search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 135775"

    • ஆற்றங்கரையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
    • பொன்னானியில் ஆறு செல்கிறது.

    ஊட்டி,

    பந்தலூர் அருகே பொன்னானி, சக்கரைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். பொன்னானியில் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்போது அருகே பொதுமக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுவது தொடர் கதையாக உள்ளது. இதனால் சில வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால், பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டது. இதனால் பொன்னானி ஆற்றை தூர்வாரி, அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை மூலம் ெபாக்லைன் எந்திரம் மூலம் ஆறு தூர்வாரப்பட்டது. இந்தநிலையில் பொன்னானியில் இருந்து அம்மங்காவு செல்லும் சாலையில் பாலம் அருகே சக்கரைகுளம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. தடுப்புச்சுவர் அதே பகுதியில் ஆதிவாசி காலனி இருக்கிறது. அப்பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் மண்அரிப்பு ஏற்பட்டு உள்ளதால், பலத்த மழை பெய்யும் சமயங்களில் காலனி உள்பட கிராமத்துக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. மேலும் விளைநிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்து தேங்கும் நிலை காணப்படுகிறது.

    • போலீசார் ரோந்து சென்று இருந்ததால், அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏற்படவில்லை.
    • சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடத்திற்குள் கரடி புகுந்து அட்டகாசம் செய்தது. பின்னர் கூண்டு வைத்து கரடி பிடிக்கப்பட்டு, மாவனல்லா வனப்பகுதியில் விடப்பட்டது. இந்தநிலையில் தற்போது கரடி ஒன்று எமரால்டு பகுதியில் நடமாடி வருகிறது. கடந்த 3-ந் தேதி நள்ளிரவில் எமரால்டு பகுதியில் சுற்றித்திரிந்த கரடி போலீஸ் நிலையம் அருகே வந்தது. அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர், கரடியை பார்த்து காரை நிறுத்தினார். பின்னர் கரடி உடனடியாக எமரால்டு போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தது. போலீஸ் நிலைய வளாகத்தில் கரடி சுற்றித்திரிந்தது. போலீசார் ரோந்து சென்று இருந்ததால், அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏற்படவில்லை. இதுகுறித்து வாகன ஓட்டி போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, கரடி போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தது தெரிய வந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீஸ் நிலையம் மற்றும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இரவு நேரங்களில் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டாம். கதவு, ஜன்னல்கள் பூட்டப்பட்டு இருப்பினும், கதவை தட்டும் சத்தம் கேட்டாலும் யார் என விசாரித்து விட்டு கதவை திறக்க வேண்டும். உடனடியாக கதவை திறக்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் கோத்தகிரி அருகே கடைவீதியில் குடியிருப்பு அதிகமுள்ள பகுதியில் நள்ளிரவில் கரடி உலா வந்தது. இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சமடைந்து உள்ளனர். மேலும் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரியில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக பள்ளி கல்வி துறை அமைச்சரும் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாநில தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளை முன்னிட்டு கோத்தகிரி பகுதியில் ரத்ததான முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் பி.கே பாபு மற்றும் துணை செயலாளர் பர்மா ரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தி.மு.க மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் மணிகண்டன்ராஜ், மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணா, புதூர் சுரேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் சரத்சேகர், ஒன்றிய தலைவர் சிவா, ஒன்றிய துணைத் தலைவர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் கெளதம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    • வீடுகளுக்கு குடிநீா் வினியோகம் செய்ய வேண்டும்.
    • பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    ஊட்டி

    கூடலூா் நகரசபையை கண்டித்து பா.ஜ.க. சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

    நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவா் ரவிகுமாா் தலைமை தாங்கினார்.

    மாநில விவசாய அணி செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான சவுந்திரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

    ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறிய தாவது:-

    மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியை தூய்மைப் பணியாளா்களின் வங்கிக் கணக்கில் ஊதியமாக செலுத்த வேண்டும். அனைத்து வாா்டுகளிலும் குடிநீா், நடைபாதை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

    மேலும், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய்களை அமைத்து ஒருநாள் விட்டு ஒருநாள் வீடுகளுக்கு குடிநீா் வினியோகம் செய்ய வேண்டும்.

    வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட மங்குழி ஆற்றின் பாலத்தை உடனடியாக கட்ட வேண்டும். கூடலூா் பஸ் நிலையம் கட்டும் பணி தொய்வடைந்துள்ளது. விரைந்து கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பட்டியல் அணி மாவட்டச் செயலாளா் பாா்த்திபன், பொதுச் செயலாளா் நளினி, நிா்வாகிகள் ராதாகிரு ஷ்ணன், சிபி, ராமு, வக்கீல் அணி நிா்வாகி பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
    • மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு உயர்நி லைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக்க ல்வித்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியதாவது:- முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாற்றுத ்திறனாளிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில், தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்பு குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பு அளிக்கும் விதமாக ஒருங்கிணைந்த கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் உலக மாற்றுதிறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது அவசியம் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த கல்வி உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் மாற்றத்திறன் கொண்ட மாணவர்களை கண்டறிந்து, பள்ளியில் சேர்ப்பது குறித்த மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்துப்பள்ளிகளிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை பள்ளியில் சேர்த்தல் குறித்து உறுதி மொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி, கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் போன்றவை நடத்தப்பட்டன.

    அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் செய்கை மொழி தமிழ்ந்தாய் வாழ்த்து பாடல் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. உங்களுக்காக தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் சிறந்த கல்வியினை சுற்று தருகின்றனர்.

    எனவே, மாணவ, மாணவிகளாகிய நீங்கள் கல்வி மற்றும் விளையாட்டில் கவனம் செலுத்தி உயர்ந்த நிலையை அடைய வேண்டும். மேலும், செய்கை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுக்களை கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

    முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு வண்ண ப்பென்சில்களையும், மாநில அளவில் நடைபெ ற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 4 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்தி றனாளி நல் அலுவலர் மலர்விழி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை) பிரியா, நாகஜோதி, மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, உதவி திட்ட அலுவலர் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அர்ஜூணன், பிரகாஷ், பள்ளித்தலைமை ஆசிரியர் கிறிஸ்டின் பியூலா, உதவி ஆசிரியர் (செய்கை மொழி) சாந்தி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    • ஒரிரு தினங்களுக்கு முன்பு நீர் பனிப்பொழிவு ஏற்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காலநிலை மாற்றம் ஏற்பட்டு விதவி தமா ன காலநிலை நிலவி வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்து வந்த நிலையில் ஒரிரு தினங்களுக்கு முன்பு நீர் பனிப்பொழிவும், பகல் நேரங்களில் வெயிலுடன் கூடிய பனிமூட்டம் காணப்பட்டு வந்தது.

    இதன் காரணமாக பகல் நேரங்களில் கடும் வெயிலும் மாலை முதல் இரவு நேரங்களில் கடும் குளிரும் நிலவி வந்தது.

    இந்நிலையில் நேற்று மழையின் தாக்கம் முற்றிலும் குறைந்து மாலை நேரங்களில் கடும் குளிர் வாட்ட துவங்கியது.

    இரவு முழுவதும் கடும் குளிர் நிலவியது. காலையிலும் குளிர் காணப்பட்டது. இதனால் காலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளிக்கு செல்வோர் அவதி அடை ந்தனர். குறிப்பாக விவசாய பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

    இதுதவிர சிலர் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆங்காங்கே தீமூட்டி குளிர் காய்ந்த படி நின்று கொண்டிருந்தனர்.

    மேலும் கம்பளி, சுவர்ட்டர் ஆடைகளை அணிந்து கொண்டு குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொண்டிருந்தனர். கடும் குளிர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    • கலெக்டர் அம்ரித் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
    • விழா குழு தலைவர் மஞ்சை.வி.மோகன் ( படுக தேச பார்ட்டி நிறுவன தலைவர்) தலைமை தாங்கினார்.

