search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 135129"

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நாளை நடைபெற இருக்கும் சூழ்நிலையில் அங்கு ராணுவ புரட்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மக்கள் மத்தியில் பீதி கிளம்பி உள்ளது. #PakistanElection2018
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் நவாஷ் செரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி ஆட்சியில் இருந்து வந்த நிலையில் ஊழல் வழக்கில் அவர் ஜெயில் தண்டனை பெற்றார்.

    இதனால் அவர் பதவி விலகினாலும் அவரது கட்சி ஆட்சியில் நீடித்து வந்தது. கடந்த மே மாதம் 31-ந் தேதி 5 ஆண்டு ஆட்சி காலம் நிறைவு பெற்றதை அடுத்து தற்காலிக அரசு செயல்பட்டு வருகிறது. அங்கு பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தீவிர பிரசாரம் நடந்தது. நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்கவா ஆகிய 4 மாகாணங்களுக்கும் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது.

    நவாஷ் செரீப்பின் முஸ்லிம் லீக் கட்சி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ- இன்சாப் கட்சி, பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பல சிறிய கட்சிகள் களத்தில் உள்ளன.


    முஸ்லிம் லீக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நவாஷ் செரீப்பின் தம்பி ஷேபாஸ் செரீப் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மற்ற கட்சிகளில் இம்ரான்கான், பிலாவல் பூட்டோ ஆகியோர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தானில் மொத்தம் 272 தொகுதிகள் உள்ளன. 3459 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களில் 171 பேர் பெண்கள். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 10 கோடி. அவர்கள் ஓட்டு போட 85 ஆயிரத்து 300 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர்தலில் இம்ரான் கானின் கட்சி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக முதலில் கருத்து கணிப்புகள் கூறின. ஆனால், இப்போது நவாஷ் செரீப் கட்சியே முன்னணியில் இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    நாடு முழுவதும் தீவிர பிரசாரம் நடந்து வந்த நிலையில் தேர்தல் வன்முறை சம்பவங்களும் மிக அதிகமாக நடந்தது. வன்முறையில் 180 பேர் பலியாகி இருக்கிறார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

    நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் வன்முறை அதிகரிக்கலாம் என கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ராணுவத்தினர் மற்றும் போலீசார் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். 3 லட்சத்து 71 ஆயிரத்து 388 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தான் தேர்தல் வரலாற்றில் இவ்வளவு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பது இதுதான் முதல் முறை. ஆங்காங்கே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என கருதி முக்கிய பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நாளை தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் அங்கு ராணுவ புரட்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மக்கள் மத்தியில் பீதி கிளம்பி உள்ளது.

    தற்போது பாகிஸ்தானில் ராணுவத்தின் ஆதரவு கொண்ட உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முழு அரசையும் அவர்கள்தான் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

    நவாஷ் செரீப் கட்சி வெற்றி பெறுவதை அவர்கள் விரும்பவில்லை. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததாக ஏதாவது புகார் கூறி ராணுவமே ஆட்சியை கைப்பற்றலாம் என்று கருதப்படுகிறது.

    சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் ராணுவ புரட்சி நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறி உள்ளன. பாகிஸ்தானில் ராணுவ புரட்சி என்பது புதிதல்ல.

    ஏற்கனவே லியாகத் அலிகான், பூட்டோ, நவாஷ் செரீப் ஆட்சி காலங்களில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. ராணுவ தளபதிகள் அபூய் கான், யாக்யாகான், ஜியா உல்ஹக், மு‌ஷரப் ஆகியோர் ராணுவ புரட்சியை மேற்கெண்டு ஆட்சியை பிடித்தனர்.

    அதேபோல் இப்போது தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தி ராணுவ புரட்சி ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. இது, பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. #PakistanElection2018
    125 கோடி மக்கள்தான் என் பலம். மக்களுக்காகவே என்னுடைய எல்லா நேரத்தையும் செலவிட்டு வருகிறேன் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார். #NarendraModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடியை டுவிட்டரில் ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பின்தொடர்ந்து வருபவர்களின் பதிவுகளுக்கு மோடி உடனுக்குடன் பதிலும் அளித்து வருகிறார்.

    மும்பையை சேர்ந்த ஷில்பி அகர்வால் என்ற பெண், ‘மோடிஜி நீங்கள் எப்போதும் புன்னகையுடன் இருக்கிறீர்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கு மோடி, ‘புன்னகை’ என்ற வார்த்தையை எடுத்து பதிலாக பதிவிட்டு இருந்தார்.

