search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128738"

    • மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் கடைக்காரர்களுக்கு அபராதம்
    • ஆட்டோவில் கொண்டுவரப்பட்ட தக்காளி வியாபாரி ஒருவரிடம் அதிரடி சோதனை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் மாநகரப் பகுதியிலும் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். சுகாதார ஆய்வாளர் ராஜா தலைமையிலான குழுவினர் இன்று காலை ராமன் புதூர் புன்னை நகர் சந்திப்பு பகுதியில் ஆட்டோவில் கொண்டுவரப்பட்ட தக்காளி வியாபாரி ஒருவரிடம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பிளாஸ்டிக் கவர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தக்காளி வியாபாரிக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவரிடம் இருந்த பிளாஸ்டிக் கவர்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் தாங்கள் உயர்கல்வி படிப்பதற்காக பணம் செலுத்தியுள்ளனர்.
    • ரூ.1,10,600 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலைச் சார்ந்த பிரதீப் பால் மற்றும் குமரன் ஆகியோர் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள ஒரு கல்வி ஆலோசனை நிறுவனத்தில் வார்ஷா தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் தாங்கள் உயர்கல்வி படிப்பதற்காக பணம் செலுத்தியுள்ளனர்.

    கல்வி ஆலோசனை நிறுவனம் பணத்தை பெற்றுக் கொண்டு விசா மற்றும் படிப்பதற்கான வசதிகளை அவர்களுக்கு செய்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது.

    ஆனால் இருவருக்கும் வார்சாவில் பயில உரிய வசதிகள் செய்து தரப்பட வில்லை. ஆகவே கல்வி நிறுவனத்திடம் தாங்கள் செலுத்திய கட்டணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். கல்வி நிறுவனம் பணத்தை திரும்ப வழங்கவில்லை. இதனால் பாதிப்படைந்தவர்கள் நுகர்வோர்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி யுள்ளனர். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர்கள் நுகர்வோர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர்கள் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் கல்வி ஆலோசனை நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட கட்டணமான ரூ.47,600, நஷ்ட ஈடு ரூ.55,000 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.8,000 ஆக மொத்தம் ரூ.1,10,600 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
    • பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.

    குன்னூர்,

    தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடை செய்துள்ளது.

    அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்து வத்ைத கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பைகள், கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

    நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

    ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, நகராட்சி துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படு த்தப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த கடைகளுக்கு அதிகாரிகள் ரூ.1000 அபராதம் விதித்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    குன்னூர் பகுதியில் குன்னூர் நகராட்சி ஆணையாளர் தலைமையில் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பறிமுதல் செய்து ரூ.1000 அபராதம் விதித்தனர்.

    கூடலூர் நகராட்சி ஆணையாளர் தலைமையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது.

    ஊட்டி, குன்னூர், கூடலூர், குந்தா, பந்தலூர், கோத்தகிரி வட்டத்தில் வருவாய்த்துறையினர் சோதனை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அதனை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.17,500 அபராதம் விதித்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதாக கடைகளிடம் இருந்து ரூ.21,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

    • விழுப்புரம் மாவட்டம் முழுவதும் குற்ற சம்பவங்களை குறைக்கும் பொருட்டு வாகன சோதனையில் ஈடுபட்டனர்
    • போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் விடிய விடிய திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.எப்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் முழுவதும் குற்ற சம்பவங்களை குறைக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் திண்டிவனம் டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன் மேற்பார்வையில் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ் தலைமையில் போலீஸ்காரர்கள் வசந்த ராஜ், அய்யனார், முருகானந்தம், ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அதேபோல விழுப்புரம் மாவட்டம்ரோசனை, ஒலக்கூர், வெளிமேடு பேட்டை, மயிலம், போன்ற பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் விடிய விடிய திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.எப்.ஆர். எஸ். (குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் கருவி)போலீசார் சோ           தனையில் ஈடுபட்டனர் மேலும் முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    • சீர்காழியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் விற்கப்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.
    • விற்பனையில் ஈடுப்பட்ட 4 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 1500 அபராதம் விதித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், டீ கப்புகள் விற்கப்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து நகராட்சி ஆணையர் வாசுதேவன் உத்தரவின்படி, சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை, களபணி உதவியாளர் சீதாலெட்சுமி, இளநிலை உதவியாளர் நல்லதம்பி மற்றும் பரப்புரை மேற்பார்வையாளர்கள் ஆகியோர் சீர்காழி பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது தடை செய்யப்பட்ட நெகிழிப்பை விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்து கடைகள் மற்றும் குடோன்களில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெகிழிப்பைகள், டீ கப்புகள் என சுமார் 400 கிலோ நெகிழிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    விற்பனையில் ஈடுப்பட்ட 4 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 1500 அபராதம் விதித்தனர்.

