search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருளாதாரம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்களுக்கு பொருளாதாரத்தில் சுதந்திரம் கிடைத்துவிட்டால் அனைத்திலும் சுதந்திரம் கிடைத்துவிடும்.
    • வங்கியில் பெற்ற கடனை சரியான முறையில் திருப்பி செலுத்தியவர்கள் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களே.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் தனியார் அமைப்பின் சார்பில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்த போதிலும் பெண்களுக்கான இந்நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இதில் கலந்து கொண்டுள்ளேன். பெண்களுக்கு பொருளாதாரத்தில் சுதந்திரம் கிடைத்துவிட்டால் அனைத்திலும் சுதந்திரம் கிடைத்துவிடும்.

    பெண்கள் தனக்காக கவலைப்படுவதில்லை. தங்கள் குடும்பத்திற்காக தான் கவலைப்படுகின்றனர். ஒரு ஆண் எத்தனை வயது ஆனாலும் ஆணாகவே இருக்கின்றார். உங்கள் வெளி தோற்றத்தை வைத்து பல விமர்சனங்கள் இருந்தாலும் நம் உள்ளே இருக்கும் இரும்பு மனதில் இந்த நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களை இரும்பு பெண்மணியாக மாற்றும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    வன்முறை என்பது எந்த சமுதாயத்தில் இருந்தாலும் அது தவறு. 10 நபர்களுக்கு கடனுதவி வழங்கினால் அதில் 3 பேர் பெண்களாக இருக்க வேண்டும். அதில் எஸ்.சி, எஸ்.டி சமூகத்தை சேர்ந்தவர் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    வங்கியில் பெற்ற கடனை சரியான முறையில் திருப்பி செலுத்தியவர்கள் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களே. அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

    பெண்களின் தேவையை அறிந்து அரசு அவர்களுக்கு முன் உரிமை கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இணையதளங்களில் பெண்கள் செய்யும் வணிகம் அதிக அளவில் இடம்பெறுகின்றது. கொரோனா காலகட்டத்தில் ஆண்கள் குடும்பத்தை காப்பாற்றினார்ளோ இல்லையோ பெண்கள் இணையதளம் வாயிலாக பல்வேறு பொருட்களை விற்பனை செய்து குடும்பங்களை காப்பாற்றினர்.

    பெண்கள் தற்பொழுது தொழில் முனைவோராக மாறி வருகின்றனர். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதியாக இருக்கும். இதில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் வரவேண்டும். சிறிய அளவில் தொடங்கி பெரிய தொழில் முனைவோராக மாற வேண்டும். பெண்களின் கையில் பொருளாதாரம் இருந்தால் வாழ்வாதாரம் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மாயாவதி ஆதரவு தெரிவித்து உள்ளார். #Mayawati #UpperCasteBill #LokSabha #10pcquota #economicallybackward
    புதுடெல்லி:

    பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

    ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அரசியல் ஆதாயத்துக்காக தற்போது இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால் இதனை அரசு முன்பே எடுத்து இருக்கலாம்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    இடஒதுக்கீடு சலுகையை பொருளாதாரத்தில் பின்தங்கிய பல்வேறு சிறுபான்மையினருக்கும் வழங்க வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கோரிக்கை. இதுதொடர்பாக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் உயர்சாதியினருக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்குவது கண்டிக்கத்தக்கது என்று மாயாவதி கூறியுள்ளார்.

    பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால் அவர்களுக்காக புதிய இடஒதுக்கீடு கொள்கையை மத்திய அரசு வரையறுக்க வேண்டும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து உள்ளார். #Mayawati #UpperCasteBill #LokSabha #10pcquota #economicallybackward 
    பாகிஸ்தானில் சீர்குலைந்து கிடக்கும் பொருளாதாரத்தை வலுப்படுத்த பிரதமர் இம்ரான்கான் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். #Pakistan #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் புதிய பிரதமராக தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான்கான் கடந்த மாதம் பதவியேற்றார். அவர் தலைமையிலான புதிய அரசுக்கு பல்வேறு சவால்கள் இருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதார சீரமைப்புதான் பிரதானமாக உள்ளது.

    ஏனெனில் கடும் கடன் நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான், அதிலிருந்து மீண்டுவர தடுமாறி வருகிறது. நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 18 பில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது. எனவே இவற்றில் இருந்து பொருளாதாரத்தை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது. இதை உணர்ந்துள்ள புதிய அரசும், பொருளாதார சீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதில் ஒரு பகுதியாக 18 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் அரசு சார்ந்தவர்கள் 7 பேரும், தனியார் துறையை சேர்ந்தவர்கள் 11 பேரும் அடங்குவர். தனியார் துறையை சேர்ந்தவர்களில் புகழ்பெற்ற வெளிநாட்டு பொருளாதார வல்லுனர்களையும் நியமித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    முந்தைய அரசுகளில் பொருளாதார ஆலோசனைக்குழுக்கள், நிதி மந்திரிகளின் தலைமையிலேயே அமைக்கப்பட்டு இருக்கும். எப்போதாவது நடைபெறும் இந்த கமிட்டியின் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளுக்கும் அரசுகள் செவிமடுப்பதில்லை.

