search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்னார்குடி"

    மன்னார்குடி அருகே கொத்தடிமைகளாக இருந்து ஆடுமேய்த்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மன்னார்குடி:

    படிக்கும் வயதில் சிறுவர்-சிறுமிகளை வேலைக்கு சேர்க்க கூடாது என்றும், அவ்வாறு சேர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இருந்த போதிலும் சிறுவர்களை வேலைக்கு சேர்ப்பதும், கொத்தடிமைகளாக வைத்திருப்பதும் தொடர்ந்து வருகிறது.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராமாபுரம் ஊராட்சிக்குட்பட்ட நாகராஜபுரத்தில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த அருள்பாண்டி (வயது 14) கண்ணன் (13) ஆகிய சிறுவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கார்மேகம் என்பவர் நிலத்தில் ஆடுமேய்க்கும் கொத்தடிமைகளாக பணியாற்றுவதாக திருவாரூர் மாவட்ட சைல்டுலைன் அமைப்பிற்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து நாகராஜபுரம் விரைந்த சைல்டுலைன் அமைப்பின் பணியாளர்கள் சி.பிரகலாதன், ஏ.முருகேஷ், காந்திமதி, மரகதமணி ஆகியோர் வயலில் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்களை மீட்டு மன்னார்குடி கோட்டாட்சியர் பத்மாவதி முன்னிலையில் ஆஜர்படுத்தி திருவாரூர் குழந்தைகள் குழுமத்திடம் ஒப்படைத்தனர், மன்னார்குடி அருகே கொத்தடிமைகளாக இருந்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    மன்னார்குடியில் தீ விபத்தில் 2 வீடுகள் எரிந்து சேதம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி ஐவர்சமாது பகுதியை சேர்ந்தவர் அமுதா. கணவரை இழந்த இவர் தன் தாயாருடன் வசித்து வந்தார்.

    நேற்று இரவு உடல்நலக் குறைவு காரணமாக, வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்றிருந்தாராம். அப்போது பூட்டிய வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட சிலர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து, மன்னார் குடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அவரது வீடு முற்றிலும் பற்றி எரிய தொடங்கியது. சுமார் 20 அடிக்கும் மேல் தீ எரிந்தது. இதனால் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர். இதற்குள் கூத்தாநல்லூரில் இருந்து, மற்றொரு தீயணைப்பு வாகனம் விரைந்து வந்தது, சுமார் 2 மணிநேரம், கடும் போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது, வேகமாக பரவிய தீயினால் அருகிலிருந்த ராஜேந்திரன் என்பவரின் வீடும் தீப்பிடித்து கடும் சேதமடைந்தது.

    மன்னார்குடி டி.எஸ்.பி.அசோகன், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர், மேலும் தீவிபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன்னார்குடியில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சுந்தரக்கோட்டை:

    பணியிடங்களை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். அலுவலகங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இணையதளம் மூலம் சான்றிதழ்களை வழங்க வசதியாக கணினி வழங்க வேண்டும். இணையதள பணிகளுக்கு ஆகும் செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    பணிபுரியும் கிராமத்தில் தங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையொட்டி தமிழ்நாடு கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சற்குணம் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் ராஜ்குமார், கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகள் 164 பேர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
    கஜா புயல் காரணமாக பள்ளிகளில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால் திருவாரூரில் உள்ள மன்னார்குடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Mannargudi
    திருவாரூர்:

    கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

    இந்நிலையில், புயல் சீரமைப்பு பணி காரணமாக மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார்.
     
    கஜா புயலால் பாதிக்கப்பட்டு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளதால் விடுமுறை அளிக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். #GajaCyclone #Mannargudi
    மன்னார்குடி அருகே நிவாரண முகாமில் தங்கியிருந்த 85 வயது மூதாட்டி மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm

    மன்னார்குடி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்கள் நிவாரண முகாமில் கடந்த 9 நாட்களாக தங்கி உள்ளனர். இதேபோல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோமாளபேட்டை கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கி உள்ளனர். இந்த முகாமில் அதே ஊரை சேர்ந்த ராஜகோபால் மனைவி பக்கிரிஅம்மாள் (வயது85) என்பவரும் தங்கி இருந்தார்.

    கூலித் தொழிலாளியான இவரது கூரை வீடு புயலால் இடிந்து விட்டதால் 9 நாட்களாக முகாமில் தங்கி இருந்து வந்தார். இந்நிலையில் தொடர் மழை காரணமாக அவர் 2 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பக்கிரி அம்மாள் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென இறந்து விட்டார்.