    மற்றொரு டுவிட்டர் பதிவில், ‘இந்த வயதிலும் நீங்கள் அயராது பணியாற்றி வருகிறீர்களே’ என பாராட்டு தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பதில் அளித்த மோடி, ‘125 கோடி மக்கள்தான் என் பலம். மக்களுக்காகவே என்னுடைய எல்லா நேரத்தையும் செலவிட்டு வருகிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

    ஷோபா ஷெட்டி என்ற பெண்ணின் டுவிட்டர் பதிவில், ‘நாடாளுமன்ற மக்களவையில் உங்களின் பேச்சு பாராட்டுக்குரியது. இந்தியா மோடியை நம்புகிறது’ என்று தெரிவித்து இருந்தார். அதற்கு மோடி, ‘உங்களின் அன்பான வார்த்தைக்கு நன்றி’ என்று பதில் அளித்தார்.

    மேலும் பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்தகுமார், மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து உள்ளார்.   #NarendraModi  #tamilnews
    சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விபத்துக்களில் இருந்து மக்களின் உயிரை காக்கவே 8 வழிச்சாலை அமைக்கப்படுவதாக தெரிவித்தார். #Greenwayroad #EdappadiPalaniswami
    சேலம்:

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    மாநிலத்தின் வளர்ச்சிக்கு தக்கவாறு சாலைகளை மாற்ற வேண்டும். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் முழுமையாக நிறைவேற கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகும். மத்திய அரசின் இந்த 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு உதவி செய்கிறது.

    நிலம் அளிக்கும் உரிமையாளர்களுக்கு தகுந்த இழப்பீடு பெற்று தரப்படும். அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய சாலையாக சென்னை, சேலம் இடையேயான 8 வழிச்சாலை இருக்கும். அதிகரிக்கும் வாகன விபத்துக்களால் மக்கள் உயிரிழப்பை தடுக்கவே இந்த 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது. காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றன.

    இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #Greenwayroad #EdappadiPalaniswami
    ஒடிசா மாநிலத்தில் இடி, மின்னல் தாக்குவதால் பலர் உயிரிழந்துவரும் நிலையில், மின்னல் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை விடுக்கும் சென்சாரை நிறுவ அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. #odisha #lightningsensor
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் இடி மின்னல் தாக்கி பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருடத்துக்கு 419 பேர் இடி மின்னல் தாக்கத்தால் பரிதாபமாக உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பேசிய சிறப்பு நிவாரண ஆணையர் சேதி, மின்னல் தாக்கி கடந்த 3 நாட்களில் மட்டும் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற உயிரிழப்புகளை தடுப்பதற்காக மின்னலை முன்கூட்டியே அறியும் சென்சாரை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்திடம் ஒடிசா அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

    இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் மின்னல் தாக்கத்தை அரை மணி நேரத்துக்கு முன்பாகவே நம்மால் அறிந்துகொள்ள முடியும் என்றும், மின்னல் தாக்குதல் குறித்த தகவலை ஊடகங்கள் வழியே மக்களுக்கு தெரியப்படுத்தி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள எச்சரிக்கை விடுக்க முடியும் எனவும் சிறப்பு நிவாரண ஆணையர் சேதி கூறியுள்ளார்.

    மாநிலத்தின் உயரமான பகுதிகளிலும், கட்டிடங்களிலும் இந்த மின்னலை கண்டறியும் சென்சாரை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #odisha #lightningsensor
    புதுவை மக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணிப்பதாக கவர்னர் கிரண்பேடி தனது பிறந்த நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். #governorkiranbedi
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு இன்று 69-வது பிறந்த நாளாகும். இதனையொட்டி ராஜ் நிவாஸ் வளாகத்தில் உள்ள பெருமாள் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் கவர்னர் கிரண்பேடி பங்கேற்று வழிபட்டார்.