    ரூபாய் 30 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

    மேலும் இதுபோன்று திடீர் அதிரடி ஆய்வு தொடரும் எனவும் கூறினார்.

    • ஆக்கிரமிப்பில் உள்ள நடைமேடை கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரி–களுக்கு உத்தரவிட்டார்.
    • பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் காந்திஜி சாலை, அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் அதிக போக்குவரத்து நிறைந்த பகுதிகள் ஆகும்.

    இந்நிலையில், நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து காவல் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆணையர் சரவணகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்ேபாது அந்த பகுதிகளில் ஆக்கிரமிப்பில் உள்ள நடைமேடை கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரி–களுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து, அவர் உடன் வந்த அதிகாரிகள் அனைத்து கடைகளையும் அப்புறப்படுத்தினர்.

    மேலும் நடைமேடை கடைகளில் பயன்படுத்திய பிளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் மீண்டும் இந்த பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    ஆய்வின்போது மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மோகனா, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • போக்குவரத்து போலீசார் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.
    • விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளையும் வாகனங்களையும் போலீசார் தங்களது செல்போன் கேமராவில் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் சுமார் 80 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆண்டுதோறும் சராசரியாக 6.51 சதவீதம் வாகனங்கள் அதிகரித்து வருகிறது. அதிக சாலை விபத்துகள் நடைபெறும் பெரு நகரங்களில் சென்னை முதல் 3 இடங்களுக்குள் உள்ளது.

    சென்னையில் சாலை விபத்துக்களை தடுப்பதற்காக, போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சென்னையில் மொத்தம் 312 சிக்னல்கள் உள்ளன. இதில் 186 சிக்னல்களை ரிமோட் மூலம் இயக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிக்னலை இயக்கும் போலீசார் சிக்னல் அருகில் எந்த இடத்தில் நின்றபடியும் ரிமோட் மூலம் சிக்னலை இயக்கலாம்.

    இந்த சிக்னலை இயக்கும் போலீசாருக்கு வேலைப்பளு பெருமளவு குறைந்துள்ளதால் அவர்களுக்கு சிக்னல் பகுதியில் விதிமீறலில் ஈடுபடுவோர்மீது வழக்குப் பதிவு செய்யும் பணியும் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி போக்குவரத்து போலீசார் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல், விதிமுறைகளை மீறி பதிவு எண் பலகை வைத்திருத்தல், சிக்னல் நிறுத்த கோட்டை மீறுதல், தவறான திசையில் செல்லுதல் உள்ளிட்ட 7 வகையான விதிமுறை மீறலுக்கு அவர்கள் அபராதம் விதிக்கிறார்கள்.

    இந்த விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளையும் வாகனங்களையும் போலீசார் தங்களது செல்போன் கேமராவில் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்கிறார்கள். இதில் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் ஆதாரங்களுடன் சிக்கிக் கொள்கிறார்கள்.

    அதன்பிறகு உடனடியாக அபராதம் விதிக்கும் நடைமுறை தொடங்குகிறது. போக்குவரத்து போலீசார் தங்கள் செல்போன்களில் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸ் நிலைய அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு வழக்குபதிவு செய்யப்படுகிறது. பின்னர் சம்பந்தப் பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.

