search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 136067"

    • காதல் விவகாரத்தில் தந்தை கண்டித்ததன் காரணமாக ஆனந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
    • அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பழைய பஸ் நிலையம் காமராஜர் ரோட்டில் தனியார் நீட் மற்றும் போட்டி தேர்வு பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையமானது அங்குள்ள கட்டிடத்தின் 3வது மாடியில் உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் இங்கு படிக்கும் 17 வயதான ஆனந்தி என்ற மாணவியின் தந்தை இன்று மாலை பயிற்சி மையத்துக்கு வந்தார். மாணவி ஆனந்தியுடன் பேசிக் கொண்டிருந்த போது, தந்தை மணிகண்டனை தள்ளிவிட்டு சென்ற மாணவி ஆனந்தி 3-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்தார். இதில் அவருக்கு இடுப்பு மற்றும் தலையில் பலத்த காயங்கள்ஏற்பட்டது.ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினார். உடனே அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி ஆனந்தி எதற்காக மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று தெரியவில்லை. காதல் விவகாரத்தில் தந்தை கண்டித்ததன் காரணமாக ஆனந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் நீட் தேர்வு பயிற்சியை சரியாக பயிலாததன் காரணமாக தந்தை திட்டியதால் தற்கொலைக்கு முயன்றாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • சத்தியம்மா சிங்கம் பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறார்.
    • மாணவி கழிப்பறைக்கு செல்லும் போது அங்கிருந்த கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பு சத்தியம்மாவை கடித்தது.

    கரூர்

    குளித்தலை அடுத்த, பாலவிடுதி சிங்கம்பட்டியை சேர்ந்தவர் கதிர்வேல் இவரது மனைவி போதும்பொன்னு. இவர்களுக்கு, சத்தியம்மா (வயது 10) என்ற மகள் உள்ளார். இவர் சிங்கம் பட்டியில் உள்ள அரசு தொடக்க ப்பள்ளியில் படித்து வந்தார். காலை வழக்கம்போல் சக்தியம்மா பள்ளிக்கு சென்றார்.

    பின் மாணவி கழிப்பறைக்கு செல்லும் போது அங்கிருந்த கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பு சத்தியம்மாவை கடித்தது. இதனால் வலி தாங்கமுடியாமல், சத்தியம்மா வகுப்பறைக்கு ஓடி வந்தார்.

    இதையறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் மோகன்ராஜ், மாணவியின் பெற்றோ ருக்கு தகவலளித்தார். பின் சந்தியம்மாவை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு மாணவி சந்தியம்மாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • இந்தியாவின் அனைத்து மாநிலங்களுடைய பெயர்களையும், யூனியன் பிரதேசங்களின் பெயர்களையும், அதனுடைய தலைநகரங்களையும் வரிசையாக 47 செகண்ட்டில் கூறி சாதனை படைத் துள்ளார்.
    • உலக நாடுகளில் உள்ள 60 நாடுகளின் பெயர் களையும், கொடிகளையும், தலைவர்களுடைய பெயர்களையும், இந்திய சுதந்திர போராட்டத்தின் வீரர்களின் பெயர்களையும் சரளமாக கூறும் திறமை பெற்றுள்ளார்.

    கன்னியாகுமரி:

    கூட்டாலுமூடு அருகே சென்னிநின்றவிளையை சேர்ந்தவர்கள் பிரேம் குமார்-ராணி தம்பதியினர். இவரது மகள் ஸ்ருதி (வயது 4).

    இவர் கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் எல்.கே.ஜி. பயின்று வருகிறார். இவர் பிரிகேஜி பயிலும் போது பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டியில் முதல் பரிசு வென்றுள்ளார்.

    மேலும் இந்தியாவின் அனைத்து மாநிலங்க ளுடைய பெயர்களையும், யூனியன் பிரதேசங்களின் பெயர்களையும், அதனுடைய தலைநகரங்களையும் வரிசையாக 47 செகண்ட் டில் கூறி சாதனை படைத் துள்ளார்.

