search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணினி"

    அசுஸ் நிறுவனம் உலகின் சிறிய லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Asus #Laptop



    தாய்வானை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான அசுஸ் இந்தியாவில் புதிய சென்புக் சீரிஸ் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. சென்புக் 15 (UX533), சென்புக் 14 (UX433) மற்றும் சென்புக் 13 (UX333) என மூன்று புதிய லேப்டாப்கள் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

    ஏரோஸ்பேஸ்-கிரேடு அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய சென்புக் லேப்டாப்கள் MIL-STD-810G தரச்சான்று பெற்றிருக்கின்றன. அசுஸ் அறிமுகம் செய்திருக்கும் மூன்று புதிய லேப்டாப்களும் ராயல் புளு மற்றும் ஐசிக்கிள் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.



    அசுஸ் சென்புக் சென்புக் 15 (UX533), சென்புக் 14 (UX433) மற்றும் சென்புக் 13 (UX333) லேப்டாப்கள் 8 ஆம் தலைமுறை இன்டெல் கோர் சி.பி.யு. மற்றும் NVIDIA GeForce GTX 1050 Max-Q கிராஃபிக்ஸ் கொண்டிருக்கிறது. இவற்றில் 8 அல்லது 16 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது.

    மெமரியை பொருத்தவரை 256 ஜி.பி., 512 ஜி.பி. அல்லது 1000 ஜி.பி. எஸ்.எஸ்.டி. ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இத்துடன் மெல்லிய பெசல்கள் கொண்ட ஃபுல் ஹெச்.டி. நானோ எட்ஜ் டிஸ்ப்ளேக்கள் கொண்டிருக்கின்றன. மூன்று மாடல்களிலும் ஹெச்.டி.எம்.ஐ. போர்ட் மற்றும் மைக்ரோ எஸ்.டி. அல்லது எஸ்.டி. கார்டு ரீடர் வழங்கப்படுகிறது.

    அசுஸ் சென்புக் UX333FA-A4011T மாடல் விலை ரூ.71,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடலான சென்புக் UX533FD-A9094T மாடல் விலை ரூ.1,39,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    மத்திய உளவுத்துறையை சேர்ந்த 10 அமைப்புகள் தனிநபர்களின் கணினி, கைபேசிகளை உளவுபார்க்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. #PILinSC #govtmove #interceptcomputer
    புதுடெல்லி:

    மத்திய உளவு அமைப்புகளான உளவுத்துறை (ஐ.பி.), போதைபொருள் கட்டுப்பாட்டுத்துறை பொருளாதார அமலாக்கத்துறை, மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம், வருவாய் உளவுத்துறை, சி.பி.ஐ., தேசிய விசாரணை முகமை, ‘ரா’ உளவு அமைப்பு, சிக்னல் உளவுத்துறை, டெல்லி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் ஆகிய 10 அமைப்புகளுக்கு கம்ப்யூட்டர்களை கண்காணிக்கவும், தகவல்களை ஆய்வு செய்யவும், தகவல் பரிமாற்றங்களை இடைமறித்து பார்க்கவும், தகவல்களை அளிக்கவும், ஏற்கனவே அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் கண்டுபிடித்து ஆய்வு செய்வது உள்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவிக்கை வெளியிட்டது.

    மத்திய உள்துறை வழங்கி உள்ள இந்த கூடுதல் அதிகாரங்கள் மூலம் நாட்டில் உள்ள எந்த கம்ப்யூட்டரில் வைக்கப்பட்டு உள்ள தகவல்களையும் பறிமுதல் செய்ய முடியும். மேலும் தனிநபர்கள், நிறுவனங்கள் உள்பட அனைத்து பிரிவினரின் அனைத்து கம்ப்யூட்டர்களையும் உளவு பார்க்க முடியும்.

