search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 136067"

    • விஜயமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.
    • இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், மேட்டுப்புதூர் பகுதியில் தொழிலாளி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    அவர் விஜயமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.

    உடனடியாக அந்த தொழிலாளி அக்கம் பக்கத்தார் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் பிளஸ்-1 மாணவி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • உத்தப்ப நாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள கள்ளந்திரியை அடுத்த தொப்புளாம்பட்டியை சேர்ந்த மூர்த்தி மகள் அபிநயா (வயது 16). இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்தார்.

    அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு மூர்த்தி காப்பு கட்டி இருந்தார். இதனைப் பார்த்த அபிநயா, 'நானும் காப்பு கட்டுவேன்' என்று விருப்பம் தெரிவித்தார். அதற்கு மூர்த்தி சம்மதிக்கவில்லை. மேலும் அவர், மகளை திட்டினாராம். அதில் மனவேதனை அடைந்த அபிநயா, தந்தையிடம் கோபித்துக் கொண்டு பொய்கைகரைப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    அங்கு அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா பரிதாபமாக இறந்தார். அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தினர்.

    உசிலம்பட்டியை அடுத்த கொடிக்குளத்தை சேர்ந்த அன்புச்செல்வன் மனைவி ஆனந்தி (42). இவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஆனந்தி, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வாலந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை நல்லோச்சான்பட்டி, மேல தெருவை சேர்ந்தவர் பாக்யராஜ் (35). வயிற்று வலியால் அவதிப்பட்ட இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை நடந்தது. எனினும் வயிற்றுவலி தொடர்ந்து நீடித்து வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பாக்யராஜ், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • மதுரை அருகே பிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • தந்தை திட்டியதால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

    மதுரை

    மதுரை அருகே உள்ள கள்ளந்திரியை அடுத்த தொப்புளாம்பட்டியைச் சேர்ந்த மூர்த்தி மகள் அபிநயா (வயது 16). இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்தார். அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு மூர்த்தி காப்பு கட்டி இருந்தார். இதனைப் பார்த்த அபிநயா, 'நானும் காப்பு கட்டுவேன்' என்று விருப்பம் தெரிவித்தார்.

    இதற்கு மூர்த்தி சம்மதிக்கவில்லை. மேலும் அவர், மகளை திட்டினாராம். மனவேதனை அடைந்த அபிநயா, தந்தையிடம் கோபித்துக் கொண்டு பொய்கைகரைப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா பரிதாபமாக இறந்தார். அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தினர்.

    • தோழி வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே பள்ளியாடி பழையகடை பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் ஏற்றக்கோட்டில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மகள் அஜிஸ் மோள் (வயது22).கல்லூரி மாணவியான இவர் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து தோழி வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. தாயார் பல இடங்களில் தேடியும் காணவில்லை. பதறிப்போன தாயார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவி மாயானார்.
    • பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

    மதுரை

    கூடல்புதூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் நாகராஜன். கார் நிறுவனத்தில் காவலாளியாக உள்ளார். இவரது மகள் ஹரிபிரியா (வயது 20). தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 13-ந் தேதி அதிகாலை ஹரிபிரியா வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து தந்தை நாகராஜன் கொடுத்த புகாரின்பேரில் கூடல்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் மதுரைவீரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் மாசாணமுத்து. இவரது மகள் மாரீஸ்வரி (20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாரீஸ்வரி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கீழபட்டியை சேர்ந்தவர் மோகனலட்சுமி (22). தையல் முடித்திருந்த இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை பசுபதி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள பாவாலி காமாட்சி நகரை சேர்ந்தவர் வளர்மதி. இவரது மகள் முத்துலட்சுமி (25). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டிலிருந்த முத்துலட்சுமி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாயார் ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். அதில் உறவினர் குமார் என்பவருடன் மகள் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • இவரது மகள் அபிஷா (18). அபிஷா மணவிளையில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வருகிறார்
    • கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று வருவதாக கூறிச்சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே தலக்குளம் அடுத்த உடையார்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் டென்னிஸ் (வயது 42). இவரது மகள் அபிஷா (18). அபிஷா மணவிளையில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வருகிறார். இவர் நேற்று காலை திங்கள்நகரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று வருவதாக கூறிச்சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது தாயார் ரத்தினம் (38) இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    • கீழக்கரை அருகே பெட்டிக்கடையில் பணியாற்றிய மாணவியை மீண்டும் கல்லூரியில் ஈமான் அமைப்பினர் சேர்த்தனர்.
    • மாணவியின் சான்றிதழ்களை பெற்று கல்லூரி நிர்வாகத்திடம் பேசினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மாயாகுளம் பகுதியை சேர்ந்தவர் இழுவக்கா. இவரது கணவர் வேலு சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.கடல் பாசி சேகரித்து அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் கடைசி மகள் துர்கா (வயது19) கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    பொருளாதார நெருக்கடி காரணமாக முதலாம் ஆண்டு படிப்புடன் நின்று விட்டார். பின்னர் செய்யது அப்பா தர்கா அருகில் உள்ள பெட்டிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

    இந்த நிலையில் துபாயில் உள்ள ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் கீழக்கரை வந்தார். அப்போது பெட்டிக் கடையின் உரிமையாளர் ஜகுபர், ஹமீது யாசினை சந்தித்து கடையில் பணியாற்றும் துர்கா பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று கல்லூரி படிப்பை ஒரு வருடம் படித்துவிட்டு வறுமையின் காரணமாக தொடர்ந்து படிக்க இயலாமல் நிறுத்தி 9 மாதம் ஆகிவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து துபாய் ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் அந்த மாணவியிடம் விசாரித்தார்.