    இதையடுத்து முகாம் பணியை பார்வையிட்டு வரும் அரசு அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுபற்றி அவரது மகள் மல்லிகா என்பவர் கோட்டூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். #Gajastorm

    சசிகலா எனது சகோதரி அல்ல என்றும் அவரை இனி முன்னாள் சகோதரி என்றே அழைப்பேன் எனவும் மன்னார்குடியில் திவாகரன் கூறினார் #Sasikala #TTVDhinakaran #Dhivakaran
    மன்னார்குடி:

    சசிகலா குடும்பத்தில் அவரது சகோதரர் திவாகரனுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.

    தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கியது குறித்து எங்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசிக்கவில்லை. மேலும் தினகரன் தன்னிச்சையாகவே செயல்படுகிறார் என்று திவாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் "தற்போது திவாகரன் உடல்நலக்குறைவால் உளறிக்கொண்டு இருக்கிறார். இதை யாரும் பெரிது படுத்த வேண்டாம்" என்று தினகரன் கூறினார்.

    இதனால் இருவருக்கும் இடையே மோதல் விஸ்வரூபமெடுத்ததால் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே கடந்த மாதம் 29-ந் தேதி மன்னார்குடியில் திவாகரன் ‘அம்மா அணி’ என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

    மேலும் புதிய கட்சிக்கு தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமிக்க போவதாகவும், சென்னை, மன்னார்குடியில் கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் என்று தெரிவித்தார்.

    திவாகரனின் புது கட்சி அறிவிப்பு குறித்து பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சசிகலா தனது வக்கீல் செந்தூர் பாண்டியன் மூலம் திவாகரனுக்கு ஒரு நோட்டீசை அனுப்பினார்.

    அதில் சசிகலா பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக்கூடாது என்றும் எனது அக்கா, என் உடன்பிறந்த சகோதரி எனும் உரிமையை கோரி சசிகலாவை பற்றி ஊடகங்களில் பேசி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    சசிகலா வக்கீல் மூலம் கொடுத்த நோட்டீசால் திவாகரன் கடும் அதிர்ச்சி அடைந்தார். புதிய கட்சியான அம்மா அணியை தொடர்ந்து நடத்துவதா? அல்லது வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் மன்னார்குடியில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இன்று காலை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நிர்வாகிகள் கூறிய கருத்துக்களை அவர் கேட்டறிந்தார்.

    இதையடுத்து திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    சசிகலா குடும்பத்தில் இருந்து நான் விடுப்பட்டதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். நான் எப்போது இந்த நிலை வரும் என்று எதிர்பார்த்து இருந்தேன்.

    சசிகலாவின் தம்பி என்ற ஒரே காரணத்தால் தான் எனது வீட்டில் 2,3 முறை வருமான வரி சோதனை நடந்தது. சிறைக்கும் சென்று உள்ளேன். நான் ஆன்மீகவாதி, ஆராய்ச்சியாளர். ஆன்மீகவாதியான நான் பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தி உள்ளேன். நான் நடத்தி வரும் கல்லூரியில் 4000 மாணவிகள் படித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் கல்லூரியை விட்டு வெளியே செல்லும் போது நல்ல பண்புகளை பெற்று செல்கிறார்கள்.

    எங்கள் குடும்பத்தை மன்னார்குடி மாபியா கும்பல் என்று சொல்கிறார்கள். என்னால் இதை தாங்கி கொள்ள முடியவில்லை. இனிமேல் அந்த பெயர் இருக்காது. சசிகலா எனது சகோதரி அல்ல. அவரை இனி முன்னாள் சகோதரி என்று அழைப்பேன். திவாகரன் என்ற பெயரை மட்டுமே விரும்புபவன்.

    என்னை பற்றி சசிகலாவிடம் டி.டி.வி.தினகரன் அவதூறு கூறி வருகிறார். சசிகலாவை தூண்டி விட்டு என் மூலம் பழி வாங்க நினைக்கிறார். சசிகலாவை பழிவாங்க தினகரன் துடிக்கிறார். நான் தொடங்கிய அம்மா அணி கட்சி பணி தொடரும். தவறுகளை நான் என்றும் தட்டி கேட்பேன். எங்களது கட்சியில் தீபா வந்தால் சேர்ப்பேன். அதைபோல் வேறு யாரும் வந்தாலும் சேர்த்துக்கொள்வோம்.

