search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குவாதம்"

    மெக்சிகோ எல்லைப்பகுதியில் தடுப்புச் சுவர் கட்டும் விவகாரத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் இருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவேசமாக வெளியேறினார். #USborderwall #Trumpwalkout #wallfunding
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதற்காக சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் (570 கோடி டாலர்) நிதி ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்டார்.

    அதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் வழங்கவில்லை. அதனால் ஆண்டு பட்ஜெட் பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதனால் சுமார் 20 நாட்களாக பாதி அரசு அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன.

    இந்த நிலையில் அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் டெலிவி‌ஷனில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் சட்ட விரோதமாக ஊடுருவுகின்றனர். அதனால் மெக்சிகோ எல்லை வழியாக போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

    எனவேதான் அங்கு தடுப்பு சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை ஜனநாயக கட்சியினர் எதிர்க்கின்றனர். பாராளுமன்றத்தில் ஒப்புதல் தர மறுக்கின்றனர். அதனால் எத்தனை அமெரிக்கர்கள் ரத்தம் சிந்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்? என்றார்.

    மேலும் அவர் கூறும்போது சட்டவிரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரால் நடந்த கொலைகளை பட்டியலிட்டார். இந்த நிலை தொடர்ந்தால் எனது அதிபர் அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்வேன்.

    அதன் மூலம் மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட தேவைப்படும் நிதியை பாராளுமன்ற ஒப்புதல் இன்றி என்னால் பெற முடியும் என்றார்.

    எல்லையில் சுவர் கட்ட டிரம்ப் உத்தரவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எச்சரித்தனர்.

    இதனால் சற்று இறங்கிவந்த டிரம்ப் எல்லைப்பகுதியில் இரும்பிலான தடுப்பு வேலி அமைக்கலாம். இரும்பு தடுப்புகள் பலமானதாகவும் இருக்கும் என்று  தெரிவித்தார். இதற்கும் 570 கோடி டாலர்கள் வரை செலவாகும் என்பதால் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன.

    இதை மனிதாபிமான நெருக்கடியாக நாம் கருத வேண்டும். எல்லைச்சுவர் ஒன்றினால் மட்டுமே இந்த பிரச்சனையை களைய முடியும். எனவே, இதயத்துக்கும் ஆன்மாவுக்குமான முக்கிய பிரச்சனையாக இதை மதித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் என்னை சந்தித்து பேச வேண்டும். மக்களிடம் பிரதிநிதிகளாக இருக்கும் அவர்கள் எதுவுமே செய்யாமல் இருப்பது நல்லதல்ல என தனது தொலைக்காட்சி உரையில் டிரம்ப் குறிப்பிட்டார்.

    அவரது இந்த பேச்சுக்கு கண்டனம்  தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லை பிரச்சனையை மனிதாபிமான நெருக்கடியாக மாற்றி, மனித உரிமை மீறல் என பிறநாடுகள் குற்றம்சாட்டும் அளவுக்கு ஊதிப் பெரிதாக்கும் டிரம்ப் அரசின் முடிவுக்கு  எதிர்த்தனர்.

    இந்நிலையில், எதிர்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு டிரம்ப் ஏற்பாடு செய்தார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுமுக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் ஜனநாயக கட்சியை சேர்ந்த பாராளுமன்ற மேல்சபை தலைவர் நான்சி பெலோசி மற்றும் சிறுபான்மை குழுவை சேர்ந்த உறுப்பினர் சக் ஸ்குமர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தின்போது டிரம்ப் சில நிபந்தனைகளை விதித்தார். இதை நான்சி பெலோசி ஏற்க மறுத்தார். நிதி முடக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் உங்கள் கோரிக்கைக்கு நான் சம்மதம் தெரிவித்தால் தடுப்புச் சுவர் திட்டத்துக்கு ஒப்புதல் தர நீங்கள் முன்வருவீர்களா? என டிரம்ப் கேட்டதற்கு நான்சி பெலோசி ‘முடியாது’ என்று தெரிவித்தார்.

    இதனால், ஆத்திரமடைந்த டிரம்ப் ‘பை பை’ என்று கூறிவிட்டு ஆவேசமாக கூட்டத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட டிரம்ப், ‘நான்சி பெலோஸ்கி  மற்றும் சக் ஸ்குமர் ஆகியோருடன் இன்று நடந்த ஆலோசனை கூட்டம் ஒட்டுமொத்த நேர விரயம் (total waste of time) என்று பதிவிட்டார்.



    இந்த சந்திப்புக்கு பின்னர் வெள்ளை மாளிகை வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பெலோசி, ‘வெளியே இவ்வளவு குளிராக இருக்கிறது. ஆனால், உள்ளே அவ்வளவு கதகதப்பாக இல்லை’ என்றார்.

    டிரம்ப் மேஜையை தட்டி ஆவேசமாக பேசியதாகவும் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்பதால் மிகுந்த ஆத்திரத்துடன் அவர் வெளியேறியதாகவும் ஸ்குமர் குறிப்பிட்டார்.

