என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 135519
நீங்கள் தேடியது "slug 135519"
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரகாஷ்ராஜ், மோகன்லால், அக்ஷய்குமார் உள்ளிட்ட நடிகர்கள் போட்டியிட தயாராகி வருகிறார்கள். #PrakashRaj #Mohanlal #AkshayKumar
இந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட நடிகர்கள் அரசியலில் இருப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது. இவர்களில் பலர் அமைச்சர்களாகவும் எம்.பி., எம்.எல்.ஏக்களாகவும் பதவி வகித்துள்ளனர். மறைந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ராமராவ் ஆகியோர் முதல்-அமைச்சராகி ஆட்சி நடத்தி உள்ளனர்.
இப்போது கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் குதித்துள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்த கட்சி போட்டியிடுகிறது. ரஜினிகாந்தும் விரைவில் கட்சி தொடங்குகிறார். இந்த வருடம் புதிதாக மேலும் சில நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.
வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் வருகிற பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு மத்திய தொகுதியில் அவர் நிற்கிறார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால், திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட தயாராவதாக தகவல். பா.ஜனதா கட்சி அவருக்கு டிக்கெட் கொடுக்க ஆர்வமாக உள்ளது. நரேந்திர மோடியை மோகன்லால் சந்தித்து விட்டு வந்துள்ளார்.
ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வந்த அக்ஷய்குமாரும் பாராளுமன்ற தேர்தலில் டெல்லி அல்லது பஞ்சாப் மாநிலத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். நடிகை ஜெனிலியாவின் கணவரும் இந்தி நடிகருமான ரிதேஷ் தேஷ்முக் காங்கிரஸ் சார்பில் லத்தூர் தொகுதியில் போட்டியிட முயற்சிக்கிறார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தின் நீக்கப்பட்ட வசனங்களின் விவரம் வெளியாகியுள்ளது. #2Point0 #Rajinikanth #AkshayKumar
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 மணிநேரம் 28 நிமிடங்கள் 52 நொடிகளுக்கு இப்படம் இறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதுவரை உருவான ஷங்கர் படத்திலேயே இதுதான் மிகக்குறைந்த நேரம் ஓடும் திரைப்படமாக இருக்கும். தணிக்கைக் குழுவினர் காட்சிகளில் பெரிய அளவில் கத்திரி வைக்கவில்லை.
ஆனால், வசனங்களில் தாராளமாகக் கைவைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. ‘யுனிசெல்’ என்ற நிறுவனத்தின் பெயரைத் திரைப்படத்தில் எங்கெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்களோ, அங்கெல்லாம் மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். அதுபோலவே, ‘புற்று நோய்,’ ‘கருச்சிதைவு’, ‘ஆண்மைக் குறைவு’, ‘லஞ்சம்’, ‘45 வருடம்’ ஆகிய வசனங்களை நீக்கச் சொல்லி உத்தரவிடப்பட்டிருக்கிறது.
அத்துடன் ‘9’ என்ற வார்த்தையை நீக்கச் சொல்லியும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். ‘9’ என்ற எண்ணை, ‘வார்த்தை’ என சென்சார் குழு குறிப்பிட்டிருப்பதன் காரணம் அது ஒரு தனி நபரைக் குறிப்பதாகவே இருக்க வேண்டும்.
ரஜினிக்கு வில்லனாக நடித்த பிரபல நடிகர், அடுத்ததாக கமல் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். #Rajini #Kamal #Indian2
சங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவான ‘2.0’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்து சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் வேலைகளும் சத்தமின்றி நடந்து வருகின்றன.
இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போதே கமல், சங்கரிடம் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார். ‘2.0’ படத்தில் அக்ஷய் குமார் இருப்பது போல இந்தியிலிருந்து ஒரு நடிகரை அழைத்து வந்து வில்லனாக நடிக்க வைக்கவேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அதை சங்கர் ஒப்புக்கொண்டார்.
