search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைரவர்"

    • இந்த பரிகாரம் செய்தால் பணம் குவியும், அஷ்ட ஐஸ்வர்யமும் பெறலாம்.
    • பைரவருக்கு இந்த பரிகாரம் செய்தால் கடன் தீர்ந்து பலன் உடனே கைகூடும்.

    கடன் வாங்கி வட்டி, அசல் கட்ட இயலாதவர்கள் ஞாயிறு ராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரி பருப்பு மாலை கட்டி, செந் தாமரை பூ அணிவித்து, கேரட் அல்வா, கோதுமை அரிசி பலகாரம், அவல், கேசரி, சிவப்பு அப்பிள் படையலிட்டு, புனுகு சாற்றி வெண்பொங்கல் நைவேத்தியம் இடவும்.

    ஒரு தலை வாழை இலை வைத்து அதன் மீது நெல் 1 படி பரப்பி அதன் மீது ஒரு தலை வாழை இலை வைத்து பச்சரிசி 1 படி குங்குமம் சிறிதளவு மஞ்சள்பொடி, நெய் கலந்து பரப்பி அதைச்சுற்றிலும் ஐந்து எண்ணெய், சிறிதளவு மஞ்சள்தூள் கலந்து முப்பது பழங்களில் மிளகு தீபம் ஏற்றி ஸ்ரீ சொர்ணபைரவரை வழிபடலாம்.

    இந்த வழிபாட்டை செய்யும்போது பைரவி தேவி காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து, ஸ்ரீ பைரவரை ஒன்பது வாரம் தொடர்ந்து அஷ்டோத்திர அர்ச்சனை செய்து வழிபட செல்வச் செழிப்பைப்பெறலாம். பணம் குவியும், அஷ்ட ஐஸ்வர்யமும் பெறலாம்.

    பெரிய பழங்களில் தீபம் ஏற்ற முடியவில்லை என்றால் சிறிய பழங்களில் ஏற்றலாம். அல்லது சிறிய வெங்கல கிண்ணத்தில் முப்பது மிளகைத்தூள் செய்து தீபம் ஏற்றலாம் அல்லது ஒரு பூசணியில் மிளகு தீபம் ஏற்றலாம்.

    இந்த விசேஷ பரிகாரத்தை மாதம் ஒரு முறை வரும் ஜனம அல்லது த்ரிஜன்ம நஷத்திரம் அன்றும் செய்வது சாலச்சிறந்தது. மற்றும் பவுர்ணமியும், வளர்பிறை அஷ்டமி நாளிலும் இந்தப் பூஜையை செய்வதால் நிம்மதியாக வாழலாம். நமது கவலைகள் பிரச்சினைகள், ஏக்கங்கள், சோகங்கள், இப்படி அனைத்தையும் போக்குவதற்கு ஓர் அரிய உபாயம் இந்த பூஜை.

    ஸ்ரீ ஸ்வர்ண பைரவர் மந்திரம் ஜபிக்கும்போது, ஏலக்காய் சிறிதளவு குங்குமம், மஞ்சள், நெய் கலந்து முத்துக்களால் பைரவர் திருவடியில் அர்ச்சனை செய்யலாம். பைரவருக்கு ஏலக்காய் மாலை செலுத்தலாம். ஒரு பிடி ஏலக்காயை பைரவர் பாதத்தில் வெற்றிலை மேல் வைக்கலாம் கடன் தீர்ந்து பலன் உடனே கைகூடும்.

    • சொர்ண ஆகர்ஷண பைரவா் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினார்.
    • சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக அருள் பாலிப்பவர் சொர்ண ஆகர்ஷண பைரவர். இவருக்கு, ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

    அப்போது பக்தர்களால் வழங்கப்பட்ட சந்தனம், மஞ்சள், திருமஞ்சன பொடி, பால், தேன், இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து சொர்ண ஆகர்ஷண பைரவா் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என அழைத்து சாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து அரளி உள்ளிட்ட பூக்களால் மலர் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் தமிழகத்தின் பெரும்பான்மை பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.

    இதேபோல் கொடைக்கானல் கீழ்மலை தாண்டிக்குடி பாலமுருகன் கோவிலில் தேய்பிறை அஷ்டமி, கார்த்திகை பூைஜ நேற்று நடந்தது. பின்னர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்திலும், கால பைரவர் பூ அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சிவபெருமானின் அறுபத்து நான்கு அவதாரங்களில் ஒன்று பைரவ அவதாரம்.
    • பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது.

    தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின்

    தளர்வுகள் தீர்ந்து விடும்

    மனந்திரந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்

    மகிழ்வுகள் வந்து விடும்

    சினந்தவிர்த் தன்னையின் சின்மயப் புன்னகை

    சிந்தையில் ஏற்றவனே

    தனக்கிலை யீடு யாருமே என்பான்

    தனமழை பெய்திடுவான் !!

    வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்

    வாரியே வழங்கிடுவான்

    தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட

    தானென வந்திடுவான்

    காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்

    காவலாய் வந்திடுவான்

    தனக்கிலை யீடு யாருமே என்பான்

    தனமழை பெய்திடுவான் !!

    முழுநில வதனில் முறையொடு பூஜைகள்

    முடித்திட அருளிடுவான்

    உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான்

    உயர்வுறச் செய்திடுவான்

    முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து

    முடியினில் சூடிடுவான்

    தனக்கிலை யீடு யாருமே என்பான்

    தனமழை பெய்திடுவான் !!

    நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான்

    நான்முகன் நானென்பான்

    தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ரசிப்பான்

    தேவைகள் நிறைத்திடுவான்

    வான்மழை எனவே வளங்கக்ளைப் பொழிவான்

    வாழ்த்திட வாழ்த்திடுவான்

    தனக்கிலை யீடு யாருமே யென்பான்

    தனமழை பெய்திடுவான் !!

    பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்

    பூரணன் நான் என்பான்

    நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை

    நாணினில் பூட்டிடுவான்

    காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்

    யாவையும் போக்கிடுவான்

    தனக்கிலை யீடு யாருமே என்பான்

    தனமழை பெய்திடுவான் !!

    பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்

    பொன்குடம் ஏந்திடுவான்

    கழல்களில் தண்டை கைகளில் மணியணி

    கனகனாய் இருந்திடுவான்

    நிழல் தரும் கற்பகம் நினைத்திடப் பொழிந்திடும்

    நின்மலன் நானென்பான்

    தனக்கிலை யீடு யாருமே யென்பான்

    தனமழை பெய்திடுவான் !!

    சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான்

    சத்தொடு சித்தானான்

    புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்

    புண்ணியம் செய்யென்றான்

    பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்

    பசும்பொன் இதுவென்றான்

    தனக்கிலை யீடு யாருமே யென்பான்

    தனமழை பெய்திடுவான் !!

    ஜெயஜெய வடுக நாதனே சரணம்

    வந்தருள் செய்திடுவாய்

    ஜெயஜெய க்ஷேத்திர பாலனே சரணம்

    ஜெயங்களைத் தந்திடுவாய்

    ஜெயஜெய வயிரவா செகம்புகழ் தேவா

    செல்வங்கள் தந்திடுவாய்

    தனகிலை யீடு யாருமே யென்பான்

    தனமழை பெய்திடுவான் !!

    • இத்தலம் பைரவரின் இதய தலமாக விளங்குவதாக சொல்கிறார்கள்.
    • பைரவ தீர்த்தம், வடுக தீர்த்தம் என்றழைக்கப்படும் திருக்குளம் உள்ளது.

    பழம்பெருமை வாய்ந்த இந்தத் தலம் வீரபாண்டியபுரம் என்று முன்பு அழைக்கப்பட்டு வந்துள்ளது. இத்தலத்திற்கு மேலும் வடுகநாதபுரி, வடுகநாதபுரம், வடுகன்மூதூர், வயிரவநகர், வயிரவமாபுரம் எனவும் பல்வேறு பெயர்கள் உள்ளன.

    தல மூர்த்தி: வளரொளிநாதர் (வைரவன்)

    தல இறைவி: வடிவுடையம்பாள்

    தல விருட்சம்: அழிஞ்சில் மரம் (ஏறழிஞ்சில்)

    தல தீர்த்தம்: வைரவர் தீர்த்தம்

    தலச்சிறப்பு : இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக ஏழிசைத் தூணுடன் அமைந்துள்ளது. நகரத்தார்களின் ஒன்பது நகரக் கோவில்களுள் ஒன்றாகும்.

    நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.45 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.45 மணி வரை திறந்திருக்கும்.

