என் மலர்
நீங்கள் தேடியது "அறிவியல் கண்காட்சி"
- ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பல்வேறு படைப்புகளை காட்சிபடுத்தினார்கள்.
- வானவில் மன்ற செயல்பாடுகளும் கண்காட்சியில் இடம்பெற்றன.
சண்முகபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை (பொ) அருள் செல்வி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பல்வேறு படைப்புகளை காட்சிபடுத்தினார்கள்.
வானவில் மன்ற செயல்பாடுகளும் கண்காட்சியில் இடம்பெற்றன. பள்ளி மாணவ-மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை வைத்திருந்தார்கள். உலக வெப்பமயமாதல் காலநிலை மாற்றம் போன்ற தலைப்பில் வானவில் மன்ற கருத்தாளர் ஆல்வின் கருத்துரையாற்றினார்கள்.
பள்ளியில் அனைத்து மாணவ-மாணவிகளும் கண்காட்சியை கண்டு களித்தனர். அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் தங்கபாண்டி மற்றும் கணித ஆசிரியை பர்வீன் ராணி மற்றும் ஆய்வக உதவியாளர் லதாவும் செய்திருந்தார்கள். சிறந்த படைப்புகளுக்கு வானவில் மன்ற கருத்தாளர் ஆல்வின் புத்தக பரிசு வழங்கி மாணவர்களை பாராட்டி ஊக்கமளித்தார்.
- அறிவியல் மனப்பான்மை உருவாக வேண்டும்.
- நிகழ்ச்சி ஏற்பாடுகளை கார்மல் அறிவியல் கழகம் செய்திருந்தது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. பள்ளி தாளாளரும் இல்ல அதிபருமான ஜெரோம் ஆசி வழங்கினார்.
முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெரோம் சேவியர் விழாவில் பங்கேற்று பேசுகையில், அறிவியல் மனப்பான்மை உருவாக வேண்டும். மாணவர்கள் படிக்கும் பருவத்திலேயே படைப்பாற்றல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
தலைமை ஆசிரியர் மரிய பாஸ்டின், உதவி தலைமை ஆசிரியர் ஜேசு நேசம், கூடுதல் உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெரோம், ஜான் உபால்டு, அமல்ராஜ், ஆசிரியர் அலுவலகச் செய லர் பபிலன், அறிவியல் கழகத் தலைவர் பாபு சைமன் ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பினுமோன், டைட்டஸ் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மாணவர்களுடைய அறிவியல் படைப்புகளை வெளிப்படுத்தக்கூடிய கண்காட்சியை ஜெரோம் சேவியர் தொடங்கி வைக்க, திருச்சிலுவைக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் செபஸ்டின் அம்மாள், லெஸ்லி பாத்திமா, ஜெரோம் கல்லூரி பேராசிரியர் ரதி ஆகியோர் மாணவர்களின் படைப்புகளை மதிப்பீடு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கார்மல் அறிவியல் கழகம் செய்திருந்தது.
- ஸ்ரீ வெற்றி விகாஸ் பதின்ம மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
- சுமார் 400 பேர் பெரும் ஆர்வத்தோடு கலந்துக்கொண்டு தங்களின் அறிவாற்றலையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தினர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மோளை யானூர் ஸ்ரீ வெற்றி விகாஸ் பதின்ம மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சி எல்.கே.ஜி. முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சுமார் 400 பேர் பெரும் ஆர்வத்தோடு கலந்துக்கொண்டு தங்களின் அறிவாற்றலையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தினர்.
இக்கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் தாளாளர் நைனான், தீரன் சின்னமலை சேவை அறக்கட்டளையின் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் வேணு, மேலாளர் கனி, பள்ளியின் முதல்வர் கலைவாணி, ஆசிரியர் பெர்னாட்ஷா மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் மாணவர்களின் படைப்புகளை பார்வை யிட்டு மாணவ ர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டு களையும் தெரி வித்து ஊக்கப்படுத்தினர்.
மேலும் அனைத்து மாணவர் களும் கண்காட்சியை பார்வை யிட்டு அறிவியல் சம்பந்தப் பட்ட கருத்துக்களை செய்முறை விளக்கத்தோடு அறிந்துக்கொண்டனர்.
- கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
- விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடை பெற்றது. கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபரும் பள்ளி தாளாளருமான அருட்பணியாளர் ஆன்றனி அல்காந்தர் தலைமை தாங்கினார். பள்ளி தலைமைஆசிரியை பிரசன்னா, பங்குப் பேரவை துணைத் தலைவர் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலை ஆசிரியர் சிலுவை ஆன்றனி வரவேற்றுபேசினார்.
நாகர்கோவில் அண்ணா பல்கலைக்கழக தொழிற் நுட்ப கல்லூரியின் மனித நேயம் மற்றும் அறிவியல் துறை உதவி பேராசிரியர் வின்சென்ட் ஜெரின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார். இயற்பி யல் துறை, வேதியியல் துறை, தாவரவியல் துறை, விலங்கி யல் துறை, வர லாற்றுத் துறை, கணிதத் துறை போன்ற துறைகளிலி ருந்து 150 படைப்புகள் வைக் கப்பட்டிருந்தது.
இதில் மழை முன்னறி விப்பான், ஒளிபடக் கருவி, வெப்பநிலை கண்ட றிதல், தெரு விளக்கு தானி யங்கி உலோகம் கண்டு பிடிக்கும் கருவி, நீராவி எந்திரம் ஆகியவை சிறப்பிடம் பெற்றது. சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர் ஜெய யோகினி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை உயர்நிலை ஆசிரியர் சகாய ஜெசி தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
- செய்யது அம்மாள் கல்லூரியில் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடந்தது.
- இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் சித்தி சமீம் பாத்திமா செய்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அளவிலான பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் அறிவியல் கண்காட்சி கல்லூரி உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. கல்லூரி தாளாளர் டாக்டர். சின்னதுரை அப்துல்லா தலைமை வகித்து கண்காட்சியை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பெரியசாமி வரவேற்று பேசினார்.
இதில் கல்லூரி அறக்கட்டளையைச் சேர்ந்த பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அவர்களின் அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் இடம்பெறச் செய்தனர். 30க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வு படைப்புகள் இதில் இடம் பெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் சித்தி சமீம் பாத்திமா செய்தார்.
- ராமநாதபுரம் செய்யது அம்மாள் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி போட்டி நடந்தது.
- மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறையைச் சேர்ந்த ஒருங்கி ணைப்பாளர் சித்தி சமீம் பாத்திமா நன்றி கூறினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம்செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அளவி லான அறிவியல் கண்காட்சி நிறைவு விழா தாளாளர் டாக்டர் சின்னத்திரை அப்துல்லா தலைமையில் நடந்தது.
இதில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் இடம் பெறச் செய்தனர். முதல்வர் பெரியசாமி வரவேற்றார்.
ராமநாதபுரம் ஜெயம் சாப்ட்டுவேர் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சங்கர் கலந்து கொண்டு பேசினர். இதில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான போட்டியில் நேசனல் அகாடமி மாண்டிசோரி பள்ளியை சேர்ந்த மாணவி பூர்விகா, கீர்த்திகா மற்றும் அஸ்மியா பேகம் முதல் பரிசையும், செய்யது அம்மாள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அசோகமித்ரன், ஆனந்தலட்சுமி 2-வது பரிசையும், மதுரை தனியார் பள்ளியை சேர்ந்த கிஸ்வர் ஜகான் 3-வது பரிசையும் பெற்றனர்.
பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பிற்கான போட்டி யில் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹிதாயத்துல்லா முதல் பரிசையும், ராமநாதபுரம் செய்யது அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நிலோபர் நிசா 2-வது பரிசையும், செய்யது அம்மாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சேர்ந்த அகில் பாகீம், சுபாஷ், முகமத்துல் பாஸி, நேஷனல் அகாடமி மாண்டிசோரி பள்ளி மாணவர் நந்து மகேந்திரன், சிவகங்கை மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சுந்தர வரதன் ஆகியோர் 3-வது பரிசையும் பெற்றனர். நடுவர்களாக வானதி அமலன், நாசர் ஆகியோர் பணியாற்றினர். மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறையைச் சேர்ந்த ஒருங்கி ணைப்பாளர் சித்தி சமீம் பாத்திமா நன்றி கூறினார்.
- மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த வல்லம் கேகேஎஸ் மணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று 13ம்தேதி அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
தாளாளர் ஜனார்த்தனம், பள்ளி முதல்வர் கருணாமூர்த்தி உள்பட மாணவ மாணவிகள் பார்வையிட்டனர்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் ஆக்சலியம் கல்லூரி பயோ கெமிஸ்ட்ரி உதவி பேராசிரியர் டாக்டர் அபிபுல்லா கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு சிறப்பான கண்காட்சி அமைத்திருந்த மாணவ மாணவிகள் தேர்வு செய்தார்.
முன்னதாக காலையில் நடந்த இறை வணக்கக் கூட்டத்தில், அபாகஸ் பிரிவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் பரிசுகள் வழங்கப்பட்டது.
- 100 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
- மாணவர்களின் 150 அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது
நாகர்கோவில்:
நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான 2 நாள் அறிவியல் கண்காட்சி நேற்று தொடங்கியது. பள்ளி தலைமையாசிரியர் மரிய பாஸ்டின் துரை தலைமை தாங்கினார். ஆசிரியர் அலுவலர் செயலாளர் பபிலன் முன்னிலை வகித்தார். கார்மல் அறிவியல் மன்றத்தின் தலைவர் பாபு சைமன்ராஜ் வரவேற்றார். மாணவர்கள் இறைவணக்கம் பாடினர்.
பள்ளி தாளாளர் ஜெரோம் பேசினார். பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி சவேரியார் ஆராய்ச்சி மைய இயக்குனரும் பூச்சியியல் துறை விஞ்ஞானியுமான இன்னாச்சிமுத்து பேசியதாவது:-
மாணவர் பருவம் மகத் தான பருவம். எதனையும் கேள்விகளுக்கு உட்படுத்தி ஆராய்ச்சி செய்து பார்க்கும் பருவமாகும். உலகில் சிறந்த படைப்புகள் அனைத்தும் ஏன்? எதற்கு? எப்படி? போன்ற கேள்விகளை கேட்பதன் மூலமே உருவாகியுள்ளன. எனவே நாம் காணும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் கேள்விகளுக்கு உட்படுத்தி அவற்றிற்கான தீர்வுகளை கண்டறிய முயல வேண்டும்.
அதற்கு இதுபோன்ற அறிவியல் கண்காட்சிகள் உறு துணையாக அமையும். அறிவியல் தொழில் நுட்பங்கள் இன்றி உலகு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகள் தான் மாற்றத்திற்கான அடித்தளமாக உள்ளது. அந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் கண் டு பிடிப்பதற்கு இது போன்ற அறிவியல் கண்காட்சிகள் உந்து சக்தியாக அமையும்.
இந்த கண்டுபிடிப்புகளை பார்க்கும் மாணவர்கள் நாமும் புதியவற்றை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர் டேவிட்ராஜ் எழுதி இசை அமைத்த கார்மல் பள்ளி நூற்றாண்டு விழா இசை சி.டி.யை இன்னாசிமுத்து வெளியிட உடற்கல்வி இயக்குநர் ரமேஷ் பெற்றுக் கொண்டார். அறிவியல் கண்காட்சியின் ஒருங்கி ணைப்பாளர் ஜெகசீலன் நன்றி கூறினார். நிகழ்ச்சி களை ஆசிரியர்கள் பினு மோன், ராஜ்குமார் ஆகி யோர் தொகுத்தனர்.
கண்காட்சியில் 100 பள்ளிகளில் இருந்து 150 அறிவியல் கண்டு பிடிப்புகள் காட்சி படுத்தப்பட்டு உள்ளன. பல்வேறு கல்லூரிகள் சார்பாக அரங்கம் அமைக்கப்பட்டு கல்லூரி மாணவர்களது படைப்புகள் காட்சி படுத்தப்பட்டு இருந்தன. மேலும் கூடங்குளம் அணு மின் நிலையம், மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை நிறுவனம், கேரளாவில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப கழகம், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், வேளாண்மை துறை, மாவட்ட தொழு நோய் விழிப்புணர்வு திட்ட மையம், தமிழ் நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை சார்பாக அரங்கங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
இந்த கண்காட்சி இன் றும் நடைபெற்றது. இதில் பங்கேற்றுள்ள பள்ளி களில் நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப் பிரிவு 3 பிரிவுக ளிலும் முதல் 3 இடங் களை பெறுபவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப் படும். இங்கு வைக்கப்பட்டுள்ள அறிவியல் கண்டு பிடிப்பு களை ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ- மாணவி கள், பொதுமக்கள் பார்த்து சென்றனர்.