    ஈமான் அமைப்பின் மூலம் துர்காவின் கல்வியை மீண்டும் தொடர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்து அதற்கான நடவடிக்கை எடுத்தார். மாணவியின் சான்றிதழ்களை பெற்று கல்லூரி நிர்வாகத்திடம் பேசினார். இதனைத் தொடர்ந்து கோரிக்கை விடுத்த 3 மணி நேரத்தில் மாணவி துர்கா மீண்டும் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். கல்லூரி படிப்பு நிறைவு செய்யும் வரை முழு செலவையும் ஈமான் தலைவர் ஹபிபுல்லா கான் மற்றும் நிர்வாகிகள் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

    மீண்டும் கல்லூரி படிப்பை தொடர உதவிய துபாய் ஈமான் அமைப்பினருக்கு மாணவியின் தாய் மற்றும் மாணவி துர்கா கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

    • காயகல்ப பயிற்சி, எளிய உடற்பயிற்சிகள் மாணவிகளுக்கு கற்பிக்கப்பட்டன.
    • கல்பம் மற்றும் யோகாசன பயிற்சிகளால் மனது ஒருநிலைப்படும்.

    உடுமலை :

    உடுமலை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை மற்றும் அரசு கலைக்கல்லூரி இணைந்து கல்லூரி மாணவிகளுக்கு யோகாசன பயிற்சிகளை நடத்தினர். இதில் காயகல்ப பயிற்சி ,எளிய உடற்பயிற்சிகள் மாணவிகளுக்கு கற்பிக்கப்பட்டன. உடுமலை மனவளக்கலை அறக்கட்டளை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்கள் பயிற்சியை நடத்தினர். கல்பம் மற்றும் யோகாசன பயிற்சிகளால் மனது ஒருநிலைப்படும் .படிக்கும் மாணவிகள் மனநிலை ஒருமைப்படுவதற்கு இந்த யோகாசனம் மற்றும் காயகல்ப பயிற்சிகள் உதவும் என பயிற்சி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    4 நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில் கல்லூரி மாணவ மாணவிகள்ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் படிக்கும் மாணவர்கள் அதன் பலனை உணர முடியும் என தெரிவித்தனர்.

    • மாயமான மாணவி பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு பயின்று வருகிறார்.
    • சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார்

    கன்னியாகுமரி:

    தெங்கம்புதூர் அருகே உள்ள புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் டீக்கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் அனுஷா (வயது 19) நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று முன்தினம் காலை அனுஷா வீட்டில் இருந்து வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றார். மாலையில் அனுஷா வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவர் தந்தை மணி அனுஷாவை பல இடங்களிலும், உறவினர் வீட்டிலும் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் வழக்குப் பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்.

    • நிகிதா சோமரசம்பேட்டை–யில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
    • சாலையைகடக்க முயன்ற போது அந்தவழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நிகிதா மீது மோதியது

    திருச்சி,

    கரூர் மாவட்டம் குளித்தலை முதலைப்பட்டி காவல்நகர் பகுதியை சேர்ந்தவர் வண்ணான் (வயது45) இவரது மகள் நிகிதா(12).இவர் சோமரசம்பேட்டை–யில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்றைய தினம் பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக வியாழன் மேடு சாலையில் சோமரசம்பேட்டை பஸ் நிறுத்த பகுதிக்கு நடந்து சென்றார்.

    பின்னர் சாலையைகடக்க முயன்ற போது அந்தவழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நிகிதா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழுமணி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். டாக்டர்அவரை பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஸ்ரீரங்கம் இனாம்புலியூர் கீழமேடு பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்( 23) என்ற இளைஞரும் படுகாயம் அடைந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெ–க்டர் வீரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 7ம் வகுப்பு மாணவி மோட்டார் சைக்கிள் மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • போக்சோ வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டை
    • குழந்தைகள் நல அதிகாரிகளும் விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இங்கு அஞ்சு கிராமம் புது குடியிருப்பை சேர்ந்த ஆம்ஸ் நல்லதம்பி (வயது 45) என்பவர் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆசிரியர் ஆம்ஸ்நல்லத்தம்பி 7-ம் வகுப்பு மாணவியிடம் வகுப்பறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து அந்த மாணவி சக ஆசிரியையிடம் இதுகுறித்து கூறியுள்ளார். பின்னர் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வகுப்பறையில் பள்ளி மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷம் செய்த சம்பவம் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தெரிய வந்தது.

    இது தொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து ஆம்ஸ் நல்லதம்பி மீது மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.பள்ளி வகுப்பறையில் மாணவியிடம் ஆசிரியர் சில்மிசத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகிறார்கள். இங்கு உள்ள செங்கல் சூளை ஒன்றில் பெண் ஒருவர் குளிப்பதை வாலிபர் ஒருவர் எட்டிப் பார்த்துள்ளார்.இதையடுத்து அந்த பெண் செங்கல்சூலை உரிமையாளரிடம் நடந்த தகவலை கூறியுள்ளார். செங்கல்சூளை உரிமையாளர் இது குறித்துஅந்த வாலிபரிடம் தட்டி கேட்டபோது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    அந்த வாலிபரை செங்கல் சூளை உரிமையாளர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வாலிபர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.அந்த வாலிபர் கொடுத்த புகாரின் பேரில் செங்கல்சூளை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பெண் புகாரின் பேரில் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×