    சிவபெருமானுடைய பல வடிவங்களில் ஒன்று பைரவர். சிவபுராணமும், கந்தபுராணமும் பைரவரைப் பற்றி பாடுகின்றன. பிரம்மாண்ட புராணத்தில் பைரவரைப் பற்றிய குறிப்பு உள்ளது. சிவபுராணத்தில், சிவபெருமான் பிரம்மனுடைய அகந்தையை அடக்குவதற்காக, தனது நெற்றிப் புருவ மத்தியில் இருந்து பைரவரை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

    பின்னர், தன்னை உருவாக்கியதன் நோக்கம் என்னவென்று பைரவர் சிவனிடம் கேட்க, பிரம்மனின் அகந்தையை அடக்க அவரது ஐந்தாவது தலையை கொய்யச் சொன்னார். அவ்வாறே செய்தார் பைரவர். இதனாலேயே, பைரவர், ஒரு கையில் தண்டமும், மற்றொரு கையில் பிரம்மனுடைய தலையும் கொண்டு, காலில் சிலம்புடனும், முத்துமாலையும், கபால மாலையும் கழுத்தில் அணிந்தும் இருப்பவராக வர்ணிக்கப்படுகிறார்.

    நான்கு வேதங்களையும் நாய் உருவத்திற்குள் அடக்கி அதனையே தனது வாகனமாக்கிக் கொண்டார். எல்லா திருக்கோயில்களையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் காக்கும் கடவுளாக பைரவர் உள்ளார். எல்லா சிவ ஆலயங்களிலும், விநாயகரில் ஆரம்பிக்கும் பரிவாரத் தெய்வங்கள் பைரவருடன் முடிவதைப் பார்க்கலாம்.

    வைரவன் கோயில் பைரவர், பிரம்மனின் கபாலத்தையும், திருமாலின் தோலை சட்டையாகவும் அணிந்து காணப்படுவதாக அக்கோயில் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.முன்னொரு காலத்தில், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் போன்ற அசுரர்கள் இழைத்த பெருங்கொடுமை தாங்காத தேவர்கள் சிவபிரானிடம் முறையிட, அவர் அந்தணர் கோலத்தில் இவர்கள் முன் தோன்றி, அழிஞ்சில்வனம் சென்று அவர்களுடைய துயரங்களை போக்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

    அவ்வாறே தேவர்கள் அந்த இடத்திற்கு வந்த போது, அங்கே வளரொளிநாதரும், வடிவுடையம்பாளும் கோயில் கொண்டிருப்பதைக் கண்டனர். அப்போதுதான் தேவர்களுக்கு, முன்பு திருமாலுக்கும், பிரம்மனுக்கும் தானே பிரம்மம் என்ற போட்டி வந்தபோது ஒளி வடிவமாக சிவன் தோன்றி, பின்பு மலையாகக் குளிர்ந்ததும், அவருக்கே வளரொளி நாதர் என்ற பெயர் உருவானதும் நினைவில் வந்தது.அந்த வளரொளிநாதரே தேவர்களுக்காக பைரவர் வடிவம் கொண்டார். அழிஞ்சில் மரம் இக்கோயில் ஸ்தல விருட்சமாக உள்ளது. இத்திருக்கோயில் கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்கிறது.

    கிழக்கு நோக்கிய திருக்கோயில். கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், நடராஜர் சபை, முன் மண்டபம், பலி பீடம், கொடி மரம், அம்மன் சந்நதி, பள்ளியறை, பைரவர் சந்நதி, நந்தி மண்டபம், மேல் சுற்று பிராகாரம், திருச்சுற்று மாளிகை, நடராஜர் கோபுரம், பரிவார சந்நதிகள், யாக சாலை, கோயில் கிணறு, மாலை கட்டும் மேடை, சந்தனம் இழைக்கும் மேடை, ராஜகோபுரம், பைரவர் பீடம், பைரவர் தீர்த்தம் என்று பல பகுதிகளைக் கொண்டுள்ளது.

    கணபதி, முருகன், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் சந்நதிகளும் அமைந்துள்ளன. சண்டிகேஸ்வரர் சந்நதி அருகே தல விருட்சமான அழிஞ்சில் மரம் கல்லால் செய்து நிறுவப்பட்டுள்ளது. உட்பிராகாரத்தில் அறுபத்து மூவர், கன்னி மூலை கணபதி, தட்சிணாமூர்த்தி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, ஆறுமுகப் பெருமான்-வள்ளி-தெய்வயானை, சரஸ்வதி, ஆதி வடிவுடையம்மன் ஆகிய தெய்வங்களின் சந்நதிகளும் அமைந்துள்ளன. நவகிரக மேடையும் உண்டு.

    ராஜகோபுரத்தின் எதிரே கோயில் ஊருணி நான்கு துறைகளுடன் மிக அழகாக அமைந்துள்ளது. வளரொளிநாதர் கிழக்கு நோக்கி அருள்கிறார். கருவறையில் வீற்றருளும் மூலவர் பழங்காலத்தில் அழிஞ்சில் மரத்தின் அடியில் அமைந்து இருந்ததாகச் சொல்கிறார்கள். மகா மண்டபத்தின் முகப்பு வாயிலில் ஆரம்பித்து காணப்படும் எண்ணிலடங்கா சிற்பங்களின் வடிமைப்பு கண்களையும் மனதையும் கவர்கின்றன.

