search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 138225"

    அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டையில் நாளை மாலை ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #ThiruvarurByElection #ADMK
    சென்னை:

    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் இன்று தொடங்கியது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.
     
    இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற கட்சி தொண்டர்கள் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கும்படி அ.தி.மு.க., அறிவித்திருந்தது. இதனால் அ.தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர்.

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் நேற்றும், இன்றும் கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் ரூ.25 ஆயிரம் செலுத்தி விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

    உணவுத்துறை அமைச்சர் காமராஜிடம் திருவாரூர் தொகுதி எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முகமது அஷ்ரப், கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட பன்னீர்செல்வம் உள்பட பலர் மனு கொடுத்தனர். இன்று பெறப்படும் மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.

    இந்நிலையில், தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டையில் நாளை மாலை அதிமுக ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கூட்டத்தில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து பரிசீலனை நடைபெறும் என்றும், இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #ThiruvarurByElection #ADMK
    நாளை (புதன் கிழமை) பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. #ExamResult #PlusTwo #Result
    சென்னை:

    தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

    அவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர். மாணவர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர். வழக்கம் போல மாணவிகள் தான் அதிகம். தனி தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர்.

    அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள்.

    விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் சான்றிதழில் பதிவு செய்யும் பணி நடந்தது.

    மீண்டும் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இப்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. நாளை (புதன் கிழமை) பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.

    முதல் முதலாக தேர்வு முடிவு வெளியிடும் தேதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பே பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது.

    இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், www.dge.tn.nic.in ,www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை பதிவு இறக்கம் செய்துகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    அனைத்து தரப்பினரும் மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம்.  #ExamResult #PlusTwo #Result
    கர்நாடக மாநில சட்டசபையில் நடக்கும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரசும், இழந்த ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதாவும் நாளைய தேர்தலில் பலப்பரீட்சையில் குதிக்கின்றன. #KarnatakaElections2018
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையின் பதவி காலம் வருகிற 28-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் கர்நாடக சட்டசபைக்கு நாளை (12-ந் தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன.

    இதில் ஜெயநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள 223 தொகுதிகளுக்கும் தேர்தல் நாளை நடைபெறுகிறது.

    நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 55 ஆயிரம் 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி ஆண் வாக்காளர்கள், 2.44 பெண் வாக்காளர்கள், 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என மொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96  கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.

    இந்த தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாநில போலீசார் உள்பட 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இன்று காலை முதல் வாக்குசாவடிக்கு மின்னணு வாக்குபதிவு எந்திரங்களை வேன், லாரி, பஸ்கள் மூலம் அனுப்பும் பணி தொடங்கியது. இதே போல பாதுகாப்பில் ஈடுபடும் போலீசாரும் தேர்தல் அதிகாரிகளும் அந்தந்த வாக்குசாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

    வாக்குசாவடி அமைந்துள்ள 100 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்கவும், பிரசாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

    வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் பகிரங்க பிரசாரம் முடிவுக்கு வந்தாலும், அவர்கள் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிக்க தடை இல்லை. ஆனால் வாக்காளர்களை கவர பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்து உள்ளது.

    என்றாலும் கர்நாடக தேர்தலில் வாக்காளர்களை கவர பணம் மற்றும் பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் வழங்கி உள்ளனர். மாநிலம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.200 கோடிக்கும் மேல் கணக்கில் வராத பணம் மற்றும் பரிசு பொருட்கள் சிக்கியது. இந்த தேர்தலில் வருமான வரித்துறை அதிகாரிகளும் களத்தில் இறங்கி சோதனை நடத்தி கருப்பு பணத்தை கைப்பற்றினர். காங்கிரஸ் மற்றும் மதசார் பற்ற ஜனதா தள வேட்பாளர்கள் வீடுகளிலும், முதல் மந்திரி சித்தராமையா தங்கிய ஓட்டலிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றினார்கள்.

    223 தொகுதிகளில் மொத்தம் 2,636 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பெரும்பாலான கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை அமையும் என்றும், மதசார்பற்ற ஜனதா தளம் கிங் மேக்கராக இருக்கும் என்றும் கணித்துள்ளனர்.



    பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி 6 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து 21 இடங்களில் நடந்த பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு கட்டங்களாக கர்நாடக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தார்.

    சோனியா காந்தி,  முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், வீரப்பமொய்லி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் பிரசாரம் செய்தனர்.

    கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா சாமூண்டீ ஸ்வரி மற்றும் பாதாமி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். நேற்று இறுதி கட்ட பிரசாரத்தை சாமூண்டீஸ்வரி தொகுதியில் மேற்கொண்டார்.

    மதசார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறது. மதசார்பற்ற ஜனதா தள தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, முதல் மந்திரி வேட்பாளர் குமாரசாமி உள்ளிட்ட பலர் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    தற்போதைய சூழ்நிலையில் பா.ஜனதா கட்சி 22 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. கர்நாடகத்தில் ஆட்சியை பிடித்து தென் மாநிலத்தில் காலூன்ற  நினைக்கிறது. மேலும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற நினைப்பில் அந்த கட்சி உள்ளது.

    தற்போது 4 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ள காங்கிரஸ் மீண்டும் கர்நாடகாவில் வெற்றி பெற்று ஆட்சி தக்க வைக்கவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும் கர்நாடகத்தை நம்புகிறது.  ஓட்டு எண்ணிக்கை வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) நடைபெறுகிறது. #KarnatakaElections2018
    ×