    இந்த புதிய நடைமுறை கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆரம்பத்தில் சில நாட்கள் விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளை செல்போன் மூலம் படம் எடுத்து எச்சரித்து அனுப்பினார்கள். அதன்பி றகு அவர்கள் மீது வழக்குப்ப திவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த 22 நாட்களில் மட்டும் 42 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிக பட்சமாக நிறுத்தக் கோட்டை மீறியதாக மட்டும் 17,043 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதற்காக 13,484 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிக்னலை மீறியதாக 3511 வழக்குகளும், தவறான திசையில் வாகனத்தை ஓட்டி சென்றதாக 7564 வழக்குகளும், விதிமுறையை மீறி பதிவு எண் பலகை வைத்திருந்ததாக 1103 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தினமும் சராசரியாக 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.

    சென்னையில் உள்ள முக்கியமான சிக்னல்களில் ஒன்றரை நிமிடத்தில் இருந்து 2 நிமிடம் வரையும், சாதாரண சிக்னல்களில் அரை நிமிடத்தில் இருந்து ஒரு நிமிடம் வரையிலும் காத்திருப்பு நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த காத்திருப்பு நேரத்தில்தான் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறி அபராதம் கட்டி வருகிறார்கள். 

    • டயர் வாங்கிய 53 நாட்களிலேயே இந்த டயர் வெடித்து சேதமடைந்துள்ளது.
    • ரூ.11,060 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்டம் கல்படியை சேர்ந்த கண்ணன் என்பவர் நாகர்கோவிலில் உள்ள டயர் கடையில் ரூ.1,060 மதிப்புள்ள இரு சக்கர வாகனத்திற்கான டயர் ஒன்று வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய 53 நாட்களிலேயே இந்த டயர் வெடித்து சேதமடைந்துள்ளது.

    தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டி ருக்கும் போது திடீரென டயர் வெடித்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    ஆகவே புதிய டயர் மாற்றித் தருமாறும், ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு தருமாறும் கடைக்காரரை கேட்டுள்ளார். ஆனால் டயர் கடைக்காரர் மறுத்து விட்டார். உடனே வக்கீல் மூலம் நுகர்வோர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான கண்ணன் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் டயர் கடையின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு டயருக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட ரூ.1,060, நஷ்ட ஈடு ரூ.7,500 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 ஆக மொத்தம் ரூ.11,060 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • தவணைகள் முடிந்த பிறகும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட வங்கிக் காசோலைகளை திரும்ப கொடுக்கவில்லை
    • ரூ.15 ஆயிரம் நஷ்ட ஈடு மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரிமாவட்டம் வெத்திலைகோட்டையைச் சார்ந்த கிளிட்டஸ் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கினார்.

    இதற்கான பணத்தை வட்டியும், அசலுமாக கடன் தொகை முழுவதையும் செலுத்தி விட்டார். ஆனால் தவணைகள் முடிந்த பிறகும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட வங்கிக் காசோலைகளை திரும்ப கொடுக்கவில்லை. அதை நிதி நிறுவனத்திடம் கேட்டபோது, அதனை நிதி நிறுவனம் வழங்கவில்லை. உடனடியாக நுகர்வோர் பாதுகாப்பு மையம் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மனஉளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு காசோலைகள், ரூ.15 ஆயிரம் நஷ்ட ஈடு மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

    • சுற்றுலா நிறுவனமும் இந்த 17 பேருக்கு விமான டிக்கெட் புக் செய்து அனுப்பியிருந்தது
    • ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் உத்தர விட்டனர்.

    நாகர்கோவில் :

    முட்டம் பகுதியைச் சேர்ந்த யுஜின் சஜித் என்பவர் நாகர்கோவில் கே.பி ரோட்டிலுள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்திடம் 17 பேர் அடங்கிய ஒரு குழுவாக திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூரு வழியாக புனே செல்வதற்கு பணம் செலுத்தியிருந்தார்.

