் அமர்த்திய உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    • 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு பணிகளிலும், தயாரிப்பு தொடர்புடைய செய்முறைகளிலும் பணியமர்த்துவது குற்றமாகும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவின் பேரில் இளையான்குடி வட்டம், கோட்டையூர் அஞ்சல், சிறுபாலை கிராமத்தில் குழந்தை தொழிலாளர் இருப்பதாக சைல்டு லைன் அமைப்புக்கு புகார் வந்தது.

    இந்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் ஆகியோர் தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர் பேச்சிமுத்து பிரியதர்ஷினி, இளையான்குடி துணை தாசில்தார் கிருஷ்ணகுமார், சார்பு ஆய்வாளர் பிரபாகரன், சிறுபாலை கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், சைல்டு லைன் உறுப்பினர் கருப்புராஜா ஆகியோர் சிறுபாலை கிராமத்தில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த கிராமத்தில் நாகப்பட்டினம் அருகே உள்ள காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் வீட்டு வேலை மற்றும் கால்நடைகள் பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்தியது கண்டறியப்பட்டது.

    உடனடியாக அந்த சிறுவன் மீட்கப்பட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டான். தற்போது நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் கிராமத்திலுள்ள பள்ளியில் அந்த சிறுவன் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இந்த சிறுவனை பணிக்கு அமர்த்திய வீட்டின் உரிமையாளர் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (ஒழித்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் சிவகங்கை குற்றவியல் நடுவர்-1 நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் அவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    அபராதத்தொகை சிவகங்கை மாவட்ட குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் மறுவாழ்வு நலச்சங்க வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அரசின் பங்குத் தொகையான ரூ.15 ஆயிரம் வரப்பெற்றவுடன், அபராத்தொகை ரூ.20 ஆயிரம் மற்றும் அரசின் பங்குத் தொகை ரூ.15ஆயிரம் சேர்த்து ரூ.35 ஆயிரம் சிறுவனின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு சிறுவனின் நலவாழ்விற்காக பயன்படுத்தப்படும்.

    குழந்தைத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) திருத்தச்சட்டத்தின்படி14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு பணிகளிலும், தயாரிப்பு தொடர்புடைய செய்முறைகளிலும் பணியமர்த்துவது குற்றமாகும்.

    சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் பணிபுரிவது கண்டறியப்பட்டால், Penncil Portal இணையதள முகவரியிலோ, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம், அரசினிப்பட்டி ரோடு, காஞ்சிரங்கால், சிவகங்கை என்ற அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 04575-240521 என்ற தொலைபேசியின் வாயிலாகவோ அல்லது Child Help line 1098 (இலவச தொலைபேசி எண்) என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • 6 கடைகளில் வைத்திருந்த பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 5,400 அபராதம் விதிக்கப்பட்டது.
    • சோதனை செய்ததில் 50 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

    பாபநாசம்:

    பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார மேற்பார்வையாளர்கள் நித்தியானந்தம், நாடிமுத்து மற்றும் சுகாதார பணியாளர்கள் பாபநாசம் கடைவீதி பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வணிக நிறுவனங்களில் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது 6 கடைகளில் வைத்திருந்த பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.5400 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பாபநாசத்தில் இருசக்கர வாகனத்தில் 4 மூட்டைகளுடன் அதிவேகமாக வந்தவரை பேரூராட்சி அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்ததில் 50 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

    • 4 மாதங்களில் ரெயிலில் டிக்கெட் இல்லாமல் ஓசி பயணம் செய்த 18 லட்சத்து 37 ஆயிரம் சிக்கினர்.
    • கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் 180 சதவீதம் அதிக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    மும்பை :

    மத்திய ரெயில்வேயில் பயணிகள் டிக்கெட் இன்றி பயணம் செய்வதை தடுக்க ரெயில் நிலையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. ரெயில் நிலையங்கள் மட்டுமின்றி டிக்கெட் பரிசோதகர்கள் மின்சார ரெயில்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் ரெயிலில் டிக்கெட் இல்லாமல் ஓசி பயணம் செய்த 18 லட்சத்து 37 ஆயிரம் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.126.18 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

    இதில் ஜூலை மாதம் மட்டும் ஓசிப்பயணம் செய்த 3.27 லட்சம் பேரிடம் இருந்து ரூ.20 கோடியே 66 லட்சம் கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதத்தில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 7½ லட்சம் பேர் பிடிபட்டு, அவர்களிடம் இருந்து ரூ.45.06 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு இருந்தது. எனவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் 180 சதவீதம் அதிக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.