இதற் கான ஏற்பாடுகளை கார்மல் பள்ளி நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேசுநேசம் தலைமையில், ஆசிரியர், அலுவலர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
- கேரள மாநிலம் திருச்சூரில் தென்னிந்திய அறிவியல் கண்காட்சி நடக்கிறது
- பலாப்பழம் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கேரளாவின் மலையோர கிராமமான இடுக்கியை சேர்ந்த 2 மாணவிகள் தெரிவித்தனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பலாப்பழம் அதிக அளவில் உற்பத்தியாகும்.
இதில் ஆண்டுக்கு ரூ.600 கோடி அளவுக்கு பலாப்பழங்கள் வீணாகி வருகின்றன. இதனால் பலாப்பழ விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில் பலாப்பழம் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கேரளாவின் மலையோர கிராமமான இடுக்கியை சேர்ந்த 2 மாணவிகள் தெரிவித்தனர். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் தென்னிந்திய அறிவியல் கண்காட்சி நடக்கிறது. இதில் இடுக்கியை சேர்ந்த மாணவிகள் அக்சானா அலியார் மற்றும் மேரி ரோஸ் அபி இருவரும் பலாப்பழத்துடன் சென்று கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியில் அவர்கள் பலாப்பழத்தில் உள்ள மாவு சத்தை தனியாக பிரித்தெடுத்து கரிமமாக்கி பிளாஸ்டிக் உருவாக்கலாம் என்றனர்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்கை நீராவி விசையாழி மூலம் செலுத்துவதன் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கூறி கண்காட்சியை ஆய்வு செய்ய வந்த நிபுணர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
முன்னதாக இந்த மாணவிகள் கேரள அரசு நடத்திய அறிவியல் கண்காட்சியிலும் இதே படைப்புக்காக பரிசு பெற்றனர். தற்போது தென்னிந்திய அறிவியல் கண்காட்சியிலும் இதனை காட்சி படுத்தியதன் மூலம் இனி கேரளாவில் பலாப்பழம் வீணாவது தடுக்கப்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
- சத்தான தினை வகை உணவுகளையும், பாரம்பரிய பானங்களையும் அருந்தி விட்டு கணித கண்காட்சி அறைக்குச் சென்றனர்.
- சத்தான தினை வகை உணவுகளையும், பாரம்பரிய பானங்களையும் அருந்தி விட்டு கணித கண்காட்சி அறைக்குச் சென்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் அறிவியல் மற்றும் கலை கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக பெங்களூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) விலிருந்து அறிவியல் விஞ்ஞானிகளான கிருஷ்ணம் பிரசாத், ரமணா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் முன்னிலையில் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி. திருமால் முருகன், செயலர் சோபா திருமால் முருகன், நிர்வாக இயக்குநர் சீனி. கணபதி ராமன், அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் ஆகியோர் விஞ்ஞானிகளுடன் தமிழ் துறைக்குச் சென்று அனைவரும் குத்து விளக்கு ஏற்றி கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர்.
தமிழ்த் துறையில் ஐவகை நிலங்கள், கைவினைப் பொருட்கள், மூலிகைகள், கீரை வகைகள், தஞ்சை பெரியகோவில், பேசும் ஓவியங்கள் போன்றவற்றை வரிசையாக பார்த்து மாணவர்களிடையே சில வினாக்களை எழுப்பி அவர்களின் திறனை கேட்டார்கள். அடுத்ததாக சத்தான தினை வகை உணவுகளையும், பாரம்பரிய பானங்களையும் அருந்தி விட்டு கணித கண்காட்சி அறைக்குச் சென்றனர்.
