search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை"

    • எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இடையூறு செய்வதாக அதிருப்தி
    • நேற்று அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளவில்லை

    மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரண்டு அவைகளும், குறிப்பாக மக்களவையில் அவை நடவடிக்கை ஏதும் நடைபெறாத நிலை உள்ளது.

    இன்று காலை அவை தொடங்கியதும், ஓம் பிர்லா சபாநாயகர் இருக்கைக்கு வரவில்லை. ராஜேந்திர அகர்வால் தலைமை தாங்கினார். அப்போது காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி ''அவை நடவடிக்கைகளை நடத்த, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். அவர் எங்களுடைய பாதுகாவலர்'' என்றார்.

    உடனே, இன்று அவைத்தலைவராக இருக்கும் ராஜேந்திர அகர்வால், ''இந்த தகவலை அவருக்கு தெரிவிக்கிறேன்'' என்றார்.

    முன்னதாக,

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, மணிப்பூர் பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றன. அவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.பி.க்களும் முழக்கங்கள் எழுப்புகின்றனர். இதனால் கூட்டத்தொடரின் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு மக்களவையில் தொடர்ந்து உறுப்பினர்களால் இடையூறு ஏற்படுவதால் சபாநாயகர் ஓம் பிர்லா அதிருப்தி அடைந்துள்ளார்.

    குறிப்பாக நேற்றுமுன்தினம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் செயல்களால் சபாநாயகர் ஓம் பிர்லா வருத்தமடைந்தார். அவை நடவடிக்கைகளின் போது உறுப்பினர்கள் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

    நேற்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. பாராளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து சீர்குலைப்பதால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மீது சபாநாயகர் ஓம் பிர்லா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்கமாட்டேன் என கூறியதகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சபாநாயகரின் அதிருப்தி குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை நடவடிக்கைகள் நேற்று தொடங்கியபோது ஓம் பிர்லா சபாநாயகருக்கான இருக்கையில் இல்லை. பாஜக உறுப்பினர் கிரித் சோலங்கி அவையை தலைமை தாங்கி நடத்தினார். எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஒழுங்கை பராமரிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் வழக்கம்போல் அவையில் அமளி நீடித்ததால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

    • எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும் வரை வரமாட்டேன் என கூறியதாக தகவல்.
    • பாஜக உறுப்பினர் கிரித் சோலங்கி மக்களவையை தலைமை தாங்கி நடத்தினார்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, மணிப்பூர் பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றன. அவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.பி.க்களும் முழக்கங்கள் எழுப்புகின்றனர். இதனால் கூட்டத்தொடரின் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    இவ்வாறு மக்களைவயில் தொடர்ந்து உறுப்பினர்களால் இடையூறு ஏற்படுவதால் சபாநாயகர் ஓம் பிர்லா அதிருப்தி அடைந்துள்ளார். குறிப்பாக நேற்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் செயல்களால் சபாநாயகர் ஓம் பிர்லா வருத்தமடைந்தார். அவை நடவடிக்கைகளின் போது உறுப்பினர்கள் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இன்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

    பாராளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து சீர்குலைப்பதால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மீது சபாநாயகர் ஓம் பிர்லா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்கமாட்டேன் என கூறியதகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சபாநாயகரின் அதிருப்தி குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மக்களவை நடவடிக்கைகள் இன்று தொடங்கியபோது ஓம் பிர்லா சபாநாயகருக்கான இருக்கையில் இல்லை. பாஜக உறுப்பினர் கிரித் சோலங்கி அவையை தலைமை தாங்கி நடத்தினார். எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஒழுங்கை பராமரிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் வழக்கம்போல் அவையில் அமளி நீடித்ததால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

    • மசோதாவை தாக்கல் செய்ய காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இந்த மசோதாவுக்கான எதிர்ப்புகள் அனைத்தும் அரசியல் என அமித் ஷா தெரிவித்தார்.

    டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரிகள் நியமனம், மாறுதல் தொடர்பான அதிகாரம் இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இந்த தீர்ப்பை நிராகரிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி டெல்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் செய்ய மத்திய அரசுக்குதான் அதிக அதிகாரம் உண்டு. இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்டத்திற்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இதை பாராளுமன்றத்தில் சட்டமாக்க விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கினார். இதற்காக பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

    இந்நிலையில், டெல்லி சேவைகள் தொடர்பான அவசர சட்டத்துக்கு மாற்றாக பாராளுமன்றத்தில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தாக்கல் செய்ய காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    முன்னதாக மசோதா தொடர்பாக உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது, டெல்லி தொடர்பாக எந்த மசோதாவையும் கொண்டு வருவதற்கு மக்களவைக்கு அதிகாரம் இருக்கிறது என்றும், உச்ச நீதிமன்ற சமீபத்திய தீர்ப்பில் ஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறினார்.