    சுற்றுலா நிறுவனமும் இந்த 17 பேருக்கு விமான டிக்கெட் புக் செய்து அனுப்பியிருந்தது. திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூரு சென்றடைந்த குழு வினர் நேரமின்மை காரண மாக புனே செல்லும் விமானத்தை பிடிக்க இயல வில்லை. இதனால் மீண்டும் கட்டணம் செலுத்தி புதிதாக பயணச் சீட்டு பெற்று வேறு ஒரு விமானம் மூலம் புனே சென்றடைந்துள்ளனர்.

    பின்பு சுற்றுலா நிறுவ னத்திடம் தாங்கள் பயணம் செய்யாத விமானக் கட்ட ணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். சுற்றுலா நிறுவனம் பணத்தை திரும்ப வழங்கவில்லை. இதனால் பாதிப்படைந்த நுகர்வோர்கள் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளனர்.

    ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர்கள் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு பயணம் செய்யாத விமானக் கட்டணமான ரூ.60 ஆயிரம், நஷ்டஈடு ரூ.17 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ. 5 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.82 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் உத்தர விட்டனர்.

    • விதி மீறல்களால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பலியாகின்றன.
    • பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் பொது மக்கள் சாலைகளில் தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, காரில் செல்கையில் சீட பெல்ட் அணிந்து ஓட்டவேண்டும், போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் உள்ளன. இருந்தும் அவற்றை பின்பற்றாமல் சிலர் செய்யும் விதி மீறல்களால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பலியாகின்றன இதனை தடுக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டபோலிஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில், பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்ட்டர் திருநாவு க்கரசு, மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருசக்கரவா கனங்களில் செல்கையில் ஹெல்மட் அணியாமல் சென்ற 434 பேர் மீதும், குடி போதையில் வாகனங்களில் சென்ற 44 பேர் உள்பட மேலும் சிக்னலை மதிக்காமல் சென்றது. நான்குசக்கர வாகனங்களில் செல்கையில் சீட பெல்ட் அணியாமல் செல்வது, அதிக பாரம் ஏற்றிச்செல்வது உள்பட பல்வேறு விதமான போக்குவரத்து விதிகளை மீறிய1147 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்க ளிடமிருந்து அபராதமாக ரூ.7,72,200 வசுலிக்கப்பட்டது மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்து க்கு பரிந்துரை செய்யப்பட்டு 7 நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.இவ்வாறு போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • மின் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • மதுரை மண்டல மின்வாரிய அமலாக்கப்பிரிவு செயற்பொறி யாளர் பிரபா கரன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மண்ட லத்துக்குட்பட்ட திண்டு க்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள மின்வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள் தேனிமின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது குள்ளபுரம், வைகை டேம், பாளையம், கோட்டூர், கோழையனூர், வீரபாண்டி, காமாட்சிபுரம், வேப்பம்பட்டி, உத்தமபாளையம், அங்கூர்பாளையம், கம்பம், எச்.என்.பட்டி, ஆண்டி ப்பட்டி, மார்கேயன் கோட்டை மற்றும் பெரிய குளம் உள்பட 18 இடங்களில் மின்திருட்டு கண்டறி யப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாடிக்கை யாளர்களிடம் ரூ. 24 லட்சத்து 57 ஆயிரத்து 325 அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர மின் திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட வாடிக்கை யாளர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் அபராதம் பெறப்பட்டது.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ. 26 லட்சத்து 7 ஆயிரத்து 325 அபராதம் பெறப்பட்டுள்ளது.

    மதுரை மண்டலத்தில் எவரேனும் மின் திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தால் மண்டல மின்வாரிய அமலாக்கப்பிரிவு செயற்பொறியாளர் செல்போன் எண் 94430-37508 மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்று

    மதுரை மண்டல மின்வாரிய அமலாக்கப்பிரிவு செயற்பொறி யாளர் பிரபா கரன் தெரிவித்துள்ளார்.

    ×