    நான் சில உண்மைகளை கூறியதால் தினகரனுக்கு கோபம் வந்தது. வெற்றிவேல் மூலம் தூண்டி விட்டார். வெற்றிவேல் காங்கிரசில் இருந்து வந்தவர்.

    தினகரன் என்னை பற்றி அவதூறாக பேசி வருகிறார். நான் மன நிலை பாதிக்கப்பட்டு பேசுவதாக கூறுகிறார். காவிரி பிரச்சனையில் நான் எவ்வளவு தெளிவாக பேட்டியில் கூறினேன் என்பது எல்லோருக்கும் தெரியும். கெட்ட எண்ணம் காரணமாக தினகரன் என்னை பற்றி தொடர்ந்து பேசி வருகிறார்.

    தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி கொண்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் பாதி சரியில்லாமல் உள்ளது. இதை அவர் திருத்திக் கொள்வார் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sasikala #TTVDhinakaran #Dhivakaran
    மன்னார்குடி அருகே வங்கியில் துப்பாக்கி முனையில் பணம்-நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 58 ஆயிரம், துப்பாக்கி மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர்.
    திருவாரூர்:

    மன்னார்குடி அருகே வங்கியில் துப்பாக்கி முனையில் பணம்-நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 58 ஆயிரம், துப்பாக்கி மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகின்றனர்.

    கொள்ளை நடந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியை படத்தில் காணலாம்.


    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த அசேஷம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 7-ந் தேதி மதியம் காரில் வந்த மர்ம நபர்கள் 5 பேர், துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி ரூ.5 லட்சத்து 58 ஆயிரம் பணம் மற்றும் 10½ பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

    மன்னார்குடி பகுதியில் துப்பாக்கி முனையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து வங்கியின் மேலாளர் கோவிந்தராஜ், மன்னார்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் கொள்ளை நடந்த வங்கிக்கு மன்னார்்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், இன்ஸ்பெக்டர் மணிவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இவர்களை தொடர்ந்து மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூலு, தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோரும் வங்கிக்கு வந்து பார்வையிட்டு கொள்ளை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி தொடர்புடைய கொள்ளையர்களை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.



    இந்த கொள்ளை தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்தனர். முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் ஒரு படையானது தூத்துக்குடிக்கு சென்று கார் டிரைவர் பரசிவம் மகன் முத்துக்குமார்(வயது 27), சுல்தான் மகன் மீரான் மைதீன்(29), மாடசாமி மகன் சுடலைமணி(26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதேபோல் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிவேல் ஆகியோர் மணப்பாறை சென்று மரியசெல்வம்(35) என்பவரை கைது செய்தனர். மரியசெல்வம் மணப்பாறை மெர்க்கன்டைல் வங்கி கடைநிலை ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்தான் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டு உள்ளார். கைதானவர்களிடம் இருந்து ரூ.2½ லட்சம், 2 துப்பாக்கி, 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த தகவலை திருவாரூரில் மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜுலு நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். 
    மன்னார்குடி அருகே அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் ஏற்பட்ட மோதலில் 2 பெண்கள் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழகண்டமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தெற்கு தெருவில் வசித்து வரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 15 பேர், அக்கட்சியில் இருந்து விலகி கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.கவில் இணைந்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் சலசலப்பை உண்டாக்கியது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியை விலகியவர்கள் பற்றி பரபரப்பாக அந்த பகுதியில் பேசப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு தெற்கு தெருவில் சிலர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எப்படி அ.தி.மு.க.வில் சேரலாம்? என்று பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் வந்தனர்.

    இதனால் இரு கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இரு கட்சியினரும் ஒருவரையொருவர் தாக்கினர். இதில் சோடா பாட்டில், உருட்டுக்கட்டை, கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.

    இந்த மோதலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த வேல்முருகன் (30), கருணாகரன் (46), சுதாகர்(33), தினேஷ்குமார்(27), ஸ்டீபன் (23), லதா (30) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதேபோல் அ.தி.மு.க.வை சேர்ந்த முருகதாஸ் (30), இதயா (35) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    காயம் அடைந்த 2 பெண்கள் உள்பட 8 பேரும் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் பற்றி கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அகிலாண்டேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார்.#tamilnews
    ×