search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 133862"

    ஆசிய விளையாட்டு பெண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அங்கீதா ரெய்னா வெண்கல பதக்கத்தை வென்றார். #AsianGames2018 #AnkitaRaina
    பெண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த அரை இறுதி போட்டியில் இந்தியாவின் அங்கீதா ரெய்னா- சீனாவின் ஜாங் ஷுயை மோதினர். இதில் அங்கீதா 4-6, 6-7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன் மூலம் அவர் வெண்கல பதக்கம் வென்றார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் போபண்ணா- திவிஜ் சரண் 4-6, 6-3, 10-8 என்ற செட் கணக்கில் ஜப்பானின் உசுகி காய்ட்டோ- ஷிமாபுகுரோ ஜோடியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் வெள்ளி பதக்கம் உறுதியானது. #AsianGames2018 #AnkitaRaina
    பிரசிடென்சி கிளப் சார்பில் ஐ.டி.எப். சர்வதேச சீனியர் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர்கள் சாம்பியன் பட்டம் பெற்றனர். #ITFtennis


    பிரசிடென்சி கிளப் சார்பில் ஐ.டி.எப். சர்வதேச சீனியர் டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள அந்த கிளப் வளாகத்தில் நடந்தது. 35 வயதுக்கு மேற்பட்ட பிரிவிலும், 45 வயதுக்கு மேற்பட்ட பிரிவிலும் தமிழக வீரர்கள் சாம்பியன் பட்டம் பெற்றனர். 35 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் வினோத் ஸ்ரீதர் 6-4, 7-5 என்ற கணக்கில் சேது கண்ணனையும் (தமிழ்நாடு), ராஜேஷ் கணபதி 6-3, 6-1 என்ற கணக்கில் பினுமணியையும் (கேரளா) தோற்கடித்தனர். 55 வயதுக்குட்பட்ட பிரிவில் நாகராஜ் (மைசூர்) வெற்றி பெற்றார்.

    சி.பி.சி.எல். நிறுவன செயல்பாடு இயக்குனர் அரவிந்தன்கோபால் பரிசுகளை வழங்கினார். போட்டி அமைப்பு குழு தலைவர் சிவராம் செல்வகுமார் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். #ITFtennis

    லண்டனில் நடைபெற்றுவரும் குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ரோகன் போபன்னா, பிரான்சின் ரோஜர்-வேஸ்லின் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. #QueensClubChampionships #RohanBopanna #RogerVasselin

    லண்டன்:

    ஆடவருக்கான குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் போட்டிகள் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபன்னா - பிரான்சின் ரோஜர்-வேஸ்லின் ஜோடி, தென்னாப்ரிக்காவில் கெவின் ஆண்டர்சன் - பிரான்சின் ஜூலியன் பென்னெடியூ ஜோடியை எதிர்கொண்டது.

    இப்போட்டியில் போபன்னா ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. இதனால் முதல் செட்டை போபன்னா - ரோஜர் ஜோடி 6-3 என எளிதாக கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் ஆண்டர்சன் - ஜூலியன் ஜோடி சிறப்பாக எதிர்ஜோடிக்கு ஈடுகொடுத்து விளையாடியது.

    இருப்பினும் போபன்னா-ரோஜர் ஜோடி அந்த செட்டையும் 7-6 (7-3) என கைப்பற்றியது. இறுதியில் 6-3, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற போபன்னா-ரோஜர் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. #QueensClubChampionships #RohanBopanna #RogerVasselin
    ×