    இது தவிர ஒரு கம்ப்யூட்டரில் இருந்து மற்றொரு கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படும் தகவல்களை மேற்கண்ட 10 அமைப்புகளாலும் எளிதில் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து தனிநபர்களின் கம்ப்யூட்டர்களுக்கு வரும் அனைத்து தகவல்களையும் கண்காணித்து பறிமுதல் செய்ய மற்றும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு உள்ள இந்த அதிகாரங்கள் மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் கம்ப்யூட்டரையும் உளவு அமைப்புகளால் மிக எளிதாக உளவு பார்க்க முடியும். இதுவரை கம்ப்யூட்டர்களில் பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை கண்காணிக்கும் உரிமைகளை மட்டுமே இந்த 10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

    தற்போது வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்கள் மூலம் ஒருவரது தகவல் பரிமாற்றத்தை உளவு அமைப்புகள் கைப்பற்ற முடியும். மேலும் அந்த தகவல்களை உடனுக்குடன் அழிக்கவும் முடியும்.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கை அடிப்படையான தனிமனித உரிமை மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் இன்று பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்தில் அரசியல் எதிரிகள், சிந்தனையாளர்கள் அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் ஆகியோரை கண்டறிந்து பழிவாங்குவதற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் உளவுபார்க்கும் ஆளும்கட்சியின் இந்த சர்வாதிகார நடவடிக்கை நாட்டில் நெருக்கடி நிலையை பிறப்பிப்பதற்கு ஒப்பான ஜனநாயக படுகொலையாகும்.

    எனவே, இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிக்கை சட்டத்துக்கு விரோதமானது, அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என்று இந்த நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த உத்தரவின் அடிப்படையில் தனிநபர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் விசாரணை அமைப்புகள் கிரிமினல் நடவடிக்கைகளை எடுக்க தடை விதிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். #PILinSC #govtmove #interceptcomputer
    ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து இன்றும் சீராக இயங்கும் ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. #Apple
     


    ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோர் இணைந்து முதன் முதலாக ஆப்பிள்-1 கம்ப்யூட்டரை ஏப்ரல் 1976-ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. இதை மையமாக வைத்து அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கம்ப்யூட்டர்கள் உருவாகி வருகின்றன.

    இந்த நிலையில் இன்றும் சீராக இயங்கும் ஆப்பிள்-1 கம்ப்யூட்டர் ஒன்று அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டது. கலிபோர்னியாவில் மவுன்டெயின் வியூவில் உள்ள ஒரு கடையில் இருந்த இந்த கம்ப்யூட்டர் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

    அதை ஆப்பிள் கம்ப்யூட்டர் ஆர்வலர்கள் ரூ.2 கோடியே 75 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தனர். தொடக்கத்தில் இந்த கம்ப்யூட்டர் 666.68 அமெரிக்க டாலர் (ரூ.48 ஆயிரம்) என நிர்ணயம் செய்யப்பட்டது.



    ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக்கும் இணைந்து மொத்தம் 200 ஆப்பிள்-1 கம்ப்யூட்டரை வடிவமைத்தனர். இவற்றில் 175 யூனிட்கள் விற்பனையான நிலையில், தற்போது ஒன்றுதான் ஏலத்தில் விற்பனையாகி இருக்கிறது. 

    இந்த கம்ப்யூட்டர் ஜூன் 2018-இல் மீண்டும் சீராக இயங்கும் நிலைக்கு சரி செய்யப்பட்டது. இந்த பணியினை ஆப்பிள் 1 வல்லுநரான கோரி கோஹென் மேற்கொண்டார். தற்சமயம் ஏலத்தில் விற்பனையாகி இருக்கும் ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் சீராக வேலை செய்வது குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது.

