search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 136067"

    • சேலத்தில் நடைபெற்ற புதிய உலக கலாம் சாதனை போட்டியில் 150 ஆயுர்வேத மூலிகை செடிகளை அடையாளப்படுத்தி காட்டினார்.
    • மாறுவேடப்போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு தேசியஅளவில் சாதனை புரிந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளியில் 1-ம் வகுப்பு பயிலும் மாணவி சன்விகா சேலத்தில் நடைபெற்ற புதிய உலக கலாம் சாதனை போட்டியில் 150 ஆயுர்வேத மூலிகை செடிகளையும், அவற்றின் பெயர்களையும் 1 நிமிடம் 45 நொடிகளில் மிகத்தெளிவாக அடையாளப்படுத்தி காட்டினார்.

    மேலும் அன்று நடைபெற்ற மாறுவேடப்போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு தேசியஅளவில் சாதனை புரிந்தார். பல்வேறு சாதனைகள் புரிந்த சன்விகாவிற்கு"டேலண்ட் ஐகான்'' விருதினை கிரேட் சக்சஸ் அகாடமி வழங்கி கவுரவித்தது. மேலும் கராத்தே போட்டியில் தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.

    மிகச்சிறிய வயதிலேயே பல்வேறு சாதனைகள் புரிந்த மாணவி சன்விகாவை பள்ளி தாளாளர்கார்த்திகேயன் ,முதல்வர் ,ஒருங்கிணைப்பாளர் , ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்தினர்.

    • கடலூர் அருகே பரபரப்பு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கில் பிணமாக தொங்கினார்.
    • தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கல்லூரிக்கு விரைந்தனர். அப்போது மாணவியின் நிலையை கணடு கதறி துடித்தனர்.

    கடலூர்,ஜூன்.24-

    கடலூர் மாவட்டம் புவனகிரி வடக்கு திட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன். அவரது மகள் பிரவீணா, (வயது 18). இவர் கடலூர் அருகே எஸ்.குமாரபுரம் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு தங்கி படித்து வந்தார். இன்று காலை கல்லூரி விடுதியில் மாணவி பிரவீணா தூக்கில் பிணமாக தொங்கினார். அதனை பார்த்த அங்கிருந்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்து கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கல்லூரிக்கு விரைந்தனர். அப்போது மாணவியின் நிலையை கணடு கதறி துடித்தனர்.

    தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் இறந்த நிலையில் இருந்த மாணவிபிரவீணாவை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனை கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவி பிரவீணா இறந்தது தொடர்பாக போலீசார் அங்குள்ள மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி இறந்த காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் அருகே கல்லூரி மாணவி விடுதியில் தூக்கில் இறந்த நிலையில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் அன்னதானப்பட்டியில் கல்லூரி மாணவி மாயமானார்.
    • தனியார் கல்லூரியில் படிக்கும் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் அன்னதானப்பட்டி, சங்ககிரி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கவுரி சங்கரி ( வயது 19). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் அருகில் உள்ள கடையில் பேனா, நோட்டுகள் உள்ளிட்டவற்றை வாங்கி வருவதாக கூறி விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் எங்கும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • பிளஸ்-2 விலும் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோருக்கு பெருமை சேர்ப்பேன் என்றார் வர்ஷா.
    • பள்ளி சென்று வந்ததும் எனது பெற்றோருக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன் என்றார்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டினம் வேதம்புதூரை சேர்ந்தவர் சிவன்பாண்டி. இவரது மனைவி சசிகலா.

    இவர்களுக்கு வர்ஷா(வயது 15) என்ற மகள் உள்பட 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சிவன்பாண்டி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சசிகலா பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்.

    இவர்களது மூத்த மகள் வர்ஷா, அதே பகுதியில் பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவி வர்ஷா 500-க்கு 474 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

    சிவன்பாண்டி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இதனால் அந்த பகுதியில் உள்ள ஒருவரிடம் நிலத்தை குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்து வருகிறார். மாணவி வர்ஷா பள்ளிக்கு சென்றுவிட்டு வந்த உடனே வயலுக்கு சென்றுவிடுவார்.