    தொடர்ந்து ஆங்கிலே எழுத்துக்களை இசட்டில் இருந்து திருப்பி ஏ வரை யிலும், உலக நாடுகளில் உள்ள 60 நாடுகளின் பெயர் களையும், அந்த நாட்டி னுடைய கொடிகளையும், தலைவர்களுடைய பெயர்களையும், இந்திய சுதந்திர போராட்டத்தின் வீரர்களின் பெயர்களையும் சரளமாக கூறும் திறமை பெற்றுள்ளார்.

    இவருடைய திறமையை பாராட்டி அப்துல் கலாம் வேர்ல்ட் ரெக்கார்டு என்ற அமைப்பு விருது வழங்கி உள்ளது. விருது பெற்ற மாணவி ஸ்ருதியை கூட்டாலுமூடுமெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் குமார், செய லாளர் துளசிதாஸ் (பொறுப்பு), பொருளாளர் சவுந்தரராஜன், துணை தலைவர் முருகன், முதல்வர் நாராயணன், துணை முதல்வர் சந்தோஷ் உட்பட ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினர்.

    • மதுரை மாணவிக்கு அமைச்சர் மூர்த்தி நிதி உதவி வழங்கினார்.
    • இவர் கிக் பாக்சிங் போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் வண்டியூர் பகுதி 40-வது வார்டு பாரதி புரத்தை சேர்ந்த பட்டதாரி மாணவி அனிதா. இவர் கிக் பாக்சிங் போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளார். அவர் டெல்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

    இது பற்றி அறிந்த அமைச்சர் பி.மூர்த்தி மாணவி அனிதாவை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் ரூ.50 ஆயிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, மாநகராட்சி கவுன்சிலர்கள் துரைப்பாண்டியன், கதிரவன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மாணவ,மாணவிகளுக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் கடந்த 17-ந் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
    • 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஏறி பந்து போட்டியில் பல்லடம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம், மாவட்ட விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பிடித்த விவேகானந்தா பள்ளி மாணவிகள்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ,மாணவிகளுக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் கடந்த 17-ந் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பி.வி.கே.என். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஏறி பந்து போட்டியில் பல்லடம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவிகளை, பள்ளி தாளாளர் சுகந்தி முத்துக்குமார், நிர்வாக அறங்காவலர் பிரேம் அஸ்வத்,முதல்வர் லவ்லின் ராஜகுமாரி, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள்,மாணவ,மாணவிகள் பாராட்டினர்.

    • குமார் தனது மனைவி சரஸ்வதி (30) மற்றும் அவரது குழந்தைகள் யாழினி (11), யமுனா (13), தனுஷ்கா (3) தட்சணா (2) ஆகியோரை அழைத்துக் கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 35). இவர் தனது மனைவி சரஸ்வதி (30) மற்றும் அவரது குழந்தைகள் யாழினி (11), யமுனா (13), தனுஷ்கா (3) தட்சணா (2) ஆகியோரை அழைத்துக் கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    கரையான்பட்டி பகுதியில் சென்றபோது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 5 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் யாழினிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு யாழினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தில் சாலையில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மணப்பாறை கரையான்பட்டி பகுதியைச் சேர்ந்த செகப்பாயி (60) என்ற பெண்மணியும் காயமடைந்தார். இது தொடர்பாக காரை ஓட்டிச் சென்ற மண்ணச்சநல்லூர் பழைய நல்லூர் பிடாரி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள பூனாம்பாளையத்தை அடுத்த மந்திரியார்ஓடை பகுதியை சேர்ந்தவர் முருகேசன், விவசாயி. இவரது மகன் பிரகாஷ் (9). அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று பிரகாசின் பெற்றோர் வெளியூர் புறப்பட்டு சென்றனர். மகனை பக்கத்து வீட்டை சேர்ந்தவரிடம் ஒப்படைத்து சென்றிருந்தனர். இதற்கிடையே அவர் தனது விவசாய நிலையத்தை உழுவதற்காக சென்றார். அவருடன் பிரகாசும் டிராக்டரில் சென்றிருந்தார்.

