search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூர்"

    கடலூர் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூரில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்காக கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், முதுநகர் சோனாங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து தேவனாம்பட்டினம் மீனவர்கள், சோனாங்குப்பம் கிராமத்துக்குள் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் நடத்தினர்.

    இதில் சோனாங்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக தேவனாம்பட்டினத்தை சேர்ந்த ஆறுமுகம், கந்தன், ஓசைமணி, சுதாகர், சரண்ராஜ் உள்பட 20 பேர் மீது துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர்.

    இதற்கிடையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த தேவனாம்பட்டினம் தம்பிராஜ் மகன் ஆறுமுகம் ( வயது 41), ஓசைமணி (39), சுதாகர் (46), நாராயணசாமி மகன் ஆறுமுகம் (46), தினகரன் (59), சரண்ராஜ் (30), தனஞ்செழியன் மகன் தென்னரசு (32), ராமு மகன் சுந்தர் (43) ஆகிய 8 பேரை துறைமுகம் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கடலூரில் இன்று கல்வி அலுவலக மாடியில் ஏறி ஆசிரியர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உள்ளது. இது 2 மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இன்று காலை அலுவலகம் திறந்திருந்தது. அப்போது திட்டக்குடியை சேர்ந்த ஆசிரியர் சேரன் (வயது 52) அங்கு வந்தார்.

    அவர் திடீரென அலுவலக மாடிக்கு வேகமாக ஏறினார். 2-வது மாடியில் ஏறி நின்று நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனை பார்த்த அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கடலூர் புதுநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    தற்கொலை மிரட்டல் விடுத்த ஆசிரியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாடியில் இருந்து கீழே இறங்குங்கள் என்று கூறினர். ஆனால் அவர் இறங்கி வரவில்லை. பின்னர் அலுவலக மாடிக்கு சென்ற போலீசார் அந்த ஆசிரியரை மீட்டு மாடியில் இருந்து கீழே அழைத்து வந்தனர். தற்கொலை மிரட்டல் விடுத்தது குறித்து அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் தான் கொண்டு வந்த மனுவை போலீசாரிடம் கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

    நான் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவன். என் பெயர் சேரன். மங்களூர் அரசு பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்தேன். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு நான் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டேன். எனது ஒரு கை செயல்படவில்லை. பின்னர் நான் வேலைக்கு செல்லவில்லை. அவர்களும் என்னை மீண்டும் வேலைக்கு அழைக்கவில்லை.

    இது குறித்து முதன்மை கல்வி அலுவலரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து பணி வழங்குமாறு மனு கொடுத்தேன். அமைச்சர் எம்.சி.சம்பத்திடமும் முறையிட்டேன். இவர்கள் அனைவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். மேலும் சென்னையில் உள்ள அதிகாரிகளிடம் சென்று எனக்கு மீண்டும் பணி வழங்குமாறு கோரிக்கை மனு வழங்கினேன். ஆனால் இதுவரை எனக்கு யாரும் பணி வழங்கவில்லை.

    என் குடும்பம் வறுமையில் வாடுகிறது. என் மனைவி விபத்தில் இறந்து விட்டார். என் மகன் என்ஜினீயரிங் படிப்பை விட்டு விட்டு வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கடன் அதிகரித்து அதனை திருப்பி கொடுக்க முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். என் மரணத்திற்கு பிறகாவது என்னை போல் பாதிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை அலைக்கழிக்காமல் அவர்களுக்கு தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    பின்னர் சேரனை புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் கடலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
    கடலூரில் தந்தையின் சதாபிஷேக விழாவில் நாகபாம்பை வைத்து பூஜை செய்த புரோகிதரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான பாம்பாட்டியை தேடிவருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 45). இவர் கடலூரில் உள்ள ஒரு கோவிலில் புரோகிதராக உள்ளார்.

    இவரது தந்தைக்கு 80 வயது பூர்த்தியானதை தொடர்ந்து அவருக்கு சிறப்பாக சதாபிஷேக விழா நடத்த முடிவு செய்தார்.

    நாகபாம்பை வைத்து பூஜை செய்தால் பெற்றோரின் ஆயுள் கூடும் என கருதி அதை வைத்து பூஜை நடத்த திட்டமிட்டார்.

    தந்தையின் சதாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும்படி உறவினர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் விழா நடந்தது. பாம்பாட்டி பழனி ஒரு நாக பாம்பை கொண்டு வந்தார். சுந்தரேசனின் பெற்றோர் முன்பு நாகபாம்பை வைத்து பூஜை செய்யப்பட்டது.

    விழாவுக்கு வந்திருந்த உறவினர்கள் இந்த பூஜையை செல்போன் மூலம் படம் எடுத்தனர். மேலும் செல்பியும் எடுத்துக் கொண்டனர். சதாபிஷேகத்தில் எடுக்கப்பட்ட படங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவியது.

    இது கடலூர் மாவட்ட வனத்துறையினர் பார்வைக்கும் சென்றது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    அதன்பேரில் வனவர் அப்துல் மற்றும் வனத்துறையினர் நாகபாம்பை வைத்து பூஜை செய்தது தொடர்பாக புரோகிதர் சுந்தரேசனிடம் விசாரணை நடத்தினர்.

    வன விலங்கை துன்புறுத்தும் வகையில் அதை பயன்படுத்தியதாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து புரோகிதர் சுந்தரேசனை கைது செய்தனர்.

    பின்னர் அவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நாகபாம்பை பூஜைக்கு கொடுத்த பாம்பாட்டி பழனி தலைமறைவாகி விட்டார். அவரை வனத்துறையினர் தேடிவருகின்றனர்.

    மேலும் சதாபிஷேக விழாவில் கலந்து கொண்டவர்களிடமும் விசாரணை நடத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கல்லூரி மாணவியை கடத்தியதாக வாலிபர் மீது அப்பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் மன்னார்குடி தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் நந்தினி(வயது 18). இவர் சிதம்பரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று மாலை நந்தினி கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து நந்தினியின் தந்தை சண்முகம் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் நந்தினியை சிதம்பரம் அம்பலவாணன் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது தந்தை சங்கர், தாய் வள்ளி ஆகிய 3 பேரும் கடத்தி சென்றிருக்கலாம் என கூறியுள்ளார்.

    புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    கடலூரில் மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் பகுதியை சேர்ந்த 17-வயது மாணவி பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதியுள்ளார். இந்த நிலையில் திடீரென அவரை காணவில்லை. இது குறித்து அவரது தந்தை கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

    இதில் பண்ருட்டி தாலுகா கீழ்கவரப்பட்டு சலங்கைநகரை சேர்ந்த ஜெயமூர்த்தி மகன் ஜெயராஜ் (வயது 23) அந்த மாணவியை கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. 

    இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று ஜெயராஜும், மாணவியும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவர்களை கடலூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவியை கடத்தி சென்ற ஜெயராஜ் ஓசூர், கோவை ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ஜெயராஜை போலீசார் கைது செய்தனர். 
    தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கடலூரில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். #PMK #Ramadoss
    கடலூர்:

    பா.ம.க. நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று கடலூர் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக தேர்தல் முடிந்து விட்டது. ஆனாலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது. அதற்காக மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தை வஞ்சிக்கிறது.

    உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய நீர் வள செயலாளரை கைது செய்ய நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்தால் அதை வரவேற்போம்.

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் ஒரே தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்தான். அவர்தான் தமிழகத்தை ஆளப்போகிறார். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMK #Ramadoss
    ×