    மகாமண்டபத் தூண்கள் முழுவதிலும் புடைப்புச் சிற்பங்களைக் காணலாம். ராமர், ஹனுமான் சிற்பங்களும் அருகருகே உள்ளன.கருவறை சுற்றுப் பிராகாரத்தில் ராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கி நிற்பது வேறெங்கும் காணவியலாத அதிசயக் கோலம். ஹனுமன் இலங்கையில் சீதாதேவி நலமுடன் உள்ளார் என்ற செய்தியை ராமரிடம் தெரிவித்தார். அதுகேட்டு மகிழ்ந்த ராமர் நன்றிப் பெருக்குடன் ஹனுமனை கை கூப்பி வணங்கி நிற்கும் காட்சியே இது! வேறெங்கும் காண இயலாதது! இதனாலேயே ராமரது சிலையை விட ஹனுமனது சிலை சற்று பெரியதாக உள்ளது போலும்!

    கோயிலின் உள் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு அருகில் கண்ணப்ப நாயனாரின் சிற்பம் சிவபிரானுடன் காணப்படுகிறது.நடராஜர் சபையின் முன் மண்டப வாயிலில் பாயும் குதிரையை அடக்கி ஆளும் வீரர்களின் சிற்ப அமைப்பு சிறப்பு. வீரர்களின் உடை அலங்காரங்கள், உடலமைப்புகள், முகபாவம் எல்லாம் தத்ரூபமாய் அமைந்து நம்மை வியக்கவைக்கின்றன.

    ராஜகோபுர வாயில் நிலைகளில் உள்ள கொடிப் பெண்களின் சிற்பங்களும் முகபாவம், உடை, தலை அலங்காரம் எல்லாம் அக்காலத்திய நாகரிகத்தை நமக்குக் காட்டும் கண்ணாடிகளாகத் திகழ்கின்றன. திருக்கோயிலின் உள்ளே கல் மண்டபத்தின் மேற்கூரையில் ஒரு சிறு இடைவெளிகூட இல்லாமல் பல்வேறு வடிவங்கள் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. எல்லாமே இயற்கை வண்ணங்களால் உருவானவை. அவற்றில் திருமாலின் பத்து அவதாரங்கள், பஞ்ச பாண்டவர்கள், வளரொளிநாதர், வடிவுடையம்மன் ஆகிய ஓவியங்களைக்குறிப்பிட்டுச் சொல்லலாம்.

    இத்தலம் பைரவரின் இதய தலமாக விளங்குவதாக சொல்கிறார்கள். பைரவ தீர்த்தம், வடுக தீர்த்தம் என்றழைக்கப்படும் திருக்குளம் உள்ளது. தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்க வைரவர் தனது சூலத்தை கோயிலின் தென் திசைப் பக்கம் ஊன்ற, அங்கு ஓர் ஊற்று தோன்றியது. இன்றும் வற்றாத ஊற்று அது என்கிறார்கள்.

    திருக்கோயில் இருப்பிடம்:

    சிறப்புமிகு வைரவன் கோவில், காரைக்குடியில் இருந்து திருப்புத்தூர் செல்லும் பாதையில் திருப்புத்தூரில் இருந்து 7 km தொலைவிலும், காரைக்குடியில் இருந்து 14 km தொலைவிலும், குருஸ்தலம் பட்டமங்கலத்தில் இருந்து 5 km தொலைவிலும், திருக்கோட்டியூரில் இருந்து 5 km தொலைவிலும் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து திருமெய்யம் வழியாக திருப்புத்தூர் என்னும் ஊருக்குச் செல்லலாம்.

    • சிங்கம்புணரி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் தண்ணாயிரம், மற்றும் ஸ்தானிகம் ரவிகுருக்கள் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தர்ம சம்வர்த்தினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு வடுகபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.இதையொட்டி வடுக பைரவருக்கு ம்ருதுஞ்ஜய ஹோமம், கணபதி ஹோமம் சத்ரு சம்கார ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைப்பெற்றது.பின்னர் பால், பன்னீர், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிசேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு. பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் தண்ணாயிரம், மற்றும் ஸ்தானிகம் ரவிகுருக்கள் செய்திருந்தனர்.

    • பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதிப்பது நல்லது.
    • துஷ்ட சக்திகளினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள்.

