search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூ"

    உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது ‘பூ’ என பெயரிடப்பட்ட பொமரேனியன் வகையை சேர்ந்த நாய் இதயம் வெடித்து உயிரிழந்தது. #WorldCutestDog #Boo
    வாஷிங்டன்:

    உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது ‘பூ’ என பெயரிடப்பட்ட பொமரேனியன் வகையை சேர்ந்த நாய். அமெரிக்காவை சேர்ந்த இந்த நாய் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம் வாய்ந்தது.



    இந்த ‘பூ’ வின் பெயரில் ‘பேஸ்புக்’ ‘இன்ஸ்ட்ராகிராம்’ போன்றவற்றில் தொடங்கப்பட்ட பக்கங்களை லட்சக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள். இந்த சமூக வலைத்தள பக்கங்களில் ‘பூ’ வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தினசரி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு அந்த நாய் இறந்தது.

    12 வயதான ‘பூ’ தூங்கிக்கொண்டிருந்த போது இதயம் வெடித்து உயிரிழந்ததாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். ‘பூ’ வின் நெருங்கிய நண்பனாக விளங்கி வந்த புட்டி என்கிற நாய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்தது குறிப்பிடத்தக்கது.  #WorldCutestDog #Boo
    ஆண்டு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் மலர்கள் தற்போது பூத்து குலுங்குறது. அந்த அதிசய மலர்களை காண, சுற்றுப்புற கிராமங்களை சேந்த மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். #BrahmaKamalamFlower

    வாழப்பாடி:

    எபிபைலம் ஆக்ஸிபெட்டலம் எனும் தாவரவியல் பெயர் கொண்ட கள்ளி வகையை சேர்ந்த தாவரம், ‘பிரம்ம கமலம்’ என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவை தாயகமாக கொண்ட இத்தாவரம், இந்தியாவிலும் பரவலாக காணப்படுகிறது. ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வெண்ணிறத்தில் நள்ளிரவு நேரத்தில் பூக்கும் அதிசய தன்மையும் தகவமைப்பு கொண்ட இத்தாவரத்தின் பூக்களுக்குள், பிரம்மா கடவுள் உறங்குவதைப்போல தோற்றம் காணப்படுவதால் பிரம்ம கமலம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    ஆன்மீக உணர்வை ஏற்படுத்தும் தோற்றத்திலும், மருத்துவ குணத்தையும் கொண்டதால், பிரம்ம கமலம் மலர்கள் பூக்கள் வரிசையில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

    இலையை வெட்டி வைத்தாலே வளரும் வித்தியாசமான தகவமைப்பு பெற்றுள்ள கொண்டுள்ள பிரம்ம கமலம் மலர்களை சமீபகாலமாக தமிழகத்திலும் பரவலாக விரும்பி வளர்த்து வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் இந்த அதிசய பூக்களை தரிசித்தால் நல்ல பலன்கள் கிடைக்குமென நம்பப்படுகிறது.

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் ஆத்தூரில் வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி வி. ஜான்சி தோட்டக்கலைத்துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்.

    இருவரும் இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக மனோரஞ்சிதம், செண்பகம், நாகலிங்கம், பல்வலிப்பூண்டு, சீனி துளசி, அஸ்வகந்தா உள்ளிட்ட பல்வேறு அரிதாகி வரும் அரியவகை மூலிகை தாவரங்களை தேடிப்பிடித்து வளர்த்து வருகின்றனர். குறிப்பாக, ஆன்மீக தன்மை கொண்டதாக கருதப்படும் பிரம்ம கமலம் தாவரத்தை அந்தமானில் இருந்து கொண்டு வந்து, 6 ஆண்டுகளாக வீட்டு தோட்டத்தில் வளர்த்து வருகின்றனர்.

    அந்த தாவரத்தில் ஆண்டு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் மலர்கள் தற்போது பூத்து குலுங்குறது. அந்த அதிசய மலர்களை காண, சுற்றுப்புற கிராமங்களை சேந்த மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். #BrahmaKamalamFlower

    ×