    • கோழிக்கழிவுகளை போட்ட நபரை பிடித்து வெள்ளகோவில் நகராட்சி தலைவிடம் ஒப்படைத்தனர்.
    • நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் பொது இடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது என பலமுறை அறிவிக்கப்பட்டு, அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    நேற்று முன்தினம் 2 ந்தேதி செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளகோவில் கோவை ரோட்டில் சோழா ஓட்டல் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வரும் நிர்வாகத்தினர், கோழி கழிவுகளை குமாரவலசு என்ற பகுதியில் போட்டுள்ளனர். இதை கண்ட பொதுமக்கள் கோழிக்கழிவுகளை போட்ட நபரை பிடித்து வெள்ளகோவில் நகராட்சி தலைவி மு. கனியரசியிடம் ஒப்படைத்தனர். இது குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன்குமார் உத்தரவின் பேரில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் எஸ்.சரவணன் கோழிக்கழிவு கொட்டிய சோழா ஓட்டல் நிர்வாகத்திடம் ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களுக்கு ஹோட்டல் திறக்க கூடாது என தெரிவித்துள்ளனர்.

    வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் சாலையோரங்களில் யாரேனும் குப்பைகளை கொட்டினால் திடக்கழிவு மேலாண்மை விதியின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகர மன்ற தலைவி மு. கனியரசி மற்றும் ஆணையாளர் ஆர்.மோகன்குமார் தெரிவித்துள்ளனர்.

    • மதுரையில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.4.70 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
    • எனவே அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    மதுரை

    மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு மின்வா ரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

    "மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்கு டியை சேர்ந்த மின்வாரிய அமலா க்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி னார்கள்.

    அப்போது நெல்லை மின் பகிர்மான வட்ட த்துக்கு உட்பட்ட தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, கடையம், குற்றாலம், செங்கோட்டை ஆகிய பகுதிகளில் 8 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது.

    எனவே மின் வாரி யத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் 4 லட்சத்து ரூ. 43 ஆயிரத்து 318 அபராதம் வசூலிக்கப்பட்டது.

    இது தவிர வாடிக்கையா ளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டு ரூ. 27 ஆயிரம் அபரா தம் செலுத்தினர். எனவே அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்டதாக வாடிக்கையாளர்களிடம் ஒட்டுமொத்தமாக ரூ. 4 லட்சத்து 70 ஆயிரத்து 318 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் எதுவும் தெரிய வந்தால், மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன்: 94430-37508 நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூற ப்பட்டு உள்ளது.

    • நகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை இல்லாத நகராட்சியாக மாற்ற, சேர்மன் விஜய்கண்ணன், கமிஷனர் விஜயகுமார் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
    • கோம்பு பள்ளம் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு போர்டு வைக்கப்பட்டுள்ளது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை இல்லாத நகராட்சியாக மாற்ற, சேர்மன் விஜய்கண்ணன், கமிஷனர் விஜயகுமார் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோம்பு பள்ளம் பகுதியில் உள்ள குடியிருப்பு, ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட வணிக நிறுவனத்தார் குப்பைகளை கோம்பு பள்ளத்தில் கொட்டி வருவதால் அடிக்கடி கழிவுநீர் செல்ல தடை ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி பொக்லின் மூலம் அகற்றப்படும் நிலை ஏற்படுகிறது. இதனால் கோம்பு பள்ளம் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் இங்கு குப்பை கொட்டுவோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ரேசன் கடைகளில் முறைகேடு செய்த விற்பனையாளர்களுக்கு அபராதம் விதித்தது.
    • இதையடுத்து சம்பந்தப்பட்ட ரேசன் கடைகளின் விற்பனையாளர்களுக்கு ரூ.49ஆயிரத்து 50 அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளை ஜூலை மாதத்தில் மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலான பறக்கும்படையினர் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது வேலை நேரத்தில் கடை திறக்காமலும், ரேசன் பொருட்களை முறையாக விநியோகம் செய்யாமலும், இருப்புக் குறைவு மற்றும் இருப்பு கூடுதல் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ரேசன் கடைகளின் விற்பனையாளர்களுக்கு ரூ.49ஆயிரத்து 50 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதே போன்று நியாயவிலைக் கடையை குறித்த நேரத்தில் திறக்காமல் இருப்பது, ரேசன் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யாமல் இருப்பது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் நியாயவிலைக்கடையின் விற்பனையாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.
    • பள்ளி பருவத்திலேயே பலர் வாகன விபத்துகளில் பலியாகும் சம்பவங்களும் நடக்கிறது.