    ஆடி தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து நாம் மேற்கொள்ள வேண்டிய பைரவர் வழிபாடு முறையையும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

    ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் அஷ்டமி தினங்கள் வருகின்றன. இதில் தேய்பிறை அஷ்டமி தினம் சிவபெருமானின் ஒரு வடிவமாக தோன்றியவர் ஆன ஸ்ரீ பைரவரின் வழிபாட்டுக்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது. அதிலும் ஒவ்வொரு தினமும் இறைவழிபாட்டிற்குரிய தினமாக இருக்கும் ஆடி மாதத்தில் வியாழக்கிழமையில் தேய்பிறை அஷ்டமி வருவது மிகவும் விஷேச பலன்களை பக்தர்களுக்கு தரவல்ல ஒரு அற்புத தினமாக இருக்கிறது.

    வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமி அன்று ராகு கால நேரமான 1.30 மணியிலிருந்து 3.00 மணிக்குள்ளாக பைரவர் கோயில் அல்லது சிவன் கோயிலில் இருக்கின்ற சந்நிதிக்கு சென்று பைரவருக்கு சிவப்பு நிற மலர்களை சமர்ப்பித்து, செவ்வாழை நைவேத்தியம் செய்து, தேங்காயை இரண்டாக உடைத்து அதில் நெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி பைரவருக்குரிய மந்திரங்கள் துதித்து பைரவரை வணங்க வேண்டும். மேலும் இச்சமயத்தில் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 எண்ணிக்கையில் துதிப்பது நல்லது.

    மேற்கண்ட முறையில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியன்று விரதம் இருந்து பைரவரை வழிபடுபவர்களுக்கு சிறிது காலத்திலேயே எப்படிப்பட்ட பணக்கஷ்டங்களும் நீங்கும். தொழில், வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாமல் காக்கும். பொருட்கள் களவு போகாமல் பாதுகாக்கும். வருமானம் பெருகும். பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். துஷ்ட சக்திகளினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். உங்களுக்கு செய்யப்படும் மாந்திரீக ஏவல்கள், செய்வினை தந்திரங்கள் பலிக்காமல் போகும். கொடிய நோய்கள் அனைத்தும் சிறிது சிறிதாக குணமாகும்.

    • துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்.
    • பைரவ வழிபாட்டின் போது பயன்படுத்தும் ஒவ்வொரு பழத்திற்கும் வெவ்வேறு பலன்கள் உண்டு.

    பைரவ வழிபாட்டின் போது பயன்படுத்தும் ஒவ்வொரு பழத்திற்கும், காய்கறிக்கும் மகத்தான சக்தியும், வெவ்வேறு பலன்களும் உண்டு.

    1. தேங்காய் - குடும்ப சுபிட்சம், கணவன் மனைவி ஒற் றுமை உண்டாகும்.

    2.துரைஞ்சி நாரத்தை ராஜகனி - நரம்பு வியாதி திருமணம் தடை நீங்கும்.

    3. கொடை மிளகாய் - புற்று நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் தீரும்.

    4. கொய்யா பழம்/ கத்திரிக்காய் - நீரழிவு நோய், இருதய நோய், கிட்னி நோய்கள் குணமாகும்.

    5. பீட்ருட் - ரத்தம் சம்பந்தமான நோய்கள், எதிரிகள் நீங்கும். சகோதர ஒற்றுமை ஏற்படும்.

    6. பாகற்காய் - சனி பாதிப்பு நீங்கு, கர்ம தோஷம் நீங்கும், வம்சாவழி தோஷம் நீங்கும்.

    7. வில்வபழம்/ மாதுளம் - லட்சுமி கடாட்சம் உண்டாகும். வசீகரம் ஏற்படும்.

    8. ஆரஞ்சு பழம் - தொழில் விருத்தி ஏற்படும்.

    9. அன்னாசிப்பழம் - சத்ரு சம்ஹாரம் பலன் கிடைக்கும்.

    10. பப்பாளி பழம் - திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

    11. இளநீர்-ரத்தம் சம்பந்தமான நோய் விலகும்.

    12. வெள்ளரிக்காய்-சுகமான வாழ்க்கை அமையும்.

    13. மூங்கில் தண்டில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் கணவர்- மனைவி ஒற்றுமை ஏற்படும்.

