என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 135289
நீங்கள் தேடியது "slug 135289"
ஒடிசா மாநிலத்தில் 1550 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். #PMModi #ModiinOdisha
புவனேஸ்வர்:
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவேற்றப்பட்ட புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் ஒருநாள் பயணமாக ஒடிசா மாநிலத்துக்கு வந்துள்ளார்.
பாலாங்கிர் நகரில் நடைபெற்ற விழாவில் ஜார்சுகுடா-விஜியநகரம் மற்றும் சம்பல்பூர்-அங்குல் பாதையில் ரூ.1085 கோடி செலவில் 813 கிலோமீட்டர் தூரத்துக்கு மின்சாரமயமாக்கப்பட்ட ரெயில்வே வழித்தடத்தை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
15 கிலோமீட்டர் நீளத்தில் 115 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பாலாங்கிர்-பிச்சுப்பலி ரெயில் பாதையையும் திறந்து வைத்தார். இந்த வழித்தடத்தில் செல்லும் புதிய ரெயில் சேவையயும் கொடியசைத்து மோடி தொடங்கி வைத்தார்.
100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பண்டக கிடங்கு. 27.4 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ரெயில்வே பாலம் மற்றும் 6 புதிய பாஸ்போர்ட் சேவை மையங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
சித்தேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சில கோவில்கள் மற்றும் நினைவகங்களை புதுப்பித்து புனரமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்த மோடி சோனேபூர் பகுதியில் 15.81 கோடி ரூபாய் செலவில் கேந்திர வித்யாலயா பள்ளி கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டினார். #PMModi #ModiinOdisha
குஜராத் மாநிலத்துக்கு நாளை வருகைதரும் பிரதமர் நரேந்திர மோடி, அமுல் நிறுவனத்தின் அதிநவீன சாக்லேட் தொழிற்சாலையை திறப்பதுடன் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். #PMModinaugurate #projectsinGujarat #Amulchocolateplant
அகமதாபாத்:
பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்த இடமான குஜராத் மாநிலத்துக்கு நாளை வருகிறார். இங்குள்ள ஆனந்த் மாவட்டத்தில் உள்ள அமுல் பால் பண்ணை நிறுவனத்துக்கு சொந்தமான வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன சாக்லேட் தொழிற்சாலையை அவர் திறந்து வைக்கிறார்.
மேலும் ஆனந்த் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உணவு பதடுத்தும் பயிற்சி நிலையத்தை தொடங்கி வைக்கும் அவர், முஜ்குவா கிராமத்தில் சூரிய மின்சக்தி கூட்டுறவு நிறுவனத்தையும் திறந்து வைக்கிறார்.
அமுல் பால் பண்ணையின் விரிவாக்கமாக ஆனந்த், கட்ராஜ் பகுதிகளில் இரண்டு கிளைகளுக்கான அடிக்கல்லை நாட்டும் மோடி, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
பின்னர், கச் மாவட்டத்தில் உள்ள அன்ஜார் நகரில் முன்ட்ரா இயற்கை எரிவாயு முனையம், அன்ஜார்- முன்ட்ரா எரிவாயு குழாய் திட்டம், பலன்பூர்-பாலி-பார்மர் எரிவாயு குழாய் திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்கிறார்.
அங்கிருந்து ராஜ்கோட் மாவட்டத்துக்கு செல்லும் பிரதமர், ஆல்பிரட் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.
குஜராத் மாநில அரசின் பொது வீட்டு வசதி திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள 240 வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்வார் என பிரதமரின் சுற்றுப்பயணம் தொடர்பான நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PMModinaugurate #projectsinGujarat #Amulchocolateplant
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான பிரதமர் மோடி 937 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். #PMmodi # #Rs937croredevelopmentschemes #Varanasidevelopmentschemes
லக்னோ:
பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அசம்கர், தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் இன்று சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அசாம்கரில் சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான விரைவு நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றிய அவர் பின்னர் தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் 937 கோடி ரூபாய் மதிப்பிலான 33 நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
பின்னர் அங்கு திரண்டிருந்த மக்களிடையே பிரதமர் மோடி பேசியதாவது:-
ஜப்பான் பிரதமரை நான் சந்திக்கும் போதெல்லாம் வாரணாசி மக்களாகிய நீங்கள் அவருக்கு அளித்த மகத்தான வரவேற்பை பற்றி பிறரிடம் அவர் பெருமையுடன் குறிப்பிடுவதை நான் பார்த்திருக்கிறேன். பிரான்ஸ் அதிபரை நீங்கள் வரவேற்ற விதத்தை அந்நாட்டு மக்கள் போற்றி வருகின்றனர். இதுதான் வாரணாசியின் கலாசாரம், இதுதான் வாரணாசியின் அன்பு.
முந்தைய ஆட்சி காலங்களில் வாரணாசியில் வளர்ச்சி பணிகள் ஏதும் நடக்கவில்லை. மேம்பாட்டு பணிகள் முடக்கப்பட்டிருந்தன. மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் எங்களை ஆதரித்து வாக்களித்த பின்னர், இந்த பகுதி வளர்ச்சிப் பாதையில் நடைபோட ஆரம்பித்தது.
கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக மட்டும் சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 200 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய இந்தியாவை படைப்பதற்காக புதிய வாரணாசி உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் ஆன்மா பண்டைக்காலத்து பெருமையுடனும், உடல் நவீனக்கால வசதிகளுடனும் ஜொலிக்கும். வாரணாசியின் அனைத்து மூலைகளிலும் கலாசாரமும், பாரம்பரியமும் செழித்திருக்கும். அதேவேளையில் நவீன காலத்துக்கேற்ற வசதிகள் அனைத்தும் இங்கு கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார். #PMmodi # #Rs937croredevelopmentschemes #Varanasidevelopmentschemes
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X