என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 133875
நீங்கள் தேடியது "பாலமேடு"
விராலிமலை இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பார்வையாளர் பலியானார். 15 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். #jallikattu
விராலிமலை:
விராலிமலையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் இன்று பகல் 12 மணி வரை 375 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர்.
சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் பாய்ந்து சென்றது. போட்டியில் காளைகள் முட்டியதில் 15 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இதனிடையே வாடிவாசலில் இருந்து பாய்ந்து வந்த காளை ஒன்று வீரர்களின் பிடியில் சிக்காமல் மைதானத்தில் இருந்து வெளியே பாய்ந்து சென்றது. அப்போது அந்த காளை திடீரென பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில், புதுக்கோட்டை மாவட்டம் சொரியம்பட்டியைச் சேர்ந்த ராமு (வயது 25) என்பவரை முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் குடல் சரிந்து பலத்த காயமடைந்தார். உயிருக்கு போராடிய அவரை பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு ஜல்லிக்கட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமிற்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே ராமு பரிதாபமாக உயிரிழந்தார். #jallikattu
பொங்கல் பண்டிகையையொட்டி பாலமேடு, அவனியாபுரத்தில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அப்போது, காளைகள் முட்டியதில் 92 வீரர்கள் காயம் அடைந்தனர். #Jallikattu #AvaniyapuramJallikattu
மதுரை:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலைசாமி கோவில் ஆற்று மைதானத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. போட்டியை காண கோவில் மைதானத்துக்கு அதிகாலை 5 மணியில் இருந்தே பார்வையாளர்கள் வந்து குவியத் தொடங்கினர். சீறிப்பாய்ந்து வரும் காளைகளை பிடிக்கும் வீரர்கள், காயம் அடையாத வகையில் மைதானத்தில் தென்னை நார் கழிவுகள் பரப்பி வைக்கப்பட்டு இருந்தன. போட்டியில் கலந்துகொள்ள வந்திருந்த காளைகளுக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை நடத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு போட்டியை மாவட்ட கலெக்டர் நடராஜன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதலில் வாடிவாசல் வழியாக கிராமத்து கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை.
பின்னர் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. மொத்தம் 567 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றை அடக்குவதற்காக 739 வீரர்கள் களத்தில் இறங்கினார்கள். காளைகளை அவர்கள் ஆர்வத்துடன் அடக்கினார்கள்.
போட்டியின் போது காளைகள் முட்டியதில் வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 48 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் படுகாயம் அடைந்த 13 பேர் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், பீரோ, கட்டில், மிக்சி, கிரைண்டர் போன்றவை பரிசாக வழங்கப்பட்டன.
சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மலைப்பட்டியைச் சேர்ந்த பிரபு என்பவரின் காளை முதல் பரிசான காரை தட்டிச் சென்றது.
சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட அலங்காநல்லூரைச் சேர்ந்த பிரபாகரனுக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. பிரபாகரன் மொத்தம் 10 காளைகளை பிடித்து இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
மதுரை அவனியாபுரம் அய்யனார் கோவில் மைதானத்தில் பொங்கல் தினமான நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. மதுரை ஐகோர்ட்டு நியமித்த, ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் தலைமையிலான குழுவின் வழிகாட்டுதலின்படி அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.
மொத்தம் 641 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், 476 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளுடன் மல்லுக்கட்டினர். ஜல்லிக்கட்டின் போது சீறிப்பாய்ந்து வந்த மாடுகள் முட்டியதில் பார்வையாளர்கள், வீரர்கள், மாடு வளர்ப்போர் என 44 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் படுகாயம் அடைந்த 9 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பாலமேட்டிலும், அவனியாபுரத்திலும் நடந்த போட்டிகளில் காளைகள் முட்டியதில் மொத்தம் 92 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், வேடிக்கை பார்த்தவர்கள் என மொத்தம் 40 பேர் காயம் அடைந்தனர்.
பெரிய சூரியூரில் காளைகளை அடக்குவதற்காக களத்தில் நின்ற மாடுபிடி வீரர்களுக்கு இடையே அவ்வப்போது மோதலும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. உடனே போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு விநாயகர் கோவில் தெருவில் காளை விடும் விழா நடைபெற்றது. அப்போது காளைகள் முட்டியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. #Jallikattu #AvaniyapuramJallikattu

மதுரை மாவட்டம் பாலமேட்டில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் போட்டியை தொடங்கி வைத்தார். #Jallikattu #PalameduJallikattu
மதுரை
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன் அரசாணை வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முறையே ஜனவரி 15, 16, 17-ந் தேதிகளில் நடைபெறும் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன. வாடிவாசல், தடுப்பு, கேலரி, மைதானம், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 150 செ.மீ. உயரம் இருக்க வேண்டும், 55 கிலோ எடை அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாட்டுப் பொங்கல் தினமான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் போட்டியை தொடங்கி வைத்ததும், வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன்பின்னர் மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க காளையர்கள் களத்தில் ஆக்ரோஷமாக களமிறங்கி உள்ளனர். இந்த ஜல்லிக்கட்டில் 800 வீரர்கள், 900 காளைகள் பங்கேற்றுள்ளன.
ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரருக்கும், காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும் பரிசு வழங்கப்படுகிது. ஆம்னி கார், இருசக்கர வாகனங்கள், தங்கம், வெள்ளி காசுகள், கட்டில், பீரோ உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. #Jallikattu #PalameduJallikattu