    • உணவு அருந்தும் முன் ஓதப்படும் மந்திரங்களில் காலபைரவர் கண்டிப்பாக இடம் பெறுகின்றார்.
    • கால பைரவரை முறையாக வணங்குவதின் மூலம் தீராத விவகாரங்கள் முடிவிற்கு வரும்,

    ஒரு முறை பிரும்ம லோகத்தில் அமர்ந்திருந்த தெய்வங்கள் பல விஷயங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது ஒரு தேவதை தெய்வங்களில் மிகவும் உத்தவமானவர் யார் எனக்கேட்க அங்கு அமர்ந்திருந்த பிரும்மா இறுமாப்பு கொண்டு சற்றும் தாமதிக்காமல் இதில் என்ன சந்தேகம் என்னைவிட உத்தவமானவர் எவர் இருக்க முடியும்? என்றார்.

    அதைக் கேட்ட மகாவிஷ்ணு கோபம் அடைந்தார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. விவாதம் முடிவிற்கு வராமல் அவர்கள் நான்கு வேதங்களையும் அழைத்து அவற்றின் கருத்தைக் கேட்டனர்.

    அந்த வேத அதிபதிகளும் சற்றும் தயங்காமல் எவர் தன்னை வேண்டி நிற்கும் பக்தர்களுக்கு உடனே சென்று அருள்பாளிக்கின்றரோ, எவர் மிக சக்தி வாய்ந்தவர் என மக்களால் கருதப்படுகின்றாரோ, எவர் உலகனைத்தையும் ஆட்டுவித்தபடி அமர்ந்திருக்கின்றாரோ அவரே உத்தமமானவர் என்பதினால், அந்த அனைத்தையும் பெற்றுள்ள சிவபெருமானே அனைவரையும் விட உத்தமமானவர்' எனக் கூறினர்.

    அதைக்கேட்ட பிரும்மா இன்னும் அதிக ஆத்திரம் அடைந்து சிவபெருமானுடைய உருவத்தைக் குறித்து கண்டபடி பேசலானார். 'யார் அந்த சிவன் , உடலெங்கும் சாம்பல் பூசிக் கொண்டு, சடைமுடியுடன், மயான சாமியர்கள் போல தூசி படிந்த உடலுடன் இருந்து கொண்டு. கழுத்து நிறைய மாலைகளுக்குப் பதில் பாம்புகளை தொங்க விட்டுக்கொண்டு ஒரு மாட்டின் மீது அமர்ந்து கொண்டு சுற்றித் திரிகின்றாரே அவரா என்னை விட மேன்மையானவர் ?' என மேலும் மேலும் ஏசிக் கொண்டே இருக்கையில் கைலாயத்தில் இருந்த சிவன் காதுகளில் அவை அனைத்தும் விழுந்தன.

    கொதித்துப் போனார் சிவனார். விஷ்ணு மற்றும் பிற கடவுள்களும் தேவதைகளும் பிரும்மா உரத்த குரலில் சிவனைப் பற்றி ஏசிக்கொண்டிருந்ததைக் கேட்டு பிரமித்து நிற்கையில், அவர்கள் முன் ஒரு பெரும் சப்தத்துடன் கூடிய ஒளி வெள்ளம் தோன்றியது.

    அதன் இடையே ஒரு மனிதன் தோன்ற பிரும்மா அவரைப் பார்த்துக் கத்தினார் ' ஏய், நீ யார், இங்கு எங்கே வந்தாய்?'. அந்த மனிதன் உடனடியாக ஒரு குழந்தை உருவில் மாறி அழத்துவங்கியது.

    அதைக்கண்ட பிரும்மா இன்னமும் இறுமாப்புடன் ' ஏ குழந்தாய், நீ என் தலையில் இருந்து முளைத்திருக்கின்றாய், இப்போது என்னை நீ சரணடைந்து அழுவதினால் உனக்கு ருத்திரா எனப்பெயர் தருகின்றேன். நீ சென்று உலகைப் படைக்கத் துவங்கு, அழுவதை நிறுத்தி விட்டு என்னிடம் ஓடிவா. நான் உன்னைக் காப்பாற்றுகின்றேன் என்றார்.

    அவ்வளவுதான் அந்த குழந்தை உடனடியாக ஒரு பயங்கரமான உருவம் கொண்டவராக மாறி அவர் எதிரில் நிற்க மீண்டும் பிரும்மா கூறினார், 'ஏ மனிதா, இப்படிப்பட்ட பயங்கரமான முகத்துடன் வந்து நிற்கும் உன்னை காலத்தைக் காக்கும் மனிதனாக நியமித்து உன் பெயரை காலபைரவர் என மாற்றுகின்றேன். நீ மக்களுடைய பாபங்களை ஏற்றுக் கொண்டு, தீயவர்களை அழிப்பாய். இறந்தவர்கள் மோட்சம் அடையச் செல்லும் காசி நகரத்திற்கு நீ சென்று காசிராஜனாக இருந்து கொண்டிருந்து சித்திரகுப்தன் கூட கணக்கெடுக்க முடியாமல் உள்ள பாபங்களைக் போக்கிடுவாய்' என ஆசிர்வதித்தார் .