    திருப்பூர்:

    போக்குவரத்து சட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே வாகனங்கள் ஓட்ட வேண்டும். முறையாக பயிற்சி பெற்று ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் விண்ணப்பித்து, டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டும்.

    போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.ஆனால் திருப்பூரில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளில் சிலர் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

    விதிமுறைகளை மீறி மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வருவதால், விபத்துகள் அதிகரித்து வருகின்றன. பள்ளி பருவத்திலேயே பலர் வாகன விபத்துகளில் பலியாகும் சம்பவங்களும் நடக்கிறது. போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்களை ஓட்டுகின்றனர்.

    அதனை தடுக்கும் வகையில் திருப்பூர் போக்குவரத்துத்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி மோட்டார் சைக்கிள் ஓட்டும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு ரூ.25ஆயிரம் அபராதம் , 3 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக திருப்பூரில் உள்ள பள்ளிகள் முன்பு திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்க ப்பட்டுள்ளது.

    அதில்,திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டம் 2019 சட்டப்பிரிவு '199 ஏ'ன் படி உரிய ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இத்துடன் 3 ஆண்டு சிறை தண்டனை நிச்சயம்.

    அதேபோல் வாகனம் 12 மாதங்களுக்கு சாலையில் ஓடுவது ரத்து செய்யப்படும். வாகனத்தை ஓட்டிய சிறுவர்கள் தங்களின் 25 வயது வரை எந்தவித ஓட்டுநர் உரிமமும் பெற இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 4வது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் ஆகிய இரு முக்கிய பணிகள் பெரும்பாலான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • ரோடு மோசமாக உள்ளதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பஸ்களும் இயக்கப்படுவதில்லை. என புகார்கள் வந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அம்ரூத் திட்டத்தில் 4வது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் ஆகிய இரு முக்கிய பணிகள் பெரும்பாலான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அந்த வகையில் திருப்பூர் குமார் நகரிலிருந்து, வளையன்காடு, சாமுண்டிபுரம் வழியாக ஏறத்தாழ 3.5 கி.மீ., தொலைவுக்கு இப்பணிகள் நடக்கிறது. இதில், பாதாள சாக்கடை குழாய் பதித்தல், வீட்டு இணைப்பு வழங்குதல், 4வது குடிநீர் திட்டத்தில் பிரதான குழாய் பதித்தல், சப்ளை குழாய் பதித்தல் ஆகிய நான்கு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    இரண்டு ஆண்டாக இப்பணி ஆமை வேகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சி கூட்டத்தில் பேசிய நான்கு கவுன்சிலர்கள், இவ்வாறு ரோடு மோசமாக உள்ளதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பஸ்களும் இயக்கப்படுவதில்லை. என புகார்கள் வந்தது.

    இதனையடுத்து மேயர் தினேஷ்குமார், கமிஷனர் கிராந்திகுமார் ஆகியோர் ஆய்வு செய்ததில், டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள், அப்பணியை வேறு ஒருவரிடம் கொடுத்ததும், இதனால், பணிகள் முறையாக நடக்காததும் தெரிந்தது. அடுத்த மாத இறுதிக்குள் பணிகள் முழுமையாக முடித்து ஒப்படைக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறின்றி தலா 100 மீ., அளவுக்கு முழுமையாக பணியை முடித்த பின், அடுத்த 100 மீ., அளவுக்கு பணிகளை துவங்க வேண்டும்.

    குறிப்பிட்ட காலத்தில் பணி முடியாவிட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும்,' என, ஒப்பந்ததாரரிடம் மேயர், கமிஷனர் ஆகியோர் எச்சரித்தனர்.

    • பல தரப்பினரும் அவதிக்குள்ளாகின்றனர்.
    • முழுமையாக பணியை முடித்த பின் அடுத்த 100 மீட்டர் அளவுக்கு பணிகளை துவங்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அம்ரூத் திட்டத்தில் 4வது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் ஆகிய இரு முக்கிய பணிகள் பெரும்பாலான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வகையில் குமார் நகரிலிருந்து, வளையன்காடு, சாமுண்டிபுரம் வழியாக ஏறத்தாழ 3.5 கி.மீ., தொலைவுக்கு இப்பணிகள் நடக்கிறது.