பின்பு கணினி, ஆங்கிலம், கலைத்துறை மற்றும் இந்தி, சமூக அறிவியல் என அனைத்து துறைகளையும் பார்வையிட்டனர். கண்காட்சியை தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது.
- முதல் பரிசு பெறும் மாணவர்களை இஸ்ரோவுக்கு அழைத்து செல்ல உள்ளனர்
- ஏராளமானோர் கலந்து கொணடனர்
திருப்பத்தூர்:
ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள யுனிவர்சல் மெட்ரிகுசன் பள்ளி சார்பில் அறிவியல் கண் காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி சேர்மன் டாக்டர் எம்.. சிவப்பிரகாசம் தலைமை வகித்தார்.
தாளாளர் தீபா சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் கிரிநாத் வரவேற்றார். கண்காட்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் (இஸ்ரோ) எச்.போஜ்ராஜ். பி.சோமா. எம்.வி. கண் ணன், டி.கே.சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் தனியார் பள்ளி மாணவர்களின் அனைத்து கண்டுபிடிப் புகள் அடங்கிய 4 அரங்குகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இதில் மங்கள்யான், இன்சாட், உப்பு நீரில் இயங்கும் இரு சக்கர வாகனம், உப்பு நீரில் இயங்கும் வெல்டிங் மெஷின், இருதய துடிப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை உணர்வு பூர்வமாக செய்து இருந்தனர்.
அந்த அரங்குகளை பார்வையிட்டு 4 அரங்குகளில் சிறந்த அரங்கு என்று தேர்ந்தெடுத்து முதல் பரிசு பெறும் அரங்கு மாண வர்களை இஸ்ரோவுக் கும், இரண்டாம் பரிசு பெறும் மாணவர்களை ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் அழைத்து செல்ல உள்ளனர்.
ஒவ்வொரு மாணவர்களுக்குள் அடங்கிய திறமைகளுக்கு ஏற்ப பயிற்சி அளித்து அவர்களை வரும் காலத்தில் சிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரி வித்துள்ளனர்.
இந்த நிகழ்வில் பெற்றோர்கள், பொதுமக்கள் மாணவர்களின் கண்டு பிடிப்பை ஆச்சர்யத்து டன் பார்த்து சென்றனர்.
இந்த நிகழ்வில், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் 'கலந்து கொண்டனர். இதில் பள்ளி துணை முதல்வர் இளங்கோவன் நன்றி கூறினார்.
- 25-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து மா ணவர்கள் இக்கண்கா ட்சியைப் பார்வையிட்டு பயனடைந்தனர்.
- கல்லூரி சார்பாக அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
மத்தூர்,
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் (தன்னாட்சி) கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையமும் ஒருங்கிணைந்து 2 நாட்கள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
அறிவியல் மற்றும் கலைக் கண்காட்சியினை ஸ்ரீ வித்யா மந்திர் கல்விக் குழுமங்களின் நிறுவனர் சந்திரசேகரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு பெரியார் பல்கலைகழக இயற்பியல் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் குமாரதாஸ், தலைவர் ஜலஜா மதன் மோகன், கல்லூரியின் செயலர் அருண்குமார் மற்றும் கல்லூரி முதல்வர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்வாணையர் சுரேஷ் வாழ்த்துரை வழங்கினார்.
கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து மா ணவர்கள் இக்கண்கா ட்சியைப் பார்வையிட்டு பயனடைந்தனர்.
கல்லூரி சார்பாக அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு பள்ளிக்கும் கல்லூரி பேருந்து மூலம் மாணவர்களை அழைத்து வந்து மீண்டும் கண்காட்சி முடிந்தவுடன் பாதுகாப்பாக அப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்விழாவினைக் கல்லூரி கணினி துறைத் தலைவர்கவிதா, கணிதத் துறைத் தலைவர் ராகவன், இயற்பியல் துறைத் தலைவர்அறிவுச்செல்வி, வேதியியல் துறைத் தலைவர்கார்த்திகேயன் மற்றும் அறிவியல் அதிகாரி பார்த்திபன், மூத்த தொழில் நுட்பவியலாளர்உதயகுமார் மற்றும் மூத்த அறிவியல் உதவியாளர் ராமு ஆகியோர் இக்கண்காட்சியினை ஒருங்கிணைந்து நடத்தினர்.