    சமாதானம் பேச வெள்ளை மாளிகைக்கு வந்தவர்களுக்கு எதிர்பார்ப்புடன் ‘மிட்டாய்’ கொடுத்து வரவேற்ற டிரம்ப், சபாநாயகர் முடியாது என்று கூறிவிட்டதால் வெளியேறி விட்டார். #USborderwall  #Trumpwalkout #wallfunding 
    நெல்லை கலெக்டர் வீட்டின் முன்பு நள்ளிரவில் போலீஸ்காரரிடம் வாக்குவாதம் செய்த 15 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த வக்கீல்கள் ராமசுப்பு, வேல்முருகன் உள்பட 15 பேர் நேற்று முன்தினம் இரவு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வீட்டின் முன்பு ஒரு புகார் மனு கொடுக்க போவதாக கூடி நின்றார்கள்.

    அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் நள்ளிரவு 11.30 மணி ஆகிவிட்டதால் மறுநாள் காலையில் மனு கொடுக்கு மாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் வக்கீல்களும், அவருடன் வந்தவர்களும் போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு புளியரையில், கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    அப்போது சில லாரிகள் அபராதம் இல்லாமல் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கலெக்டரிடம் புகார் கொடுக்க போவதாக அவர்கள் கூடி அங்கு ஆர்ப்பாட்டம் செய்தனர். சம்பவ இடத்திற்கு பாளை போலீசார் விரைந்து வந்து அவர்களை சமரசம் செய்து அனுப்பினர்.

    இது குறித்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸ்காரர் சதீஸ் மோகன் பாளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், வக்கீல்கள் ராமசுப்பு, வேல்முருகன் ஆகியோர் உட்பட 15 பேர் மீது போலீஸ்காரருடன் வாக்குவாதம் செய்து அவதூறு பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

    டெல்லியில் புனரமைக்கப்பட்ட சிக்னேச்சர் பாலம் திறப்பு விழாவில் டெல்லி பா.ஜ.க. தலைவரை போலீசார் அனுமதிக்க மறுத்ததாக ஆம் ஆத்மி - பா.ஜ.க. தொண்டர்கள் இடையே இன்று வாக்குவாதம் ஏற்பட்டது. #Signaturebridge #Signaturebridgeinaugural #DelhiBJP #ManojTiwari
    புதுடெல்லி:

    நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள சிக்னேச்சர் (Signature) பிரிட்ஜ் எனப்படும் மேம்பாலம் சுமார் 1500 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார்.

    இன்று மாலை திறப்புவிழா நடைபெறவுள்ள நிலையில் டெல்லி பா.ஜ.க. தலைவரான மனோஜ் திவாரி விழா நடைபெறும் பகுதிக்கு வந்தார். அவருடன் பா.ஜ.க. முக்கிய பிரமுகர்கள் சிலரும் வந்தனர்.

    அவரிடம் அழைப்பிதழ் இல்லாததால் மேடைக்கு செல்லவிடாதவாறு போலீசார் மனோஜ் திவாரியை தடுத்து விட்டதாக கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும் பா.ஜ.க.வினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

    இந்த மேம்பாலம் அமைந்துள்ள வடக்கு டெல்லி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் மனோஜ் திவாரி, ஒரு கிரிமினலை நடத்துவதைப்போல்  போலீசார் என்னை அவமதித்து விட்டனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், பல ஆண்டுகளாக முடங்கி கிடந்த இந்த பாலத்தை புதுப்பிக்க நான்தான் பெருமுயற்சி எடுத்தேன் எனவும் அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையில், டெல்லி கவர்னரின் கட்டுப்பாட்டில் இருக்கும் போலீசார், தேவையில்லாமல் அங்கே பிரச்சனையை உருவாக்க முயற்சிப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். #Signaturebridge #Signaturebridgeinaugural #DelhiBJP #ManojTiwari
    சட்டசபை காவலர்களுடன் இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் புதுவை சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #puducherryassembly

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை வளாகத்திற்குள் இரு சக்கர வாகனங்கள் அனு மதிக்கப்படுவதில்லை. அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இரு சக்கர வாகனங்களில் வந்தால் அவர்கள் மட்டும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். வேறு யாருடைய வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை.

    இந்த நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் கட்சி நிர்வாகி தாமோதரனுடன் இருசக்கர வாகனத்தில் சட்டசபை வளாகத்திற்குள் வந்தார். அவரை சபை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

    இதையடுத்து சலீம் ஏன் சட்டசபை வளாகத்திற்குள் அனுமதிக்க மறுக்கிறீர்கள்? எப்போது முதல் இந்த விதிமுறை உள்ளது? என கேட்டார். சபை காவலர்கள் நேரடியாக பதில் கூறாமல், அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும் என்று பதில் அளித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த சலீம் அவர்களோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து சபை காவலர்கள் வாகனத்தை அனுமதிக்க மறுத்தனர். இதனால் சலீம் சட்டசபைக்கு வெளியே வாகனத்தை நிறுத்தி விட்டு சட்டசபை வளாகத்திற்குள் சென்றார். #puducherryassembly

    ×