    ஊட்டி

    ஊட்டி என்.சி.எம்.எஸ். வளாகத்தில் ராவ்பகதூர் எச்.பி.ஆரிகவுடரின் 129-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழா குழு தலைவர் மஞ்சை.வி.மோகன் ( படுக தேச பார்ட்டி நிறுவன தலைவர்) தலைமை தாங்கினார்.

    ராவ்பகதூர் எச்.பி.ஆரிகவுடர் உருவ சிலைக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி வினோத் (அ.தி.மு.க மாவட்ட செயலாளர்) ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், என்.சி.எம்.எஸ். மேலாண்மை இயக்குனர் தமிழ்செல்வன், செயலாளர் தியாகு, முன்னாள் தலைவர் கண்ணபிரான், முன்னாள் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சென்னமல்லன், முன்னாள் தலைவர் கண்ணபிரான், கோத்தகிரி பில்லன், என்சிஎம்ஸ் செந்தில் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    முன்னதாக விழா குழு செயலாளர், பெள்ளி பாபு வரவேற்றார். விழா குழு பொருளாளர் கக்கி சண்முகம் நன்றி கூறினார்

    • மஞ்சூர் மின்வாரிய மேல்முகாமில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது
    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 10-க்கும் குறைவான மாணவர்களே படித்து வந்தனர்.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய மேல்முகாமில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை மற்றும் தேயிலை தோட்டதொழிலாளர்கள், விவசாயிகளின் குழந்தைகள் படிக்கின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 10-க்கும் குறைவான மாணவர்களே படித்து வந்த நிலையில் தலைமை ஆசிரியை ஜெயந்தி மற்றும் பள்ளி ஆசிரியர்களின் தீவிர முயற்சியால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது இப்பள்ளியில் 140-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் சிறந்த தொடக்கப்பள்ளிக்கான விருது இந்த பள்ளிக்கு அறிவிக்கப்பட்டது. இதனை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்.

    இவ்விருதை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி மற்றும் ஆசிரியை சபீதா, வட்டார கல்வி அலுவலர் வனிதா ஆகியோர் அமைச்சரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற தலைமை ஆசிரியை ெஜயந்தி மற்றும் ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள், மின்வாரியத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

    • நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத் திற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவிலான காட்டு யானைகள் உள்ளன.
    • யானைகளை பராமரிக்கும், வளர்க்கும் பணிகளில் இங்குள்ள இருளர், குறும்பர் போன்ற பழங்குடியின மக்களே மேற்கொள்கின்றனர்

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த யானை பாகன்கள் பயிற்சிக்காக தாய்லாந்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத் திற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவிலான காட்டு யானைகள் உள்ளன.

    அதே போல், இங்கு முகாம்கள் அமைக்கப்பட்டு யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பல கும்கி யானைகள் இந்த முகாம்களில் உள்ளன.

    யானைகளை பராமரிக்கும், வளர்க்கும் பணிகளில் இங்குள்ள இருளர், குறும்பர் போன்ற பழங்குடியின மக்களே மேற்கொள்கின்றனர். இவர்கள் தங்களுக்கு என்ற ஒரு யானையை தேர்வு செய்து, அதனை பிறந்தது முதல் கடைசி வரை பராமரித்து வருகின்றனர். இவர்களின் சொல்லுக்கே இந்த யானைகள் கட்டுப்படுகிறது. இவர்கள் அளிக்கும் உணவுகளையே அவைகள் உட்கொள்கின்றன. மேலும், யானை பாகன்கள் மற்றும் காவடிகள் என்ன சொல்கிறார்களோ அதற்கே அந்த காட்டு யானைகள் கட்டுப்படுகின்றன.