    இதுகுறித்து மாணவி வர்ஷா கூறுகையில், எனது அப்பா வேலைக்கு போய்விட்டு இரவு தான் வருவார். இதனால் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருக்கும் தக்காளி, பயிறு வகைகள், நெற்பயிர்களுக்கு நான் தான் தண்ணீர் பாய்ச்சுவேன்.

    எங்களுக்கு சொந்தமாக மாடுகள் உள்ளன. அவைகளுக்கு புல் அறுத்து மொபட்டில் வீட்டுக்கு கொண்டு செல்வேன். சில நேரங்களில் மாடுகளில் பால் கறக்கவும் செய்வேன். பள்ளி சென்று வந்ததும் எனது பெற்றோருக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்.

    தண்ணீர் பாய்ச்சி கொண்டே தேர்வுக்கு படித்தேன். விடா முயற்சியுடன் படித்ததால் இந்த மதிப்பெண்ணை பெற்றுள்ளேன். இதேபோல் பிளஸ்-2 விலும் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோருக்கு பெருமை சேர்ப்பேன்.

    என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்த எனது பெற்றோரை நான் நன்றாக பார்த்து கொள்வேன். கலெக்டராக வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்வதே என் லட்சியம் என்றார்.

    • மாணவி ஷாஜிதா ஸைனப் மதநல்லிணக்கம் வேண்டி ஆணி பலகையில் யோகாசனத்தில் அமர்ந்து அசத்தினார்.
    • ரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன், துணைத்தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் அருகே ரவணசமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த தொழிலாளி முகம்மது நஸீருதீன்-ஜலிலா அலி முன்னிஸா தம்பதியரின் இளையமகள் மாணவி ஷாஜிதா ஸைனப் என்பவர் 8 -வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதநல்லிணக்கம் மற்றும் வேளாண்மை செழிக்க வேண்டி ஆணி பலகையில் யோகாசனத்தில் அமர்ந்து தேசிய கொடியுடன் உடலில் தீபம் ஏந்தி அசத்தினார்.

    நிகழ்ச்சியில் ரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன், துணைத்தலைவர் ராமலட்சுமி சங்கிலி, சமுதாயத் தலைவர் பரமசிவன், வார்டு உறுப்பினர்கள் முகமது யஹ்யா, மொன்னா முகமது, ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சமூக ஆர்வலர் சேக் முகமது அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை யோகா ஆசிரியர் குருகண்ணன் செய்திருந்தார்.

    • பிளஸ்-2 தேர்வில் இஸ்லாமியா பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.
    • மாணவி அல்மாசா 600-க்கு 592 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.

    கீழக்கரை

    பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 97.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்து உள்ளது. அதேபோல 10-ம் வகுப்பு ேதர்வில் 94.26 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 5-வது இடத்தை பிடித்தது.

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. மாணவி அல்மாசா 600-க்கு 592 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.

    இவர் 3 பாடங்களில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார். 2-வது இடத்தை மகினா ரிம் 586 மதிப்பெண்ணும், 3-வது இடத்தை பாத்திமா ருபைனா 575 மதிப்பெண்ணும், 4-வது இடத்தை ஆயிஷா லுபினா 574 மதிப்பெண்ணும் பெற்றனர்.

    பிளஸ்-2 தேர்வில் 19 மாணவ, மாணவிகள் பல்வேறு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். 20 பேர் 550க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றனர்.

    பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவி அல்மாசாவிற்கு இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம் ஊக்கத்தொகையாக பள்ளி சார்பில் ரூ.10 ஆயிரம், மேலத்தெரு தொழிலதிபர் சிராஜ் சார்பில் ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.20 ஆயிரம் வழங்கினார்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவி ராஜா தட்சணா 500க்கு 480 மதிப்பெண்கள் பெற்று அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றார். 2-வது இடத்தை மாணவர் மனோஜ் 473 மதிப்பெண்ணும், 3-வது இடத்தை மாணவர் முகம்மது இர்பான் 462 மதிப்பெண்ணும் பெற்றனர்.

    22 மாணவர்கள் 400க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றனர்.

    பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.எம்.கே முஹைதீன் இப்ராஹிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், கல்விக்குழு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • 4 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
    • அ.கோ.சுதர்ஷிகா 600க்கு 597 மதிப்பெண்கள் பெற்றார்.