    தொடர்ந்து ராஜ்நிவாஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கிரண்பேடி தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் மற்றும் பலரும் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    தனக்கு வாழ்த்து சொல்ல வந்த சிறுவனை கவர்னர் கிரண்பேடி தனது இருக்கையில் அமர வைத்து உற்சாகப்படுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிறந்த நாள் என்பது நம்மை ஈன்றெடுத்த அன்னையை நினைவு கூரும் தினமாகும். நமக்கு பிறந்த நாள் என்பதை விட அன்னைக்கு மறுபிறவி என்பதே சரி. புதுவை மக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #governorkiranbedi

    பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டால் யாராலும் தடுக்க முடியாது என ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். #rahulgandhi #tejashwiyadav
    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ் சிறை தண்டனை பெற்ற நிலையில், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் அந்த கட்சி சமீபத்தில் நடைபெற்ற 2 இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தேஸ்ஷ்வி யாதவ் நிதிஷ்குமார் மற்றும் பா.ஜ.க.வுக்கு கடும் போட்டியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய தேஜஸ்வி யாதவ், 4 வருட பா.ஜ.க ஆட்சி பொய்களாலும் தந்திர மந்திரங்களினால் ஆனது என அனைவரும் தற்போது புரிந்து கொண்டுவிட்டதால் சமீபத்தில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் பா.ஜ.க பின்னடவை சந்தித்துள்ளது. எங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகள் வேண்டாம் மாறாக அம்பேத்கரின் அரசியலமைப்பே வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

    மேலும், ஜாதி மத ரீதியிலான பிரிவினையினை மக்களிடம் பா.ஜ.க பரப்புகிறது. எனவேதான் பா.ஜ.க.வை ஒழிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது என்றும், பாராளுமன்ற தேர்தலுக்கான இடங்களை பிரித்துக் கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படலாம். எனினும், அனைத்து கட்சியினரும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர புரிதலுடன் செயல்படுகின்றனர் எனவும் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

    கைரானா இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவை ஒருங்கிணைந்தது ஒரு நல்ல அறிகுறியாகும் எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் ராகுல்காந்தி பிரதமர் ஆவேன் என கூறியது குறித்த கேள்விக்கு பதலளித்த தேஜஸ்வி, நிச்சயமாக யார் பெரும்பான்மையுடன் வெற்றி பெருகிறார்களோ அவர்கள் தான் பிரதமர் ஆவார்கள் என்றும், ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டால் யாராலும் அதனை தடுக்க முடியாது என கூறியுள்ளார்.

    மேலும், முன்பை விட ராகுல்காந்தி நன்கு முன்னேறியுள்ளதாகவும், அவர் இன்னும் அனுபவங்களை கற்க வேண்டும் எனவும் கூறிய தேஜஸ்வி யாதவ், இப்போது ராகுல் எங்கு போனாலும் அங்கு அமித் ஷாவும் மோடியும் வந்து எதிர் பிரசாரம் செய்கிறார்கள், ராகுலை கண்டு அவர்கள் ஏன் அஞ்சுகிறார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். #rahulgandhi #tejashwiyadav
    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற படித்த பிரதமர்களை மக்கள் இழந்து வருவதாக டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். #educatedPM #ArvindKejriwal #Manmohansingh
    புதுடெல்லி:

    நாட்டின் தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அரியானா மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு வழங்கப்படும் நீரின் அளவை அரியானா மாநில பாஜக அரசு குறைத்தது. இதனால் டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக அசுத்தமான அரசியல் செய்வதாக சாடினார். மேலும், 22 வருடங்களாக அரியானாவில் இருந்து அளிக்கப்படும் நீரின் அளவு தற்போது குறைக்கப்பட்டதற்கு காரணம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் ஒரு கருத்து பதிவிட்டிருந்தார். அதில், ‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற படித்த பிரதமர்களை மக்கள் இழந்து வருகிறார்கள். பிரதமர்கள் கல்வியறிவுடன் இருக்க வேண்டும். அது மக்களின் வாழ்க்கை மலர்ச்சிக்கு உதவும்’ என குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக, மோடியின் கல்வித்தகுதி குறித்து ஆம் ஆத்மி கட்சியினர் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. #educatedPM #ArvindKejriwal #Manmohansingh
    தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கை இழந்தால், ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று சிவசேனா தெரிவித்து உள்ளது.
    மும்பை:

    மத்தியில் ஆளும் பாஜக அரசு தன்னுடைய சுயநலத்துக்காக மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்கிறது. தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கை இழந்தால், ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாகும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சிவசேனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சமீபத்தில் 4 மக்களவைத் தொகுதிகள், 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. இந்த இடைத் தேர்தலின் போது கர்நாடக, மகாராஷ்டிராவில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது.

    வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, தேர்தல் ஆணையத்துக்கு எச்சரிக்கை செய்து தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

    மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏதேச்சதிகார மனப்பான்மையுடன் செயல்பட்டு, தன்னுடைய சுயலாபத்துக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்கிறது. நமது நாட்டில் ஜனநாயகம் நீண்ட நெடுங்காலமாக நீடித்து இருப்பதால்தான், உலகில் மிகப்பெரிய ஜனநாயகமாக இருக்கிறது. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் ஜனநாயகம் சீரழிகிறது.

    தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டால், அது ஜனநாயகத்துக்கு ஆபத்தாகும். இதே மின்னணு இயந்திரங்களை பாஜக எதிர்த்தது நினைவிருக்கும். இப்போது ஒட்டுமொத்த நாடே மின்னணு வாக்கு இயந்திரங்களை எதிர்க்கிறது. ஆனால், பாஜக அதை ஆதரிக்கிறது. ஒட்டுமொத்த உலகமும் மின்னணு வாக்கு எந்திரங்களை எதிர்க்கும் போது, ஏன் பாஜக அரசு மட்டும் ஆதரிக்கிறது.

    இவ்வாறு சிவசேனா கட்சித் தெரிவித்துள்ளது.
    பாகிஸ்தானின் கராச்சி மாவட்டத்தில் 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கொளுத்தும் வெயிலின் காரணமாக கடந்த 3 நாட்களில் சுமார் 65 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #heatwavekills #Pakistan
    இஸ்லாமாபாத்:

    பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வாழும் பாகிஸ்தான் நாட்டில் ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் நோன்பினை கடைபிடித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கராச்சி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 44 டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் வெயிலின் தாக்கத்துக்கு சுமார் 65 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இதையடுத்து, பகல் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கராச்சி மாவட்ட மேயர் வசீம் அக்தர் கேட்டுக்கொண்டுள்ளார். #heatwavekills #Pakistan
    மக்களை பிரித்து அவர்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொள்ளும்படி தூண்டுவதாக பாஜக மீது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #rahulgandhi #modi
    பிலாஸ்பூர்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக சத்தீஸ்கர் மாநிலம் சென்றுள்ளார். இன்று பிலாஸ்பூர் பகுதியில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுடன் கலந்துரையாடிய அவர், தொண்டர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார்.

    அப்போது பேசிய ராகுல்காந்தி, ‘நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மக்களின் எந்த பிரச்சனை குறித்தும் பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்?’ என கேள்வி எழுப்பினார்.

    ‘எங்கெல்லாம் பாஜக ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள், இளைஞர்கள் தாக்கப்படுகிறார்கள். மக்களை பிரித்து அவர்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொள்ளும்படி பாஜக செய்கிறது.


    ‘உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ ஒரு பெண்ணை கற்பழித்தார். ஆனால் அதுகுறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை, பிரதமர் வழிகாட்டியாக இருக்க வேண்டும் இல்லையெனில் நாடு திக்கற்று போகும்’ என ராகுல் காந்தி தெரிவித்தார்.

    மேலும், ‘சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியுடன் இருப்பார்கள். தலித்துகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் காங்கிரஸ் கடுமையாக தண்டிக்கும்’ என்றும் அவர் தெரிவித்தார். #rahulgandhi #modi #BJPDivisivepeople
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் நேற்று 92-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அ.குமரெட்டியபுரம் மக்கள் நேற்று 92-வது நாளாக போராட்டம் நடத்தினர்.

    இதேபோன்று பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், மீளவிட்டான், சில்வர்புரம், பாளையாபுரம், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட கிராம மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. நேற்று அ.குமரெட்டியபுரத்துக்கு வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து மக்களுடன் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கோஷங்களை எழுப்பினார்.

    மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 13 இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 
    கடந்த 19 நாட்களாக உயராத பெட்ரோல் விலை இன்று உயர்த்தப்பட்டதை அடுத்து மக்களை ஏமாற்றுவதே மோடியின் பொருளாதார கொள்கை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #rahulgandhi #fuelpricehike #pmmodi
    புதுடெல்லி:

    கர்நாடகாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, கடந்த 19 நாட்களாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி இருந்தது. கடந்த 12-ம் தேதி தேர்தல் முடிவடைந்ததை அடுத்து இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘கர்நாடகா தேர்தல் முடியும் வரை பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை, மக்கள் வாக்களித்து முடித்தவுடன், 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. மோடியின் பொருளாதார கொள்கையே முடிந்தவரை மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதாகும்’ என பதிவிட்டுள்ளார். #rahulgandhi #fuelpricehike #pmmodi
    ×