    இதில் பாதாள சாக்கடை குழாய் பதித்தல், வீட்டு இணைப்பு வழங்குதல், 4வது குடிநீர் திட்டத்தில் பிரதான குழாய் பதித்தல், சப்ளை குழாய் பதித்தல் ஆகிய 4 பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2 ஆண்டாக இப்பணி ஆமை வேகத்தில் மேற்கொள்ளப்படுகிறது.மாநகராட்சி கூட்டத்தில் பேசிய 4 கவுன்சிலர்கள், இவ்வாறு ரோடு மோசமாக உள்ளதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பஸ்களும் இயக்கப்படுவதில்லை. பல தரப்பினரும் அவதிக்குள்ளாகின்றனர் என்றனர்.

    இதையடுத்து மேயர் தினேஷ்குமார், கமிஷனர் கிராந்திகுமார் ஆகியோர் ஆய்வு செய்ததில், டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் அப்பணியை வேறு ஒருவரிடம் கொடுத்ததும், இதனால் பணிகள் முறையாக நடக்காததும் தெரிந்தது. ஆகஸ்டு மாத இறுதிக்குள் பணிகள் முழுமையாக முடித்து ஒப்படைக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறின்றி தலா 100 மீட்டர் அளவுக்கு முழுமையாக பணியை முடித்த பின் அடுத்த 100 மீட்டர் அளவுக்கு பணிகளை துவங்க வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் பணி முடியாவிட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என ஒப்பந்ததாரரிடம் மேயர், கமிஷனர் ஆகியோர் எச்சரித்தனர்.

    • அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வருகிற 31-ந்தேதியுடன் நிறைவடைகிறது.
    • வரி செலுத்துவோருக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை :

    2021-2022-ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஏப்ரலில் தொடங்கியது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம்.

    அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வருகிற 31-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இது தொடர்பாக, வரி செலுத்துவோருக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

    அதற்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர், ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். ரூ.5 லட்சதத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர், வருகிற டிசம்பர் வரை ரூ.5 ஆயிரம், ஜனவரி, முதல் மார்ச் வரை, ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும்.

    மார்ச் மாதத்திற்கு பின், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. எனவே, அவகாசம் நிறைவடைவதால், கணக்கு தாக்கல் செய்யாதோர், விரைவில் தாக்கல்செய்ய வேண்டும்.

    இதுதொடர்பாக வரி செலுத்துவோருக்கு குறுந்தகவல் மற்றும் இ-மெயில் வாயிலாக விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

    மேற்கண்ட தகவல்களை வருமான வரி அதிகாரிகள் கூறினர்.

    • திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் குப்பைகளை கொட்டினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்
    • திறந்த வெளியில் குப்பை கொட்டுவதை தடுக்க அந்தப் பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்ற நிர்வாகம் கடும் பிரயாசித்தம் செய்து வருகிறது. குப்பைகள் கொட்டுவதற்கு வசதியாக ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. புதிய வாகனங்களும் வாங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.

    இருந்த போதிலும் திறந்த வெளியில், சாலையோரங்களில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டுவது பொதுமக்களின் வாடிக்கையாக இருக்கிறது. இதனை தடுப்பதற்கு பெண் தூய்மை பணியாளர்கள் மூலம் பல இடங்களில் கோலமிட்டும் பார்த்தனர். இருப்பினும் நிரந்தர தீர்வு காண முடியவில்லை.

    இதற்கிடையே பொது இடங்களில் குப்பை கொட்டி செல்பவர்களை அடையாளம் காண்பதிலும் சிரமம் உள்ளது.

    ஆகவே பொது இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் திறந்த வெளியில் குப்பை கொட்டுவதை தடுக்க அந்தப் பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இது பற்றி மாநகராட்சி மேயர் மு அன்பழகனிடம் இன்று கேட்டபோது கூறியதாவது:-

    திருச்சி மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு என்பது மிகவும் அவசியமானது. பொறுப்பற்ற முறையில் சிலர் குப்பைகளை பொது இடங்களில் கொட்டிச் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆகவே இதனை தடுப்பதற்கு அதிகம் குப்பை கொட்டப்படும் இடங்களில் ஒரு மாதத்திற்குள் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படும்.

    தடையை மீறி குப்பை கொட்டுபவர்களுக்கு அவர்கள் கொட்டும் குப்பை மற்றும் கழிவுகளை பொறுத்து ரூ.5000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்படும். திருச்சி மாநகராட்சியில் சக்கரம் பொருத்திய 100 குப்பை தொட்டிகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட இருக்கிறது என்றார்.

    ×