search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளிர்பானம் குடித்த  மாணவி மயக்கம்
    X

    குளிர்பானம் குடித்த மாணவி மயக்கம்

    • சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 7-ம் வகுப்பு மாணவி பள்ளியின் அருகே உள்ள சாலையோர கடையில் குளிர்பானம் வாங்கி குடித்தார். திடீரென அந்த மாணவி மயக்கமடைந்தார்.
    • இதனால் அரசு பெண்கள் பள்ளி எதிரே சாலையோர கடைகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 7-ம் வகுப்பு மாணவி பள்ளியின் அருகே உள்ள சாலையோர கடையில் குளிர்பானம் வாங்கி குடித்தார்.

    இந்த நிலையில் பள்ளிக்குள் சென்ற மாணவி சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மாணவியை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எடப்பாடி தாசில்தார் லெனின் மற்றும் நகராட்சி அதிகாரிகள், போலீசார் மாணவியிடம் விசாரித்தனர். தொடர்ந்து அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    கடைகள் அகற்றம்

    இதனை தொடர்ந்து நகராட்சி அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், மாணவி குளிர்பானம் வாங்கி குடித்த பள்ளி அருகே சந்தை திடலில் சாலையோர கடை மற்றும் பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினர். அங்கு ரூ.2, ரூ.5, ரூ.10 விலையில் கலர் குளிர்பானங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிறமூட்டி குளிர்பானங்கள் விற்க அரசால் அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதி பெறாமல் குளிர்பானங்கள் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த அந்த குளிர்பானங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் நகராட்சி ஊழியர்கள், அங்கிருந்த கடைகளை அகற்றினர். கடை உரிமையாளர்களிடம் இனிமேல் இங்கு கடை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    கைப்பற்றப்பட்ட கலர் குளிர்பானங்கள் தரம் இல்லாதவை. உள்ளூரில் தயாரிக்கப்பட்டவை. இந்த குளிர்பானங்கள் தயாரித்தவர்கள் யார்? விற்பனைக்கு பயன்படுத்திய வாகனங்கள்? எங்கு வைத்து தயாரிக்கிறார்கள்? என்பது பற்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×