    அனுப்பர்பாளையம் :

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அ.கோ.சுதர்ஷிகா 600-க்கு 597 மதிப்பெண்கள் பெற்றார்.

    மேலும் அந்த மாணவி கணக்குப்பதிவியல், வணிகவியல், பொருளியல், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட 4 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி சுதர்ஷிகாவுக்கு பள்ளி தாளாளரும், கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவருமான பெஸ்ட் எஸ்.ராமசாமி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், பள்ளி முதல்வர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், அறக்கட்டளை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ-மாணவிகள் ஆகியோர் இனிப்பு வழங்கியும், பூங்கொத்து கொடுத்தும் பாராட்டினார்கள்.

    • பள்ளி மாணவி-இளம்பெண்கள் மாயமானார்கள்.
    • இதுகுறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள அம்பனேரி பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி. இவரது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அந்தப் பெண் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து பூங்கொடி திருச்சுழி போலீசில் புகார் செய்தார். அதில் மில்லில் டிரைவராக வேலை பார்க்கும் தேனூரை ஊரைச் சேர்ந்த பிச்சைமணி எனது மகளை கடத்திச் சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி அருகே உள்ள உச்சனேந்தலை சேர்ந்தவர் பெத்தம்மாள். சம்பவத்தன்று இவர் இலங்கிபட்டியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த இவரது மகள் திடீரென மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து கட்டனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    சாத்தூர் மேல காந்தி நகரைச் சேர்ந்த 14 வயதுடைய 8-ம் வகுப்பு மாணவி சம்பவத்தன்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மாய மான மாணவியை தேடி வருகின்றனர்.

    வத்திராயிருப்பு மேலப்பாளையத்தை சேர்ந்தவர் முத்து மணி கண்டன். திருமணமான இவர் அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக தெரிகிறது. இதனை ஊர் பெரியவர்கள் கண்டித்துள்ளனர். இதில் விரக்தி அடைந்த முத்து மணிகண்டன் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியேறி மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை இதுகுறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மொடக்குறிச்சி அருகே வீட்டில் இருந்த பிளஸ்-1 மாணவி மாயமானார்.
    • இதையடுத்து காணாமல் போன மகளை கண்டு பிடித்து தருமாறு தந்தை மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி கஸ்தூரிபாய் காலனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (49). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு கவுசிகா (16), ஹர்சிதா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    இவரது மகள் கவுசிகா மொடக்குறிச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் தனது 2 மகள்களையும் வீட்டில் விட்டுவிட்டு உறவினர்கள் திருமணத்துக்காக நாமக்கல் சென்று விட்டார்.

    இந்நிலையில் ஹர்சிதா தனது அக்காள் கவுசிகா வீட்டில் இல்லாததால் தேடி பார்த்து உள்ளார். இதையடுத்து இரவு 7 மணிக்கு ஹர்சிதா தனது பெற்றோருக்கு போன் செய்து கவுசிகாவை காணவில்லை என்று கூறி உள்ளார்.

    இதையடுத்து பாலகிருஷ்ணன் அக்கம்பக்கம் கவுசிகாவை தேடி பார்த்தும் விசாரித்தும் கிடைக்காததால் தனது மகளை கண்டு பிடித்து தருமாறு மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவி கவுசிகாவை தேடி வருகின்றனர்.

    • உறவினர் வீட்டுக்கு சென்று மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டுக் கொண்டார் மாணவி.
    • சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகள் அபிநயா(16). இவர் சங்கராபுரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தன் மகன் அஜித் என்பவருடன் அபிநயா பழகி வந்ததாக தெரிகிறது. மேலும் சம்பவத்தன்று அஜித், அபிநயாவை வெளியில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த அபிநயாவின் தாய் மதுராம்பாள் விஷம் குடித்து விட்டார்.

    இதையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவரை, அபிநயா மற்றும் அஜித்தின் உறவினர்கள் பார்க்க வந்தனர். அப்போது மதுராம்பாளின் உறவினர்கள், அபிநயா மற்றும் அஜித்தின் உறவினர்களை பார்க்க அனுமதிக்கவில்லை.

