search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எந்திரங்கள்"

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூலமாக 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை வடிவமைத்த சையது சுஜா என்ற இணைய நிபுணர் தெரிவித்துள்ளார்.
    லண்டன்:

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமர் ஆனார். இந்நிலையில், அந்த தேர்தலில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை வடிவமைத்த சையது சுஜா என்ற இணைய நிபுணர் தெரிவித்துள்ளார்.

    அவர் லண்டனில் இருந்து ‘ஸ்கைப்’ மூலமாக இந்திய பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    நான் 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை, பொதுத்துறை நிறுவனமான இந்திய மின்னணு கழகத்தில் பணியாற்றினேன். 2014-ம் ஆண்டு தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்களை வடிவமைத்த குழுவில் நானும் இருந்தேன். அப்போது, அந்த எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியுமா? என்றும், எப்படி செய்யலாம்? என்றும் கண்டறியுமாறு எங்களை மின்னணு கழகம் கேட்டுக்கொண்டது. அதன்படி, அந்த தேர்தலில் தில்லுமுல்லு நடந்தது.

    இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட பா.ஜனதா மூத்த தலைவர் கோபிநாத் முண்டே, சாலை விபத்து என்ற பெயரில் கொல்லப்பட்டார். அதை ‘கொலை’ என்று வழக்கு பதிய முயன்ற என்.ஐ.ஏ. அதிகாரியும் கொல்லப்பட்டார். என் குழுவினரும் கொல்லப்பட்டதால், நான் பயந்துபோய் நாட்டை விட்டு வெளியேறி விட்டேன்.

    பா.ஜனதா மட்டுமின்றி, காங்கிரஸ், சமாஜ்வாடி போன்ற கட்சிகளும் தில்லுமுல்லுவில் ஈடுபட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, தேர்தல் தில்லுமுல்லு விவகாரத்தை தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

    அதே சமயத்தில், ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது என்று தேர்தல் கமிஷன் உறுதிபட தெரிவித்துள்ளது.
    கிருஷ்ணகிரியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் நேற்று தொடங்கியது.
    கிருஷ்ணகிரி:

    இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன அறையில் வைக்கப்பட்டுள்ளது. அதை பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்களை கொண்டு முதல் நிலை சரிபார்ப்பு பணி நேற்று தொடங்கியது.

    கிருஷ்ணகிரியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, உதவி கலெக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் இந்த முதல் நிலை சரிபார்ப்பு பணி தொடங்கியது. இந்த சரிபார்ப்பு பணியின் போது அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் அறை திறக்கப்பட்டு பணிகள் தொடங்கியது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு என ஒதுக்கப்பட்ட அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் பொறியாளர்களை கொண்டு சரிபார்க்கப்படும் என தெரிவித்தனர். இந்த பணியின் போது அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
    தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய பயன்படும் நவீன வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருவில் இருந்து சிவகங்கைக்கு கொண்டுவரப்பட்டன.
    சிவகங்கை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின்போது வாக்களிக்கும் வாக்காளர்கள் தாங்கள் எந்த சின்னத்திற்கு வாக்களித்தார்களோ, அந்த சின்னத்தில் தான் வாக்குகள் பதிவாகி உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் புதிதாக வாக்குகள் சரிபார்க்கும் நவீன எந்திரம் பொருத்தப்படவுள்ளது.

    இந்த எந்திரம் தேர்தலின்போது வாக்குப்பதிவு கட்டுபாடு எந்திரத்துடன் சேர்த்து இணைக்கப்படும். அப்போது நாம் வாக்களித்தவுடன் எந்த சின்னத்தில் அது பதிவாகியுள்ளது என்ற விவரம் திரையில் தெரிந்து, மறையும். இதை வாக்களித்தவர்கள் மட்டுமே பார்த்து உறுதி செய்துகொள்ள முடியும்.

    அதற்காக பெங்களூருவில் இருந்து 1,800 எந்திரங்கள் பாதுகாப்பாக லாரிகள் மூலம் சிவகங்கை கொண்டுவரப்பட்டன. பறக்கும் படை தாசில்தார் கந்தசாமி, தேர்தல் பிரிவு தாசில்தார் ரமேஷ் ஆகியோர் தலைமையில் சென்ற அதிகாரிகள் இதை பாதுகாப்பாக கொண்டு வந்தனர்.

    இந்த எந்திரங்கள் அனைத்தையும், சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், மாவட்ட வினியோக அதிகாரி ராமபிரதீபன், சிவகங்கை தாசில்தார் ராஜா, தாலுகா வினியோக அதிகாரி கண்ணன் ஆகியோர் பாதுகாப்பாக அறையில் வைத்தனர்.

    இந்த அறை முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்தலின் போது பயன்படுத்த கடந்த மாதம் புதிதாக 3 ஆயிரத்து 310 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 1,800 கட்டுப்பாட்டு எந்திரங்களும் பெங்களூருவில் இருந்து கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
    அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக சிவகங்கை தொகுதியில் பயன்படுத்த புதிய வாக்கு எந்திரங்கள் சிவகங்கை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
    சிவகங்கை:

    அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக சிவகங்கை தொகுதியில் பயன்படுத்த புதிய வாக்கு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவகங்கை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    அடுத்த ஆண்டு (2019) இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தயாரிப்பு பணிகளை தேர்தல் ஆணையம் தற்போது விரைவாக செய்து வருகிறது. இதில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு மற்றும் எண்ணிக்கையின் போது புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்தில் புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை(தனி), சிவகங்கை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தலின் போது பயன்படுத்துவதற்காக 3 ஆயிரத்து 310 வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,800 கட்டுப்பாட்டு எந்திரங்கள் தேர்தல் பொறுப்பு அலுவலர் கண்ணபிரான், தேர்தல் பிரிவு தாசில்தார் ரமேஷ் மற்றும் பறக்கம் படை தாசில்தார் பாலகுரு ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூருவில் இருந்து சிவகங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் லதா தலைமையில் அதிகாரிகள் இந்த வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைத்தனர். வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை சுற்றிலும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
    ×