    மற்ற ஆப்பிள் 1 போர்டுகளை போன்று இல்லாமல், ஏலத்தில் விற்பனையான போர்டில் எவ்வித மாறுதல்களும் மேற்கொள்ளப்படவில்லை, மேலும் இதன் ப்ரோடோடைப் பகுதி பயன்படுத்தாமல், சுத்தமாக இருக்கிறது.
    நீண்ட நேரம் டி.வி., கணினியின் நீல ஒளியில் இருப்பது கண்களை எப்படி பாதிக்கிறது? என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    நாம் பெரும்பாலும் கணினியில் பணி செய்கிறோம், டி.வி.யில் பொழுது போக்குகிறோம். அல்லது ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவிடுகிறோம். எல்லாவிதமான எலக்ட்ரானிக் கருவிகளின் திரைக் காட்சிகளும் நீல நிற ஒளியை உமிழ்கின்றன. இருட்டில் இந்த நீல ஒளியை நேரடியாக பார்க்கலாம். நீண்ட நேரம் இந்த நீல ஒளியில் இருப்பது கண்களை எப்படி பாதிக்கிறது? என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் உள்ள டோலிடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியளார்கள் இது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். ஆய்வின் பயனாக, எலக்ட்ரானிக் கருவிகளின் நீல ஒளி கருவிழியை பாதிப்பதோடு, அதன் லென்ஸ் பகுதியை நிறங்களை எதிரொளிக்க முடியாமல் செய்துவிடுகிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.

    பொதுவாக நமது விழித்திரையே ஒளியை உணரும் பகுதியாக உள்ளது. இதுவே காட்சி தகவல்களை மூளைக்கு கடத்தி காட்சியைக் காணவும் துணை செய்கிறது. விழித்திரை செல்கள் தொடர்ந்து ஒளி சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்பினால்தான் நம்மால் காட்சிகளை காண முடியும். விழித்திரை இல்லாமல் அதனுடன் தொடர்புடைய ஏற்பி செல்கள் இணைந்து செயல்படாது.

    எலக்ட்ரானிக் கருவிகளின் நீல ஒளியானது ஏற்பி செல்களை அழியச் செய்வதோடு, சில வேதிப்பொருட்களை சுரந்து விழித்திரையை பாதிப்படையச் செய்கின்றன. இந்த ஏற்பி செல்கள் மறுபடியும் உற்பத்தி ஆகாத செல்கள் என்பதால் ஒருமுறை இழந்தால் பார்வையை இழந்ததற்கு சமம்தான்.

    வழக்கமாக வயதாகும்போது இந்த ஏற்பி செல்கள் மெதுவாக அழிந்து கொண்டே வருவதுதான், முதியவர்களின் பார்வை குறைபாட்டிற்கு காரணமாகும். எலக்ட்ரானிக் கருவிகளின் நீல ஒளியானது வயது மூப்பு செயலைவிட வேகமாக ஏற்பி செல்களை அழித்துவிடுகிறது. ஆனால் இந்த பாதிப்பு உடனடியாக நிகழ்வதில்லை. தொடர்ந்து தொலைக்காட்சி மற்றும் கணினி பார்க்கும் பழக்கமுடையவர்களுக்கே விரைவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    அதிர்ஷ்டவசமாக நீல ஒளியைப்போல வேறு நிறங்களான பச்சை, மஞ்சள், சிவப்பு போன்ற ஒளியலைகள் விழிசெல்களை இவ்வளவு தீவிரமாக பாதிக்கவில்லை என்றும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்த ஆராய்ச்சி கணினி மற்றும் டி.வி. ஒளிகளை வைத்து மேற்கொள்ளப்பட்டதாகும். இருந்தாலும் செல்போன்களும், டேப்லட்களும் இதே வகையில் பாதிப்பை உருவாக்கும் என்றே அவர்கள் கருது கிறார்கள். அது பற்றிய ஆராய்ச்சியைத் தொடரவும் முடிவு செய்துள்ளனர்.

