search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிற்சங்கள்"

    2-வது நாளான இன்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது.

    சேலம்:

    தொழிலாளர் நலச்சட்டங்களை முறையாக அமல் படுத்த வேண்டும், பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்த பட்ச மாத ஊதியம் 18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

    நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், பி.எஸ்.என்.எல். மற்றும் எல்.ஐ.சி. ஊழியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    2-வது நாளான இன்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது.

    அரசு ஊழியர்கள், ஏற்காடு எஸ்டேட் தொழிலாளர்கள் நாட்டாமை கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீரங்கா பாளையம் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    காந்திரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களையும் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    ×