    போலீசார் விசாரணை இதில் மனவேதனை அடைந்த அபிநயா, அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டுக் கொண்டார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அபிநயா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

    • மாணவ மாணவிகள் சுற்றுச் சூழல் குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    • தேரூர் பேரூராட்சி தலைவி சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

    நாகர்கோவில்:

    ரோஜாவனம் பாரா மெடிக்கல் சுகாதார ஆய்வாளர் மற்றும் செவிலியர் கல்லூரி ஸ்கவுட் ரோவர்ஸ் அமைப்பு மற்றும் தேரூர் பேரூராட்சியும் இணைந்து உலக சுற்றுச் சூழல் தின விழாவை நடத்தினர்.

    கல்லூரி துணைத் தலைவர் அருள் ஜோதி தலைமையில் கல்லூரி முதல்வர் டாக்டர் லியாகத் அலி மற்றும் புனிதா டேனியல் முன்னிலை வகித்தனர்.

    தேரூர் பேரூராட்சி தலைவி அமுதா ராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

    சுற்றுச் சூழல் குறித்து கல்லூரி துணைத் தலைவர். அருள் ஜோதி பேசுகையில், தொழில் நுட்ப, தொழில் துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது என்றும் ரசாயனக்கழிவுகள் புகை போன்றவை நீர் நிலைகள், வளிமண்டலம் போன்ற வற்றை மாசுபடுத்துவதோடு உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் சுற்றுச் சூழலை பாதுகாப்பது மிக முக்கியம் எனவும் பேசினார்.

    மாணவ மாணவிகள் சுற்றுச் சூழல் குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கல்லூரி பேராசிரியர் அய்யப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னதாக மாணவர் பெஞ்சமின் வரவேற்புரையாற்ற மாணவி சிக்லின் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி திட்ட ஆலோசகர் சாந்தி, திட்ட மேலாளர் சில்வெஸ்டர், ஆவண அலுவலர் ஜியோ பிரகாஷ் மேலாளர்கள் கோபி மற்றும் நிதி மேலாளர் சேது.கல்லூரி பேராசிரியர்கள் துரைராஜ். சிவதாணு, பகவதி பெருமாள், மரிய ஜாண், சாம்ஜெபா, லிட்வின் லூசியா, சிபியா, செல்லம்மாள், பரமேஸ்வரி. அலுவலக செயலர் சுஜின், கண்காணிப்பாளர் ஆறுமுகம், ஜாண் டிக்சன், பெபின். ஜெனில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மாணவி ஏற்கனவே ஒருமுறை விஷம் குடித்து தற்கொலை முயன்றுள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி சிபிஆர் அபார்ட் மெண்ட் சுப்பிரமணியம் நகர் பகுதியில் வசிப்பவர் பிரேம்குமார். இவர் பங்கு சந்தை முதலீடு செய்து வேலை செய்து வருகிறார்.

    இவரது மகள் நந்தினி (19) தஞ்சை மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பி.டெக் பயின்று வருகிறார். ேநற்றுமுன்தினம் இரவு தனது தாயாரிடம் குடிப்பதற்கு பழச்சாறு வேண்டும் என்று கேட்டுள்ளார். அந்த சமயத்தில் தனது படுக்கை அறையில் சென்று தாளிட்டுக் கொண்டார்.

    நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் புவனேஸ்வரி தனது கணவர் பிரேம்குமாரை தொலைபேசி யில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து கதவை உடைத்து பார்க்கையில் துப்பட்டாவில் நந்தினி தூக்கு போட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே சிகிச்சை பலனின்றி நந்தினி பரிதாபமாக இறந்தார்.

    கல்லூரி விடுப்பில் பெற்றோர் வீட்டிற்கு வந்த மாணவி படிப்பதற்கு சிரமமாக இருப்பதாக கூறி உள்ளார். இதைத் தொடர்ந்தே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இதுதொடர்பாக பிரேம்குமார் வடவள்ளி போலீஸ்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நந்தினி ஏற்கனவே ஒருமுறை விஷம் குடித்து தற்கொலை முயன்றுள்ளார். அப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று உயிர் தப்பினார். தற்போது தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டார்.

    ×