search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்.எஸ்.எஸ்"

    ஒடிசாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் அனைத்து அமைப்புகளையும் அடக்கியாள ஆர்எஸ்எஸ் நினைக்கிறது என குற்றம்சாட்டினார். #RahulGandhi
    புவனேஷ்வர்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒடிசா மாநிலத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று சென்றார். புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    நாடு முழுவதும் தான் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நோக்கில் அனைத்து அமைப்புகளையும் அடக்கியாள நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

    பா.ஜ.க.வின் தாய் கழகமாக ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வருகிறது. கல்வி, நீதித்துறை என அனைத்திலும் அவர்கள் ஊடுருவி உள்ளனர். நடுத்தர மக்கள் கோடிக்கணக்கில் பணம் செலுத்தியும் தரமான கல்வி கிடைப்பதில்லை. மருத்துவ துறையிலும் இதே நிலை தான். இவை அனைத்தும் மாற்றப்பட வேண்டும்.



    கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் மாற்றம் வேண்டும். இந்தியாவில் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் வேலைவாய்ப்பு பெரிய சவாலாக உள்ளது. நாங்கள் மக்களின் தேவைகளை கேட்கிறோம்.

    மோடி என்னை வசைபாடும் போது எல்லாம் அவர் என்னை கட்டியணைத்துக் கொள்வதை போல் நினைத்துக் கொள்கிறேன். மோடிக்கு என்னிடமும், எனக்கு மோடியிடமும் பல கருத்து வேறுபாடுகள் உள்ளது. அவரை எதிர்க்கிறேன். அவர் பிரதமராக இல்லாமல் இருந்திருந்தால் அவரை நான் வெறுக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். #RahulGandhi
    புதிய இந்தியாவின் ஒரே தொண்டு நிறுவனமாக ஆர்.எஸ்.எஸ் மட்டுமே செயல்பட்டு வருகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #RahulGandhi #RSS
    புதுடெல்லி:

    கடந்த ஜனவரி 1 அன்று பீமா கோரேகானில் நடந்த வன்முறையுடன் தொடர்புடையதாக 9 செயற்பாட்டாளர்களின் வீடுகளில் புனே போலீசார் சோதனை நடத்தி 5 பேரை கைது செய்தனர். மேலும், டெல்லி, பரீதாபாத், கோவா, ராஞ்சி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் வீட்டில் ரெய்டுகள் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட கைது நடவடிக்கைகளுக்கு பல தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், புதிய இந்தியாவின் ஒரே தொண்டு நிறுவனமாக ஆர்.எஸ்.எஸ் மட்டுமே செயல்பட்டு வருகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிடுகையில், இந்தியாவில் ஒரே ஒரு தொண்டு நிறுவனம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. மற்ற அனைத்து தொண்டு நிறுவனங்களும் மூடப்பட்டு விட்டன. அரசை எதிர்த்து பேசினால் சிறை தண்டனை அளிக்கப்படுகிறது. புதிய இந்தியாவுக்கு நல்வரவு என பதிவிட்டுள்ளார். #RahulGandhi #RSS
    ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு ராகுல் காந்தி மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் தெரிவித்தன. #RSS #FutureBharat #RahulGandhi
    புதுடெல்லி:

    டெல்லி விஞ்ஞான் பவனில், ஆர்.எஸ்.எஸ். சார்பில், ‘பாரதத்தின் எதிர்காலம்: ஒரு ஆர்.எஸ்.எஸ். பார்வை’ என்ற தலைப்பில் அடுத்த மாதம் 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசுவதுடன், முக்கிய பிரமுகர்களுடன் உரையாடுகிறார்.

    இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுபவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர் அருண் குமார் நேற்று தெரிவித்தார். அவரிடம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைக்கப்படுவாரா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “பல்வேறு அரசியல் கட்சிகள், சித்தாந்தங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்படுவார்கள்” என்று கூறினார். ராகுல் காந்தி மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஜூன் மாதம், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  #RSS #FutureBharat #RahulGandhi
    ×