    இந்த பாதிப்புகளில் இருந்து கண்களைக் காத்துக் கொள்ள ஆராய்ச்சியாளர்கள் 2 எளிய வழிகளையும் சொல்கிறார்கள். முதலாவது வழி குறைந்த வெளிச்சத்தில் எலக்ட்ரானிக் திரைகளை பார்க்காமல் இருப்பது. அதாவது பகல் வெளிச்சத்தில் இந்த கருவிகளை பார்ப்பதால் அவ்வளவு தீவிரமாக கண்கள் பாதிப்படையாது என்கிறார்கள். இரண்டாவதாக ‘வைட்டமின்-இ’ உருவாக்கும் ஒருவகை நோய் எதிர்பொருளான ஆல்பா டோகோபெரல் இந்த செல்கள் பாதிப்படைவதை கட்டுப்படுத்தும். எனவே ‘வைட்டமின்-இ’ நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். இவ்விரு வழிகளில் நீலநிற ஒளியில் இருந்து கண்களை காப்பாற்றலாம்! 
    முதன்மை நீதிபதி பாலராஜமாணிக்கம் பெரம்பலூர் கிளை சிறையில் இயங்கும் சட்ட உதவி மையத்திற்கு கணினி உள்ளிட்ட பொருட்களை கிளை சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கினார்.
    பெரம்பலூர்:

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிதியிலிருந்து பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் பெரம்பலூர் கிளை சிறையில் இயங்கும் சட்ட உதவி மையத்திற்கு கணினி, மேஜை, நாற்காலி மற்றும் சட்ட புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.

    இந்த விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பாலராஜமாணிக்கம் தலைமை தாங்கி பேசுகையில், “இந்த பொருட்களை சிறை வாசிகள் நல்லமுறையில் பயன்படுத்தி கொண்டு தங்களது குறைகளை உடனுக்குடன் சட்டப்பணிகள் ஆணைக் குழுவிற்கும், சிறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கும் வகையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் சட்ட புத்தகங்களை படித்து தங்களது திறமைகளை வளர்த்து கொண்டால் குற்றங்கள் குறையும். சிறைவாசிகளின் நலனுக்காகவே மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது.

    எனவே அதனை நல்லமுறையில் சிறைவாசிகள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். இதையடுத்து முதன்மை நீதிபதி பாலராஜமாணிக்கம் சட்ட உதவி மையத்திற்கு கணினி உள்ளிட்ட பொருட்களை கிளை சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) மஸ்ஹரிடம் வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முரளிதரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதி யுமான வினோதா, வக்கீல்கள் சங்க தலைவர் வள்ளுவன்நம்பி, செயலாளர் சுந்தர ராஜன், அட்வகெட் அசோசியேசன் சங்க தலைவர் முகமது இலியாஸ், முன்னாள் அரசு சிறப்பு வக்கீல் பால்ராஜ், வக்கீல் ஜீவானந்தம், கிளை சிறை உதவி கண்காணிப் பாளர் ராமர், சக்திவெல், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கோவையில் ஓட்டல் முன்பு நிறுத்தி இருந்த டாக்டரின் கார் கண்ணாடியை உடைத்து பணம், கையடக்க கணினியை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
    கோவை:

    கோவை காளப்பட்டி அருகே உள்ள ராம்மேனன் நகரை சேர்ந்தவர் மதனகோபால் (வயது 31). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் கோவை விமான நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட காரில் சென்றார்.

    அவர் அந்த ஓட்டல் முன்பு தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். இரவு 10 மணியளவில் சாப்பிட்டுவிட்டு அவர் வெளியே வந்தார். அப்போது, காரின் பின்பக்க கதவு கண்ணாடி உடைக் கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காருக்குள் பார்த்தபோது பின் இருக்கையில் வைத்து இருந்த பையை காணவில்லை.

    அந்த பைக்குள் ரூ.50 ஆயிரம், கையடக்க கணினி, விலை உயர்ந்த செல்போன் ஆகியவை இருந்தது. மர்ம ஆசாமிகள் காரின் கண்ணாடியை உடைத்து அந்த பையை திருடிச்சென்றது தெரியவந்தது. திருடப்பட்ட அந்த பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து மதனகோபால் பீளமேடு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது 2 பேர் அங்கு வந்து காரின் கண்ணாடியை உடைப்பதும், அதில் இருந்த பையை எடுத்துச்செல்வதும் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் மர்ம நபர்களை கண்டறிய தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ×