search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 136067"

    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
    • அவர் அடிக்கடி செல்போனில் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி வடக்கூர் கல்பாளைய தெருவை சேர்ந்தவர் தங்கம். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களின் மகள் ரம்யா (வயது 15).ரம்யா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கணவர் இறந்த பின்பு தங்கம் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    ரம்யா பள்ளிக்கு சென்று வந்த பின்னர் தாயாருக்கு உதவி செய்து விட்டு வீட்டுக்கு சென்று விடுவார். படித்து விட்டு அவரது அறையில் தூங்க செல்வார். இன்று காலை ரம்யா நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அவரது தாயார் தங்கம், அறைக்கு சென்று கதவை தட்டினார்.

    அறைக்கதவு திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து திறந்தார்.

    அங்கு ரம்யா, மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தங்கம் அலறினார்.

    இது பற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ரம்யா அடிக்கடி செல்போ னில் விளையாடி கொண்டிரு ந்ததாகவும், அதனை தாயார் கண்டித்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்தி ருப்பதாகவும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பேஸ்புக் மூலம் ஆத்தூர் வளையமாதேவி பகுதியை சேர்ந்த வாலிபருடன் வழக்கம் ஏற்பட்டது.
    • அப்போது சிறுமியை பஸ்சில் வைத்து தினேஷ்குமார் பாலியல் பலாத்காரம் செய்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் 17வது சிறுமி, பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இவருக்கு பேஸ்புக் மூலம் ஆத்தூர் வளையமாதேவி பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் என்ற வாலிபருடன் வழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் மாணவியை, தினேஷ்குமார் நேரில் சந்தித்து அடிக்கடி பேசி வந்தார். அப்போது சிறுமியிடம் உன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.

    இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ந்தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார்.அவரது பெற்றோர் ஆத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதில் தனது மகளை ஆசை வார்த்தை கூறி தினேஷ்குமார் என்பவர் கடத்தி சென்று விட்டார் என கூறியிருந்தனர்.

    இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் விசாரணை நடத்தி கடத்தல் வழக்கு பதிவு செய்தார். தொடர்ந்து சிறுமியையும், தினேஷ் குமாரையும் போலீசார் தேடி வந்தனர்.கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி சிறுமியை போலீசார் மீட்டு விசாரித்தனர். விசா ரணையில் சிறுமியை திருமணம் செய்து கொள்வ தாக காதலன் தினேஷ்குமார் ஆசை வார்த்தை கூறி அவரை அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்றுள்ளார்.

    வண்டலூரில் உள்ள நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்த போது சிறுமிக்கு 17 வயது தான் ஆகிறது என்பதை அறிந்து அவர்கள் திருமணம் செய்து வைக்க மறுத்து மீண்டும் ஆத்தூருக்கு சென்னை, சேலம் தனியார் சொகுசு பஸ் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    ஸ்லீப்பர் கோச் பஸ்சில் இருவரும் ஒன்றாக வந்துள்ளனர். ஸ்கிரீனால் மூடப்பட்ட படுக்கையில் அவர்கள் படுத்திருந்தனர். உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் வந்த போது போக்குவரத்து நெரிசல் ஏற்படவே நீண்ட நேரம் பஸ் அங்கே நின்றது. அப்போது சிறுமியை பஸ்சில் வைத்து தினேஷ்குமார் பாலியல் பலாத்காரம் செய்தார்.பிறகு வீட்டிற்கு கொண்டு வந்து விட்டு தப்பிச் சென்றார் என்பது தெரியவந்தது.

    இதை அடுத்து தினேஷ்கு மார் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். நேற்று வளையமாதேவி பஸ் ஸ்டாப் பகுதியில் தினேஷ்குமார் நிற்பதாக கிடைத்த தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையான போலீசார் குறைந்து சென்று தினேஷ் குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்த னர்.இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மகளிர் போலீசார் நடவடிக்கை
    • பாதிக்கப்பட்ட மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதி

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கன்னியாகுமரி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.

    அதே கல்லூரியில் கன்னியாகுமரி சின்ன முட்டம் பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபரும் படித்து வருகிறார். அவருக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். அவரை பெற்றோர் தேடினார்கள். இந்த நிலையில் வீட்டிற்கு திரும்பிய மாணவி, தன்னுடன் படித்த வாலிபர் ஒருவர், நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்று தன்னை சீரழித்து விட்டதாக கூறினார்.இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்தனர். மகளிர் போலீசார் இது தொடர்பாக கல்லூரி மாணவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து போலீசார் இன்று காலை மாணவனை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    • ஆசிரியை மீது மாணவிகள் தொடர்ச்சியாக பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளனர்.
    • ஒரு மாணவியை மருமகளே என்று அழைத்ததுடன் அவரது மகனிடம் பேசச் சொல்லியதாக கூறப்படுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் கணிதப்பாட முதுகலை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் சாந்திப்பிரியா. இவர் மீது மாணவிகள் தொடர்ச்சியாக பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளனர்.

    அதன்படி மாணவி ஒருவரிடம் தீண்டாமை உணர்வுடன் நடந்து கொண்டதாகவும், வேதியியல் ஆய்வகத்தில் அமிலக் குடுவைகளின் அருகில் தனியாக அமர வைத்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில் பாடம் நடத்தாமல் குடும்ப விஷயங்களை பேசுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    மற்றொரு மாணவியை மருமகளே என்று அழைத்ததுடன் அவரது மகனிடம் பேசச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் மாணவிகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பாட விஷயமாக பேச வேண்டும் என்று கூறுவதுடன், பாடம் தவிர்த்து மற்ற விஷயங்களை பேசியுள்ளார். அழைப்பை ஏற்க மறுக்கும் மாணவிகளிடம் தேர்வு மதிப்பெண்களில் கை வைப்பேன் என்று மிரட்டியுள்ளார்.அத்துடன் மாணவிகள் அவருடைய காலில் விழுந்து ப்ளீஸ் என்று கெஞ்சினால் தான் பாடம் நடத்துவேன் என்று கூறியுள்ளார்.

    மேலும் மாணவிகள் ஒவ்வொரு நாள் தூங்கும்போதும் அந்த ஆசிரியையின் கணவரை நினைத்துக் கொண்டு தான் தூங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாணவிகளின் பாதுகாப்பிற்கும், பிற ஆசிரியர்கள் மீது பொய் புகார்கள் அளித்து வருவதால் பள்ளியின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதுடன் பள்ளியில் அசாதாரண சூழல் ஏற்படும் என்று பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் முடிவில் புகார் உண்மை என்று தெரிய வந்ததையடுத்து ஆசிரியை சாந்திப்பிரியா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக பூலாங்கிணறு அரசுப்பள்ளிக்கு மாறுதல் செய்து உத்தரவிட்டார். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டிய ஆசிரியை மீது அடுக்கடுக்காக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் பெற்றோரை வேதனையடைய வைத்துள்ளது.

    • தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணிக்கு காரைக்குடி மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
    • இந்த மாதம் இறுதியில் சென்னையில் நடைபெறும் ரவுண்ட் ராபின் போட்டிகளில் பிரியதர்ஷினி விளையாட உள்ளார்.

    காரைக்குடி

    காரைக்குடி சுப்பிரமணியபுரம் 5-வது வீதியில் வசித்து வரும் பாலமுருகன் மகள் பிரியதர்ஷினி. இவர் அழகப்பா மெட்ரிகுலேசன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள இவர் சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பயிற்சியாளர் வரதராஜனிடம் பயிற்சி பெற்று வருகிறார். வலது கை லெக்ஸ்பின்னர், ஆல்ரவுண்டரான இவர் கடந்த ஆகஸ்டு 18-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தமிழ்நாடு பெண்கள் 16 வயதுக்குட்பட்டோர் அணிக்கான தேர்வில் கலந்து கொண்டார்.

    நேற்று வெளியான அணித்தேர்வு முடிவில் மாணவி பிரியதர்ஷினி 15 வயதுக்குட்பட்டோருக்கான ரவுண்ட் ராபின் போட்டிகளுக்காக தமிழ்நாடு பெண்கள் அணிக்கு தேர்வாகி உள்ளார்.சிவகங்கை மாவட்டம் சார்பில் தமிழ்நாடு பெண்கள் அணிக்கு தேர்வான முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இந்த மாதம் இறுதியில் சென்னையில் நடைபெறும் ரவுண்ட் ராபின் போட்டிகளில் பிரியதர்ஷினி விளையாட உள்ளார். சாதனை படைத்த மாணவி பிரியதர்ஷினியை சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர் வரதராஜன், கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்தினர்.

    • மாணவிகள் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டியைச் சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 46). இவரது மகள் தனலட்சுமி (19). இவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் ராஜபாளையம் பகுதியில் உள்ள தாத்தா வீட்டில் இருந்த தனலட்சுமி சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சண்முகநாதன் ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனது மகளை அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் ஆசை வார்த்தை கூறி அழைத்து ச்சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள ரோசல்பட்டியைச் சேர்ந்த 14 வயது மாணவி அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டு வேலைகளை செய்யவில்லை என தாய் கண்டித்துள்ளார். இந்த நிலையில் அந்த மாணவி வீட்டில் வைத்திருந்த ரூ. 1,200, சைக்கிள், செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மாயமானார். இதுகுறித்து பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி மீனம்பட்டி பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவி நர்சிங் படித்து வந்தார். இவர் அடிக்கடி செல்போனில் பேசியதை தாய் கண்டித்துள்ளார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தாயின் கள்ளக்காதலன் - பாட்டி மீது வழக்கு
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் அருமனையை அடுத்த பத்து காணியை சேர்ந்த ஒரு பெண், கணவர் பிரிந்து சென்று விட்ட நிலையில் 15 வயது மகள் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். மகள்-மகன்கள் பள்ளியில் படித்து வந்தனர்.

    இந்தநிலையில் அந்தப் பெண்ணுக்கு கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த டிஜேஷ் என்பவ ருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு தனது குழந்தைகளுடன் அந்தப் பெண், டிஜேசுடன் சேர்ந்து வாழ்ந்து உள்ளார்.

    ஆனால் சில நாட்களில் அந்தப் பெண் வேறு ஒருவருடன் சென்று விட்டார். இதனால் அவரது குழந்தைகள், பாட்டி மற்றும் டிஜேஷ் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். இந்நிலையில் டிஜேஷ், 15 வயது சிறுமியான மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனை சிறுமி தனது பாட்டியிடம் கூறி உள்ளார். ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது.

    இதற்கிடையில் சிறுமிக்கு டிஜேஷ் பாலியல் தொல்லை கொடுப்பது அக்கம்பக்கத்தினருக்கு தெரிய வந்தது. அவர்கள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய த்திற்கு தகவல் கொடுத் தனர். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி மாணவி யின் பாட்டி மற்றும் டிஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • தி.மு.க. அரசு அனைத்திற்கும் மத்திய அரசு தான் காரணம் என பழி சுமத்தி வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண் ணாவின் 114-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடந்தது. கிழக்கு பகுதி செயலாளர் ஜெயகோபால் தலைமை தாங்கினார். கவுன்சிலர் அக்சயா கண்ணன் வரவேற்றார். கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜாராம், தெற்கு பகுதி செயலா ளர் முருகேஷ்வரன், மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் சுகுமாரன், கவுன்சிலர் அனிலா சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்தது, மாநக ராட்சியாக தரம் உயர்த்தி யது அ.தி.மு.க. ஆட்சியில் தான். நாகர்கோவில் மாநக ராட்சி பகுதியில் பல ஆண் டுகளுக்கு முன்பாக கட்டப் பட்ட பழமையான வீடுகள் மழையின் காரணமாக சேதமடைந்துள்ளது. இந்த வீடுகளை மீண்டும் கட்டுவ தற்கு கட்டிட வரைபட அனுமதிகோரி விண்ணப் பிக்கும் பொதுமக்களுக்கு கட்டிட வரைபட அனுமதி வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது. இதனால் பழைய வீடுகளை புதுப்பிக்க விரும்பும் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள் ளார்கள்.

    ஆட்சியின் குறையை வெளியே தெரியாமல் மறைக்க தி.மு.க. அரசு அனைத்திற்கும் மத்திய அரசு தான் காரணம் என பழி சுமத்தி வருகிறது. தாலிக்கு தங்கம், மகளிருக்கு ஸ்கூட்டர், இலவச மடிக்க ணினி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பச் சைமால், அனைத்துலகஎம். ஜி.ஆர். மன்ற இணைச்செய லாளர் வேலாயுதம், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், தலை மைக்கழக பேச்சாளர் முரு கானந்தம், எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் கிருஷ்ணதாஸ், இளைஞர் அணிஇணைச்செயலாளர் சிவசெல்வராஜன் ஆகி யோர் வாழ்த்தி பேசினர்.

    இதில் இணைச்செயலா ளர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர்கள் ஜெஸிம், மகராஜன் பிள்ளை மற்றும் விவசாய அணி மாவட்ட தலைவர் வடிவை மாதவன், ஆரல்வாய்மொழி பேரூர் செயலாளர் முத்துக் குமார், தோவாளை வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்.சுந்தர்நாத், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா, மாவட்ட பஞ்சாயத்து கவுன் சிலர் நீலபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 7-ம் வகுப்பு மாணவி பள்ளியின் அருகே உள்ள சாலையோர கடையில் குளிர்பானம் வாங்கி குடித்தார். திடீரென அந்த மாணவி மயக்கமடைந்தார்.
    • இதனால் அரசு பெண்கள் பள்ளி எதிரே சாலையோர கடைகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 7-ம் வகுப்பு மாணவி பள்ளியின் அருகே உள்ள சாலையோர கடையில் குளிர்பானம் வாங்கி குடித்தார்.

    இந்த நிலையில் பள்ளிக்குள் சென்ற மாணவி சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மாணவியை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எடப்பாடி தாசில்தார் லெனின் மற்றும் நகராட்சி அதிகாரிகள், போலீசார் மாணவியிடம் விசாரித்தனர். தொடர்ந்து அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    கடைகள் அகற்றம்

    இதனை தொடர்ந்து நகராட்சி அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், மாணவி குளிர்பானம் வாங்கி குடித்த பள்ளி அருகே சந்தை திடலில் சாலையோர கடை மற்றும் பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினர். அங்கு ரூ.2, ரூ.5, ரூ.10 விலையில் கலர் குளிர்பானங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிறமூட்டி குளிர்பானங்கள் விற்க அரசால் அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதி பெறாமல் குளிர்பானங்கள் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த அந்த குளிர்பானங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் நகராட்சி ஊழியர்கள், அங்கிருந்த கடைகளை அகற்றினர். கடை உரிமையாளர்களிடம் இனிமேல் இங்கு கடை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    கைப்பற்றப்பட்ட கலர் குளிர்பானங்கள் தரம் இல்லாதவை. உள்ளூரில் தயாரிக்கப்பட்டவை. இந்த குளிர்பானங்கள் தயாரித்தவர்கள் யார்? விற்பனைக்கு பயன்படுத்திய வாகனங்கள்? எங்கு வைத்து தயாரிக்கிறார்கள்? என்பது பற்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    • பக்கத்து வீடு என்பதால் சிறுமியிடம், கவுதம் நட்பாக பழகி வந்தார்.
    • 2 பேரும் கடந்த ஒரு வருடமாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

    கோவை 

    கோவை சிறுமுகையை சேர்ந்தவர் 17 வயது மாணவி.இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கவுதம்(வயது19).கூலித்தொழிலாளி. பக்கத்து வீடு என்பதால் சிறுமியிடம், கவுதம் நட்பாக பழகி வந்தார்.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி 2 பேரும் கடந்த ஒரு வருடமாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

    சம்பவத்தன்று மாணவியை கவுதம் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார். மாணவியும் அங்கு சென்றார். அப்போது அவரை அழைத்து கொண்டு கவுதம் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். அங்கு வைத்து மாணவியை திருமணம் செய்தார். பின்னர் தனது பெற்றோரிடம் சிறுமியை மேஜர் என கூறி அங்கு வசித்தார்.

    அப்போது பல முறை மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர் மாணவியை பரிசோதனை செய்த போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மேலும் மாணவி மைனர் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து டாக்டர் சம்பவம் குறித்து சிறுமுகை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கவுதம் சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    போலீசார் கவுதம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வீட்டில் இருந்தவர் திடீரென காணவில்லை.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே திருவிதாங்கோடு அடுத்த அந்தோணியார் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப்ராஜ். இவரது மகள் ஜெனிஷா (வயது 19). களியங்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்த ஜெனிஷாவை திடீரென காணவில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் அவரது தாயார் மரியபுஷ்பம் (44). இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் நீட் தேர்வு எழுதினார்கள்.
    • வேறு வழியில்லாமல் தான் இத்தேர்வை எழுதுவதாக கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி கருத்து

    சென்னை:

    இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு நீட் தேர்வு மதிப்பெண் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படியில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி நடந்தது. நாடு முழுவதும் இந்த தேர்வை எழுத 18 லட்சத்து 72 ஆயிரத்து 347 பேர் பதிவு செய்திருந்தனர். அதில் 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் தேர்வை எழுதினர்.

    இந்த நிலையில் தேர்வு முடிவு செப்டம்பர் 7-ந் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதனால் நேற்று காலையில் இருந்தே தேர்வு முடிவை மாணவ-மாணவிகள் எதிர்பார்த்தவண்ணம் இருந்தனர். பகல் 12 மணிக்கு வெளியாகும் என இணையதளத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் காத்து இருந்தனர்.

    ஆனால் இரவு 11 மணி வரை முடிவு வெளியாகவில்லை. அதன் பிறகு தேர்வு முடிவு வெளியானது. இந்த தேர்வில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதன் தேர்ச்சி சதவீதம் 56.3 சதவீதம் ஆகும்.

    கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றாலும் கடந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதத்தை விட சற்று குறைந்துள்ளது.

    நீட் தேர்வில் அகில இந்திய அளவில் ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா 720 மதிப்பெண்ணுக்கு 715 மதிப் பெண் பெற்று முதலிடம் பிடித்தார். அவரை தொடர்ற்து டெல்லி மாணவர் வத்சா அஷிஸ் பட்ரா 2-ம் இடமும், கர்நாடகா மாணவர்கள் 2 பேர் 3-வது 4-வது இடத்தையும் வகித்தனர்.

    தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண் பெற்று 30-வது இடம் பிடித்தார். மாணவி ஹரிணி 702 மதிப்பெண் பெற்று பட்டியலில் 43-வதுஇடம் பிடித்தார்.

    தமிழகத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம் 51.3 சதவீதமாகும்.

    அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதற்கு அடுத்ததாக மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேரும், ராஜஸ்தானில் 82 ஆயிரத்து 548 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

    தமிழகத்தில் நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் கடந்த வருடத்தை காட்டிலும் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 54 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    நீட் தேர்ச்சி விகிதம் குறைவுக்கான காரணம் குறித்து கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி கூறியதாவது:-

    நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் விரும்பி படிப்பது இல்லை. விருப்பத்துடன் படித்தால் அதிக மதிப்பெண் பெற முடியும். கட்டாயப்படுத்தி படிப்பதால் தான் தேர்ச்சி விகிதம் குறைகிறது. நீட் தேர்வு வேண்டாம் என்ற முடிவில் அரசு, மாணவர்கள், பெற்றோர்கள் ஒருமித்த கருத்துடன் இருக்கிறார்கள். நீட் தேர்வு வேண்டாம் என்ற மனப்பான்மை தான் மாணவர்களிடம் உள்ளது. வேறு வழியில்லாமல் தான் இத்தேர்வை எழுதுகிறார்கள். விரும்பி படிக்கும் மனப்பான்மை கிடையாது.

    மேலும் கொரோனா காலத்தில் மாணவர்கள் ஆன்லைன் வழியாக நீட் பயிற்சி பெற்றுள்ளனர். நடுத்தர வகுப்பினரும், சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களும் அதிக செலவு செய்து பயிற்சி பெற வாய்ப்பு இல்லை. அதனால் தான் இத்தகைய தேர்ச்சி விகிதம் அமைந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×