    உழவுப்பணி நடைபெற்றபோது எதிர்பாராதவிதமாக டிராக்டரில் அமர்ந்திருந்த பிரகாஷ் தவறி விழுந்தார். இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பிரகாஷ் உடல் நசுங்கி பலியானார். இந்த விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • 17-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.
    • திருவட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே மேக்கோடு, செங்கோடி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு மரிய மிறியல் என்ற மனைவியும் பெனிஷா (வயது 21) என்ற மகளும் உள்ளனர். பெனிஷா குலசேகரம் அருகே தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார்.

    கடந்த 17-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. கல்லூரிக்கு சென்று விசாரித்தபோது அங்கு காணவில்லை. உடனே உறவினர்கள் வீடு, தோழிகளிடம் விசாரித்தபோது எங்கே சென்றார் என்பது தெரியவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் ஆக இருந்தது. பெனிஷாவின் தாயார் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • செல்போன் தர மறுத்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்துக்கொண்டார்.
    • 2 நாட்களாக மாணவி முத்துபிரியா வீட்டில் சண்டையிட்டு கோபித்துக்கொண்டு சாப்பிட மறுத்துள்ளார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் குதிரைசாரி குளத்தை சேர்ந்தவர் தில்லையப்பன். இவரது மகள் முத்து பிரியா(வயது18). இவர் திருமங்கலத்தில் உள்ள அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    மாணவி பிரியா ஆன்ராய்டு செல்போன் வைத்துள்ளார். ஆகவே அடிக்கடி செல்போனில் மூழ்கியதால் அவருக்கு படிப்பில் நாட்டம் குறைந்த தாக கூறப்படுகிறது.இதனால் பெற்றோர் கண்டித்து அவரிடமிருந்து செல்போனை வாங்கி வைத்து கொண்டனர்.

    தனது செல்போனை திருப்பி தருமாறு கேட்டு கடந்த 2 நாட்களாக மாணவி முத்துபிரியா வீட்டில் சண்டையிட்டு கோபித்துக்கொண்டு சாப்பிட மறுத்துள்ளார். இந்நிலையில் விரக்தி யடைந்த மாணவி நேற்று இரவு வீட்டில் தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலை குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
    • நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி நாகர்கோவில் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் ஜெயராம் (வயது 26). இவர் மாணவியை காதலிப்பதாக கூறி அவருக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்தார். மாணவி பள்ளிக்கு செல்லும்போதும் பின் தொடர்ந்து வந்து தொந்தரவு செய்தார். தன்னை காதலிக்க மறுத்ததால் மாணவியை தாக்கியதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் மாணவி யின் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் வெளி யிடுவதாக ஜெயராம் மிரட்டி னார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுது உள்ளார்.

    இதையடுத்து நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்த னர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஜெயராம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ஜெயராமிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் காந்தி பிறந்த நாளையொட்டி கடந்த 12-ந்தேதி பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • பரிசு தொகையையும், பாராட்டு சான்றையும் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வழங்குகிறார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் காந்தி பிறந்த நாளையொட்டி கடந்த 12-ந்தேதி நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கிடையே பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.

    பேச்சுப்போட்டியில் 2 மாணவர்கள் மற்றும் 13 மாணவிகள் என மொத்தம் 15 பேர் கலந்துகொண்டனர். கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் கல்லூரி மாணவர் 1, மாணவிகள் 13 பேர் என மொத்தம் 14 மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பேச்சுப் போட்டியில் முதல் பரிசு தொகை ரூ. 5 ஆயிரத்தை 10 -ம் வகுப்பு மாணவி அக் ஷரா, இரண்டாம் பரிசுத் தொகை ரூ.3 ஆயிரத்தை 12 -ம் வகுப்பு மாணவி நீது, மூன்றாம் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரத்தை 11 -ம் வகுப்பு மாணவி நிபிஷா, சிறப்பு பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம் 9 -ம் வகுப்பு மாணவர் கார்த்திகேயன் மற்றும் 7 -ம் வகுப்பு மாணவி லேகா ஆகியோர் பெற்றனர்.

    கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் முதல் பரிசுத் தொகை ரூ.5ஆயிரத்தை முதுகலை ஆங்கிலம் துறை மாணவி கனிஷ்மா, இரண்டாம் பரிசுத் தொகை ரூ. 3 ஆயிரத்தை இளங்கலை கணித துறை மாணவி நேஹா, மூன்றாம் பரிசுத் தொகை ரூ.2 ஆயிரத்தை முதுகலை வணிகத்துறை மாணவர் டெல்ஜின் ஆகியோர் பெற்றனர். பின்னர் பரிசு தொகையையும், பாராட்டு சான்றையும் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வழங்குகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்று வருகிறார்.
    • இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பளுகல் போலீசார் அங்கு சென்று மாணவியிடம்விசாரணை நடத்தினர்.
    • தொடர்ந்து போலீசார் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குழித்துறை, அக். 13-

    குமரி மாவட்டம் தமிழக-கேரள எல்லை பகுதியான பளுகலை அடுத்த குட்டைக் கோடு பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வரு கிறது.

    இங்கு கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த மாணவி விடுதியில் தங்கி இருந்து படித்து வருகிறார். இவரது தாயார் வெளி நாட்டில் நர்சு வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் மாணவி யின் படிப்பு முடிந்த உடன் திருமணம் செய்து கொடுக்க வேண்டி அதற்கான ஏற்பாடு களை தாயார் செய்து வந்து உள்ளார். ஆனால் மாணவி கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

    இதனை கண்டித்த தாயார், மகள் காதலிப்பதாக தெரிய வந்த வாலிபரிடமும் செல்போனில் பேசி, தனது மகளை விட்டு செல்லுமாறு திட்டி உள்ளார்.

    இதுபற்றி அந்த வாலி பர், மாணவியிடம் கூறி உள்ளார். மேலும் அவரது தாயார் பேசியதை செல்போ னில் பதிவு செய்து அதனை மாணவிக்கு அனுப்பி உள்ளார். இதனால் மாணவி மன வருத்தம் அடைந்தார்.

    நேற்று இரவு மாணவி தான் தங்கி இருந்த விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆனால் அதில் தோல்வி கண்டு கீழே விழுந்ததில் அவரது 2 கால்களும் உடைந்ததாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ப்பட்டார்.

    தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பளுகல் போலீசார் அங்கு சென்று மாணவியிடம்விசாரணை நடத்தினர்.

    அப்போது மாணவி தூக்குப் போடவில்லை என்பதும், கல்லூரியின் மேல் மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார் என்பதும் தெரிய வந்தது. இதில் தான் மாணவியின் 2 கால்களும் உடைந்த நிலையில் உயிருக்கு போராடியபடி வலி தாங்க முடியாமல் கதறி அழுது உள்ளார்.

    அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த சக மாணவி கள் மற்றும் விடுதி காப்பா ளர்கள், மாணவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். கல்லூரி நிர்வாகம் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றதாக கூறிய நிலையில் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், காதல் விவகாரத்தில் மாணவி கல்லூரி கட்டிடத்தின் மேலி ருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றது தெரிய வந்து உள்ளது.

    தொடர்ந்து போலீசார் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கல்லூரி மாணவி, இளம்பெண் உள்பட 6 மாயமானார்கள்.
    • வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பெரிய புளியம்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் பாபுகண்ணன் (வயது 32). மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி அருகே உள்ள நல்லுக்குறிச்சி காலனியை சேர்ந்தவர் பாலு (40). இவர் திண்டுக்கல்லில் உள்ள தேங்காய் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செல்வி (36) என்ற மனைவியும், திருமுருகன் (13) என்ற மகனும், அனிதா (10) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த செல்வி தனது மகன், மகளுடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாலு வீரசோழன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர்.

    கல்லூரி மாணவி

    தேனி மாவட்டம் வாழை மரத்துப்பட்டியை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகள் ராஷ்மி(17). இவர் விருதுநகரில் உள்ள பெண்கள் கல்லூரியில் படித்து வந்தார்.

    இதற்காக விடுதியில் தங்கியிருந்தா ராஷ்மி சம்பவத்தன்று திடீரென்று மாயமானார். இதுகுறித்து அவரது தாய் மல்லிகா கொடுத்த புகாரின்பேரில் பாண்டியன் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பி பட்டியை சேர்ந்த கந்தம்மாள். இவரது மகன் லட்சுமணன்(14). சம்பவத்தன்று இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×