    ஆனால் தற்போதைய அரசில், பொருளாதார ஆலோசனைக்குழுவுக்கு பிரதமர் இம்ரான்கானே தலைமை தாங்குகிறார். அது மட்டுமின்றி குழுவின் கூட்டத்தையும் விரைவில் கூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் முதற்கட்டமாக வெளிநாடுகளில் பாகிஸ்தானியர்கள் குவித்துள்ள சட்ட விரோத சொத்துகளை திரும்ப கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை 2 வாரங்களுக்குள் அளிக்குமாறு, இந்த கமிட்டி உறுப்பினர்களை இம்ரான் கான் கேட்டுக்கொண்டு உள்ளார்.  #Pakistan #ImranKhan 
    அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தடையால் பெரும் பொருளாதாரச் சரிவை ஈரான் சந்தித்துள்ள நிலையில் அந்நாட்டு நிதி மந்திரியை பாராளுமன்றம் இன்று பதவி நிக்கம் செய்தது. #Iranianparliament
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஈரான் நாட்டு நாணயத்தின் மதிப்பு ஒரேநாளில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

    கடந்த ஆண்டுவாக்கில் 42,890 ரியால்களாக இருந்த அமெரிக்க டாலரின் மதிப்பு படிப்படியாக கூடிக்கொண்டே போய் கடந்த மாத இறுதியில் 57,500 ரியால்களாக உயர்ந்து கடந்த மே மாதவாக்கில் 80 ஆயிரம் ரியால்களுக்கு விலைபோனது. இதனால், ஈரானின் பொருளாதாரம் முற்றிலுமாக நிலைகுலைந்து காணப்படுகிறது.

    நிலைமை மேலும் மோசம் அடைவதை தவிர்க்கும் வகையில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் பொருளாதார நிபுனர்களும், எதிர்க்கட்சியினரும் எச்சரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஈரான் நாட்டு பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதித்துறை மந்திரி மசவுத் கர்பாசியன்-ஐ அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களித்தனர்.

    இதேபோல், சமீபத்தில் அந்நாட்டின் மத்திய வங்கி தலைவரை நீக்கம் செய்து அதிபர் ஹசன் ரவுகானி உத்தரவிட்டதும், தொழிலாளர் நலத்துறை மந்திரியை பதவி நீக்கம் செய்து பாராளுமன்றம் வாக்களித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. #Iranianparliament #Iranfinanceremoved #MasoudKarbasian
    மகாராஷ்டிரா மாநிலத்தின் தானேவில் மோடியின் ஆட்சி குறித்து பேசிய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், 3 டயர்கள் பஞ்சர் ஆன காரை போல இந்திய பொருளாதாரத்தின் நிலை உள்ளதாக தெரிவித்துள்ளார். #Chidambaram #modi
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    ‘இந்தியாவில் தனியார் முதலீடு, தனியார் கொள்முதல், ஏற்றுமதி, அரசின் செலவுகள் ஆகியவை மிக முக்கியமான 4 அமைப்புகள் ஆகும். அது காரின் 4 சக்கரங்களை போன்றது. ஆனால், தற்போது பா.ஜ.க ஆட்சியில் தனியார் முதலீடு, தனியார் கொள்முதல், ஏற்றுமதி ஆகியவை நலிவடைந்து உள்ளது. 3 சக்கரங்கள் பஞ்சர் ஆன காரைபோல இந்திய பொருளாதாரம் மாறியுள்ளது.

    சரியான முறையில் அரசின் செலவுகள் மட்டுமே இயங்குகிறது. அரசின் செலவுகளை ஈடுசெய்ய பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற வரிச்சுமைகள் மக்களின் மீது ஏற்றப்படுகிறது. மற்ற அனைத்து நாடுகளிலும் ஜி.எஸ்.டி வரி நாடு முழுவதும் ஒரே வரியாக விதிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் மட்டுமே 5 அடுக்கு ஜி.எஸ்.டி வரி உள்ளது.

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் இருந்தும் சமீப காலமாக நாம் எவ்வித லாபமும் பெறுவதில்லை. மத்திய பா.ஜ.க அரசின் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் ஆரம்பத்தொகையாக தனி நபருக்கு 43 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது. இதனை வைத்துக்கொண்டு பிரதமர் மோடி கூறியது போல் பக்கோடா கடை மட்டுமே போட முடியும்.

    ஆனால், பா.ஜ.க ஆட்சியில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்க்கும்போது பொருளாதார பாதிப்பு சரிசெய்யக்கூடியது ஆகும். பா.ஜ.க அரசு ஒரு சில சமூகத்தினரை 2-ம் தர குடிமகன்களாக அறிவித்தது. மக்களின் உணவு பழக்கங்கள் மீதும் கலாச்சார பழக்கவழக்கங்கள் மீதும் இந்த அரசு அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.’

    இவ்வாறு அவர் பேசியுள்ளார். #Chidambaram #modi
    ×