search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 129136"

    ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    சமூக பாதுகாப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக ரூ.3,985 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் வரும் குடும்பத்திற்கு விரிவான விபத்து- ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையும், நிரந்தர ஊனத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகையும் வழங்கப்படும்.



    விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நலத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.14.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை, கோவை, மதுரையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ரூ.1,031.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.

    சத்துணவு திட்டத்திற்கு ரூ.1772.12 கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.18,273 கோடி, புதிய விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி, நகராட்சிகளில் குடிநீர் வசதிக்காக ரூ.18,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும். ரூ.2000 கோடியில் சென்னையில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் நிதியாண்டில் 3000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    ராமபிரானுக்கு ஏற்பட்ட மூன்று விதமான தோஷங்களான பிரம்மஹத்தி தோஷம், வீரஹத்தி தோஷம், சாயாஹத்தி தோஷத்தை போக்கிய தலம் ராமேஸ்வரம்.
    ராவணனிடம் குணம் தான் கெட்டுப் போய் கீழானதாக இருந்தது. ஆனால் அவனது பலமும், பக்தியும் அனைவரையும் விட உயர்வானதாகவே அமைந்திருந்தது. அந்த அதீத பக்தி அவனிடம் இருந்த காரணத்தினால் தான், ராவணனை வதம் செய்த ராமபிரானுக்கு மூன்று விதமான தோஷங்கள் ஏற்பட்டன. அவையே பிரம்மஹத்தி தோஷம், வீரஹத்தி தோஷம், சாயாஹத்தி தோஷம் என்பன.

    ராவணன் அசுரனாக வாழ்ந்தாலும், பிராமண குலத்தில் தோன்றியவன். ஆகையால் தான் அவனைக் கொன்ற ராமருக்கு, ‘பிரம்மஹத்தி தோஷம்’ பிடித்துக்கொண்டது. மேலும் ராவணன் மிகச் சிறந்த மாவீரராக அறியப்பட்டவன். கார்த்தவீர்யார்ஜூனன், வாலி ஆகிய இருவரையும் தவிர, தன்னுடன் போரிட்ட அனைவரையும் வெற்றி கொண்டவன்.

    ஒரு சிறந்த வீரனைக் கொன்றதால் ராமருக்கு, ‘வீரஹத்தி தோஷம்’ உண்டானது. மூன்றாவதாக, ராவணன் சிறந்த சிவபக்தன். வீணை வாசிப்பதில் வல்லமை படைத்தவன். அதுவும் சாம கானம் பாடுவதற்கு அவனுக்கு நிகராக எவருமில்லை. இதனை ‘சாயை’ என்பார்கள். சாயை என்பது ஒளியை குறிக்கும். ஒளி போன்ற பெருமை வாய்ந்த குணங்களை குறிப்பிடும் ‘சாயை’ பெற்ற ராவணனைக் கொன்றதால், ராமரை ‘சாயாஹத்தி தோஷம்’ பற்றிக்கொண்டது.

    சாயாஹத்தி தோஷம் நீங்க பட்டீஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் ராமபிரான். அதே போல் வீரஹத்தி தோஷம் விலக, வேதாரண்யம் (திருமறைக்காடு) என்ற திருத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தார். விச்ரவஸ் என்ற பிராமண மகரிஷியின் பிள்ளையான ராவணனை சம்ஹாரம் செய்ததால், ராமருக்கு `பிரம்மஹத்தி தோஷம்’ ஏற்பட்டது. இந்த தோஷத்தை அவர் போக்கிக்கொண்ட இடம்தான் ராமேஸ்வரம்.

    மதுரையில் இருந்து 152 கிலோமீட்டர் தூரத்தில் ராமேஸ்வரம் அமைந்து உள்ளது. 
    நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடும் பெட்ரோல், மற்றும் டீசல் விலையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #PetrolDieselHike
    ராமேஸ்வரம்:

    இந்தியாவில் தினமும் பெட்ரோல், மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால், நிர்ணயிக்கப்படும் விலைகள் தினமும் அதிகரித்துக் கொண்டே வருகிறதே தவிர, விலை குறைக்கப்பட்டதாக வரலாறு கொஞ்சமே. இந்த சூழலில், தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 82 ரூபாய் 24 காசுகளாகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை 75 ரூபாய் 19 காசுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வரலாறு காணாத இந்த விலை உயர்வை பலரும் எதிர்த்துவரும் நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் மத்திய அரசை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். டீசல் விலை உயர்வால் தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என கூறும் அவர்கள், விலை குறைக்கப்படும் வரையில், போராட்டம் நடத்த உள்ளதாக தெரிகிறது. #PetrolDieselHike
    நாளை ஆடி அமாவாசை என்பதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ராமேசுவரம் கோவிலில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாவில் ஒன்றான ஆடித்திருக்கல்யாண திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 6-ம் நாள் திரு விழாவில் இரவு 8 மணிக்கு சாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) 7-ம் நாள் திருவிழாவில் சாமி, அம்பாள் காலை 9 மணிக்கு தங்கப் பல்லக்கிலும், மாலை 4.30 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்திலும் புறப்பாடாகி மண்டகப்படிக்கு சென்று, இரவு 8 மணிக்கு கோவிலை வந்தடைகின்றனர். நாளை (சனிக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 8.50 மணிக்கு தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், 11 மணிக்கு தங்கக் கருட வாகனத்தில் ஸ்ரீராமர் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை ராமேசுவரம் கோவிலில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கூட்ட நெரிசலை தடுப்பதற்காக பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரத்தில் பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இரவு 8 மணிக்கு மின் அலங்காரத்தில் வெள்ளி ரதத்தில் சாமி, அம்பாள் எழுந்தருளு கின்றனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் ராமேசுவரத்திற்கு வருகை தந்து அக்னி தீர்த்தக் கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். இதற்காக பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வர இருப்பதால் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர்கள் பிரபு, திலகராணி உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆடி அமாவாசை, திருக்கல்யாண திருவிழா ஏற்பாடுகளை தக்கார் குமரன் சேதுபதி, கோவில் இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் உள்பட கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தில் செப்டிக் டேங்க் கட்ட குழி தோண்டியபோது 50-க்கு மேற்பட்ட பெட்டிகளில் தோட்டாக்கள், துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Rameswaram #BulletsRecover
    ராமேஸ்வரம்:

    ராமேஸ்வரம் அருகில் உள்ள தங்கச்சிமடம் பகுதியில் இருக்கும் அந்தோனியார்புரத்தைச் சேர்ந்தவர் எடிசன். மீனவரான எடிசன் இன்று பிற்பகலில் தனது வீட்டுக்கு செப்டிக் டேங்க் கட்ட குழி தோண்டியுள்ளார். சுமார் 5 அடிகள் தோண்டியதும் அந்த பள்ளத்தில் இருந்து பழைய தோட்டாக்கள் பெட்டி பெட்டியாக கிடைத்துள்ளது. இதுகுறித்து எடிசன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் குழியை மேலும் தோண்டி பழைய தோட்டாக்களைக் கைப்பற்றினர். சுமார் 50-க்கு மேற்பட்ட பெட்டிகளில் எல்.எம்.ஜி., ரக தோட்டாக்கள், ஏ.கே. 47 ரக துப்பாக்கி தோட்டாக்கள், 41 இலகுரக மெஷின்கன்கள், 22 மெஷின்கன்கள் உள்ளிட்ட பலவகையான துப்பாக்கிகள், தடை செய்யப்பட்ட வெடிபொருள்கள் ஆகியவை கிடைத்துள்ளன. 

    விசாரணையில், இந்த வகையான அனைத்து தோட்டாக்களும் 15 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும், மாவட்ட எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே ஆயுதங்கள், தோட்டாக்கள் 15 வருடங்களுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்டு இருக்கலாம். இவற்றை தடயவியல் துறைக்கு அனுப்ப உள்ளோம். பரிசோதனைக்குப் பின்னரே முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
    ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தில் செப்டிக் டேங்க் கட்ட குழி தோண்டியபோது 50-க்கு மேற்பட்ட பெட்டிகளில் தோட்டாக்கள், துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Rameswaram #BulletsRecover
    ராமேஸ்வரம்:

    ராமேஸ்வரம் அருகில் உள்ள தங்கச்சிமடம் பகுதியில் இருக்கும் அந்தோனியார்புரத்தைச் சேர்ந்தவர் எடிசன். மீனவரான எடிசன் இன்று பிற்பகலில் தனது வீட்டுக்கு செப்டிக் டேங்க் கட்ட குழி தோண்டியுள்ளார். சுமார் 5 அடிகள் தோண்டியதும் அந்த பள்ளத்தில் இருந்து பழைய தோட்டாக்கள் பெட்டி பெட்டியாக கிடைத்துள்ளது. இதுகுறித்து எடிசன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் குழியை மேலும் தோண்டி பழைய தோட்டாக்களைக் கைப்பற்றினர். சுமார் 50-க்கு மேற்பட்ட பெட்டிகளில் எல்.எம்.ஜி., ரக தோட்டாக்கள், ஏ.கே. 47 ரக துப்பாக்கி தோட்டாக்கள், 41 இலகுரக மெஷின்கன்கள், 22 மெஷின்கன்கள் உள்ளிட்ட பலவகையான துப்பாக்கிகள், தடை செய்யப்பட்ட வெடிபொருள்கள் ஆகியவை கிடைத்துள்ளன. 

    விசாரணையில், இந்த வகையான அனைத்து தோட்டாக்களும் 15 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும், மாவட்ட எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே ஆயுதங்கள், தோட்டாக்கள் 15 வருடங்களுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்டு இருக்கலாம். இவற்றை தடயவியல் துறைக்கு அனுப்ப உள்ளோம். பரிசோதனைக்குப் பின்னரே முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
    ×