    அதுவரை அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்த பயங்கர உருவில் இருந்த சிவனார் துள்ளி எழுந்தார், பிரும்மாவின் ஐந்து தலைகளில் தன்னை ஏசிய ஒரு தலையை நகத்தினால் கீறி துண்டித்து எடுத்து தன் கைகளில் ஏந்தினார்.

    தன் சுய உருவைக் காட்டி, ' ஓபிரும்மனே உன்னுடைய எந்த தலை என்னை நிந்தித்து பாபத்தைப் பெற்றதோ அந்த தலையை பைரவர் அழித்து விட்டார்' எனக் கூற அப்பொழுதுதான் பிரும்மா மற்றும் அனைவருக்கும் புரிந்தது வந்துள்ளவர் சிவபெருமானே. அவரே தன் ஒரு ரூபமாக பைரவரை தோற்றுவித்துள்ளார்.

    தம்முன் நின்ற சிவபெருமானை அனைவரும் வணங்கினர் . அடுத்து தன்னால் தோற்றுவிக்கப்பட்ட பைரவரிடம் சிவபெருமான் கூறினார் 'நீ பிரும்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை துண்டித்ததினால் ஏற்பட்டுள்ள பாபத்தைத் தொலைக்க, அந்த தலையை பைரவர் உருவில் ஏந்தியவண்ணம் உலகெங்கும் சுற்றிக் கொண்டு பிட்சை பெற்றுக் கொண்டவண்ணம் காசியை அடைந்து அந்த பாபத்தைத் தொலைக்க வேண்டும்' எனக் கூறினார்.

    அவர் அப்படிக் கூறிய மறுகணமே மற்றொரு பயங்கர முகத்தைக் கொண்ட இரத்தம் கக்கிக் கொண்டு இருந்த பெண் அங்கு தோன்றினாள் . அவளிடம் சிவபெருமான் கூறினார் ' நீ பைரவர் பின்னால் அவரை பயமுறுத்திக் கொண்டே துரத்திச் சென்றவண்ணம் இருக்க வேண்டும். அவர் காசியை அடைந்ததும் அவரை பயமுறுத்துவதை நிறுத்திவிட் டு சென்று விட வேண்டும் . உன்னால் காசியில் பிரவேசிக்க முடியாது' என்றார்.

    பைரவரும் கபால ஓட் டையும், பிரும்மாவின் தலையையும் எடுத்துக் கொண்டு மூவுலகமும் சுற்றிய வண்ணம் பிட்சை எடுத்தார் . கடைசியாக அவர் காசியில் நுழைந்ததும் அவர் கையில் இருந்த கபாலம் கீழே விழுந்து உடைய, அவரைத் துரத்திக் கொண்டு சென்ற பெண்ணும் மறைந்து போனாள். இந்த நிகழ்சிதான் காசிக்குச் சென்றால் கபால மோட்சம் கிடைக்கும் என்ற பழமொழி தோன்றக் காரணமாக அமைந்தது. அதன்படிதான் இறந்தவர்களின் சுற்றத்தினர் காசிக்குச் சென்று சிரார்தம் செய்து இறந்தவருக்கு மோட்சம் கிடைக்க காசியை பாதுகாக்கும் காவலராக தன்னை நியமித்துக் கொண்டு உள்ள பைரவரின் அருளைப் பெற்று வருகின்றனர்.

    கால பைரவரை முறையாக வணங்குவதின் மூலம் தீராத விவகாரங்கள் முடிவிற்கு வரும், வெளியூர்களுக்குப் போகும் முன் அவரிடம் வேண்டிக் கொண்டு சென்றால் தடங்கல் அற்ற பயணம் கிடைக்கும். தொல்லைகள் விலகும், எதிரிகள்நாசம் அடைவர்.

    சண்டை சச்சரவுகள் குறைகின்றன, திருடர்கள் பயந்து ஓடுவர், தீய ஆத்மாக்களின் ஆக்ரமிப்புக்கள் விலகும், பேய், பிசாசுகளின் தொந்தரவு இருக்காது, வழக்குகளில் வெற்றி கிடைக்கும் என பலவிதங்களில் நம்பப்படுகின்றது.