இந்த நடைமுறைகள் முடிந்தபின்னர் பலத்த பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் தினமான நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இந்நிலையில், மாட்டுப் பொங்கல் தினமான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் போட்டியை தொடங்கி வைத்ததும், வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன்பின்னர் மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க காளையர்கள் களத்தில் ஆக்ரோஷமாக களமிறங்கி உள்ளனர். இந்த ஜல்லிக்கட்டில் 800 வீரர்கள், 900 காளைகள் பங்கேற்றுள்ளன.
ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரருக்கும், காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும் பரிசு வழங்கப்படுகிது. ஆம்னி கார், இருசக்கர வாகனங்கள், தங்கம், வெள்ளி காசுகள், கட்டில், பீரோ உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. #Jallikattu #PalameduJallikattu
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதல் சுற்றில் 75 மாடு பிடி வீரர்கள் பங்கேற்கிறார்கள். #avaniyapuramjallikattu #palamedu
மதுரை:
தமிழர் திருநாளான பொங்கல் நன்னாளில் புத்தாடை அணிந்து, பொங்கலிட்டு, சூரியனை வணங்குவதோடு ஜல்லிகட்டும் பாரம்பரிய கலாசாரத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று காலை மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. மதுரை கலெக்டர் நடராஜன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டிக்காக 636 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கிறார்கள்.
வாடிவாசலில் இருந்து துள்ளி வரும் காளைகளை தழுவ முதல் சுற்றில் 75 காளையர்கள் களத்தில் உள்ளனர். ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 10 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக்குழு, 5 அவசர உதவி ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. காளைகளுக்கும், வீரர்களுக்கும் காயம் ஏற்படாத வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் மருத்துவக் குழுக்கள் பரிசோதனை செய்துள்ளன.
வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கக் காசு, தங்கச் சங்கிலி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுகளை வழங்க விழா கமிட்டியினர் ஏற்பாடு செய்துள்ளனர். மதுரை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காளைகள் மற்றும் வீரர்களின் பாதுகாப்புக்காக களம் முழுவதும் தேங்காய் நார்கள் பரப்பபட்டு உள்ளது. #avaniyapuramjallikattu #palamedu
அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை தயார் செய்யும் பணிகளில் காளைகள் வளர்ப்போர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #Jallikattu
அலங்காநல்லூர்:
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று கிராமப்புறங்களில் நடைபெறும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு. இது 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இந்த வீர விளையாட்டு தை மாதத்தில் நடைபெறும்.
இந்நிலையில் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கண்மாய்களில் நீச்சல் பயிற்சியும் மைதானங்களில் ஓட்டமும், மண்குவியலில் மண் குத்துதலும், மாதிரி வாடி அமைத்து அதில் காளைகளை அவிழ்த்து விடுவதும் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை காளைகள் வளர்ப்போர் அளித்து வருகின்றனர்.
அ.கோவில் பட்டியைச் சேர்ந்த மண்டு கருப்புச்சாமி கிராம கோவில் காளைக்கு அப்பகுதியில் உள்ள குளத்தில் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் அலங்காநல்லூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் கூறியதாவது:-
பொதுவாக காளைகளுக்கு டிசம்பர், ஜனவரி மாதம் வந்தாலே தெம்பும், தைரியமும், துணிச்சலும் இயற்கையாகவே வந்து விடுகிறது. காளைகளுக்கு தீவனமாக பச்சை புல், வைக்கோல், முற்றிய தேங்காய் பருப்பு, நாட்டு பருத்தி விதை போன்ற பலவகையான தீவனங்கள் வழங்கி சிறப்பாக கவனிக்கப்படும்.
அத்துடன் அதற்கான பயிற்சிகளில் வழக்கம் போல் ஈடுபடுத்தப்படும். தென்மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் போட்டிகளில் பங்கேற்கும்.
ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு முன்பே அனைத்து பகுதிகளிலும் காளைகள் வளர்ப்போர் ஆர்வத்துடன் பயிற்சி அளித்து முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்றார். #Jallikattu

வருகிற ஜனவரி 15-ந் தேதி அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடை பெறுவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கிராம கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கண்மாய்களில் நீச்சல் பயிற்சியும் மைதானங்களில் ஓட்டமும், மண்குவியலில் மண் குத்துதலும், மாதிரி வாடி அமைத்து அதில் காளைகளை அவிழ்த்து விடுவதும் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை காளைகள் வளர்ப்போர் அளித்து வருகின்றனர்.
அ.கோவில் பட்டியைச் சேர்ந்த மண்டு கருப்புச்சாமி கிராம கோவில் காளைக்கு அப்பகுதியில் உள்ள குளத்தில் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் அலங்காநல்லூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் கூறியதாவது:-
பொதுவாக காளைகளுக்கு டிசம்பர், ஜனவரி மாதம் வந்தாலே தெம்பும், தைரியமும், துணிச்சலும் இயற்கையாகவே வந்து விடுகிறது. காளைகளுக்கு தீவனமாக பச்சை புல், வைக்கோல், முற்றிய தேங்காய் பருப்பு, நாட்டு பருத்தி விதை போன்ற பலவகையான தீவனங்கள் வழங்கி சிறப்பாக கவனிக்கப்படும்.
அத்துடன் அதற்கான பயிற்சிகளில் வழக்கம் போல் ஈடுபடுத்தப்படும். தென்மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் போட்டிகளில் பங்கேற்கும்.
ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு முன்பே அனைத்து பகுதிகளிலும் காளைகள் வளர்ப்போர் ஆர்வத்துடன் பயிற்சி அளித்து முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்றார். #Jallikattu
×

X