இதற்காக தொடக்கத்தில் அஜய் தேவ்கன் உட்பட சில நடிகர்களை அணுகி இருக்கிறார்கள். யாருடைய தேதிகளும் ஒத்துவரவில்லை. கடைசியில் அக்ஷய் குமார் தேதி கிடைக்க அவரையே ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ரஜினியைத் தொடர்ந்து கமலுக்கும் வில்லனாகி விட்டார் அக்ஷய். தமிழ் சினிமாவில் இந்தி நடிகர்கள் நடித்தால் அகில இந்திய அளவில் வியாபார முக்கியத்துவம் கிடைக்கும் என்பதால் இந்தி வில்லன்கள் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் இனி அதிகரிக்கலாம்.
நடிகர்கள் அக்ஷய்குமார், மோகன்லால் மற்றும் விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்கள் உள்பட 70 பிரபலங்களை பாராளுமன்ற தேர்தலில் களமிறக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. #BJP #AkshayKumar
புதுடெல்லி:
2019 பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் வேட்கையில் பா.ஜனதா இருக்கிறது. இதற்காக அந்த கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பிரபல நடிகர், நடிகைகள், விளையாட்டு துறை உள்பட 70 பிரபலங்களை களத்தில் நிறுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. நடிகர்கள் அக்ஷய்குமார், மோகன்லால், சன்னிதியோல், மாதிரி தீட்சித், கிரிக்கெட் வீரர் ஷேவாக் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்குகிறது.
திரைப்பட துறை, விளையாட்டுத் துறை, கலை மற்றும் பண்பாட்டுத்துறை, ஊடகத்துறை போன்ற துறைகளை சேர்ந்த பலர் தங்களது துறைகளில் பல சாதனைகள் புரிந்து மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ளனர். இதனால் அவர்களுக்கு பல ஆதரவாளர்களும், ரசிகர்களும் உள்ளனர். அவர்களால் கூட்டத்தை திரட்ட முடியும்.
அதன்படி அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு நடிகர்கள் அக்ஷய் குமார், சன்னி தியோல், மோகன்லால், நடிகை மாதிரி தீட்சித், கிரிக்கெட் வீரர் ஷேவாக் உள்ளிட்ட 70 பிரபலங்களுக்கு வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லி தொகுதியில் அக்ஷய் குமாரும், குருதாஸ்பூர் தொகுதியில் சன்னி தியோலும், மும்பையில் மாதுரி தீட்சித்தும், திருவனந்தபுரத்தில் மோகன்லாலும் போட்டியிட வாய்ப்பு வழங்குவது பற்றி பரிசிலீக்கப்பட்டு வருகிறது.
பொது வாழ்வில் சாதனைகள் படைத்தவர்களை பா.ஜனதாவுக்குள் கொண்டு வரவேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். அவரது உத்தரவுப்படி பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களை கட்சிக்குள் கொண்டு வருவதற்காக முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
பா.ஜனதாவை சேர்ந்த பெரும்பாலான எம்.பி.க்களுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். இதனால் அவர்களுக்கு மாற்றாக புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்குவதால் கட்சியில் உள்ள எம்.பி.க்கள் பலருக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.
இவ்வாறு பா.ஜனதா மூத்த தலைவர் தெரிவித்தார். #BJP #AkshayKumar #Mohanlal
2019 பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் வேட்கையில் பா.ஜனதா இருக்கிறது. இதற்காக அந்த கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பிரபல நடிகர், நடிகைகள், விளையாட்டு துறை உள்பட 70 பிரபலங்களை களத்தில் நிறுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. நடிகர்கள் அக்ஷய்குமார், மோகன்லால், சன்னிதியோல், மாதிரி தீட்சித், கிரிக்கெட் வீரர் ஷேவாக் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்குகிறது.
