search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 தேர்வில் இஸ்லாமியா பள்ளி மாணவி அல்மாசா சாதனை
    X

    பிளஸ்-2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அல்மாசாவிற்கு இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம் பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். அருகில் முதல்வர் மேபல் ஜஸ்டஸ், மாணவியின் தாயார் உள்ளனர்.

    பிளஸ்-2 தேர்வில் இஸ்லாமியா பள்ளி மாணவி அல்மாசா சாதனை

    • பிளஸ்-2 தேர்வில் இஸ்லாமியா பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.
    • மாணவி அல்மாசா 600-க்கு 592 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.

    கீழக்கரை

    பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 97.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்து உள்ளது. அதேபோல 10-ம் வகுப்பு ேதர்வில் 94.26 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 5-வது இடத்தை பிடித்தது.

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. மாணவி அல்மாசா 600-க்கு 592 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.

    இவர் 3 பாடங்களில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார். 2-வது இடத்தை மகினா ரிம் 586 மதிப்பெண்ணும், 3-வது இடத்தை பாத்திமா ருபைனா 575 மதிப்பெண்ணும், 4-வது இடத்தை ஆயிஷா லுபினா 574 மதிப்பெண்ணும் பெற்றனர்.

    பிளஸ்-2 தேர்வில் 19 மாணவ, மாணவிகள் பல்வேறு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். 20 பேர் 550க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றனர்.

    பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவி அல்மாசாவிற்கு இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம் ஊக்கத்தொகையாக பள்ளி சார்பில் ரூ.10 ஆயிரம், மேலத்தெரு தொழிலதிபர் சிராஜ் சார்பில் ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.20 ஆயிரம் வழங்கினார்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவி ராஜா தட்சணா 500க்கு 480 மதிப்பெண்கள் பெற்று அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றார். 2-வது இடத்தை மாணவர் மனோஜ் 473 மதிப்பெண்ணும், 3-வது இடத்தை மாணவர் முகம்மது இர்பான் 462 மதிப்பெண்ணும் பெற்றனர்.

    22 மாணவர்கள் 400க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றனர்.

    பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.எம்.கே முஹைதீன் இப்ராஹிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், கல்விக்குழு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×