    சிவபெருமானின் அவதாரம் அவர். தான் குடிகொண்டு உள்ள ஆலயங்களைக் காப்பவர் என்ற பெருமைகளையும் பெற்றவர் அவர். யாகம் ஹோமங்கள், திருமணம் மற்றும் அனைத்து சுப காரியங்களிலும் பைரவர் பூஜையும் இடம் பெறுகின்றது.

    உணவு அருந்தும் முன் ஓதப்படும் மந்திரங்களில் காலபைரவர் கண்டிப்பாக இடம் பெறுகின்றார். தந்திர மந்திர பூஜைகளில் வினாயகப் பெருமானுக்கும் காலபைரவருக்கும் முக்கிய பூஜைகள் செய்வதே சிறப்பு என பண்டிதர்கள் கூறுகின்றனர்.

    • எந்த தீய சக்தியும் நம்மை நெருங்க விடாமல் காப்பவர் கால பைரவர்.
    • பைரவரை வழிபட சிறந்த தினங்களாக அஷ்டமி தினம் கருதப்படுகிறது.

    திதிகளில் சந்தேகங்கள் வருவது உண்டு. ஏனெனில் திதிகளில் வளர்பிறை திதிகள் மற்றும் தேய்பிறை திதிகள் என்று இருவகையான திதிகள் உள்ளன. இவற்றில் எது இறைவனை வழிபட உகந்ததது என்ற கேள்வி எழலாம். நாம் இரண்டு திதிகளிலும் வழிபாடு செய்வதே மிகவும் சிறப்பானது.

    பைரவருக்குரிய திதி என சிறப்பிக்கப்படும் திதி அஷ்டமி திதி ஆகும். இதில் வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி என இரண்டு அஷ்டமி திதிகள் உள்ளன. இவ்விரண்டு அஷ்டமி திதிகளுமே பைரவர் வழிபாட்டிற்கு உரியவை தான் என்பதில் ஐயமில்லை.

    எந்த தீய சக்தியும் நம்மை நெருங்க விடாமல் காப்பவர் ஸ்ரீ கால பைரவர். அப்படி காக்கும் பைரவரை வழிபட சிறந்த தினங்களாக மாதத்தின் அஷ்டமி தினம் கருதப்படுகிறது.

    சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வந்து வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.

    வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவரை வழிபடலாம்.

    நமது கடந்த ஐந்துபிறவிகளில் நாமே உருவாக்கியிருந்த கர்ம வினைகள் கரையத் துவங்கும், அதனால், ஆறு வளர்பிறை அஷ்டமிகளில் பைரவ வழிபாடு நிறைவடைந்தப் பின்னர், நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கி வருமானம் அதிகரிக்கத் துவங்கும்.

    • தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
    • பைரவருக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை மெயின் ரோட்டில் வன்மீகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக பைரவருக்கு மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், திரவியப்பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல வாய்மேட்டை அடுத்த தகட்டூர் பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திருநீரு உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பைரவருக்கு சோடச உபசாரங்கள், மங்கள ஆரத்தி ஆகியவை நடைபெற்றன.
    • சிவபுராணம், பைரவாஷ்டோத்திரம் உள்ளிட்ட பல்வேறு பதிகங்களை பாடி பைரவரை பக்தர்கள் வழிபட்டனர்.

    அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவாஷ்டமி வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், வடுக பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு மஞ்சள்பொடி, மாப்பொடி, வில்வ பொடி, அருகம்புல் பொடி, நெல்லி முள்ளி பொடி, சந்தானம், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

    பின்னர் சுவாமி, அம்பாள், பைரவருக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் பைரவருக்கு சோடச உபசாரங்கள், மங்கள ஆரத்தி ஆகியவை நடைபெற்றன. சிவபுராணம், பைரவாஷ்டோத்திரம் உள்ளிட்ட பல்வேறு பதிகங்களை பாடி பைரவரை பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பைரவர் வழிபாட்டு குழுவினர் செய்தனர். இதேபோல் அரியலூரில் செட்டி ஏரிக்கரையில் சக்தி விநாயகர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு யாகமும், சிறப்பு அபிஷேகமும் நடத்தப்பட்டது.

    யாகத்தில் பல்வேறு வகையான மூலிகைகள், பழங்கள் இடப்பட்டன. மேலும் கைலாசநாதர் கோவில், ஆலந்துறையார் கோவில், காசி விஸ்வநாதர் கோவில் ஆகியவற்றிலும் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை தரிசனம் செய்து, வழிபட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

    • தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்திகளின் ஒருவராக சொர்ண ஆகர்ஷன பைரவர் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி, தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பால், தேன், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார்.

    இதில் தாடிக்கொம்பு, திண்டுக்கல், வடமதுரை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×