இதுகுறித்து பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-
திரைப்பட துறை, விளையாட்டுத் துறை, கலை மற்றும் பண்பாட்டுத்துறை, ஊடகத்துறை போன்ற துறைகளை சேர்ந்த பலர் தங்களது துறைகளில் பல சாதனைகள் புரிந்து மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ளனர். இதனால் அவர்களுக்கு பல ஆதரவாளர்களும், ரசிகர்களும் உள்ளனர். அவர்களால் கூட்டத்தை திரட்ட முடியும்.
மேலும் அவர்களால் அரசியலில் மாறுபட்ட சிந்தனைகளையும் தொலைநோக்கு பார்வையும் அளிக்க முடியும் என்று பா.ஜனதா மேலிடம் நம்புகிறது.
டெல்லி தொகுதியில் அக்ஷய் குமாரும், குருதாஸ்பூர் தொகுதியில் சன்னி தியோலும், மும்பையில் மாதுரி தீட்சித்தும், திருவனந்தபுரத்தில் மோகன்லாலும் போட்டியிட வாய்ப்பு வழங்குவது பற்றி பரிசிலீக்கப்பட்டு வருகிறது.
பொது வாழ்வில் சாதனைகள் படைத்தவர்களை பா.ஜனதாவுக்குள் கொண்டு வரவேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். அவரது உத்தரவுப்படி பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களை கட்சிக்குள் கொண்டு வருவதற்காக முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
பா.ஜனதாவை சேர்ந்த பெரும்பாலான எம்.பி.க்களுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். இதனால் அவர்களுக்கு மாற்றாக புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்குவதால் கட்சியில் உள்ள எம்.பி.க்கள் பலருக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.
இவ்வாறு பா.ஜனதா மூத்த தலைவர் தெரிவித்தார். #BJP #AkshayKumar #Mohanlal
பிரபல நடிகர்களான பிரபுதேவா, அக்ஷய் குமார், சல்மான் கான், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் உள்ளிட்டோர் மீது தனியார் நிறுவனம் வழக்கு பதிந்துள்ளது.
நடிகர்கள் சல்மான்கான், அக்ஷய்குமார், ரன்வீர்சிங், நடிகைகள் சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் ஆகியோர் கலை நிகழ்ச்சி நடத்த பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகர கோர்ட்டில் தனியார் நிறுவனம் ஒன்று நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
“அமெரிக்காவில் 100 ஆண்டு இந்திய சினிமாவை கொண்டாடும் வகையில் 2013-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்தோம். அதில் கலந்துகொண்டு நடனம் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த சல்மான்கான், பிரபுதேவா, அக்ஷய்குமார், ரன்வீர் சிங், நடிகைகள் சோனாக்சி சின்ஹா, கத்ரினாகைப் ஆகியோரை அழைத்து இருந்தோம்.
இதற்காக சல்மான்கானுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் முன்பணமாக வழங்கப்பட்டது. கத்ரினா கைப்புக்கு 40 ஆயிரம் அமெரிக்க டாலரும், சோனாக்சி சின்ஹாவுக்கு 36 ஆயிரம் அமெரிக்க டாலரும் கொடுத்தோம். மற்றவர்களுக்கும் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் அப்போது சல்மான்கான் ஒரு வழக்கு காரணமாக அமெரிக்கா வர இயலாது என்று கூறியதால் நிகழ்ச்சியை இன்னொரு நாளில் நடத்த தள்ளி வைத்தோம்.
இதுவரை நிகழ்ச்சியை நடத்தி கொடுக்க அவர்கள் முன்வரவில்லை. அட்வான்ஸ் தொகையை திருப்பி வாங்குவதற்காக பல தடவை தொடர்பு கொண்டும் அவர்களோடு பேசமுடியவில்லை. இன்னொரு கலை நிகழ்ச்சிக்காக அந்த நடிகர்-நடிகைகள், அமெரிக்கா வர இருப்பதாக கேள்விப்பட்டோம். எங்களை ஏமாற்றியதால் அவர்கள் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாக தர வேண்டும்”.
இவ்வாறு மனுவில் குறிப்படப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
×

X