என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 132013
நீங்கள் தேடியது "slug 132013"
குடியரசு தின விழாவில் 90 பயனாளிகளுக்கு ரூ.9¾ லட்சம் மதிப்பிலான நல உதவிகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார். #RepublicDay
விருதுநகர்:
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில், 70-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் சிவஞானம் கொடியேற்றினார்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனுடன் திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கலெக்டர் சிவஞானம் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். விருதுநகர் தனிப்பிரிவு ஏட்டு கண்ணன் உள்பட 114 காவலர்களுக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் சிவஞானம் வழங்கினார். 70 காவலர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதே போல் சிறப்பாக பணியாற்றிய 102 அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து 90 பயனாளிகளுக்கு ரூ.9¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.
முன்னதாக விழாவுக்கு வந்த கலெக்டரை, மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன் ஆகியோர் வரவேற்றனர்.
விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
தேசபந்து திடலில் உள்ள தியாகிகள் நினைவுத்தூணில் கொடியேற்றி குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விருதுநகர் மாவட்ட கோர்ட்டில் கூடுதல் நீதிபதி பரிமளா கொடியேற்றினார். இதில் நீதிபதிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளிலும் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டன. #tamilnews

பெரம்பலூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் முகாமில் பயனாளிகளுக்கு கலெக்டர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
வரதராஜன்பேட்டை:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அல்லிநகரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி முன்னிலை வகித்தார். ஆலத்தூர் வட்டாட்சியர் ஷாஜகான் வரவேற்றார். முகாமில் மாவட்ட கலெக்டர் சாந்தா, அல்லிநகரம் பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களை அழைத்து விபரங்களை கேட் டறிந்து பொது மக்களிடம் எடுத்துக்கூறினார். தொடர்ந்து இம்முகாமில் 286 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 74 லட்சத்து 52 ஆயிரத்து 995 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தா வழங்கினார்.
இந்த முகாமில் கோட்டாட்சியர் விஷ்வநாதன், வட்ட வழங்கல் அலுவலர் பழனி செல்வன், வருவாய் ஆய்வாளர் பெரியண்ணன், சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் கிருஷ்ணராஜ், தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, தாட்கோ உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தனித்துணை கலெக்டர் மனோகரன் நன்றி கூறினார்.

குன்னம் தாலுகாவில் நடந்த சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழாவில் 2 ஆயிரத்து 79 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியில் நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வழங்கினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் குன்னம் தாலுகா பரவாய் கிழக்கு கிராமத்தில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா நடந்தது.
விழாவில் வருவாய்த் துறை மூலம் ஆயிரத்து 931 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 850 மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்களும், விபத்து நிவாரண உதவித்தொகை, முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 96 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 24 லட்சத்து 66 ஆயிரத்து 500 மதிப்பில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு, முதல்-அமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் திறந்தவெளி கிணறு அமைத்தல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் என பல்வேறு துறைகளின் சார்பில் 2 ஆயிரத்து 79 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.3 கோடியே 4 லட்சத்து 44 ஆயிரத்து 811 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் சாந்தா வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், சமூகப்பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் மனோகரன், தாசில்தார்கள் தமிழரசன், மனோன்மணி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கனகசபை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் இந்திரா உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

×

X