    'டெல்லி தொடர்பாக எந்த சட்டத்தையும் இயற்றும் அதிகாரத்தை அரசியலமைப்பு இந்த அவைக்கு வழங்கியுள்ளது. டெல்லி மாநிலம் தொடர்பாக பாராளுமன்றம் எந்தச் சட்டத்தையும் கொண்டு வரலாம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது. இந்த மசோதாவுக்கான எதிர்ப்புகள் அனைத்தும் அரசியல். இந்த மசோதாவை கொண்டு வர அனுமதிக்கவேண்டும்' என அமித் ஷா பேசினார்.

    • நமது ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் டெல்லி மக்களுக்கு எதிரானது என்று ராகவ் சத்தா தெரிவித்தார்.
    • மாநிலங்களவையில் மசோதா தோற்கடிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

    டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக மக்களவையில் இன்று சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டத்திருத்த மசோதா- 2023 என்ற இந்த மசோதாவை உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் அறிமுகம் செய்து பேசினார்.

    இந்த மசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா கூறுகையில், இந்த மசோதா முந்தைய அவசரச் சட்டத்தை விட மோசமானது என்றும், நமது ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் டெல்லி மக்களுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார். இதுவரை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த மசோதாக்களிலேயே மிகவும் ஜனநாயக விரோத பேப்பர் என்றும், இது ஜனநாயகத்தை அதிகாரத்துவம் மூலம் மாற்றிவிடும் எனவும் குறிப்பிட்டார்.

    இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசாங்கத்திடம் இருந்து அனைத்து அதிகாரங்களையும் பறித்து ஆளுநர் மற்றும் அதிகாரவர்க்கத்திடம் ஒப்படைக்கிறது. இது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீதான தாக்குதல் ஆகும். ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியின் அனைத்து கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்க்கும் எனவும் ராகவ் சத்தா தெரிவித்தார்.

    மக்களவையில் இந்த மசோதாவை மத்திய அரசால் நிறைவேற்ற முடிந்தாலும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு போதிய உறுப்பினர்கள் இருப்பதால் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

    • அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
    • உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்று காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் பேசினார்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

    இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக பாராளுமன்றத்தில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டால் அதை முறியடிக்க ஒத்துழைப்பை அளிப்பதாக பல்வேறு கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

    கடந்த மாதம் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், மக்களவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் மசோதாவை அறிமுகம் செய்து பேசினார்.

    இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் எதிர்ப்பு தெரிவித்தார். இது கூட்டாட்சி ஒத்துழைப்பு என்ற கருத்தை மீறுவதாக இருப்பதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும் கூறிய அவர், இந்த மசோதா டெல்லி துணைநிலை ஆளுநரின் அதிகாரத்தை மேலும் அதிகரிக்கும் என்றார். 

    • டெல்லி அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
    • மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

    இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    பாராளுமன்றத்தில் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டால் அதை முறியடிக்க ஒத்துழைப்பை அளிப்பதாக பல்வேறு கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, கடந்த மாதம் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.
    • உத்தர பிரதேசம் 2-வது இடத்திலும், மகாராஷ்டிரா 3-வது இடத்திலும் உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் குறித்து தெலுங்கானா எம்.பி. கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் வரை தமிழகத்தின் கடன் தொகை ரூ.7,53,860 கோடியாக உள்ளது. அதிக கடன் வாங்கியது தமிழ்நாடு தான்.

    இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் உத்தர பிரதேசம் இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

    • காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம்.
    • மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    மோடி பெயர் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் ராகுலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சூரத் கோர்ட்டு விசாரணை நடத்தி நேற்று இந்த வழக்கில் தீர்ப்பை வெளியிட்டது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி அறிவித்தார்.

    இதையடுத்து ராகுல் எம்.பி. பதவி தொடர்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்தனர்.

    எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்கள் குற்ற வழக்குகளில் 2 அல்லது 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் அவர்களது பதவியை பறிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இடம் உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ல் பிரிவு 8 (3)-ன்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக பதவி இழப்பார்கள் என்று வகுக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.

    மக்களவை உறுப்பினர் பதவியை பறித்து மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    • மேற்கு வங்காள அரசு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்ட விவகாரத்தை பா.ஜ.க. எம்.பி. எழுப்பினார்.
    • மக்களவையை மாநகராட்சி கூட்டமாக மாற்றாதீர்கள் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையாக சாடினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பா.ஜ.க. எம்.பி. சவுமித்ரா கான், மேற்கு வங்காள அரசு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்ட விவகாரத்தை எழுப்பினார். அகவிலைப்படி விவகாரத்தில் அவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசால் நேரடியாக உதவ முடியுமா? என கேட்டார்.

    இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொடர்பாக அவையில் கேள்வி எழுப்பியதற்கு கண்டனம் தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

    இரு எம்.பி.க்களும் மாறி மாறி கடுமையான வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். இது சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட்ட ஓம் பிர்லா, உங்களுக்குள்ளே விவாதிக்க வேண்டாம். மக்களவையை ஒரு மாநகராட்சி கூட்டமாக மாற்றாதீர்கள் என சாடினார். 

    • கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பாராளுமன்றத்தில் உறுப்பினர் கேள்வி.
    • மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட தகவலை கூறி மத்திய மந்திரி விளக்கம்.

    கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பள்ளிகளில் படித்து வந்த மாணவ, மாணவிகள் இடையிலேயே கல்வியை கைவிடும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்று பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி ஸ்மிருதி இரானி அளித்த எழுத்துப் பூர்வ பதிலில், நாடு முழுவதும் ஆரம்ப பள்ளி, இடைநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்பட அனைத்து கல்வி நிலைகளிலும் பள்ளி மாணவர்கள் இடையிலேயே கல்வியை கைவிடும் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    அனைத்து கல்வி நிலையிலும் பள்ளி இடை நிற்றல் விகிதம் குறைந்து வருவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் வழங்கி உள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியப் போட்டி ஆணையத்தின் அனுமதிக்கும் வகையில் கணிசமான விதிகளைக் கோரும் மசோதா.
    • புதுடெல்லி சர்வதேச நடுவர் மையம் (திருத்தம்) மசோதாவும் பாராளுமன்றத்தின் கீழ் சபையில் அறிமுகம்.

    இந்தியப் போட்டி ஆணையத்தின் (சிசிஐ) நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கோரும் போட்டி (திருத்தம்) மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

    கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், புதிய சந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியப் போட்டி ஆணையத்தின் அனுமதிக்கும் வகையில் கணிசமான விதிகளைக் கோரும் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

    இந்தியப் போட்டி ஆணையம் சமீபத்திய காலங்களில், வளர்ந்து வரும் டிஜிட்டல் சந்தையில் நியாயமற்ற வணிக நடைமுறைகள் தொடர்பாக ஆய்வுகள் மற்றும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    புதுடெல்லி சர்வதேச நடுவர் மையம் (திருத்தம்) மசோதாவும் பாராளுமன்றத்தின் கீழ் சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார்.

    • பொருளாதார மந்த நிலையோ, தேக்க நிலையோ ஏற்படும் என்ற கேள்விக்கே இடமில்லை.
    • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வரும் நிலையில் காங்கிரஸ், அதன் தோழமை கட்சிகள் வெளிநடப்பு.

    மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    உலகிலேயே அதிவேகத்துடன் வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. உலகமே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவின் வளர்ச்சி தொடர்கிறது. கொரோனா உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை கடந்தும் உலகின் மற்ற நாடுகளைவிட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது.

    அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் பொருளாதார வளர்ச்சி மீண்டுள்ளது. கொரோனா, ரஷியா- உக்ரைன் போர் உள்ளிட்ட சூழலிலும் 7 சதவீதத்திற்குள் பணவீக்கத்தை அரசு கட்டுப்படுத்தியுள்ளது.

    பொருளாதார மந்த நிலையோ, தேக்க நிலையோ ஏற்படும் என்ற கேள்விக்கே இடமில்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே, நிதி அமைச்சரின் உரையை புறக்கணித்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்துள்ளது.

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வரும் நிலையில் காங்கிரஸ், அதன் தோழமை கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது.

    ×