    முதுமலையில் உள்ள பல யானைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வந்தபோதிலும், இங்கு அவைகளுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இங்குள்ள பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு யானை வளர்ப்பில் பல புதிய யுக்திகளை கையாளும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக அவர்கள் தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பப்படவுள்ளனர். இவர்களுக்கு அங்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த 7 பாகன்களுக்கும். ஆனைமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த பாகன்களுக்கும் தாய்லாந்து நாட்டில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இது தொடர்பாக தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

    யானைகளை பராமரிக்கும் பணிகளில் பழங்குடியின மக்களை சேர்ந்தவர்களே ஈடுபடுகின்றனர். இவர்களே பாகன்க ளாகவும், காவடிகளாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கோவை மாவட்டத்திற்குட்பட்ட ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் உள்ள யானை பாகன்கள் தேர்வு செய்யப்பட்டு தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பப்பட உள்ளனர். அங்கு அவர்களுக்கு யானைகள் வளர்ப்பது, பராமரிப்பது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்கான செலவுகளை வனத்துறையே ஏற்கும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    • 14 வயது வடமாநில சிறுமியுடன் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டது
    • போலீசார் ஹரிசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    ஊட்டி

    ஊட்டியைசேர்ந்தவர் ஹரிஷ்(24). இவரது சகோதரி அருகே உள்ள ஒரு பகுதியில் வசித்து வருகிறார். இதனால் ஹரிஷ் அடிக்கடி தனது சகோதரி வீட்டிற்கு சென்று வந்தார். அப்போது அங்கு வசிக்கும் 14 வயது வடமாநில சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் ஆசை வார்த்தை கூறி அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்த பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர்கள் ஊட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் ஹரிசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சூழல் சுற்றுலாவை ஏற்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மான்கள், மற்றும் வன விலங்குகளை காண சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களாக உள்ள ஊட்டி, குன்னுார் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடுகின்றனர்.

    அதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் விரும்பும் இடமாக மஞ்சூர் பகுதியில் உள்ள அப்பர்பவானி, பென்ஸ்டாக் காட்சிமுனை, குந்தா, கெத்தை, எமரால்டு, அவலாஞ்சி அணைக்கட்டுகள் மற்றும் நீர் மின் நிலையங்கள், அவலாஞ்சி மீன் வளர்ப்பு நிலையம் மற்றும் தமிழக கேரளா எல்லையில் உள்ள கிண்ணக்கொரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க ெபரிதும் ஆர்வங்காட்டுகிறார்கள்.

    குறிப்பாக மஞ்சூரில் இருந்து சுமார் 30 கி.மீ துாரம் உள்ள அப்பர்பவானி பகுதியில் இயற்கையோடு ஒன்றியுள்ள காடுகள், பச்சை பசேல் என கண்களுக்கு பசுமையூட்டும் புல்வெளிகள், மனதை கவரும் மடிப்பு மலைகள், மலைகளில் வெள்ளி கீற்றுகளாய் தவழும் அருவிகள், சாலையில் துள்ளி திரியும் மான்கள், மற்றும் வன விலங்குகளை காண சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.

    இது தவிர மின்சார உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாகவும், மாவட்டத்தில் மிக பெரியதுமான மேல்ப வானி அணை உள்ளது. இந்நிலையில் எந்த தடையும் இல்லாமல் சுற்றுலா பயணிகள் அப்பர்பவா னிக்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வனத்துைற தடை விதித்துள்ளது.

    இதற்காக அப்பர்பவானி ெசல்லும் சாைலயில் 10கி.மீ முன்பாக ேகாரகுந்தா என்ற இடத்தில் வனத்துைற சார்பில் ெசக்ேபாஸ்ட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அப்பர்பவானிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் செக்போஸ்டில் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள்.

    இதனால் சுற்றுலா பயணிகள் அப்பர்பவானி யை பார்வையிட முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து அப்பர்பவானியில் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகளை அனுமதிப்ப துடன் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலாவை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

    • பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    • வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி கோத்தகிரியில் மூடுபனியுடன் சாரல் மழை பெய்ததால் குளிா்ந்த காலநிலை நிலவி வருகிறது. சாலைகளில் அடா்ந்த பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.ஊட்டி மற்றும் கோத்தகிரி சுற்றியுள்ள பகுதிகளில் மாலை முதல் மூடு பனியும், சாரல் மழையும் காணப்பட்டது. ஊட்டி நகரம், கோத்தகிரி போன்ற பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு அடா்ந்த மூடுபனி காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனா். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    ×